"மச்சா... இந்த ஒரு வாரமா நா உன்ன கவனிச்சுட்டுதா இருக்கே... என்னோட பழைய எழிலாவே நீ மாறி இருக்க மச்சா... நீ பழைய மாதிரி சிரிச்சு பேசுற... நிம்மதியா படுத்து துங்குற...அம்மாவும் , மீராவும் இறந்த பின்னாடி நீ
இப்படி இல்லவே இல்ல… ரொம்பவே உடன்ஜி போய்ட்ட… உன்ன நீயே தப்பா நினச்சு நினச்சு செத்துகிட்டிருந்த... அப்படி இருந்த நீ பழைய மாதிரி மாறி இருக்குறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா மச்சா.. இதுக்குலா காரணம்...?" என்ற ஶ்ரீ எதோ பேச வர அவன் பேச்சை நிறுத்தியவன்
"ம்ம் ஆமாடா… ஏன் மச்சா... நா இப்போ ஒரு வாரமா ஹேப்பியா இருக்கேன்ல... அது ஏன் தெரியுமா..?."என்று கேட்டான்…
"தெரியாது மச்சா..” என்ற ஶ்ரீ தன் மனதிற்குள் ‘அது என்னனு தெரிஞ்சுக்கத்தான உன்ன இங்க வர வச்சுருக்கே…’ என்றான்
அப்பொழுது எழில் அவனிடம் "தெரியாதா... நா… வே… வே.. வேணும்னா சொல்லட்டா" என்றான்
உடனே ஶ்ரீ ஆர்வமாக "ஹம் சொல்லு சொல்லு… சொல்லுப்பா என் ராசா.." என்றான்
"ஹ்ம்ம் சொல்லுறே... காரணம் அவதாண்டா"
"யாருடா?"
"அவதான் அந்த சூறாவளி...." என்று எழில் சொல்ல ஶ்ரீ முகத்தில் ஒரு நமட்டு புன்னகை தோன்றியது…
"நினச்சே.. மேல சொல்லு" என்றான்
"ம்ம் சொல்றேன்" என்ற எழில் தொடர்ந்தான்…
"ஆக்ச்சுவலா நீ ஒண்ணு கவனிச்சியா அவ என்ன டம்மி போலிஸ்னு சொன்னப்போ அவள ஏன் நா எதுமே சொல்லல "
"அதான் நான் உன்ட ஆரம்பத்துலயே கேட்டேனே நீதான் எதுமே சொல்லல எனக்கும் இந்த டவுட் இருந்துட்டேதான் இருக்கு ஏண்டா மச்சா நீ எதுமே சொல்லல ? ரீசன்?"
"ஹா அத நா இப்ப சொல்லட்டா"
"சொல்லு மச்சா சொல்லு"
"உனக்கு தெரியும்ல அம்மாவும் மீராவும் என்ன அடிக்கடி டம்மி போலீஸ்ன்னு சொல்லி வம்பிழுப்பாங்கன்னு.. இதுல மீரா கூட ரெண்டு மூணு தடவ சொல்லிட்டு விட்டுடுவா… but அம்மா என்ட அடிக்கடி இந்த ஒரு வார்த்தய சொல்லி வம்பிழுப்பாங்க… ஏன்னுலாம் எனக்கு தெரில இந்த சூறாவளியும் இதே வார்த்தைய சொன்னப்போ எனக்கு டக்குன்னு அம்மா நியாபகத்துக்கு வந்துட்டாங்கடா.. அவ சொன்ன விதம் அப்படியே அம்மா சொன்ன மாதிரியே இருந்துச்சுடா" என்று சொன்ன எழிலின் கண்களில் அத்தனை ஒரு ஆர்வமும் சந்தோஷமும் மின்னியது…
"ஓஹோ..... அப்படியா மச்சா .... நிஜமாவே இந்த ஒரு காரணம் மட்டும்தானா? ... ஏன் கேக்குறேன்னா நம்ம அம்மாவும் யாருன்னே தெரியாத இந்த பொன்னும் எப்படி மச்சா ? கன்ட்டிப்பா வேற ஒரு ரீசன் இருக்குதான.. அது என்னன்னு சொல்லுடா" என்றான் ஶ்ரீ ஆர்வமாக…
"என்னம்மோ தெரியல அவள அந்த லாரி மோத வந்தப்ப நா அவ கைய பிடிச்சு இழுத்தப்ப்போ அங்க அது எனக்கு அம்மா கை மாதிரி தோனுச்சு.. அம்மா கைல இருந்த அந்த சிவன் சிம்பல் போட்ட அந்த டாட்டு அதுக்கு பக்கத்துலையே இருந்த அந்த தழும்பு அப்படியே இவ கைலயும் பாத்தேன்டா..
அது மட்டுமில்லடா இன்னொரு matterம் இருக்கு.. actually இவள நான் அன்னிக்குதா 1ஸ்ட் டைம் மீட் பன்னல.. கொஞ்ச நாள் முன்னாடியே பாத்திருக்ககேன்… அம்மா போற அதே சர்வேஸ்வரர் கோவில்ல இருந்தா..
அம்மா நியாபகமா அம்மாக்கு பிடிக்கும்னு அந்த கோவிலுக்கு போன நான் சாமி கும்பிட்டு வெளிய வர்ப்போ எப்பவுமே அம்மா உக்காருர அந்த இடத்த திரும்பி பாத்தேன்.. அங்க என்னடான்னா, இந்த பொண்ணு யாருக்கோ வெயிட் பன்னிட்டு உக்காந்து இருந்தா.. கைல ரெண்டு அட்ச்சத கூட இருந்தச்சு.. அதுல ஒன்னு அம்மா எப்பவும் கோவிலுக்கு கொண்டு போற கிளி படம் போட்ட அந்த அட்ச்சத கூட .. அது மட்டும் இல்லாம அம்மா ஒரு பொண்ண பத்தி என்கிட்ட அடிக்கடி சொல்லுவாங்கல்ல உனக்கு நியாபகம் இருக்கா ? அம்மாவே அந்த பொன்னுக்காக தன் கையில ஒரு saree கூட நெஞ்சாங்களே , அதே saree-யதாண்டா அவ கட்டி இருந்தா " என்று சொன்ன எழிலின் கண்களில் எதோ ஒரு தேடல் நிறைந்திருந்தது…
"எழில் அப்போ ஒரு வேல அம்மா சொன்ன அந்த பொன்னு சூறாவளி?" என்று ஸ்ரீ குறுக்கிட்டான்
“இல்ல… தெரியல” என்று சொல்லி தலையசைத்த எழில்..
"But அம்மா தச்ச அந்த saree, Then அம்மாவோட அந்த அட்ச்சத கூட இதோட அவள அங்க பாத்ததும் என்னால அந்த இடத்த விட்டு நகல முடியல.. ஒரு வேல இவ அம்மாக்காக வெயிட் பன்னி இவள ஏமாத்த கூடாதுன்னு அம்மா அங்க வந்துட்டா , நா.. நானும் என் அம்மாவ பாத்திடலாம்ல அம்மாகிட்ட நா போய் பேசிடுவேன்ல அம்மாவ வீட்டுக்கு கூப்பிட்டு வந்திடலாம்ல, அம்மா நம்ம கூடவே இருப்பாங்கள்ள அப்படீன்னு ஏதோ விவரம் தெரியாத ஒரு குழந்தை யோசிக்கிற மாதிரி யோசிச்சுட்டு அங்கேயே உக்காந்துட்டேன்" என்று சொன்னவன் கண் கலங்கி குழந்தை போல் அழ தொடங்கினான்.
ஸ்ரீ கண்ணுக்கு எழில் தாயின்றி தவிக்கும் ஒரு குழந்தையாய் தெரிந்தான்.
அவன் தவிப்பை கண்டு அவனும் கண் கலங்கி பின் எழிலை தேற்றினான்.
பின் தன் கண்களை துடைத்து கொண்டு எழில் பேச தொடங்கினான்.
“ஆனா ஒன்னு மச்சா அவள பாத்த கொஞ்ச நேரம் என் மனசுக்குள்ள இனம் புரியாத ஒரு அமைதி, நிம்மதி சந்தோசம்ன்னு எல்லாம் மொத்தமா கிடச்சது..
அடுத்த ஒரு வாரத்துல மறுபடியும் கோவிலுக்கு போனேன் அன்னிக்கும் அவ அங்கதான் இருந்தா..அதுவும் அதே இடத்துல.. அம்மா கூடையோட யாருக்கோ வெயிட் பன்னிட்டு இருந்தா.. அண்ணிக்கும் அவள பாத்தப்போ அதே ஃபீல், ஒரு இனம் புரியா உணர்வு நிம்மதி and சந்தோசம் அப்போ திடீர்னு அம்மா என்கிட்ட வந்து என் கைய பிடிச்சு என்கிட்ட எப்பவும் சொல்ற அந்த ஒரு வார்த்தைய சொன்ன மாதிரி தோனுச்சு. எப்பவுமே அம்மா அந்த வார்த்தய சொன்னதும் மறுத்து பேசுற எனக்கு அன்னைக்கு மறுத்து பேசனும்னு தோனால… என்னமோ அவள பாத்துட்டே இருக்கனும் போல தோனுச்சு…. அதுனாலயே அடிக்கடி அங்க கோவிலுக்கு போனேன் அவள பாப்பேன், அவளும் அதே இடத்துலதான் இருப்பா.. actually நான் மட்டும்தான் அவள பாத்தேனே தவிர அவ என்ன பாக்கல .. அன்னிக்குதான் அந்த லாரி மோத வந்தப்போதான் அவ என்ன முத தடவ பாத்தா… இன்னிக்கு கூட அவளோட kidnapping விசயத்துல அவ மேல பயங்கர கோவம், ஒரு வேலை அவளுக்கு எதாச்சு ஆகிருந்தா ? இப்போ எனக்கு கிடைக்குற இந்த கொஞ்ச மன நிம்மதியும் கானாம போனா என்ன ஆகுறது? அப்படீன்னு எனக்குள்ள ஒரு சுயநலம் அவ கடத்தபட்டதுக்கு அவளுடைய கேர்லஸ்தான் காரணம்ன்னு தோனுச்சு.. அதான் அவள அடிச்சுட்டேன்."என்றான்
" என்ன மச்சா சொல்ற? நீ சொல்றது எனக்கு எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா ? அப்போ சார் இப்போலாம் அடிக்கடி கோவிலுக்கு போறது இதுக்குதானா ? ஏன் மச்சா நீ சொல்ரதெல்லாம் வச்சு பாக்குறப்போ எனக்கென்னமோ நீ சூறாவளிய லவ் பன்றியோன்னு தோனுதுடா" என்றான் ஶ்ரீ
அதை கேட்ட எழில் இதழோரம் வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தவன் “அட போடா லவ்வா? அதும் நானா ? என்னிக்கு மீரா செத்தாலோ அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இனி என் வாழ்ககையில கல்யாணம்ன்றதே no அப்படீன்னு...... But சூறாவளிய டெய்லி என் வாழ்க்கை ஃபுல்லா பாத்துட்டே இருந்தா அவ என் கூடவே இருந்தா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் மச்சா......"என்று சொல்லி விட்டு டேபில் மேலயே சரிந்தான்.
இங்கு ஸ்ரீ நிலைமைதான் பாவம்...
‘என்ன இவன் இப்படி நம்மல குழப்பி விட்டுடுட்டான்... அவள லவ் பண்ணல but லைஃப் ஃபுல்லா பாத்துடே அவ கூடவே இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்றான் ... ஹம் பண்றேன் இதுக்கு ஒரு வழி பண்றேன்...."என்று சொல்லி விட்டு அவனும் அந்த table மீது சரிந்தான்…
அடுத்தடுத்து விடிந்த இரண்டு நாட்களும் ஸ்ரீ திட்டமிட்டபடியே சிறப்பாய் போனது...
மறுபக்கம் கனடாவில் உயர்ந்த மாடி கட்டிடத்தில் தன் அறையில் அமர்ந்திருந்தான் ருத்ரன்…
தென்றல் மூன்று முறை குறி வைத்தும் தப்பியது, அதற்க்கு காரணம் எழில்தான் என்று அறிந்தவன் தன் கையில் உள்ள போனை அங்குள்ள சுவற்றின் மீது வீசி எறிந்தான்.. அப்படியும் அவனுள் உள்ள கோவம் குறையாமல் அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் தன் துப்பாக்கியால் சுட்டு தள்ளினான்..
இதையெல்லாம் பார்த்து நடுங்கியவள் தன் கையில் உள்ள ஜூஸை குடிக்க முடியாமலும் அங்கிருந்து தப்பி ஓட முடியாமலும் பயந்து போய் மிரட்சி நிறைந்த விழிகளுடன் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் லீனா..
அவளின் பயந்த முகத்தை கண்டு தன் கோவைத்தை மறைத்து கொண்டவன் புன்னகை முகமாக அவளை நோக்கி சென்று..
"லீனா baby next week we’ll go to India... ." என்று சொல்லி அவளை அந்த ஜூசை குடிக்குமாறு கண் சைகையால் சொல்ல அவளும் பயத்துடன் வேறு வழியின்றி அந்த ஜூஸ் டம்ளரை காலி செய்தாள்..
“Good girl “ என்று அவள் கன்னத்தில் தன் கையில் உள்ள துப்பாக்கியால் தட்டி கொடுத்தவன் புன்னகை முகம் மீண்டும் கடுகடுவென மாறியது..
தன் பல்லை கடித்து கொண்டு “i will come for you , my super hero எழில்
நீயும் சீக்கிரமாவே சாக போர… உன் கூட சேந்து சுத்துர பாவத்துக்கு அந்த ஸ்ரீ , அப்பரம் அந்த தென்றல் உங்க மூணு பேருக்கும் சாவு என் கையாலதான்.." என்று கோவம் கலந்த சிரிப்பில் அந்த கட்டடமே அதிரும் அளவுக்கு கத்தினான்..
அதில் லீனாவின் பயம் இன்னும் அதிகமானாலும், அவன் சற்று முன் இந்தியா செல்ல போகிறோம் என்று சொன்ன வார்த்தையை நினைத்து அவள் முகத்தில் லேசான சிரிப்பு தோன்றியது..
அதை கவனித்த ருத்ரன் " என்ன பேபி இந்தியா போரோம்ன்னு சொன்னதும் உன்னோட முகத்துல ஏதோ சிரிப்பு தெரியுற மாதிரி இருக்கு. அந்த சிரிப்புக்கான காரணம் எனக்கு தெரியாதா என்ன? ஆனா நீ நினைச்சது கண்டிப்பா நடக்காது" என்று சிரித்துக் கொண்டே சொல்ல அவள் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது கண்கள் கலங்க ஆரம்பித்தது..
அதேசமயம் இங்கு எழில் மிகத் தீவிரமாக அந்த ருத்ரனை சரியான ஆதாரங்களோடு தீர்த்து கட்ட வழி தேடி இது வரை அவன் சேகரித்து வைத்திருந்த அனைத்து files யும் பார்த்து கொண்டிருந்தான்...
அப்பொழுது அங்கு வந்த ஸ்ரீ....
"மச்சா உன் ஃபோன் என்னாச்சு... கால் பன்னா யாரோ ஒரு பொண்ணு ஸ்விட்ச் ஆஃப்ன்னு சொல்லிட்டே இருக்கு..." என்றவனை முறைத்தவன்
"டேய் charge இல்லடா நானும் கவனிக்கல" என்றான் எழில்
"அட போடா இவனே ... மீச கால் பண்ணி என்ற கத்துறாரு..... உடனே வீட்டுக்கு வருவியாம்.." என்று ஸ்ரீ சொல்ல எழில் முகத்தில் குழப்ப ரேகைகள் தோன்றியது..
"எதுக்கு மச்சா ?" எழில் கேட்க
"தெரில வா போலாம்...." என்ற ஸ்ரீ அவனை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்..
எழிலின் அப்பா, பெயர் தேவா… ஸ்ரீ அவருக்கு செல்லமாக வைத்த பெயர்தான் மீசை ..
தேவா மிகவும் strict ஆன மிலிட்டரி ஆபிசர்… border ல் நின்று நம் நாட்டிற்காக சண்டையிட்டு அதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் தன் கால்கள் இரண்டையும் இழந்தவர் இப்பொழுது wheelchair-ஏ கதி என கிடக்கிறார்.. இவருடைய specialityயே மேஜர் சுந்தர்ராஜன் போன்று தமிழ் english இரண்டையும் ஒரு சேர பேசுவதுதான்..
எழில், மீரா , ஸ்ரீ மூன்று பேர் மீதும் அளவில்லா பாசம் கொண்டவர், ஆனால் அதை வெளிகாட்டாது அவர்களிடம் strict ஆகவே இருந்து பழகி விட்டார்..
எழில் எப்பொழுதுமே இவரிடம் பாசம், கோவம் , பயம் என அனைத்தையுமே ஒரு சேரத்தான் வெளிபடுத்துவான்..
கடந்த சில நாட்களாக இருவருக்குள்ளும் சிறிய மனஸ்தாபம் , சரியாக பேசி கொள்வது கூட கிடையாது.. இதை பற்றிய யோசைனையிலேயே எழில் தன் வீட்டிற்குள் நுழைந்தான் ஸ்ரீயுடன்..
"வா எழில்.... Come in ஸ்ரீ.. ஆமா நான் ஒருத்தன் இங்க இருக்கே அப்படீன்றது உங்களுக்கு நியாபகம் இருக்கா?"என்றவர் கேட்க
" அப்பா.. எதுக்கு இப்படி ஒரு கேள்வி?" என்றான் எழில் ஒரு வித தவிப்புடன்..
"பின்ன நீ டெய்லி நைட்டு பத்து மணிக்கு மேலதான் வீட்டுக்கே வர, வந்து எதோ கடமைக்கு சாப்பிட்டு தூங்க போயிடுர.. இப்படித்தான் தினமும் வர போர.. நானும் உன்ன கவனிச்சுட்டுதான் இருக்கேன்...நீ என்னதான் முடிவு பண்ணிருக்க???"
"என்ன முடிவுப்பா ? எத பத்திப்பா?" அவர் அப்பா கேட்கும் விஷயம் எதைபற்றி என்பதை உணர்ந்த எழிலின் வார்த்தைகள் சற்று எரிச்சலாகவே வந்தது..
"ஏன்ப்பா எழில் நா எத பத்தி பேசுறேன்னு உனக்கு நிஜமாவே தெரியல அப்படித்தான சரி நானே சொல்ரேன்.. “ என்றவர் தொடர்ந்து “அதான்பா உன் கல்யாணம்.. Your marriage...." என்றார்..
மறுகணம் டென்ஷன் ஆனான் எழில் "அய்யோ அப்பா ... அதுக்கு என்ன அவசரம் இப்போ?"
"என்ன அவசரமா? தெரிஞ்சுதான் பேசுறியாடா நீ?......"
"அப்பா அது இல்லப்பா ... எனக்கு கல்யாணத்துல இன்டர்ஸ்ட் இல்லப்பா...எனக்கு கல்யாணம் வேண்டாம்... நீங்க இத தவிர்த்து வேற என்ன சொன்னாலும் கேகுறேன்...."
"என்ன சொன்னாலும்?" என்றவர் அவனை ஒரு அர்த்தம் நிறைந்த பார்வை பார்த்து அழுத்தம் திருத்தமாக கேட்க
"ஹ்ம்ம் கேக்குறேன் அப்பா..." என்றான் எழில்
"அப்போ இனி என்கூட பேசாத... நா இந்த வீட்ல இனி இருக்க போறதில்ல....இனி நீ என் முகத்துல முளிக்காத ... என் பேச்ச கேட்காத பையன் எனக்கு வேணாம்..." என்றார் தேவா..
அவர் சொன்னதை கேட்ட எழிலின் நிலை பாவம் அய்யோவென ஆகி போனது..
மறுபக்கம் இங்கு தென்றல் வீட்டில் கடந்த 2 நாட்களாக யாரும் தன்னிடம் பேசாமல் இருப்பதை நினைத்து சோகமாவும் , அதே சமயம் அன்று எழில் தன்னை அடித்ததை நினைத்து கோவம் கலந்த சோகமாவும் இருந்தாள்...
வீட்டில் உள்ளவர்களை எப்படி சமாதான படுத்துவது என்ற யோசனையில் அவள் பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து வானைத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க அவளை அழைத்தார் அவள் அப்பா விஜயன்
"தென்றல்........" என்ற கணீர் குரலில் உலுக்கி விழுந்தவள் முகத்தில் ஒருவித சந்தோஷம் பரவியது..
2 நாட்களாக தன்னிடம் பேசாதவர் திடீரென தன் பெயர் சொல்லி அழைத்ததில் சந்தோஷம் ஆனவள் வேகமாக தன் ரூமை விட்டு குடு குடுவென வெளியே ஓடி வந்தாள்..
ஆனால் வெளியே வந்தவள் முகத்தில் இருந்த சந்தோஷம் நொடி பொழுதில் காணாமல் போனது.. காரணம் விஜயன் கையில் இருந்த form
"தென்றல் என்ன இது?.... அப்போ நா அவ்வளவு சொல்லியும் கேட்காம நீ ஜார்னலிசம் படிக்க அப்ளை பண்ணிறுக்க அப்படித்தான?...."
“அப்பா..... “ என்று ஒரு கணம் தடுமாறியவள் பின் என்ன ஆனாலும் சரி என்ற முடிவோடு துணிச்சலாக பேச தொடங்கினாள்..
"அப்பா இது என் ஆச மட்டும் இல்லப்பா.. அபினேஷ் ஆசையும்ப்பா.. புரிஞ்சுக்கோங்க please.. " என்றாள் கண்களில் தேங்கிய கண்ணீரோடு
"இங்க பாரு தென்றல் , நல்லா கேட்டுக்கோ நீ வேற என்ன சொன்னாலும் நான் சரின்னு சொல்லுரேன்.. ஆனா இது நான் உயிரோட இருக்க வர நடக்கவே நடக்காது. ." என்று அந்த form ஐ வீசி எரிந்தார்..
"அப்பா பிளீஸ் அப்பா" என்றவள் ஏதோ பேச வர அவளை தடுத்தவர்
"தென்றல் நான் சொன்னா சொன்னதுதான் don’t talk anymore .. next month உனக்கு கல்யாணம்... என் நண்பன் ஒரு சிறந்த இராணுவ அதிகாரி தேவா.. அவன் பையன்தான் மாப்பிள்ளை..... போலீஸ் ஆபிசர்... பேரு எழில்..." திடீரென அவர் இப்படி சொன்னதை கேட்டு அதிர்ச்சியானாள் தென்றல்..
"அப்பா ......" என்ற வாரத்தையோடு அவள் தடுமாற விஜயனோ அவள் பேசுவதை கேட்க தயாராக இல்லை என்பது போன்று அவளிடம்
"நா சொன்னத கேட்டா நீ என் பொண்ணு...இல்லனா..... உன் விருப்பம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்..
அதே சமயம் இங்கு எழில் தேவாவிடம் "அப்பா என்ன புரிஞ்சுக்கோங்கப்பா பிளீஸ்..." என்றான்
"புரிஞ்சசுக்கிட்டனாலதான்டா பேசுறேன்... next month உனக்கு மேரேஜ்.. என் பிரண்டோட பொன்னுதான், ரொம்ப நல்ல பொண்ணு.. பேரு தென்றல்....." என்றார்…
எழில் தென்றல் வருவார்கள்..
ஹாய் பிரெண்ட்ஸ் டுடே எபி எப்டீன்னு கமென்ட் பன்னுங்க உங்கள் கருத்துக்கள் எனக்கு மிக அவசியம்... நன்றி 🧚
Leave a Reaction
Reader Comments
No reactions yet. Be the first!