EP 05 - தென்றலை அடித்த எழில்

விஜயாவின் வார்த்தைகள் எழிழுக்கு சாதாகமாகி விட அவன் சிரித்து கொண்டே தென்றலை பார்ததான்..

அவள் கோவமாக தன் அம்மாவை பார்த்து முறைத்தவள் "விஜயா நீயெல்லாம் ஓரு தாயா? இப்படி என்ன இந்த போலிசுட்ட மாட்டி விட்டுட்டியே... நா பாவம் இல்லையா?" என்றாள்..

உடனே அவளை பார்த்து முறைத்த விஜயா "யாரு நீயாடி பாவம்.?..தம்பிங்க ரெண்டு பேர் இருக்காங்கனு பாக்குரேன் இல்ல" என்று மிரட்ட

"இல்லனா .... இல்லனா என்ன பண்ணுவ…? " என்று கத்தினாள் தென்றல்..

"இல்லனா என்ன பண்ணுவேணா? நீ வீட்டுக்கு வாடி.. உங்க அப்பாகிட்ட சொன்னாதான் அடங்குவ... ஏண்டி காய்ச்சலுக்கு ஊசி போட வந்துட்டு இங்கேயும் வந்து ஐஸ் கிரீம் சாப்புட்டுருக்க?...." என்றார் அவர்

"அம்மா மிலிட்டரிகிட்ட சொன்ன." என்று தென்றல் மிரட்டுவது போன்று சொல்ல விஜயாவோ அசருவதாக இல்லை

"சொன்னா என்னடி பண்ணுவ..? நான் சொல்லுவேன்..." என்று அவரும் பதிலுக்கு அவளுடன் மல்லுக்கு நின்றார்..

"சொல்லுவியா ...உன்ன?” என்ற தென்றல் பின் தன் அம்மாவிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள்

“அம்மா பிளீஸ்மா சொல்லாதமா... பாவம்ல... நானு!" என்று அவள் சொன்னதுதான் தாமதம், வேகமாக அவள் முன் வந்து நின்ற வேதா கோவமான குரலில் "யாருடி பாவம் நீயா?... இன்னொரு தடவ அப்படி சொன்ன உன்ன அக்கானு கூட பாக்க மாட்டேன்.. மவளே நானே உன்ன கழுத்த நெறிச்சு கொன்னுடுவேன்...அம்மா வயிறு ரொம்ப வலிக்குதே.. எல்லாம் உன்னாலதாண்டி..." என்று தன் வயிற்றை பிடித்துக்கொண்டே திட்ட , தென்றல் முகத்தை பாவமாக வைத்தவாறு எதுவும் பேசாது அமைதியாக நின்றாள்....

தென்றல் நிலை கண்டு எழில், ஸ்ரீ இருவரும் சிரித்தே விட்டனர்...

பின் எழில், தென்றலின் காதருகில் சென்று "என்ன மேடம் any help… நாங்க வேணும்னா ..." என்றவன் அவளை பார்க்க

தென்றலும் வேறு வலி இல்லாது தன்னை தானே நொந்து கொண்டவள் சரி என்பதை போல எழிலை பார்ததாள்...

அதற்கு எழில்..

"But ஒரு கண்டீஷன் இப்ப நான் உன்ன காப்பத்தனும்னா அந்த acquistகிட்ட நாங்க உன்ன காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ் சொல்லணும், and என்னோட சண்ட போட்டதுக்கு சாரியும் சொல்லனும் ஓகே வா?” என்றான்

" நா எதுக்கு உங்களுக்கு சாரி and தைக்ஸ் சொல்லணும்... சொல்லப்போனா உங்களாலதா அவன் என் கழுத்துல கத்தி வச்சான் நீங்க மட்டும் அவன தப்பிக்க விடாம இருந்திருந்தா அவன் இங்க வர வந்திருப்பானா? இவ்ளோ நடந்திருக்குமா? இப்பகூட என்னாலதான் அவன நீங்க பிடிச்சீங்க.. So அதுக்கு ஒரு தைக்ஸ் and அவன் என் கழுத்துல கத்தி வைக்க நீங்கதான் காரணம் அதுக்கு ஒரு சாரியும் சொல்லுங்க..." என யாருக்கும் கேட்காமல் எழில் காதில் கேட்கும்படி சொல்ல, எழில் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு....

"அம்மா உங்க பொண்ண அவங்க அப்பாகிட்ட சொல்லி ஒரு two weeks house arrest பண்ணி வைக்க சொல்லுங்க..... இது கூட ஒரு விதமான treatmentதான்… இந்த drugs and alcohol-க்கு addict ஆனவங்களுக்கு இப்டிதா treatment கொடுப்பாங்க... maybe இப்படி பன்னா கூட உங்க பொண்ணு ஐஸ் கிரீம் சாப்டறத மறக்க சான்ஸ் இருக்கு...." என்று விஜயாவிடம் வசமாக மாட்டி விட்டான்

"சூப்பர் தம்பி ..நல்ல ஐடியா.. அப்டியே பண்ணுறேன்...." என்ற விஜயா குதுக்கலமானார்..

உடனே தென்றல் எழிலை ஒரு பார்வை பார்த்து முறைக்க ... அவன் சிரித்துக்கொண்டே விஜயாவிடம் "அப்போ நாங்க கிளம்பறோம்மா. கொஞ்சம் இம்பார்டண்ட் வொர்க் இருக்கு.. இல்ல உங்கள வீட்ல வந்து விட்டுட்டு போகவாம்மா நாங்க?.." என்று கேட்டான்

"இல்ல தம்பி நாங்க பாத்துக்கிறோம். நீங்க கிளம்புங்க தம்பி" என்றார் விஜயா தன்மையாக

"ஹ்ம்ம் சரிங்கம்மா அப்பறம் நா சொன்ன அந்த ஹவுஸ் அரெஸ்ட்... ஹ்ம்ம்..."

"கண்டிப்பா தம்பி..." என்ற விஜயா தென்றலை பார்த்து ஜாடையாக ‘நீ வாடி உனக்கு இருக்கு’ என்றார்

அதில் கோவமானவள் எழிலை பார்த்து முறைக்க… எழில் ஸ்ரீ இருவரும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினர்..

பின் கதவு வரை சென்ற ஸ்ரீ, வேதாவை திரும்பி பார்த்து, "உங்களுக்கு ரொம்ப பெயினா இருக்குதுனு இப்போ உங்க அக்காகிட்ட சொன்னீங்களே? வேணும்னா அகைன் ஒரு இன்ஜெக்சன் போட்டுகோங்க" என்றான்

வேதா இதழில் சிறு புன்னகையுடன் சரி என்று கண்ணசைக்க.. அதன் பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்..

அவர்கள் சென்றதும்,விஜயா அவர்கள் இருவரை பற்றியும் புகழ்ந்து கொண்டே இருந்தார்..

."ரொம்ப நல்ல போலீஸ் தம்பிங்கள்ள ரெண்டு பேரும் ..இந்த காலத்துல எத்தன போலீஸ் இப்படி இருக்காங்க. இவ்ளோ அக்கறையா...இந்த சின்ன வயசுலயே... எவ்ளோ கேரிங்.. ரொம்ப நல்ல பசங்க" என்று
அவர் சொல்ல சொல்ல அதில் தென்றலின் கோவம் இன்னும் அதிகமானது.

வேதாவிற்கு ஸ்ரீ யை நினைத்து அவள் இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது..

ஒரு கட்டத்திற்கு மேல் தன் அம்மாவின் புகழாரத்தை கேட்க முடியாத தென்றல் "அம்மா போதும் ரொம்ப புகழ்ந்து தள்ளாத..என்னால கேக்க முடில...எதோ உன் சொந்த மருமகனுங்கள புகழ்ற மாதிரி புகழ்ந்துட்டு இருக்க" என்றாள் எரிச்சலாக

ஆனால் அவள் சொன்னதை கேட்ட விஜயாவோ " ஹே சூப்பர்டி, நீ சொல்றது கூட கேக்க நல்லா இருக்கு தென்றல் ..." என்றார்..

அதில் பொறுமை இழந்து போய் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறிய தென்றல் "அய்யோ அம்மா போதும் வா கிளம்பலாம்..." என்று சொன்னவள், தனக்குள் ‘நம்ம இங்க இப்படி இருக்க அவனுங்கதான் காரணம் அது புரியாம பேசுறியேம்மா" என்று புலம்பினாள்

"என்னடி புலம்பிட்டிருக்க வா கிளம்புவோம் வீட்டுக்கு போனதும் ஃபர்ஸ்ட் அந்த தம்பி சொன்னத பண்ணனும்..."என்றார் விஜயா..

வேதாவும் விஜயாவுடன் சேர்ந்து கொண்டு "நீ சொல்ரதுதாம்மா சரி" என்றாள்..

பின் மூன்று பேரும் வீட்டிற்கு சென்றதும் விஜயா விஜயனிடம் நடந்ததை சொல்லி அழுது புலம்பி கண்ணீர் சிந்தியவர், சில பல திட்டுகளையும் தென்றலுக்கு வாங்கி கொடுத்து விட்டு எழில் சொல் படி அவளை மூன்று வாரம் ஹவுஸ் அரெஸ்ட் செய்யவும் வைத்தார்...

பாவம் தென்றலின் நிலமை அய்யோவென ஆகிவிட்டது... 2 நாட்கள் கூட அவளால் தாக்கு பிடிக்கமுடியவில்லை.

இங்கு போலீஸ் ஸ்டேஷனில் அந்த கன்டெய்னர் லாரி டிரைவர் அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தப்பி சென்ற அந்த கைதியை பிரேம் கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்.. எழில் ஒரு முக்கியமான பைலை ஆராய்ச்சி செய்யும் வேலையில் மூழ்கி இருக்க..ஸ்ரீ கடந்த ஒரு வாரமாக தனது நண்பன் எழிலின் மாற்றத்தை நினைத்து யோசனையில் அமர்ந்திருந்தான்..

அவன் யோசனையை கலைக்கும் விதமாக கால் செய்தார் பிரேம்...

அதை attend செய்தவன் "சொல்லுங்க பிரேம்" என்றான்

பிரேம் பயமும் பதட்டமும் நிறைந்த குரலில் "சார் கோர்ட்டுக்கு போர வழியில அக்கியுஸ்ட் தப்பிச்ட்டான் சார்..." என்றார்.

"வாட்.......???.."

"எஸ் சார்.. அது மட்டுமில்லாம அவன் தப்பிச்சு ஒடுறப்போ அவன ஃபாலோ பண்ணி நாங்க துறத்திக்கிட்டு போனோம்.. பட் அவனுக்கு ஆப்போசிட்ல வந்த லாரி அவன் மேல மோதிடுச்சு சார்...."

"டேமிட் ... என்ன பிரேம் இதெல்லாம்.. இவ்வளவு கேர்லசா... ம் ம் ம்...
ஓகே இப்போ அக்கியூஸ்ட் .. ஹூ இஷ் ஓகே? ஆர்?"

"சார் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம் சார் பட் இன்னும் அவன் கண்ணு முளிக்கல சார்." என்றார் பிரேம்...

உடனே ஸ்ரீ இந்த விசயத்தை எழில் காதுக்கு எடுத்து செல்ல, எழில் சந்தேகப்பட்டு ஸ்ரீயை ஹாஸ்பிடலுக்கு போகச் சொன்னான்.. ஸ்ரீ யும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றான்..

அவன் சென்ற பின்பு எழில் யோசனையில் மூழ்கி விட அவனுக்கு ஒரு call வந்தது..

அதை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் "ஹலோ" என்றான்..

யாருமே எழிலிடம் பேசவில்லை.. ஆனால் ஒரு பெண் கத்தும் சத்தமும் கூடவே ஒரு நான்கைந்து பேர் அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் சத்தமும் கேட்டது..

மறுபடியும் எழில் தன் மொபைலை பார்க்க அவனது பெர்சனல் நம்பருக்கு கால் வராமல் பெண்கள், குழைந்தைகள் மற்றும் வயதானவர்கள் என இப்படி யாருக்காவது எதாவது பிரச்சனை என்றால் 100 க்கு அடிஸ்னலாக கால் பண்ண சொல்லி எழில் அறிமுகப்படுத்தியிருந்த இன்னொரு நம்பருக்குதான் இப்பொழுது போன் வந்திருந்தது

"டேய் யாருடா நீங்க?எதுக்குடா என்ன கடத்திட்டு வந்தீங்க... டேய் இது என்ன இடம்டா? டேய் மொட்ட தலையா.. டேய் கருப்பு பூதம்.. சொல்லுடா யாருடா நீங்கல்லாம்…? " என்று அந்த பெண்ணின் குரல் ஒலிக்க

"அட யார்டா இவ இம்சயா இருக்கா.. சேகர்ட்ட சொல்லி சங்கர்க்கு call பன்ன சொல்லு.. முதல்ல அவள அமைதியா இருக்க சொல்லுங்கடா." என்றான் ஒருவன்

இதை கேட்ட எழில் யாரோ ஒரு பெண் ஆபத்தில் இருப்பதை புரிந்து கொண்டவன் உடனே அந்த நம்பரை டிரேஸ் செய்து கால் வந்த இடத்தை கண்டுபிடித்து ஸ்பாட்டிர்கு செல்கிறான்..


இங்கே அந்த பெண் விடாது கத்தி கொண்டே இருக்க அந்த கூட்டத்தில் கறுப்பு கலர் கண்ணாடி அணிந்து பல்க்காக இருந்த ஆள் ஒருவன் அவள் படுத்தும் இம்சை தாங்க முடியாமல் அவளை பளார் பளாரென்று அறைய அதில் பயந்து போனவள் அதன் பின் எதுவும் பேசாது அமைதி ஆகினாள்.

ஸ்பாட்டுக்கு வந்த எழில் அங்கே தென்றல் இருப்பதை பார்த்து ஒரு கணம் அதிர்ந்தவன் பின் அவளிடம் "ஹே சூறாவளி நீ என்ன பண்ற இங்க… அப்போ நீதான் கால் பன்னதா?" என்றான்..

அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு "ஆமா நான்தான்" என்றாள்..

“ஏண்டி எவ்ளோ தைரியம் இருந்தா போலீசுக்கு கால் பண்ணிருப்ப?" என்று சொல்லி அந்த கறுப்பு கலர் கண்ணாடி அணிந்து பல்க்காக இருந்த ஆள் அவளை அடிப்பதற்காக கை ஓங்கிய அடுத்த நொடி திடிரென வயிற்றை பிடித்து கொண்டு அய்யோ அம்மா என்று அலறியவாறு கீழே விழுந்தான்..

காரணம் எழில்தான் அவன் வயிற்றில் ஓங்கி குத்தியிருந்தான்.. அதில் அந்த தடியன் வலியில் முணங்கியவாறு எழுந்திருக்க முடியாமல் கீழே விழுந்து கிடக்க, மற்ற அனைவரையும் அடித்து வீழ்த்தினான் எழில்..

அடுத்து அங்கு வந்த போலீஸ் ஃபோர்ஸ் மீதம் இருந்த அனைவரையும் அடித்து ஸ்டேஷனுக்கு இழுத்து கொண்டு சென்றனர்...

அதன் பிறகு எழில் தென்றலை பார்த்து

"நீ எப்படி இங்க ... எதுக்காக உன்ன கடத்துனாங்க ? எதாச்சும் தெரியுமா உனக்கு?" என்று கேட்டான்..

"இல்ல எனக்கு தெரில" என்றாள் அவள்

"எங்க உன்ன கடத்துனாங்க ? எப்படி கடத்துனாங்க? எதாச்சும் நியாபகம் இருக்கா?" என்றவன் கேட்க தென்றல் நடந்த அனைத்தையும் கூறினாள்..

இரண்டு நாட்களாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த தென்றலை பார்ப்பதற்காக வந்தாள் அவள் தோழி உமா

"ஹாய் தென்றல் என்னடி ஹவுஸ் அரெஸ்ட் அனுபவம்லாம் எப்படி இருக்கு?" என்று அவள் கிண்டலாக கேட்டாள்

"அட பேசாம போடி .... கடுப்ப கிளப்பாத .என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா?" என்றாள் தென்றல் பாவமாக முகத்தை வைத்து கொண்டு

"அது ஏண்டி பாவமா இல்லியான்றத மட்டும் இவளோ அமைதியா சொல்லுற.."என்று கேட்டாள் உமா

“அதுவா…” என்ற தென்றல் ஹாஸ்பிடலில் நடந்த அனைத்தையும் சொல்ல உமா விழுந்து விழுந்து சிரித்தாள் ..

"இவளோ நடந்திருக்காடி ..இதெல்லாம் தெரியாதே.. நீ ஹவுஸ் அரெஸ்ட் அப்படீனுதான் தெரியும்.. ஹா ஹா ..." என்ற உமா விடாது சிரித்து மேலும் மேலும் அவளை சீண்டி வம்பிழுத்து அதில் ஆனந்தம் கண்டாள்..

"இதுக்கெல்லாம் காரணம் அந்த 2 லுசுங்கதான்" என்று தென்றல் உமாவிடம் தான் பேசியதை பற்றி சொல்லி கொண்டிருக்க படாரென அவளை பேச விடாமல் தடுத்த எழில்...

"ஹே நிறுத்து நிறுத்து இப்போ யார லூசு சொன்ன?? ஸ்ரீயையும் என்னையும்தான சொன்ன?" என்றான்

அவனை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்த தென்றல் "தெரிஞ்சா சரி..." என்றாள் சத்தமில்லா குரலில்

"ஹே எவ்ளோ தைரியம்...உன்னலாம் கடத்திருக்கான் பாரு...."

"இப்போ நா நடந்தத சொல்லனுமா வேணாமா?"

"சரி சொல்லு..."

"நானும் உமாவும் பேசிகிட்டே இருந்தோமா அப்போ ஐஸ் வண்டி சத்தம் கேட்டது.."

"ஹே ஹே உமா உமா ஐஸ் வண்டி உமா"

"ஆமாடி அதுக்கு என்ன இப்போ"

"ஹே பிளீஸ் உமா ஒண்ணே ஒண்ணு மட்டும்"

"ஹே போடி.. எதுக்கு நா உனக்கு ஐஸ் வாங்கி தந்து அந்த மிலிட்டரி என்ன சுட்டு தள்ளவா... முடியாது போடி"

"ஹே அவருக்கெல்லாம் சுட தெரியாது போடி போடி.. போய் வாங்கிட்டு வாடி" என்று தென்றல் கெஞ்ச

"முடியாது.. முடியாது..." என்று உறுதியாக சொல்லி விட்டாள் உமா

"முடியாதா அப்போ நீ இங்கேயே இரு.. நா போய்ட்டு வந்துடுறேன்..அப்படீன்னு சொல்லி பின் பக்கம் கேட் வழியா ஏறி குதிச்சு வந்தேனா, but அதுக்குள்ள அந்த ஆளு எங்க வீட்ட தாண்டி போய்ட்டான் அப்பறமா நா அவன ஃபாலோ பண்ணிட்டே வந்தேன்... அவன் முன்னாடி போக, நா அவன் பின்னாடியே கத்திகிட்டே ரெண்டு தெரு தள்ளி வந்துட்டேன் . அப்போதன் அங்க யாருமே இல்ல அப்படீன்றதவே நா think பண்ணுனேன்.. இத பத்தி நா யோசிச்சுக்கிட்டிருந்தப்போவே ஒரு நாலு பேரு வந்து என்ன தூக்கிட்டு வந்துட்டாங்க.. அப்பறமா என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருந்தப்பதான் என் பக்கத்துல ஒரு பட்டன் செல் இருந்துச்சு அத வச்சுதான் கஷ்டபட்டு என் கால் விரலால உங்களுக்கு கால் பண்ணேன்" என்று அவள் சொல்லி முடிக்க,தென்றலை ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தான் எழில்..

"உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?... ஐஸ் வண்டி போச்சுன்னா பின்னாடியே போயிருவியா.. கொஞ்ம் கூட சீரியஸ்னஸ்ஸே இல்ல..எப்போ பாரு கைல ஐஸ் கிரீம் வச்சுட்டு எதாச்சும் ஒரு பிராபலம் பண்ணிட்டே இருக்க.... இன்னொரு தடவ இந்த மாதிரி எதாச்சும் நடந்துச்சு.... " என்றவன் தொடர்ந்து அவளை திட்டிக்கொண்டே, அவளை சுற்றி கட்டியிருந்த கட்டை கழட்டி விட்டான் ..

"எப்படி இப்போ வீட்டுக்கு போவ…?" என்று அவன் கோவம் மாறா குகத்துடன் கேட்க

தென்றல் சத்தமில்லா குரலில் "நடந்து..." என்றாள்

"என்ன......" மிரட்டலாக வந்தது அவன் குரல்..

"ந... நட ... நடந்து..... மனதிற்குள் கோவத்துடனும் வெளியில் அழுகையுடன் சொன்னாள் தென்றல்..

"மரியாதையா வண்டில ஏறு.. நா வந்து விட்டுட்டு போறேன்..."

"இல்ல வேனாம் நா நடந்தே போய்டுவேன்...."

"சொல்லிட்டே இருக்கே ... இப்போ ஏற போறியா இல்லையா?" என்று கத்தியவன் முகம் கோவத்தில் சிவந்தது..

அவன் கோவம் அறிந்து உடனே வண்டியில் ஏறினாள் தென்றல்...

இங்கே ஐஸ்கிரீம் வாங்க போன தென்றல் நீண்ட நேரமாகியும் வராமல் இருக்கவும். .. பயந்து போய் அவளை தேடி பஸ் ஸ்டாப் வரை வந்திருந்தாள் உமா...

அவள் அங்கு வருவதற்கும், எழிலும் தென்றலும் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது...

"ஹே தென்றல் என்னடி எங்க போய்ட்டு வர?" பதட்டமாக ஒலித்தது உமாவின் வார்த்தைகள்

"ஹ்ம்ம் ஐஸ் கிரீம் வாங்க.. ஏம்மா நீயாச்சு உன் பிரென்ட்க்கு எதும் சொல்ல மாட்டியா?..." என்று நடந்த அனைத்தையும் கூறிய எழில்

"இனிமேலாச்சும் கேர் ஃபுல்லா இருங்க.." என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்..

தென்றல் உமாவை பாவமாக பார்க்க மறு கணம் அவளை ஓங்கி அறைந்தாள் உமா.. அது மட்டுமல்லாது தன் கோவம் தீரும் வரை அவளை திட்டி தீர்த்தவள், ராஜிடமும் நடந்த அனைத்தையும் சொல்லி விட்டு தன் வீட்டுக்கு சென்றாள்..

ராஜூம் அவளை எந்த அளவிற்க்கு திட்டி அழ வைக்க முடியுமோ அந்தளவுக்கு திட்டியவன் பின்னர் அதை தன் பெற்றோரிடமும் தெரிவித்தான்..

விஜயன் விஜயா இருவரும் கோவத்தில் எதுவும் பேசாது அமைதியாக இருக்க, பின் வேதா வந்துதான் அனைவரையும் சமாதானபடுத்தி வீட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்...

ஆனால் பாவம் தென்றல்... அவள் மனம் இப்பொழுது எப்படி உள்ளது என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.... அதை பற்றி யாருமே உணரவில்லை.. தன் மனதில் உள்ள கவலையை மறக்க நினைத்தவள் அது முடியாமல் போகவே தன் கடந்த காலத்தை நினைத்து அழுது கரைந்தாள்

மறுபக்கம் இங்கு எழில் அவளை வீட்டில் இறக்கி விட்டவன் நேராக ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்தான் .. அப்பொழுது சரியாக ஹாஸ்பிடல் சென்றிருந்த ஸ்ரீயும் வந்து சேர்ந்தான்

எழில் அவனிடம் ஹாஸ்பிடலில் இருக்கும் அந்த கைதி பற்றி விசாரிக்க ஸ்ரீ அவனிடம்

"ஹூ இஸ் இன் கோமா மச்சா..." என்றான்..

"What?.. எப்போ சரி ஆகும் எதாச்சும் சொன்னாங்களா ஸ்ரீ?"

"இல்ல எதும் சொல்ல முடியாதுன்னு சொன்னாங்க.. எப்போ வேனாலும் கியூர் ஆகலாம், ஆகாமலும் போலாம்ன்னு சொன்னாங்க"

"சshit ......"

"எஸ் மச்சா பட் நீ சந்தேகப்பட்டு என்ன அங்க போக சொன்னது சரிதா... ஒருத்தன் வந்து அவன போட்டு தள்ள பாத்தான் but நாங்க கரக்ட்டா உள்ள போகும் போது தப்பிச்சு ஒடிட்டான்...நா பிரேம் அண்ணாகிட்ட சீசீடீவி செக் பண்ண சொல்லிருக்கேன்... then பக்கத்துல விசாரிக்க சொல்லிருக்கேன்.. கண்டுபிடிச்சுடலாம்...."

"சம்த்திங் ராங் ஸ்ரீ."

"எஸ் எழில் , எனக்கும் தப்பாத்தான் படுது.. ஆமா நீ எங்க போய்ட்டு வர?"

"அதுவா " என நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தான் எழில்.....

"என்னாது சூறாவளிய அடிச்சயா?" என்று அதிர்ச்சியானான் ஸ்ரீ

"ஆமா மச்சான். . .பின்ன ஒரு சீரியஸ்னஸ்ஸே இல்லாம இருந்தா.. அதான் கோவம் வந்திடுச்சு மச்சா..." என்றான் எழில் வாடிய குரலில்

“டேய் அந்த பொண்ணு யாரோடா. “ என்றவன் தன் பேச்சை பாதியில் நிறுத்து விட்டு தன் மனதிற்குள் ‘ ஹ்கூம் இவன்ட இப்படி பேசுனா சரி பட்டு வர மாட்டான்...... நம்மதா ஏதாச்சும் பண்ணி சரிபட்டு வர வைக்கணு... ம்ம்ம் வர வைக்குறேன்’...என்று நினைத்தவன்

"மச்சா உண்ட நா கொஞ்சம் பேசனும் ..." என்றான்

"டேய் இப்போ என்ன பண்ணிட்டிருக்க... தாலாட்டு பாடிட்டிருகியா?" என்றான் எழில் கோவமாக

"டேய் இப்போ இல்லடா... நைட் 8' கிளாக்... நம்ம இடத்துக்கு வந்திடு.... சரியா" என்றான் ஸ்ரீ

"அங்க எதுக்குடா... மூடு இல்லடா இன்னைக்கு..." எழில் சொல்ல ஸ்ரீ கேட்பதாக இல்லை

"மூடிட்டு வாடா...."

"டேய் மச்சான்..”. என்று அதிர்ச்சியான எழில் மனதிற்குள் ‘என்ன மூடிட்டு வானுலாம் சொல்லுரான்…. ஒருவேளை ரொம்ப முக்கியமான விஷயமா இருக்குமோ சரி போவோம்....’ என்று நினைத்து கொண்டவன்

ஸ்ரீ சொன்னது போன்றே அவன் சொன்ன இடத்திற்கு 7:50 க்கே சென்று அவனுக்காக wait செய்தான்…

அந்த வீடு மிகச் சிறிதளவே இருந்தாலும், பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.. அத்தனை ஒரு பேரழகு அந்த வீடு…

வீட்டைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா பூக்க்கள்.. மனதை மயக்கி அப்படியே கட்டி போடும் வெள்ளை செவ்வந்தி பூக்கள் பார்க்கும் திசையெங்கும் பரவி கிடந்தது…

விட்டின் முன்பு வரிசையாக ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த 5 தென்னை மரங்கள்…

அதில் மாட்டபட்டிருந்த அந்த மஞ்சள் நிற light lamp அந்த வீட்டு மாடியை இந்த இயற்கை காட்சியுடன் சேர்த்து இன்னும் அழகாக காட்டியது…

வீட்டிற்கு பின்புறம் அமைந்துள்ள அந்த இரண்டு மாங்காய் மரத்திற்கும் , பூச்செடிகளுக்கும் நடுவில் மிகச் சிறிய swimming pool ஒன்று அமைக்கப்பட்டிருந்தது..

மரங்களின் குளிர் காற்று அந்த நீரில் பட்டு அதில் இருந்து வரும் வாடை காற்று அங்குள்ள அனைவரது உடலையும் நடுங்க செய்து சில்லென்ற ஒரு சிலுசிலுப்பை ஏற்படுத்தி உடலை உழுக்கி எடுக்கும்…

இப்படி இயற்கையின் கொள்ளை இன்பம் கொண்ட அந்த வீட்டின் மாடியில் ஒரு சின்ன table ம் அதை சுற்றி 3 chair ம் போடபட்டு இருந்தது……

எழில், ஸ்ரீ, மீரா இவர்கள் மூன்று பேரின் சந்தோசம், துக்கம், திட்டம், சில பல உலறல்கள் என இது அனைத்தையுமே இந்த வீடு பாத்த்துள்ளது...

அதே போன்றுதான் இன்று எழிலை உலற வைக்கவே ஸ்ரீ அவனை இங்க வர செய்துள்ளான்..

எழிலோ அது தெரியாமல் இங்கு வந்து இயற்கையை ரசித்து கொண்டிருக்கிறான்.

அப்பொழுது மாடிக்கு வந்த ஸ்ரீ ,எழில் அங்கு இருப்பதை பார்த்தவன்

“என்னடா நல்வனே மூடு இல்லன்னு சொன்ன, இப்போ எனக்கு முன்னாடியே வந்து வெயிட் பண்ற.. ?“ என்று சொல்லி கொண்டே 2 மிலிட்டரி சரக்கு bottle ஐ எடுத்து அவன் முன்பு வைத்தான்…

“ஈ ஈ ஈ ஈ “. என்று எழில் அதை கண்டு சிரிக்க

"டேய் டேய் பல்ல காட்டினது போது... இத மீசகிட்ட இருந்து எடுக்குரதுக்குள்ள நா பட்ட பாடு இருக்கே…எம்மா முடிலடா சாமி..." என்று பேசி கொண்டே ஆளுக்கு ஒரு பெக் ஊற்றினான்…

அதன் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து குடிக்க .... ஸ்ரீ ஒரு பெக்குடன் நிறுத்தி கொண்டான்.. ஆனால் எழிலோ அந்த bottle முழுவதையும் காலி செய்தவன் எதோ உலற தொடங்கினான்..

"நண்பேன்டா நீ... நீ என் நண்பேன்டா.. உம்மா. ..." என்று அவன் பேச்சுக்கள் உலறலுடன் வர

ஸ்ரீயும் இதுதான் சரியான நேரம் என்று நினைத்து அவன் மனதில் உள்ள கேள்விகளை கேட்க தொடங்குகிறான்…

"மச்சா... இந்த ஒரு வாரமா நா உன்ன கவனிச்சுட்டுதா இருக்கே... என்னோட பழைய எழிலாவே நீ மாறி இருக்க மச்சா... நீ பழைய மாதிரி சிரிச்சு பேசுற... நிம்மதியா படுத்து துங்குற...அம்மாவும் , மீராவும் இறந்த பின்னாடி நீ
இப்படி இல்லவே இல்ல… ரொம்பவே உடன்ஜி போய்ட்ட...உன்ன நீயே தப்பா நினச்சு நினச்சு செத்துகிட்டிருந்த... அப்படி இருந்த நீ பழைய மாதிரி மாறி இருக்குறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா மச்சா.. இதுக்குலா காரணம்...?" என்ற ஶ்ரீ எதோ பேச வர அவன் பேச்சை நிறுத்தியவன்

"ம்ம் ஆமாடா… ஏன் மச்சா... நா இப்போ ஒரு வாரமா ஹேப்பியா இருக்கேன்ல... அது ஏன் தெரியுமா..."என்று கேட்டான்…

"தெரியாது மச்சா..” என்ற ஶ்ரீ தன் மனதிற்குள் ‘அது என்னனு தெரிஞ்சுக்கத்தான உன்ன இங்க வர வச்சுருக்கே…’ என்றான்

அப்பொழுது எழில் அவனிடம் "தெரியாதா... நா… வே… வே.. வேணும்னா சொல்லட்டா" என்றான்

உடனே ஶ்ரீ ஆர்வமாக "ஹம் சொல்லு சொல்லு.. சொல்லுப்பா என் ராசா.." என்றான்

"ஹ்ம்ம் சொல்லுறே... காரணம் அவதாண்டா"

"யாருடா?"

"அவதான் அந்த சூறாவளி...." என்று எழில் சொல்ல ஶ்ரீ முகத்தில் ஒரு நமட்டு புன்னகை தோன்றியது…

"நினச்சேன்.. மேல சொல்லு" என்றான்

"ம்ம் சொல்றேன்" என்ற எழில் தொடர்ந்தான்…

எழில் தென்றல் வருவார்கள்

Leave a Reaction

Reader Comments

No reactions yet. Be the first!

NovelClicks Footer