எழில் அக்யூஸ்டை துரத்திகொண்டு ஓட.. அந்த அக்கியூஸ்ட் தன் அம்மா மற்றும் வேதாவுக்கு தெரியாமல் ஒளிந்து நின்று ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த தென்றலை பிடித்து இழுத்தவன் அவள் கழுத்தில் கத்தியை வைத்து எழிலை பார்த்து ” இதுக்கு மேல 1 அடி எடுத்து வச்ச இவ கழுத்த அருத்துடுவேன், பாத்துக்க “என்று மிரட்டினான்..
“”டேய் விடுடா…அவள ஒன்னும் பண்ணிடாத, ஒழுங்கா சரண்டர் ஆகிடு, உன்ன ஒன்னும் பண்ண மாட்டோம்..சப்போஸ் உன்னால அந்த பொண்ணுக்கு எதாச்சும் ஆச்சு, மகனே நீ செத்த.. ஃபர்ஸ்ட் அவ கழுத்துல இருந்து கத்திய எடுடா ..”என்று அடக்கபட்ட கோவத்துடன் அக்யூஷ்டை பார்த்து சொன்னான் எழில்.
அச்சமயம் இங்கே மறுபக்கம் தென்றலின் அம்மாவும்,வேதாவும் அவளை ஹாஸ்பிடலின் உள்ளே எல்லா இடத்திலும் தேடியவர்கள், அவள் அங்கே இல்லமால் போகவும் அவளை தேடி வெளியே வந்தார்கள்..
அங்கே தென்றல் கண்களை இருக்க மூடி பயத்தில் நடுங்கி போய் நிற்க, அவள் கழுத்தில் ஒருவன் இப்படி கத்தியை வைத்து நிற்பதை பார்த்து மிரண்டு போனார்கள்..
“ அய்யோ கடவுளே.. தென்றல்… தென்றல்.. தம்பி என் பொன்ன விட்டுடு.. அவள ஒன்னு பண்ணிடாத” என்று கத்தினார் விஜயா
“உன் பொன்ன விடனுமா? அப்டின்னா இந்த போலீஸ இங்கிருந்து கிளம்ப சொல்லு நா விட்டுடுறேன் “ என்று அந்த acquist சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவனருகில் வந்த வேதா “டேய் அக்காவ விடுடா விடு.. விடுடா..”என்று சொல்லி அவனின் கையை பிடித்து உழுக்கியவாரு அவனை அடிக்க ஆரம்பித்தாள்....
அதில் இன்னும் கோபமானவன் வேதாவை தன்னுடைய பின்னங்கை கொண்டு அவள் வயிற்றில் ஓங்கி குத்தினான்..
அவன் அவளை குத்திய வேகத்தில் வலி தாங்க முடியாமல் கீழே சுருண்டு விழுந்தாள் வேதா....
இதை பார்த்த விஜயா தன் இரண்டு பெண்களின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் அப்படியே மயங்கி சரிந்தார்…
அதை கண்டு தென்றல் அம்மா என்று பதறியவாரு தன் அம்மா மற்றும் தங்கையை நோக்கி ஓட முயற்சி செய்தாள்,
உடனே அந்த acquist தென்றலின் கழுத்தில் ஓங்கி கத்தியை அழுத்த அதில் பயந்து போனவள் “ அம்மா..” என்று கத்தினாள்..
அடுத்த நிமிடமே எழிலுக்கு தலையே வெடித்து போகும் அளவிற்கு வலி எடுத்தது…
அவன் மனக் கண் முன் அந்த கொடூரன் ருத்ரன் தன் அம்மாவை கத்தியால் கழுத்தை அறுத்த நிகழ்வு நியாபகத்துக்கு வந்து போனது..
‘அன்னிக்கு அம்மாவும்,மீராவும் என்னாலதான் இறந்தாங்க.. இன்னிக்கும் இந்த பொண்ணு என்னாலதான் இப்படி நிக்கிரா..நா மட்டும் அவன துரத்திட்டு வராம இருந்திருந்தா,அவன் இப்படி அவ கழுத்துல கத்தி வச்சி நின்னிருக்க மாட்டான்ல ‘என்பது போன்ற எண்ணங்கள் அவன் மனதில் தோன்ற..
தான் ஒரு போலீஸ், அவன் ஒரு கைதி என்பதையும் மறந்து சிறிது நொடி அந்த இடத்தில் தன் தாய்க்கு மகனாக இருந்த எழில், யாரென்றே தெரியாத யாரோ ஒருத்திக்காக பதறினான்..
அவன் கண்கள் கலங்கி, மனக் கவலைகளும் கோவமும் கலந்த கண்ணீர் வெளியே வர போகும் வேலையில், தான் ஒரு போலீஸ் என்பதை உணர்ந்து, தன்னை சுதாரித்தவன் வெளியே வர இருந்த அந்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டு தன் கம்பீர குரலில் “அவள விடுடா” என அவன் போட்ட சத்தத்தில் அந்த இடமே அப்படியொரு நிசப்தம்....
இங்கே ஸ்ரீ வேறு ஒரு பக்கம் acciquist ஐ தேடிக்கொண்டு இருக்க,எழில் போட்ட சத்ததில் வேகமாக அந்த இடத்திற்க்கு ஓடி வந்தான்…
வந்தவன் அங்கிருந்த நிலையை பார்த்து முதலில் அதிர்ந்தாலும், பின் ஒரு நிமிடம் சுதாரித்து கொண்டான்..
அவன் அந்த அக்கியுஸ்ட்க்கு பின் பக்கமாக இருக்கவும், அதையே தனக்கு சாதகமாய் கொண்டு.. அவன் பின்னால் மெதுவாக போய் தென்றலின் கழுத்தில் கத்தியை வைத்திருந்த அவனின் கையை அசையவிடாமல் இருக்க பிடித்தவன்…பின்னர் தன் பிஸ்டலால் அவன் தலையில் ஓங்கி ஒரு குத்து விட்டான், அடித்த வேகத்தில் அவன் அலற,தொடர்ந்து இரண்டு முறை மீண்டும் மீண்டும் குத்த, அதில் அவன் வலியில் மயங்கி சரிந்தான்..
ஸ்ரீ அவனை முதல் முறை துப்பாக்கியால் அடித்த பொழுதே தென்றலை தன் பக்கமாக இழுத்திருந்தான் எழில்.. பயத்தில் கண்கள் மூடியே இருந்த தென்றல் தன் மீது ஒருவன் கத்தி வைத்திருந்த பயத்திலும், எழில் அவளை பிடித்து இழுத்த வேகத்திலும் மீண்டும் இரண்டாவது முறையாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..
அன்று போல் இன்றும் பயத்தில் அவள் உடல் எங்கும் நடுங்க அவளின் பயம் உணர்ந்தவனாய் அவள் தோளில் தட்டி கொடுத்து அவள் தலையை வருடியவன் ...
"பயப்படாத சூறாவளி.. You are safe now...."என்று அவன் சொன்னதில் அவளின் பயம் சற்று குறைந்து உடல் நடுக்கமும் குறைந்தது...
கீழே விழுந்து கிடந்த வேதா மற்றும் விஜயாவை பார்த்த ஸ்ரீ விஜயாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவர் கண் திறக்கவே இல்லை..
பின் டாக்டரை அழைத்து அவருக்கு என்ன ஆனது என பார்க்கும் படி சொல்ல, அவர்களும் விஜயாவிற்கு டிரீட்மென்ட் தருவதற்காக உள்ளே தூக்கி சென்றனர்..
அச்சமயம் பிரேம் மற்றும் இன்னும் 2 போலீஸ் அங்கே வந்து சேர்ந்தனர், அவர்களிடம் அந்த கைதியை அழைத்து போக சொன்னவன் மறுபக்கம் திரும்பி பார்க்க அங்கே வேதா வயிற்றை பிடித்து கொண்டு வலியால் துடித்து கொண்டிருந்தாள்..
அவளை கண்ட ஸ்ரீ அவளிடம் சென்று அவளை தூக்கி விட்டு எழுப்பி நிற்க வைத்தான்.. ஆனால் அவளால் நிற்க கூட முடியாமல் மீண்டும் வயிற்றை பிடித்து கொண்டு கீழே அமர்ந்தாள்..
எழில் கத்திய சத்தத்தில்தான் அங்கு வந்தவன்,வேதாவை அந்த acquist வயிற்றில் குத்தி தள்ளி விட்டதை அறிந்திருக்கவில்லை.... அதனால் ‘இவளுக்கு என்னாச்சு?’என்பது போல் அவன் முழிப்பதை பார்த்த வேதாவே நடந்ததை சொல்ல
அவளின் வலியை உணர்ந்தவன்... என்ன செய்வதென்று புரியாமல் உள்ளே சென்று ஒரு நர்சை அழைத்து வந்து அவளை உள்ளே அழைத்து செல்ல உதவுமாறு சொல்லவும் அவரும் வேதாவை treatment க்கு அழைத்து சென்றார் .. இவனும் அவர்களுடன் செல்ல வேதா இவன் கையை வலியில் விடாது பிடித்திருந்தாள்...
அவளின் பிடியில் அவள் வலியை உணர்ந்தவன் அவள் தன் கையை பற்றியிருப்பதை பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்..
இங்கு எழில் மீது சாய்ந்திருந்த தென்றலோ தன்னிலை உணர்ந்து சுதாரித்தவள் ‘அச்சச்சோ இவனா? ...இவன் மேலயா சாஞ்சிட்டு நிக்கிரோம்.... இப்போ திட்டுவானே... ரைட்டு நம்ம ரூட்ட ஃபாலோ பண்ண வேண்டியதுதான்’ என்றெண்ணி தன் வேலையை ஆரம்பித்தாள்..
"ஹலோ மிஸ்டர் டம்மி போலீஸ்.. ஐ ஆம் நாட் சூறாவளி.... எனக்கு எங்க வீட்ல பேர் வச்சிருக்காங்க... ஓகே????" என்றாள் முகத்தை சுளித்தவாறு..
"பார்டா இப்போ எங்க போச்சாம் அந்த நடுக்கம்... இவளோ நேரம் என்னமா பயந்த இப்போ வாய பாரு... உன்னோட இந்த வாய் ஜாலத்த அவன் கழுத்துல கத்திய வச்சு நின்னப்போ காட்டிருக்களாம்ல... உன்ன அப்படியே அவன்ட்ட விட்டுட்டு போய் இருக்கணும்.... ஒரு வேள விட்டுட்டு போய் இருந்தாலும் அவன்தான் உன்னோட பேச்ச கேக்க முடியாம தெரிச்சு ஒடி இருப்பான்...." என்று அவன் அவள் வாயில் இருந்து வரும் டம்மி போலீஸ் என்ற அந்த ஒரு வார்த்தைக்காகவே அவளிடம் வம்பிழுத்து கொண்டிருந்தான்.... அவன் நினைத்தது போலவே
அவளும் அந்த வார்த்தையை மீண்டும் சொல்லி விட்டாள் .
"ஹலோ டம்மி போலிசு என்ன சொன்னீங்க இப்போ.. அவ என் பேச்ச கேட்டு தெரிச்சு ஒடியிருப்பானா?... என்ன பாத்தா உங்களுக்கு எப்டி தெரியுது? நா என்ன வாயாடியா.?"
"ஓ.. இதுல உனக்கு சந்தேகம் வேற இருக்கா?.. நீ வாயடினு நா சொல்லிதா உனக்கு தெரியணுமா என்ன?.. ஏன் உனக்கா அது தெரியாதா....?” என்றான் எழில் நக்கல் சிரிப்புடன்..
"என்ன சொன்னீங்க மீ வாயாடி????" என்று தென்றல் கோவமானாள்
"அட என்ன சூறாவளி இப்படி கேட்டுபுட்ட… ஓ என் வாயால அத சொல்லி கேக்கணும் போல இருக்கா ஓகே. உன் ஆசய எதுக்கு கெடுத்துகிட்டு .... வாயாடி வாயாடி நீ வாயாடிதான்."
"நானா வாயாடி நீதான்யா வாயாடி , சேடிஸ்ட், டம்மி போலீஸ்., டம்மி போலீஸ்." என்று மூச்சு விடமால் தென்றல் கோவமாக பேசி கொண்டிருக்க,
இவர்கள் சண்டையை பார்த்து கொண்டே ‘இதுங்களுக்கு வேற வேலையே இல்ல போல’ என்ற பார்வையுடன் அவர்களை நோக்கி நடந்து வந்தான் ஸ்ரீ....
"இந்தாம்மா சூறாவளி .. என்ன எப்போ பாரு என் நன்பனயே டார்கெட் பண்ணி வம்பிலுக்குற?..." என்று ஸ்ரீ தன் நண்பன் சார்பாக பேச
"நல்லா கேளு மச்சான்.. என்ன எப்போ பாரு டம்மி போலிசு டம்மி போலிசுன்னே சொல்லிட்டேயிருக்கா மச்சா ..." என்றான் எழில் முகத்தை பாவமாக வைத்து கொண்டு....
"நீ பெரிய ஒழுங்கா ... நீயும்தாண்டா இவகிட்ட வம்பிழுத்துகிட்டிருக்க.. மூடிட்டு இரு . " என்று அவன் காதில் முணுமுணுத்த ஸ்ரீ தென்றலிடம்
"இந்தாமா சூறாவளி இவளோ பேசுறியே உண்ண காப்பத்துணதுக்கு ஒரு சின்ன தேங்க்ஸ் சொன்னியா?" என்றான்..
அதற்கு அவளோ "ஹலோ ஹலோ நா எதுக்கு தாங்க்ஸ் சொல்லணும்?... நா பேசாம, நா உண்டு என் வேல உண்டுன்னு அம்மாக்கும் வேதாக்கும் தெரியாம ஐஸ்.... “ என்றவள் தன் பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஏதோ நியாபகம் வந்தவளாக
“ஹா அம்மா. ....... வேதா......... அம்மா... வேதா.... அம்மா எங்க கானோம்....? வேதா.. என் தங்கச்சி” என்றாள்
"ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட..." என்று கிண்டலாக சொன்னான் ஸ்ரீ
"எங்க மச்சா? என்ன டம்மி போலிசுனு சொல்லி திட்டுறதுக்கே இவளுக்கு நேரம் பத்தல.. இவ எப்படிடா?.." என்றான் எழில்
"பிளீஸ்......... ஸ்டாப்..... அம்மா வேதா எங்க... சொல்லுங்க போலீஸ் போலீஸ்" என்று அவள் சொல்ல
எழில் சிரித்தே விட்டான் "அது என்ன ரெண்டு போலீஸ்"
"ஹ்ம்ம் ரெண்டு பேர் இருக்கீங்கள அதான்...."
"ஒ." (ஸ்ரீ,எழில் இருவரும் கோரஸ் பாடினர்)
அவளின் கண்கள் கலங்க தொடங்கியது.... "அம்மா,வேதா ...." என்று விசும்பலுடன் அவள் முணுமுணுக்க, அவள் கலங்கிய கண்ணை பார்த்த எழில்
"எம்மா சூறாவளி என்ன கண்ணு கலங்குது... அழுது புடாத பாக்கரவங்க எங்கள எதாவது சொல்லுவாங்க, நாங்கதான் உன்ன மிரட்டி அழ வச்சோமுனு பேசுவாங்க… அப்பறம் இது மீடியாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.. இளம்பெண்ணை மிரட்டி அழ வைத்த இரண்டு போலீஸ் அப்படீன்னு போட்டு இல்லாத ஒன்ன வச்சு நியூஸ் கிளப்பி விட்டுருவானுங்க.. " என்று சொல்லி கொண்டே ஸ்ரீயிடம் கண்களாலே இருவரும் எங்கே என கேட்டான் எழில்....
"உள்ளதா மச்சா டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு...." என்றான் ஸ்ரீ.
அதை கேட்டு பதறி போன தென்றல் "என்ன சொல்றீங்க...என்னாச்சு அவங்க ரெண்டு பேருக்கும்?" என்றாள்
"அட என்னம்மா நீ பயத்துல கண்ண மூடி இருந்த சரி. காது கூடவா கேக்கல?...அப்ப இங்க நடந்தத எதயுமே நீ காது கொடுத்து கேக்கலியா?... பயப்படாத அவங்களுக்கு பயப்படுர மாதிரி ஒன்னும் இல்ல. அம்மா ஷாக்லதான் பிரசர் கூடி மயங்கிட்டாங்க.. Then உங்க சிஸ்டர் வேதா அவன் வயித்துல கையால குத்தி கீழ தள்ளுனதுல ரொம்ப பெயினா இருக்குன்னு சொன்னாங்க.. அதான் ரெண்டு பேருக்கு உள்ள டிரீட் மென்ட் போய்ட்டு இருக்கு.... வா போய் பாக்கலாம்..." என்று ஸ்ரீ சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவர்களை நோக்கி மெதுவாக நடந்து வந்தாள் வேதா..
அவளை பார்த்த தென்றல் வேகமாக அவளை நோக்கி ஓடினாள் "வேதா இப்போ எப்படி இருக்கு?"
"ஹ்ம்ம் இப்போ பரவால்ல அக்கா...."
"அம்மா எங்கடி?"
"உள்ளதா .. வா போய் பாப்போம்"
பின் நான்கு பேரும் உள்ளே செல்ல, விஜயாவும் மயக்கத்தில் இருந்து கண் விழித்தார்..
எழில் அவரிடம் நலன் விசாரிக்க, அவரோ பயத்தில் எதுவும் பேசாது தன் மகள் தென்றலயே பார்த்து கொண்டிருந்தார்..
அவர் இன்னும் பயத்தில் இருந்து வெளியே வரவில்லை என்பதை புரிந்து கொண்ட எழில், அவரை நார்மலாக்க நினைத்தான்..
மெல்ல விஜயாவின் கைகளை பற்றி கொண்டவன்
"அம்மா பயப்படாதீங்க, உங்க பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் எதும் ஆகல.. ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்தவன்தான் அவன்.. எங்க நாங்க அவன பிடிச்சிடுவோம்ன்ற பயத்தில இப்படி பண்ணிட்டான் ... நீங்க எதுக்கும் கவல பட வேனாம் அவன பிடிச்சுட்டோம்... அப்பறம் இனிமே உங்க பொன்ன ஐஸ்கிரீம் சாப்புடுறத கம்மி பண்ண சொல்லுங்க... பாக்குரப்போ எல்லாம் கைல ஐஸ் கிரீம் வச்சிட்டேதான் இருக்காங்க..." என்று தென்றலை பார்த்தவாறு நமட்டு புன்னகையுடன் சொன்னான்..
அதில் தன்னை தானே நொந்து கொண்ட விஜயா "எங்க தம்பி, சின்ன பிள்ளைலயிருந்து நாங்களும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம்... கேக்க மாட்றா, இது எதோ ஒரு நோய் மாதிரியே போச்சு. எப்பவாச்சும்னா பரவாயில்லை.. ஆனா இவ எப்பவுமே இதயேதான் சாப்பிட்டு திரியுரா நீங்க மண்டைல்ல நாலு தட்டு தட்டி புத்தி சொல்லிட்டு போங்க தம்பி..." என்றார்..
அவர் சொன்ன அந்த வார்த்தை இப்பொழுது எழிலுக்கும் மிகவும் சாதகமாகி போனது..
அவன் நமட்டு சிரிப்புடன் அவளை பார்க்க, அவள் முகத்திலோ அத்தனை ஒரு கோவம்..
எழில் தென்றல் வருவார்கள்
Hi friends எழிலின் தென்றல் நாவல் பற்றிய உங்கள் கருத்துகள நீங்க கீழ comments ல சொல்லலாம்.. உங்க comments இந்த நாவலுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். நன்றி..
Leave a Reaction
Reader Comments
No reactions yet. Be the first!