இரவு முழுவதும் யோசித்து விட்டு ‘இதுக்கு மேல வெயிட் பன்னா மண்ட வெடிச்சு செத்திடுவோம்.. So ,நம்ம அவன்டயே கால் பண்ணி கேட்டுடலாம்’ என்று முடிவு செய்து எழிலுக்கு கால் செய்து தன்னுடைய சந்தேகத்தை கேட்டான் ஸ்ரீ…
"அந்த பொண்ணுகிட்ட ஏன் அப்படி சொன்ன?.. நீ வச்சிருக்க ரிங் டோன்க்கு அந்த பொண்ணுதான் காரணம்னு.. சொல்லு மச்சா சொல்லு… அப்படீன்னா அந்த பொன்ன நீ லவ் பண்ணி அந்த பொண்ணு உன்ன ஏமாத்திடுச்சாடா?......." என்றவன் கேட்க
"டேய் ஸ்ரீ ஒழுங்கா ஃபோன வச்சிட்டு போய் தூங்கு “ என்றான் எழில் அடக்கபட்ட கோவத்துடன்..
“அதெல்லாம் முடியாது. இப்போ நீ சொல்லியே ஆகனும்" என்று பிடிவாதம் பிடித்தான் ஸ்ரீ.. அதில் இன்னும் கோவமான எழில்
"அடிங்க நா சொல்லிட்டே இருக்கேன்" என்று மிரட்ட
"மச்சா இப்போ உனக்கு கால் செய்த ஸ்ரீ என்ற வாடிக்கையாளர் வெக்கம், மானம்,ரோசம், சூடு சொரணை இந்த அனைத்து உணர்ச்சிகளுக்கும் அப்பால் உள்ளார்…. அதனால நீ கண்டிப்பா சொல்லியே ஆகனும்..... பிளீஸ் மச்சா சொல்லுடா.." என்ற ஸ்ரீயின் இந்த பேச்சால் எழில் சிரித்தே விட்டான்...
"டேய் நீ நினச்ச மாதிரிலாம் எதுவும் இல்லடா… அப்படி ஒன்னு என் லைஃப்ல நடக்கவும் நடக்காது" என்றவன் கலங்கிய குரலோடு சொல்ல இங்கு ஸ்ரீயும் அவன் கவலை கண்டு கண் கலங்கியிருந்தான்... அவன் எண்ணங்கள் அனைத்தும் அறிந்தவனாய்...
சொல்லப்போனால் இழப்பு இருவருக்குமே… ஆனால் ,ஸ்ரீ தன்னை மாற்ற முயற்சி செய்து அந்த இழப்பில் இருந்து மீண்டு வருகிறான்….
ஆனால்,எழில் ஒரு நொடி கூட தவறாது அந்த இழப்பின் கவலையிலேயே இரவு கூட தூங்காது சிறுக சிறுக செத்து கொண்டிருக்கிறான்.....
இருவர் மனதும் நெருப்பாய் கொதித்து கொண்டிருக்கிறது, இருவரின் இழப்பிற்கும், கவலைக்கும் காரணமான அந்த ருத்ரனை அனு அனுவாய் சித்திரவதை செய்து சினம் தீர அவனை கொன்று நெருப்பில் வீழ்த்த வேண்டுமென ..
அந்த ஒரு நாளுக்காகத்தான் சரியான நேரம் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் இருவரும்....
இப்படி இருவரும் ஒரே நினைவில் இருக்க… பின், எழில்தான் சுதாரித்தவனாய் "டேய் மச்சான் ஸ்ரீ, நீ நெனச்ச மாதிரி ஒரு வெங்காயமும் இல்ல... நேத்து நான் ஃபோன் ringtone set பண்ணேன், அதுல நா வச்சிருந்த ரிங் டோன் erase ஆகிடுச்சு. அதான் வேற Tone செட்பண்ணலாம்னு set of cut songs download பண்ணி ring tone set பண்ணிட்டிருந்தேன்.. எல்லா song-சும் அதோட நேம்ல இல்லாம 1. 2. 3 ன்னு இருந்துச்சா..அதான் தெரியாத்தனமா இந்த song -அ வச்சிடேன்.. சரி வேற song மாத்தலாம்னு மாத்த போனப்போதான்.. நீ என்ன கூப்பிட்ட நா உன்கிட்ட என்னனு கேக்கரதுக்கு திரும்பும் போதுதான், அந்த பொண்ணு மேல லாரி மோத வந்துச்சு, அடுத்து நடந்ததுதான் உனக்கே தெரியுமே அவ கூட சண்ட போட்ட டென்ஷன்ல வேற song மாத்த மறந்துட்டேன், அதான் அவ கேட்டப்போ அப்படி சொன்னேன் போதுமா?...doubt கிளியரா... இப்போ போ.. போய் தூங்கு.... குட் நைட்" என்றான்
"அப்படியா மச்சா அப்போ நான்தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா … பின்ன எதுக்கு அவ உன்ன அத்தன தடவ டம்மி போலிசுன்னு சொல்லியும் உனக்கு கோவமே வரல?.. இதுவே அந்த இடத்துல வேற யாராச்சும் இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்படீன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.. இதுக்கு என்ன மச்சான் பதில் சொல்ல போர.... மச்சான் டேய் டேய்...."
யார் பெற்ற பிள்ளையோ தனியாக புலம்பி கொண்டிருந்தது போனில்.. காரணம் எழில்தான் குட் நைட் சொன்ன மறுகணமே போனை cut செய்து விட்டானே🤭🤭…
இங்கு தென்றல் தன் ரூமிற்குள் எழில் சொன்ன வார்த்தைய பற்றி நினைத்து கொண்டிருக்கும் பொழுதே, இரவு 10 மணிக்கெல்லாம் ஐஸ் கிரீம் சாப்பிட்டதும் மழையில் நனைந்ததும் வேலையை காட்ட தொடங்கியது… ஆம் போன காய்ச்சல் மறுபடியும் வந்தது.....
காய்ச்சலில் அனைவரையும் படாத பாடு படுத்தி எடுத்தவள் இரவு முழுவதும் யாரையும் தூங்கவிடவில்லை ..
நிலவும், சூரியனும் தன் வேலைகளை சரியாக செய்ய, இரவு மறைந்து பகலானது....
சூரியன் முகத்தில பட கண் விழித்தவன் எழுந்து மணியை பார்க 8:46 என காட்டியது
"Oh shit ... இவளோ நேரம் தூங்கிடேனா?... மீராம்மா நீ மட்டும் என் கூட இருந்திருந்தா இந்நேரம்லாம், என்ன எழுப்பி விட்டிருப்பீல? "என கவலை நிறைந்த மனதுடன் புலம்பியவாரே எழுந்து வேக வேகமாக கிளம்பி, தான் அதிகமாக நேசிக்கும் காக்கி உடையை அணிந்து கொண்டு… தன் அம்மா, அப்பா மற்றும் மீரா ஃபோட்டோ முன் சென்று கண்ணை மூடி யாரும் இல்லாமல் தான் மட்டும் தனியாக இந்த வீட்டில் தங்கி இருக்கும் சூழ்நிலையால் மனதில் ஏற்படும் வலிகளை அவர்கள் முன் புலம்பிவிட்டு, நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டாது தான் ஒரு போலீஸ் என்ற கர்வத்துடன் கையில் உள்ள காப்பை திருகிக்கொண்டு தனக்காக காத்திருக்கும் போலீஸ் ஜீப் அருகே வந்து நின்றான் ஸ்ரீ....
‘இந்த நாய் எப்பவும் போல என்ன கால் பண்ணி எழுப்பி விடாம இப்படி பண்ணிட்டானே?... ஒரு வேல நைட்டு கால் பண்ணி கடுப்பேத்துனதுனால பிள்ள நம்ம மேல கோவமா இருப்பானோ?.. சரி கால் பண்ணி பாப்போம்... ‘ என்று நினைத்தவன் தன் நண்பன் எழிலுக்கு கால் செய்தான்.. ஆனால் 5 முறைக்கு மேல் கால் செய்தும் அவன் attend செய்யவே இல்லை....
"பயபுள்ள ரொம்ப கோபமா இருப்பான் போல..... சரி சார ஸ்டேஷன்ல போய் சரி பண்ணிக்கலாம்”.... என நினைத்தவாறே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தான்..
உள்ளே வந்தவன் நேராக எழில் cabin க்குதான் சென்றான்.. ஆனால் அங்கேயும் அவனை காணவில்லை. ...
"பிரேம் எழில் இன்னும் வரலயா?"
ஸ்ரீயின் கேள்விக்கு "இல்ல சார்…இன்னும் வரல" என்றார் பிரேம்
‘இவனுக்கு என்னாச்சு? ஏன் இன்னும் வராம இருக்கான்.. கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான் .. " என்று யோசித்தபடியே எழில் வருகிறானா இல்லையா? என வாசலை பார்க்க.. எழிலும் தன் நண்பனை ஏமாற்றாமல் அங்கு வந்து சேர்ந்தான்..
பரட்டை தலையோடு, பார்க்கவே அறைகுறையாய் காக்கா குளியல் குளித்து வந்திருப்பது தெளிவாக தெரிந்தது ஸ்ரீக்கு.. அவனை பார்த்து சிரித்தவன்
"டேய் என்னடா இது?" என்றான்
"எதுடா...?" என்று எழில் கேட்க
"ஹம் உன் கெட்டப்... ஏன்டா தல கூட சீவாம இப்படி வந்திருக்க?அதுவும் இவ்ளோ லேட்டா?.. டைம் பாரு 11 ஆக போகுது.. ஏ என்னாச்சு?" என்றான் ஸ்ரீ
"என்ன நொன்னாச்சு... ஏண்டா எப்பவுமே சேந்துதான வருவோம் இன்னிக்கு ஏண்டா நீ மட்டும் சீக்கிரமா வந்த?.. என்ன எழுப்பி விடனும்ன்னு தோனுச்சா உனக்கு?"
"டேய் நா என்னைக்குடா உன்ன எழுப்பிருக்கேன்?.. நீதானடா என்ன எழுப்புவ, நீ என்ன எழுப்பாம இருக்கவும், நானே லேட்டா எழுந்து.. இப்போதான் வந்தேன்.. Just now.. நான் கூட நைட் கால் பன்னதுல கோவம் போல, அதான் என்ன எழுப்பாம விட்டுட்டு போய்ட்டியோன்னு நினச்சி வந்துட்டேன்.." என்று ஸ்ரீ சொல்ல
"அட போடா அப்டீலாம் எந்த கோவமும் இல்ல .... நல்ல தூக்கம்.. அட்லீஸ்ட் நீ ஒரு கால் பண்ணியாச்சும் எழுப்பிருக்கலாம்ல ... 10:30க்குதான் எந்திருச்சேன்..." என்று எழில் சொன்னதை கேட்ட ஸ்ரீக்கு அத்தனை ஒரு அதிர்ச்சி..
காரணம் அவன் ஐந்து முறை call செய்தும் அதை கவனிக்காமல் தனக்கு ஏன் போன் பன்னவில்லை என்று கேட்கிறான்.. இது ஒரு அதிர்ச்சி என்றால் அதை விட பெரிய அதிர்ச்சி இத்தனை நாள் அரைகுறை தூக்கம் கூட இல்லாமல் தன் மனதில் உள்ள கவலையை நினைத்து நினைத்து தன் தூக்கத்தை கெடுத்து கொண்டவன் இன்று அசந்து தூங்கி விட்டேன் என்று சொல்வது..
இதை எண்ணி ஸ்ரீயின் கண்கள் அவனையும் அறியாமல் ஒரு வித சந்தோஷத்தில் கலங்க தொடங்கியது..
"மச் மச்.. மச்சான் என்ன சொல்ற? நிஜமாவா அப்போ நேத்து நைட் நீ தூங்குனியா?"
"தூங்குனியாவா? ஏண்டா கேக்குற..செம்ம தூக்கம்... இங்க பாரு கண்ண .... கிட்டத்தட்ட 6 months கழிச்சு இப்படி தூங்கிருக்கேன்"
"Yes மச்சான், wow superb... கேக்கவே நல்லா இருக்கு, இப்படியே நீ எல்லாத்தையும் மறந்துட்டு நெக்ஸ்ட் உன் லைஃப சந்தோஷமா வாழ ஆரம்பிச்சேனா இன்னும் நல்லா இருக்கும்..."
"No chance ... அந்த ருத்ரன் உயிர பரிக்காம இது நடக்காது... நேத்து தூங்குனது கூட எதோ...ஜஸ்ட்..." என்று இவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுதே central ஜெயிலில் இருந்து ஒரு கைதி தப்பி ஓடியதாக இவர்கள் இருவர் காதிற்க்கும் ஒரு செய்தி வந்தது, உடனே இருவரும் அங்கிருந்து central ஜெயில் நோக்கி கிளம்பினர்.
பாதி தூரம் அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுதே அவர்களுக்கு ஒரு call வந்தது. அதில் கைதி RRN ஹாஸ்பிடல் நோக்கி போனதாக information வர அங்குள்ள போலீசாரிடம் அவனை follow செய்ய சொன்னவர்கள், பின் அந்த ஹாஸ்பிடலை நோக்கி சென்றார்கள்.
தென்றலுக்கு இன்னும் காய்ச்சல் குறையாததால் தன் அம்மா மற்றும் தங்கையுடன் அவளும் அதே ஹாஸ்பிடலுக்குத்தான் வந்திருந்தாள்.. அவள் அப்பா விஜயன் military யில் doctor என்றாலும், இப்பொழுது அவர் retired ஆகி விட்டதால் common man தான்.. அவர் உடல் நிலை காரணமாக hospital , clinic என்றல்லாம் அவர் எதுவும் maintain செய்யவும் இல்லை.. அதனால்தான் இப்பொழுது தன் அப்பா சில காலம் வேலை பார்த்த RRN ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளால்
ஆனால் அங்கும் காய்ச்சலால் ஏற்பட்ட வாய் கசப்பை சரி செய்வதற்காக தன் அம்மா, மற்றும் தங்கை வேதாவுக்கும் தெரியாமல் ஒளிந்து நின்று ice cream சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
அப்பொழுது acquist ஐ தேடி வந்த எழிலின் கண்ணில் விழுந்தாள் தென்றல். அவளின் இந்த திருட்டுதனத்தை கண்டு கொண்டவன் கண்கள் acquist ஐ தேடினாலும், இவள் செயலை கண்டு அவன் இதழில் லேசான புன்னகை உண்டானது
அதை பார்த்த ஸ்ரீ அவனருகில் வந்து "என்ன மச்சான் இங்கேயும் சூறாவளியா?.. அதான் உன் சிரிப்புக்கு காரணமா..." என எழிலை கிண்டல் செய்தான்..
அவன் கேள்வியில் அவனை பார்த்து முறைத்த எழில் "டேய் மூடிட்டு அவன தேடுடா" என்றான்
ஸ்ரீயும் கிண்டலான சிரிப்புடன் "சரிங்க குருநாதா" என்றவன் கைதியை தேட தொடங்கினான்..
ஐந்து நிமிட தேடலில் acquist எழிலின் கண்ணின் பட உடனே அவனை துரத்தினான்....
கைதி அவன் கையில் படாமல் ஓட..... எழில் விடாமல் அவனை துரத்த, அந்த கைதி ஓடிய வேகத்தில் கையில் ஐஸ்கிரீமுடன் நின்றிருந்த தென்றலை இடித்து தள்ளி விட்டு ஓடினான்..
அவன் தள்ளி விட்ட வேகத்தில் அவள் கையில் இருந்த ஐஸ்க்ரீம் கீழே விழுந்தது.. அந்த ஐஸ்கிரீம் கீழே விழுந்ததுதான் தாமதம்,உடனே அவள் ஐஸ் கிரீமை தள்ளி விட்டு ஓட தொடங்கிய அந்த கைதியின் சட்டை காலரை பிடித்து இழுத்தவள்
"அடேய் தடியா.. எரும மாடு, உன் கண்ணு என்ன குருடா இல்ல கண்ணு பொடனில இருக்கா? எதுக்குடா இப்படி ஒடி வந்து என்ன இடிச்சு என் ஐஸ்கிரீம தள்ளி விட்ட.. தடியா.." என கோவத்துடன் திட்டினாள்.
கைதியோ தன் சட்டை காலரை பிடித்திருந்த தென்றலின் கையை எடுக்க முயற்சி செய்து கொண்டே பதட்டத்துடன் எழிலை பார்த்தான்..
எழில் வேகமாக அவனை நோக்கி வர, வேகமாக தென்றலின் கைகளை தன் முழு பலம் கொண்டு தன் சட்டைக்காலரில் இருந்து உதறி விட்டு, அவளை தன் முன் பிடித்து இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து எழிலை பார்த்து முறைத்தவன் "இன்னும் 1 அடி எடுத்து வச்ச இவ கழுத்த அறுத்துடுவேன் பாத்துக்க"என்று மிரட்டலாக கூறினான்..
இதை சற்றும் எதிர்பார்க்காத எழில் “டேய் அவள ஒன்னும் பண்ணிடாத“ என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே தான் ஒரு போலீஸ், அவன் ஒரு கைதி என்பதையும் மறந்து.. யாரென்றே தெரியாத யாரோ ஒருத்திக்காக அவன் கண்கள் கலங்கியது...
கலங்கிய விழிகளுடன் “அவள விடுடா" என அவன் போட்ட சத்தத்தில் அந்த இடமே அப்படியொரு நிசப்ததில் ஆழ்ந்தது..
எழில் தென்றல் வருவார்கள்
Hi friends எழிலின் தென்றல் நாவல் பற்றிய உங்கள் கருத்துகள நீங்க கீழ comments ல சொல்லலாம்.. உங்க comments இந்த நாவலுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். நன்றி..
Leave a Reaction
Reader Comments
No reactions yet. Be the first!