தென்றலின் கையில் விலங்கை மாட்டிய எழில் அவள் முகத்தை தூக்கி வைத்து புலம்பி கொண்டே வருவதை பார்த்து சிரித்தவன்
" என்னவா டம்மீன்னு சொன்ன உனக்கு இது தேவதான்" என்று நினைதது அவளை பார்த்து சிரித்து கொண்டே வந்தான்.....
இதை கவனித்த தென்றல் ..... "எப்படி சிரிச்சுகிட்டே வரான் பாரு colgate விளம்பரத்துல வர பசு மாடு பல்ல காட்டுற மாதிரி..... " என்று மனதில் அவனை தீட்டிகொண்டே வந்தாள்.
ஸ்ரீ, உமாவிடம் வீட்டிற்கு செல்வதற்குரிய பாதையை கேட்டு வண்டியை இலகுவாக ஓட்டி சென்றான்.
"என்ன மஞ்ச சுடிதார் இப்படி அரெஸ்ட் ஆன அக்கியூஸ்ட் மாதிரி உக்காந்திருக்க.... இப்ப புரிஞ்சிருக்குமே நா நிஜ போலீசா இல்ல டம்மி போலீசானு? என்ன ஒத்துக்கிரியா நா நிஜ போலீஸ்னு....." என்று கிண்டலாக கேட்டான்,
அதில் இன்னும் கோவமானவள் "யோவ் டம்மி போலிசு நீ என்ன பன்னாலும் நா ஒத்துக்கவே மாட்டேன்... நீ என் கைல ஹேன்ட் கஃப் மாட்டுன லட்சனுத்துலியே அது எனக்கு தெரிஞ்சது ... எதோ உன் மடில வச்சு பொண்டாட்டிக்கு வளையல் மாட்ற மாதிரி மாட்டி விடுற...?" என்றாள்
அவள் இப்படி அவனை திட்டி கொண்டிருக்கும் போதே எழிலின் போன் ரிங் ஆனது...
""எழுதுங்கள் என் கல்லறையில்அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்இவன் பைத்தியக்காரன் என்று
மரணம் என்னும் தூது வந்தது, அது மங்கை என்னும் வடிவில் வந்தது"
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்திய ஸ்ரீ வேகமாக திரும்பி தென்றலை பார்த்தான் அவள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தாள்....
உடனே அவன் எழில் பக்கம் திரும்ப அவன் அவளை தீயாய் முறைத்தான்..
இங்கு ஸ்ரீரியின் நிலைதான் பாவமாக இருந்தது அடக்க முடியாத சிரிப்பை நண்பனுக்கு பயந்து அடக்கி கொண்டிருக்க
உமாவோ இங்க என்னடா நடக்குது நா ஒருத்தி இருக்கேன்டா என்ற பாணியில் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்...எழில் தென்றலை முறைத்துகொண்டே கால் அட்டென் செய்து
"சொல்லுங்க பிரேம் ..... wow .. சூப்பர் இதோ நாங்க ஒரு 15 மினிட்ஸ்ல அங்க இருப்போம்..." என்றான்..
உடனே ஸ்ரீ அவனிடம் "எழில் யார் போன்ல?" என்றான்
"நம்ம பிரேம்தான் ஸ்ரீ, இப்போ நம்ம சீஸ் பண்ண கன்டெய்னர செக் பண்ண சொல்லியிருந்தேன் அத செக் பன்னதுல அவனுக்கு அகைன்ஸ்டா சில ஆதாரம் இருக்காம்" என்று சொல்லி கொண்டே நண்பர்கள் இருவரும் ஹை ஃபை கொடுத்து கொண்டனர்...
இப்பொழுது தென்றலும் உமாவுடன் சேர்ந்து கொண்டாள்..
இருவரும் “இங்க என்னடா நடக்குது நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்டா” என்ற பானியில் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள்...
பின் இருவரின் அலப்பரையை தாங்க முடியாத தென்றல்
"யோவ் டம்மி போலிசு என்ன ஒவர் சீனா இருக்கு.. இப்டிலாம் பன்னா, இந்த மாதிரிலா பேசுனா நா நம்பிடுவேனா ....நீயே சொல்லு நீ வச்சிருக்க ரிங் டோன் பாத்து யாராச்சும் உன்ன நிஜ போலிசுன்னு சொல்லுவாங்கலா சொல்லு... உன் ஹையர் ஆபீஸர் யாரும் எதுவும் சொல்ல. மாட்டாங்களா....?" என்றாள்
"என்னடி சொல்லுற? நா இந்த ரிங் டோன் வச்சதுக்கு காரணமே நீதான்...." என்று எழில் கோவமாக சொல்ல
அவன் அப்படி சொன்ன வேகத்தில் ஸ்ரீ வண்டியை நிறுத்தினான்
பின் உமா தென்றல் ஸ்ரீ மூவரும் அவனை பார்க்க எழில் ஸ்ரீ யிடம்
"இப்போ ஏண்டா வண்டியை நிப்பாட்டுன?"
"இல்ல இவங்க இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு ....அதா..."
"அம்மா தாயே சூறாவளி கிளம்புமா?” என்று சொல்லி தென்றல் கையில் மாட்டி இருந்த ஹேன்ட் கஃபை கழட்டி விட்டான் எழில்.
"என்னால எதுக்கு இந்த ரிங் டோன் வச்சீங்க நா நா..... என்ன ..... பண்.." என்று தென்றல் தடுமாற எழில் அதை சட்டை செய்யாதவனாய்,
"ஸ்ரீ வண்டிய எடு அதா இறக்கி விட்டாச்சுல கிளம்பு work இருக்கு" என்று சொல்ல அவன் கோவத்தின் காரணம் புரியாமல் வண்டியை போலீஸ் ஸ்டேஷன் நோக்கி கிளப்பினான் ஸ்ரீ...
ஜீப்பில் இருந்து கீழே இறங்கிய தென்றல் உமாவிடம்
"ஏண்டி நா என்னடி பண்ணேன் அவரு என்னாலதான் அந்த ரிங் டோன வச்சேன்னு சொல்ராரு...."
"அம்மாடி நீ அவர்கிட்ட அடிக்கிற வாய பாத்தா எனக்கென்னமோ அவர் சொன்னது உண்மைன்ற மாதிரிதான் இருக்கு.. அப்படி என்னடி பண்ண தென்றல்?"
"ஹே உமா என்னடி இப்படி பேசுற நீயுமா.... அவரு ... சொன்னத..." என்று அவள் ஏதோ பேச வர அவளை தடுத்த உமா
"பின்ன என்னடி மூச்சுக்கு முன்னூறு தடவ டம்மி போலிசு டம்மி போலிசுனு சொல்லிட்டு வர... உனக்கு அவர பாத்து பயமா இல்லையா?"
"உமா பில்டிங் ஸ்ட்ராங் பட் பேஸ்மெண்டு வீக்கு நீ அவருக்கிட்ட பேசுனப்ப என் மூஞ்சியதான பாத்த என்னோட கால பாக்கலியே, காலு என்னம்மா நடுங்குச்சு தெரியுமா... ? அத அவரு கண்டிப்பா பாத்திருக்க வாய்ப்பு இருக்கு உமா"
"என்னடி சொல்ற ?"
"ஆமாடி அந்த லாரி என் மேல மோதபோனப்போ அவரு என்ன காப்பாத்தினாரு அப்போ நா பயத்துல அவரு நெஞ்சுல சாஞ்சிட்டு எழும்பவே இல்லையா .. அதுல எங்க அவர் என்ன திட்டிருவரோ இல்ல அடிச்சிருவாரோனு பயம்... அதான் ...அந்த. பயத்த வெளிய காட்டாம இருக்குறதுக்குத்தான் நான் அவர்கூட சண்ட போடுற மாதிரி act பண்ணேன்.. Then மறுபடியும் அவங்க வந்து ஜீப்ல ஏற சொன்னதும் அப்டியே கோவமா இருக்க மாதிரியே மெயின்டெய்ன் பண்ண வேண்டியதா போச்சு” என வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு சொன்னவள் ... “இருந்தாலும் அவரு என் ட்ரெஸ்ஸ கிண்டல் பண்ணது எனக்கு செம்ம கோவம்...." என்றாள்
உமா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்...
இப்படி இருவரும் பேசி கொண்டே வீட்டிற்கு வர சரியாக அங்கே தென்றலின் அப்பா விஜயன் வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தார்..
அதை கண்டு உமாவிற்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது
"அடியே தென்றல் நா பேசிட்டே உங்க வீட்டுக்கு வந்துட்டேன் ... நீயாச்சு சொல்லிருக்கலாம்ல அங்க பாரு மிலிட்டரி அருவாளே இல்லாத அய்யனார் மாதிரி நிக்கிராரு"
"இல்லடி உமா நா கவனிச்சேன் but அப்பா இருக்கவும் திட்டு வாங்க போறதுன்னு கன்பார்ம் ஆகிடுச்சு.. சரி சேந்தே திட்டுவாங்குவோம்ன்னுதாண்டி சொல்லல..."
"அடி பாவி உன் நட்ப இங்கதா காட்டனுமா"
"ஹி ஹி ஹி.. நட்புக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா"
"என்னம்மா உமா இதெல்லாம் எக்ஸாம் 5.30 க்கே முடிஞ்சு இருக்கும்ல ஏன் இவ்ளோ லேட்...?" என்றவர் கேட்க, bus miss செய்த காரணத்தை நினைத்து பார்த்த தென்றல் உமா பதில் சொல்லும் முன் முந்திக்கொண்டு
"பஸ் வரலப்பா அதான்" என்றாள்
"அப்பா இவ பொய் சொல்ராப்ப நம்பாதீங்க நீங்க உமாகிட்டயே விசாரிங்க, அவதான் உண்மைய சொல்லுவா" என்று உமா தென்றல் இருவரையும் நக்கலாக முறைத்துகொண்டே அங்கு வந்து ஆஜர் ஆகினான் தென்றலின் அண்ணன் ராஜ்...
"ஹலோ வக்கீல் அண்ணா நீங்க எதுக்கு இப்போ வந்து ஆஜர் ஆகுறீங்க இது ஒன்னும் உங்க கோர்ட் கிடையாது point கண்டுபிடிச்சி பேச" என்று தென்றல் அவனை பார்த்து முறைத்தவாறு சொல்ல
"தென்றல் சும்மா இரு. உமா நீ சொல்லு" என தென்றல் பேச்சிற்கு அணை போட்டார் விஜயன்
"அப்பா .. அது வந்து பா ஐஸ் .. லாரி... பஸ் கிரீம்.." என்று உலறினாள் உமா
"என்ன உலறுற சொல்லு" என்று விஜயனின் வார்த்தைகள் மிரட்டலாக வந்தது..
"அது.. பா ஐஸ்.. பஸ்.. பஸ்.. ஐஸ். "
"என்ன உமா பஸ்ல ஐஸ் வித்தியா? சொல்லு உமா சொல்லு" என அவளின் உலறல் கண்டு நக்கலடித்தான் ராஜ்
உடனே கோவமாக அவனை முறைத்த உமா
"அப்பா அது ஒன்னுமில்லப்பா தென்றல்தான் ஐஸ் வேனும்ண்னு சொல்லி நா எவ்ளோ சொல்லியும் கேட்காம அடம் பிடிச்சு ஐஸ் வாங்க போய்ட்டாப்பா.. அதனால பஸ்ஸ மிஸ் பண்ணிட்டோம்ப்பா அதான்...... " என்று அவள் பேச்சை இழுத்துகொண்டிருக்கயில் விஜயன் பார்வை தென்றலை நோக்கி சென்றது...
"பத்த வச்சிட்டியே பரட்ட... ஏண்டி உமா....நா பாவம் இல்லையா....." என்ற முனகலோடு உமாவின் பக்கம் திரும்பினாள் தென்றல்..
"பின்ன என்னடி தென்றல் உங்க அண்ணன் என்ன ரொம்ப கிண்டல் பன்னான் அதா... அது மட்டுமில்லாம என்ன பண்ண நீ அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாரு...."
[‘இல்லடி உமா நா கவனிச்சேன் பட் அப்பா இருக்கவும் திட்டு வாங்க போறதுன்னு கன்பார்ம் ஆகிடுச்சு.. சரி சேந்தே திட்டுவாங்குவோம்ன்னுதாண்டி சொல்லல…’
‘அடி பாவி.. உன் நட்ப இங்கதான் காட்டனுமா’
‘ஹி ஹி ஹி நட்புக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா"’]
என்று சற்று முன் தான் பேசியதை நினைத்து பார்த்த தென்றல் அவளிடம்
"அடி பாவி இப்படி பலி வாங்கிட்டியேடி உமா" என்று சொல்ல உமா அவளை பார்த்து புன்னகையுடன்
"ஹீ ஹூ ஹீ நட்புக்குள்ள இதுவும் சாதாரணமப்பா........ அப்பா நா கிளம்புரேன்ப்பா... தென்றல் செல்லம் நா கிளம்புறேன்.. You carry-on " என்று சொல்லிவிட்டு ராஜை பார்த்து மூக்கை சுளித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்...
ராஜ் அவள் சென்ற திசையை சிரித்தவாறே பார்த்து கொண்டிருந்தான்
இங்கு தென்றலுக்கோ அவள் எது நடக்கக்கூடாது என்று நினைத்து உமாவிற்கு எக்ஸ்ட்ராவாக ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாலோ அது மொத்தமும் வீண் போனது.. விஜயனின் பஜனை தொடங்கியது...
அதை கண்டு தென்றல் ‘ அய்யோ ராமா இவர் அழும்பு தாங்கலியே மிலிட்டரில medical side வொர்க் பண்ணி 4 பேருக்கு ஊசிய குத்திட்டு வந்து இங்க வந்து எதோ மில்ட்டிரில பார்டர்ல நின்னு சண்ட போட்ட மாதிரியே இவளோ சேட்ட பண்றாரே’ என்று மனதில் புலம்பி கொண்டிருந்தாள்.
இங்கு தென்றல் உமா இருவரையும் ட்ராப் செய்துவிட்டு ஸ்டேஷன் சென்ற எழில் ஸ்ரீ அவரவர்கள் வேலையை செய்ய துவங்கினர்
ஸ்ரீ கன்டெய்னர் லாரி டிரைவரை அடித்து துவைத்து விசாரித்து கொண்டிருந்தான்
எழில் கிடைத்த ஆதாரங்களை நன்கு ஆராய்ந்து. விட்டு
"பிரேம் இப்போ இருக்க இந்தத் எவிடன்ஸ் இப்போதிக்கு நமக்கு யூஸ் ஆகாது.. பட் இந்த கேஸ்க்கு இது எதாச்சும் ஒரு வழியில ரொம்ப இம்பார்ட்டன்ட்டா இருக்கும்ண்னு நினைக்குறேன்.. So இதபத்தி ஒரு பைல் ரெடி பண்ணி எனக்கு மெயில் பண்ணிருங்க " என்று சொல்லிட்டு கிளம்பி நேராக வீட்டுக்கு போனவன் யார் கண்ணிலும் படாமல் டைனிங் டேபிளில் அவனுக்காக காத்து கொண்டு இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அங்கே சுவற்றில் மாலையுடன் தொங்கி கொண்டிருந்த தன் அம்மாவின் ஃபோட்டோவுக்கு குட் நைட் சொல்லி விட்டு யாரும் தன்னை பார்க்கவில்லை என்ற நினப்புடன் பெருமூச்சு விட்டவாறு மேலே தன் ரூமிற்கு சென்று தூங்க போனான் ...
ஆனால் அங்கு அவனை இரண்டு கண்கள் கவனித்து கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.
இங்கு தென்றலோ தந்தையின் பஜனையை தாங்க முடியாமல் அண்ணன் ராஜை பார்த்து காப்பாற்று என சைகை செய்ய அவனோ அவளை பார்த்து சிரித்து கிண்டல் செய்தான்.
கோவமான தென்றல் “போடா எருமை” என அவனை திட்டி விட்டு தன் தாய் விஜயா மற்றும் தன் தங்கை வேதாவை பாவமாக பார்க்க விஜயா தன் மகளை காப்பாற்றும் விதமாக
" இங்க பாருங்க உங்களுக்கு வேற வேலையே இல்லியா? எப்போ பாருஅவ கூடவே வம்பு பன்னிட்டு இறுக்கீங்க.. பாவம் பிள்ளை இப்போதான் காய்ச்சல் வந்து சரி ஆகியிருக்கு.. மழை வேற தூறிகிட்டே இருக்கு.. நீங்க என்னடான்னா அவள உள்ள அனுப்பாம வெளிய நிக்க வச்சே பேசிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு இது நல்லாவா இருக்கு.. தென்றல் நீ உள்ள போடா " என்று ஓங்கிய குரலில் கூற தென்றலோ தன்
அண்ணன் ராஜை பார்த்து சிரித்துக் கொண்டே வக்கனை செய்துவிட்டு விஜயாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு உள்ளே சென்றாள்.
விஜயாவோ தன் கணவன் முகத்தை ஆசையாக பார்த்து அவரிடம் "ஏங்க உங்களுக்கு பிடிக்குமேன்னு உங்களுக்குப் பிடிச்ச பருப்பு உருண்ட குழம்பு செஞ்சுறுக்கே வந்தீங்கன்னா சாப்டலாம் இல்லனா நானும் சாப்டாம போய் தூங்கிடுவே "என்று சொல்லி கொண்டே விஜயன் அருகில் செல்ல
விஜயனோ தன் மகளை காப்பாற்ற மனைவி நடத்திய நாடகத்தை நினைத்து அவரை பார்த்து சிரித்தவாரே முறைத்து கொன்டு
" ஏன் எனக்கு மட்டும்தான் அந்த குழம்பு புடிக்குமா உனக்கு பிடிக்காதா.. வா போய் சாப்பிடலாம் " என்று கூறி உள்ளே அழைத்து சென்றார்.
தென்றல் தனக்கு பசி இல்லை பசித்தால் பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லி தன் ரூமிற்குள் சென்றவள் உள்ளே ‘என்னடி சொல்ற நா இந்த ரிங் டோன் வசதுக்கு காரணமே நீதான் …’ என்று எழில் சொன்ன அந்த வார்த்தையை ரீவைன்ட் செய்து ரீவைன்ட் செய்து குழம்பி கொண்டிருந்தாள்.
இங்கே மணி 1 ஆகியும் தூங்காமல் எழிலை நினைத்து புலம்பியவாறு படுத்திருந்த ஸ்ரீக்கும் அதே யோசனைதான்
"ஏன் அவன் அப்படி சொன்னா நிஜமாவே அவன் சொன்னது உண்மயா ச்சே ச்சே அப்டிலாம் இருக்காது.. இவன் மூஞ்சிலாம் அதுக்கு சரிபட்டு வருமா…? வராது வராது... பின்ன எதுக்கு அப்படி சொன்னான்" என்ற யோசனையிலேயே புலம்பி தவித்து தூங்க மறந்து மணியை பார்க்க மணி 1:55காட்டியது...
‘டேய் ஸ்ரீ இதுக்கு மேல யோசிச்சோம் மண்டைக்கு பின்னாடி இருக்க மெடுலா ஆபலகேட்டா வீங்கி வெடிச்சு செத்தாலும் செத்துடுவோம் ... நம்ம இப்படி புலம்பபுறத விட்டுட்டு அந்த நாய்கிட்டயே கால் பண்ணி கேட்றலாம்’ என்று முடிவு செய்தவன் எழிலுக்கு கால் செய்தான்
ஸ்ரீ கால் செய்ததை பார்த்த எழில் அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுக்க
"ஹலோ யாரு"
"டேய் பரதேசி என் தூக்கத்தை கெடுத்துட்டு நீ இப்படி நல்லா தூங்கிட்டு என்னவே யாருனு வேர கேக்குற? நீ நல்லா தூங்குவியா? உனக்குலாம் நல்ல தூக்கமே வரதுடா" என சாபத்தை அள்ளி தெளித்தான்
"டேய் நான் என்ன உன் லவ்வராடா.. உன் தூக்கத்த நா கெடுத்துட்டேன்னு சொல்ற? இப்போ எதுக்குடா நடு ராத்திரி போன் போட்டு இப்படி சாபம் கொடுத்துகிட்டு இருக்க? .. நா தூங்குற தூக்கம் பத்தி உனக்கு தெரியாதா?" என்று அவன் கலங்கும் குரலில் கேட்க
அவனின் மனதை உணர்ந்த ஸ்ரீ... "சரி விடு.. நீ என்னோட doubt-ட கிளியர் பண்ணிட்டு நீ அப்ரமா எப்பவும் போல ஃபீல் பண்ணு... யார் சொல்லியும் கேட்காத நீ நா சொல்லி கேட்டுடுவியா என்ன? நான்லாம் யாரு உனக்கு ஜஸ்ட் பிரெண்டுதான" என்றான்
"டேய் டேய் நாயே பேயே லூசு பரதேசி*#*******####***, night time ல call பன்னி கடுப்பேத்திட்டு.......####******" என்று எழில் அவனை திட்ட தொடங்க அவனை தடுத்தவன்
"மச்சா மச்சா போதுண்டா காதுல கலர் கலரா இரத்தம் வருது மச்சா" என்று அவன் பேச்சிற்கு அணையிட்டான் ஸ்ரீ.
பின் எழில் அவனிடம் "ஒழுங்கா கேக்க வந்தத கேட்டுட்டு ஓடிரு இல்ல மகனே உன்ன சாகடிச்சிடுவே...." என்று மிரட்டினான்
பின் ஸ்ரீ அவனிடம் வேகமாக "இல்ல மச்சான் இன்னிக்கு ஏண்டா அந்த பொண்ணுகிட்ட அப்படி சொன்ன?" என்று கேட்டான்
"யார்கிட்டடா .... என்னடா சொன்னே... குழப்பாதடா" என்று எழில் புரியாமல் கேட்க,
"இல்ல மச்சா ஈவ்னிங் உன்ன கூட ஒரு பொண்ணு டம்மீனு சொன்னாலே” மனதில் பயத்துடனும் வெளியில் சிரிப்புடனும் ஸ்ரீ சொல்ல
"டேய் ஸ்ரீ இப்போ உனக்கு டைம் சரி இல்லைன்னு நினைக்குறேன். ஒழுங்க ஓடிடு " என்றான் எழில்
"இல்ல மச்சா உனக்கு டக்குனு நியாபகம் வரனும்னு சொன்னேன்.. இது தப்பா ? அட போப்பா.. சரி சொல்லு அந்த பொண்ணுகிட்ட ஏன் அப்படி சொன்ன ? நீ வச்சிருக்க ரிங் டோன்க்கு அந்த பொண்ணுதா காரணம்னு.. சொல்லு மச்சா சொல்லு அப்படீன்னா அந்த பொன்ன நீ.......?"
எழில்தென்றல் வருவார்கள்
*************************
Hi friends எழிலின் தென்றல் நாவல் பற்றிய உங்கள் கருத்துகள நீங்க கீழ comments ல சொல்லலாம்.. உங்க comments இந்த நாவலுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். நன்றி.
Leave a Reaction
Reader Comments
No reactions yet. Be the first!