EP 07 - தென்றல் முடிவால் நடந்த விபரீதம்

இரண்டு வீட்டாரும் எழில் தென்றல் இருவருக்கும் அடுத்த மாதம் கல்யாணம் என சொல்ல அதை கேட்ட இருவருமே அதிர்ந்து போனார்கள்..

தன் அப்பாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் எழில் கோவமாக "டேய் ஸ்ரீ நான் ஸ்டேஷன்கு போறேன் நீ வரியா இல்ல நா மட்டும் போட்டா"என்று கேட்க ஸ்ரீ அவனிடம்

"நீ போடா நா அப்பாவ சமாதான படுத்திட்டு வரேன் " என்றவன் தன் கண்களால் சைகை காட்ட அவனும் சரியென்று அங்கிருந்து கிளம்பி மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்..

அவன் கோவமாக செல்வதை பார்த்த தேவா ஸ்ரீயிடம் “ஸ்ரீ what is this? என்ன இதெல்லாம்?" என்றார்..

அதற்கு ஸ்ரீ பதில் எதுவும் சொல்லாமல் வேகமாக வீட்டு வாசல் கதவு வரை சென்று எழில் கிளம்பிய கார் தன் கண்ணை விட்டு மறையும் வரை அதையே பார்த்து கொண்டிருந்தவன், பின்னர் குடு குடுவென தேவாவை நோக்கி ஓடி வந்தான்....

"வாரே வா... அப்பா என்னா ஆக்டிங் ? செம்மப்பா கலக்கிட்டீங்க... ஸ்கிரிப்ட்டுல இருக்கத அப்படியே பேசிடீங்க.... நான் கூட வயசான பீசு எதாச்சும் சொதப்பிருவீங்களோன்னு நினச்சேன் but மாஸ் காட்டிடீங்க....செம்ம டாடி என் செல்ல டாடி" என்றவன் புன்னகையுடன் சொல்ல அவனை செல்லமாக முறைத்தார் தேவா

"டேய் படவா யார பாத்து வயசான பீசுன்னு சொல்ற... வரியாடா இப்போவே ஒத்தைக்கு ஒத்த வச்சிக்கலாம்... டேய் வாடா My son.."

"அட விடுங்க மீச.... ஆவுன்னா என் மீச வச்ச டாடிக்கு இந்த மீசைக்கு மேல இருக்க மூக்குக்கு மேல கோவம் வந்திடும்... “ என்று அவர் மீசைய பிடித்து ஆட்டியவாறு சொன்னான் ஸ்ரீ..

"டேய் ஸ்ரீ..." என்று தேவா அவனை மிரட்ட அதை கண்டு கொள்ளாதவன்

"ஆமா டாடி? உங்க friend அங்க சொதப்பிட மாட்டாரே…?" என்று அவன் தன் சந்தேகத்தை கேட்க அவரோ சிரிப்புடன் ,

"போடா போ. நாங்கள்ளாம் அந்த காலத்துல ஸ்கூல் டிராமல. வாங்காத பிரைசா...." என்றார்

"அப்போ நீங்க ரெண்டு பேரு நட்புக்காக படத்துல வர விஜயகுமார் and சரத்குமார் மாதிரியா?" என்றவனின் கேள்விக்கு

“ஹா ஹா .. விளையாட்டு பயன் “ என்ற தேவா அவன் கன்னத்தில் கிள்ளினார்..

"அப்பா, அன்னைக்கு எழில் தென்றல பத்தி பேசுனப்போ அவன் கண்ணுல தெரிஞ்ச சந்தோசத்த நீங்க பாத்திருக்கணுமே... செம்மப்பா... தென்றல் மட்டும் இவன் லைஃப்ல வந்தா கண்டிப்பா அம்மாவ மிஸ் பண்ண மாட்டான்னு தோனுது. நம்ம எழில் நமக்கு பழைய மாதிரி கிட்டப்பான்பா.. But இவன் அந்த பொன்ன லவ் பண்றேன்னு சொல்லுவான்னு பாத்தா லவ் பண்ணல but டெய்லி பாத்தா நல்லா இருக்கும்ன்னு சொல்ரான்… அதுக்குன்னு அந்த பொன்ன டெய்லி நம்ம கூப்பிட்டு வந்து காட்ட முடியுமா என்ன.....? அதான் அந்த பொண்ணவே இவனுக்கு கல்யாணம் பன்னா பிராபலம் solve ன்னு தோணுச்சு அதான் தென்றல் காலேஜுக்கு போய் எல்லா இன்பர்மேசனும் கலைக்ட் பண்ணேன்... அப்பறமா உங்ககிட்ட வந்து பயந்துகிட்டே சொன்னா நீங்க என்னடான்னா தென்றலோட அப்பா உங்க பாலிய சிநேகிதன்னு சொல்லி என் மனசுல பால வாத்தீங்க" என்று நடந்ததை சொல்லி முடித்த ஸ்ரீயின் முகத்தில் அத்தனை ஒரு சந்தோஷம்..

"ஆமா ஸ்ரீ, இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்.. உன்னாலதான் என்னோட நண்பன் கூட சம்மந்தி ஆக போறேன்.. கூடிய சீக்கிரம் நம்ம எழிலுக்கு கல்யாணம் நடக்க போகுது.... “ என்று சந்தோஷமாக சொன்னவர் சிறிது தடுமாற்றத்துடன்

“ஆனா அவன் இதுக்கு ஒத்துப்பானா ஸ்ரீ?" என்று கேட்டார்..

"கண்டிப்பா ஒத்துக்குவான்பா... நா இருகேன்லப்பா பயப்படாதீங்க.. நா பாத்துக்கிறேன்… ஆனா ஒரு முக்கியமான விஷயம்.. இதுக்கெல்லாம் காரணம் நான்ந்தானு மட்டும் அவன்கிட்ட சொல்லி புடாதீங்கப்பா"

"ச்சே ச்சே .. கண்டிப்பா சொல்ல மாட்டேன்.. ஆனா ..” என்றவர் தன் வார்த்தையை இழுக்க ஸ்ரீ அதிர்ச்சியாக முகத்தை வைத்து
“ஆனா என்னப்பா???” என்றான்.

“அது வந்து . சரக்கு அடிக்கிரப்போ மட்டும் என் வாயில இருந்து வர வார்த்தைக்கு நான் உத்திரவாதம் இல்ல மகனே,”

"அட தெய்வமே இது வேறையா , பேசாம ஒண்ணு பண்ணுங்க.. உங்க மகன் கல்யாணம் முடியும் வரைக்கும் குடிக்க மாட்டேன்னு அந்த சங்கீஜி சுவாமிகளுக்கு விரதம் இருங்க."

"எது விரதமா?.. “ என்று சொல்லி அவன் முதுகில் அடித்தவர் புன்னகையுடன்

“ ஹா ஹா ஹா போடா படவா....போய் ஆக வேண்டிய வேலைகளை பாருங்க மாப்பிள்ளை தோழரே." என்றார்.

நீண்ட நாள் கழித்து அவர் முகத்தில் பார்த்த இந்த புன்னகை ஸ்ரீ முகத்திலும் மனதிலும் சந்தோஷத்தை தோன்ற செய்தது..

"ஆட்டும் ஆட்டும் நா கிளம்புரேன்.... நீங்க அந்த விரதம்.. மறந்தும் கூட மறக்க வேண்டாம் மீச டாடி" என்று சொன்னவன் அவனும் கிளம்பி ஸ்டேஷன்க்கு சென்றான்

இங்கு தென்றல் தன் அப்பா சொன்னதை கேட்டு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தாள்.. அதை கண்டு மனது தாங்காத விஜயாவும் வேதாவும் விஜயனிடம் தென்றலுக்காக பேசினர் ...

விஜயன் வேதாவை பார்த்து முறைத்தவர் அவளிடம் “ வயசுக்கு மீறுன பேச்சு உனக்கு தேவ இல்ல நீ போ..” என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டார்..


அதன் பிறகு விஜயாவே விஜயனிடம் பேச முயற்சி செய்தார்..

“எதுக்குங்க இப்படி ஒரு திடீர் முடிவு?...அவ பாவம் சின்ன பொண்ணு.. 21 வயசுதான ஆகுது . இன்னும் ஒரு 2 வர்ஷம் இல்ல 3 வர்ஷம் போகட்டுமே....அதுக்குள்ள அவ ஆச பட்ட மாதிரி படிக்கட்டுமே” என்றார்.. ஆனால் இந்த விஷயத்தில் விஜயன் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை..

"விஜயா பொண்ணுங்கதான் அப்படீன்னா.... நீயுமா… அதான் இன்ஜினியரிங் முடிச்சுட்டால.... எதுக்கு சம்பந்தம் இல்லாம இந்த படிப்பு .. வேணாம் வேணாம். அவ என்னோட பொண்ணு.. எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும்....நீ எதும் சொல்ல வேணாம்" அவரின் இந்த வார்த்தையில் கோவமான விஜயா

“எதோ உங்களுக்கு மட்டும் பொண்ணுன்ற மாதிரி சொல்ரீங்க அவள பெத்தவ நா...எனக்கும் உரிமை இருக்கு..உங்களை விட அதிகமாகவே..." என்றார் அழுத்தம் நிறைந்த வார்த்தைகளுடன் .

"விஜயா நா அப்படி சொல்ல வரலமா. இப்போ அந்த பயன் கூட கல்யாணம் நடக்குறதுதா அவளுக்கும் நல்லது நமக்கும் நல்லது… நா சொல்லுரேன்ல.. என்ன புரிஞ்சிக்க விஜயா"

விஜயனுக்கு நன்றாகவே தெரியும் ருத்ரன் மூலம் தென்றல் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு உண்டு என்று.. அதனால்தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்..

தான் என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் தன் கணவன் இப்பொழுது இத்தனை பிடிவாதமாகவும் உறுதியாகவும் பேசுவதை வைத்து அவர் பேச்சில் ஒரு காரணம் இருப்பதை உணர்ந்த விஜயா…

"அது சரிங்க.. ஆனா பையன் யாருன்னு கூட நாங்க யாரும் பாக்கலியே" என்றார்..

"நீ ஒன்னு கவலபடாத.. அவன உனக்கு ரொம்ப பிடிக்கும்... இன்னும் சொல்ல போனா உனக்கு ரொம்ப பிடிச்ச பயனும் கூட... “ என்றவர் புன்னகையுடன் அங்கிருந்து சென்று விட்டார்..

பாவம் விஜயாதான் அவர் வார்த்தையில் குழம்பி போய் நின்றார்.. ."எனக்கு பிடிச்ச பையனா யாரு?"
அம்மாவும் தங்கையும் பேசிய பின்பும் கூட தன் அப்பா மனதை மாற்றி கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொண்ட தென்றல்
தன் அண்ணனும் ஊரில் இல்லாமல் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தொடர்ந்து சோகத்திலியே இருந்தாள்..

அப்பொழுதுதான் சற்று முன் விஜயன் தூக்கி எரிந்த அந்த journalism
Counseling form அவள் கண்ணில் பட்டது .. அதில் நாளைதான் counselling என்று இருக்க திடீரென தென்றலுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது..

யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி counselling attend செய்து விடலாம் அதன் பிறகு தன் அப்பாவையும் வீட்டில் உள்ளவர்களையும் சமாதான படுத்தி கொள்ளலாம் என்று முடிவு செய்தவள் letter எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு கிளம்பபினாள் ..

செல்லும் முன் மனம் இல்லாமல் உமாவிடம் மட்டும் விஷயத்தை சொல்ல அவள் அதை ஏற்க மறுத்தாள்.. ஆனால் அவள் எவ்வளவு தடுத்தும் தென்றல் துளியும் அதை கண்டு கொள்ளாது அபிநேஷின் கடைசி ஆசயை நிறைவேற்றுவதற்காக தன் வீட்டை விட்டு வெளியேறினாள்..

என்னதான் junction வரை வந்து விட்டாலும் அவளுக்குள் ஒரு வித பதட்டமும், பயமும் இருந்து கொண்டேதான் இருந்தது.. அப்பொழுது அவள் செல்ல வேண்டிய train அங்கு வந்து நிற்க தன்னுள் இருக்கும் பயத்தையும் பதட்டத்தையும் மறைத்து கொண்டு train ல் ஏறினாள்..

கிட்டதட்ட 10 நிமிடம் கடந்திருந்த நிலையில் அவள் மொபைல் போன் ஒலித்தது.. எடுத்து பார்க்க அது unknown number. Attend செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடனே அந்த call ஐ அட்டென்ட் செய்தாள்

"ஹலோ." எதிர் முனையில் பதட்டத்துடன் ஒலித்தது வேதாவின் குரல்

"ஹலோ அ.. அ. அக்கா . ..."

"வேதா. ...இது யாரு நம்பர்டி???"

"மேடம் எப்படியும் எங்க நம்பர்ல இருந்து கால் பன்னா எடுக்க மட்டீங்கள்ள.. அதா நம்ம ஊரு ஹாஸ்பிடல் நம்பர்ல இருந்து கால் பன்னிருக்கேன்"
Hospital என்றதுமே தென்றல் மனதை ஒரு வித பயம் சூழந்து கொண்டது.
"ஹாஸ்பிடலா? எதுக்கு? யாருக்கு என்...னா....ச்..."

"பைத்தியமா நீ உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாக்கா?"

"வேதா......."

" எதும் பேசாத .. உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக்.. எல்லாம் உன்னாலதான்..." அழுகையுடன் வந்தது வேதாவின் வார்த்தைகள்

தென்றல் அதிர்ச்சியான குரலில் "வேதா என்னடி சொல்லுற? அப்பாக்கு என்னாச்சு....." என்றாள்

"உன்னாலதான் எல்லாம் .... அப்பாக்கு மட்டும் எதாச்சும் ஆச்சு...." வேதாவின் விசும்பல் சத்தம் இன்னும் அதிகம் ஆனது.

"ஹே ... வேதா" பேச வந்தவளை தடுத்து நிறுத்தினாள் வேதா..

"ஹே நடிக்காத... அப்பா அவ்ளோ சொல்லியும் உனக்கு அவர் முக்கியம் இல்லைனுதான கிளம்பி போன... இப்போ எதுக்கு இவ்வளவு சீனு... இப்போ என்ன பண்ண போற? ஹாஸ்பிடல் கிளம்பி வர போறியா?
இல்ல உன் இஷ்டப்படி?"

"ஹே இல்லடி... நா.. நா.. வரேன்.. எந்த ஹாஸ்பிடல்ல அப்பாவா அட்மிட் பண்ணிருக்கீங்க?"

வேதா ஹாஸ்பிடல் நேமை சொல்லியவள் அடுத்து தென்றல் பேசும் முன்பே phone ஐ cut செய்து விட்டாள்..

சரியாக அச்சமயம் train மெதுவாக move ஆக தொடங்கியது.. ஆனால் அவள் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது கீழே குதித்தவள் வேகமாக வேதா சொன்ன hospital நோக்கி விரைந்தாள்..

அடுத்த அரை மணி நேரத்தில் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தவள் அவள் அப்பாவை admit செய்திருக்கும் ward நோக்கி சென்றாள் ..

அங்கு ரூமுக்கு வெளியே அவள் அம்மா விஜயா அழுது கொண்டு நிற்க வேதா, உமா...இரண்டு பேரும் அவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தனர்… ராஜ் அப்பொழுதுதான் ஊரில் இருந்து வந்திருந்தவன் அழுது தீர்ந்து போன கண்ணீருடன் அமைதியாக உட்காந்திருக்க தென்றல் அவனை நோக்கி சென்றாள்..

"அண்ணா ....அண்...ணா..." என்று அவள் தயக்கத்துடன் அழைத்த மறு கணம் அவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தான்.

"அறிவு இல்ல உனக்கு?... உன் மேல அந்த மனுசன் வச்ச பாசத்துக்கு ரொம்ப நல்லது பண்ணிட்ட"

'அண்ணா.. அது.. அது.. அது வந்து.. "

"ஹே போதும் நிறுத்து.. இன்னொரு தடவ என்ன அப்படி கூப்பிடாத… இனி என் முகத்துலயே முளிக்காத… உண்ட பேசவே பிடிக்கல 1 st போ இங்க இருந்து...." என்று கத்தினான் ராஜ்

அதற்கு மேல் தென்றலால் அவன் முன்பு நிற்க முடியவில்லை அழுது கொண்டே தன் அம்மாவை நோக்கி சென்றாள். ஆனால் விஜயா அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க, தென்றல் பாவமாக தன் தங்கை முகத்தை பார்த்தாள்.. அவளோ தென்றல் முகம் காண விருப்பம் இல்லாது தன் முகத்தை திருப்பி கொண்டாள்..

அவள் தன்னிடம் போனில் பேசும் பொழுதே அவளுக்கு தன் மீது உள்ள கோவத்தை புரிந்து கொண்ட தென்றல் , மேற்கொண்டு இப்பொழுது அவளிடம் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து உமாவை நோக்கி சென்றாள்..

“உமா....”

"ஹே ராஜ் சொன்னதுதான் போய்டு இங்க இருந்து... எனக்கு உண்ட பேசவே இஸ்டம் இல்ல.... யார்டி நீ?... என் அண்ணன் மேல எனக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்குடி... ? அவன் ஆசை பட்டானாம் இவ நிறைவேத்த போராலாம்..... போடி இங்க இருந்து..." என்றாள் உமா அடக்கபட்ட அழுகையுடன்

ஆம் உமாவின் அண்ணன்தான் அந்த அபினேஷ்..


இப்படி ஒவ்வொருவரும் தன்னை வெறுத்து ஒதுக்க கடைசியாக மிகுந்த பயத்துடனும் அழுகையுடனும் விஜயா அருகில் சென்றாள் தென்றல்..

அவள் அங்கு சென்றதுதான் தாமதம் “எதுக்குடி வந்த? உன்ன யார் வர சொன்னது ? உன்ன பெத்து வளத்து உன் மேல அளவில்லாத பாசத்த வச்சு ஆளாக்குனதுக்கு அவர இப்படி ஆக்கிட்டீல.. போடி இங்க இருந்து என் கண்ணு முன்னாடி வராத . போ.. அவள இங்க இருந்து போகசொல்லு உமா.. சொல்லு உமா “என்று மிகுந்த கோவத்துடன் கத்தினார் விஜயா,

உமா தென்றல் கைகளை பிடித்து இழுக்க . உமா கையில் இருந்து தன் கையை உதரிய தென்றல் அங்கிருந்து எதுவும் பேசாமல் போய் கதவுக்கு அருகில் நின்று கொண்டாள்…

அப்பொழுது டாக்டர் அங்கு வர.... குடும்பத்தினர் அனைவரும் அவரை நோக்கி சென்றனர்..

“டாக்டர் டாக்டர் அவரு?”

“Docter அவருக்கு எதும் ஆகாதுல?” என்று ஆளாளுக்கு பேச டாக்டர் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

சோகமானவர்கள் doctor க்கு பின்னால் வந்த நர்ஸிடம் கேட்க அவர் அவர்களிடம் “கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க டாக்டர் செக் பன்னிட்டு சொல்லுவாங்க போர வரவங்கல ஏதும் தொந்தரவு பன்னாதீங்க” என்று சிடுசிடுப்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்

அனைவரும் அழ தொடங்கினர்.. கலங்கிய கண்களோடு தென்றல் அனைவரது முகத்தையும் பார்த்து கண் கலங்கி போய் நின்று கொண்டிருந்தாள். அனைவரது கேள்விக்கும் பதில் சொல்லும் விதமாக டாக்டர் அங்கே வந்தார். அவர் சொல்ல போகும் பதில் என்ன? விஜயனுக்கு என்ன ஆனது?

எழில் தென்றல் வருவார்கள்

Leave a Reaction

Reader Comments

No reactions yet. Be the first!

NovelClicks Footer