Ep 01 - எழிலின் தென்றல்

"ஏய் உமா பிளீஸ் பிளீஸ்டி இப்பிடிக்கா ரோட் கிராஸ் பண்ணி அப்டிக்கா போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்திருவே செல்லம் .... வேணும்னா உன்னோட சேர்ந்த பாவத்துக்கு உனக்கும் ஒரு ஐஸ் கிரீம் வாங்கி தரேன்டி ..." என உமாவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி தென்றல்...

(மீடியம் ஹைட்,இடை வரை தொங்கும் முடி. அதுக்கு மேல முடிக்கு பாதியளவில் இரு புறமும் தொங்கும் மல்லிப்பூ..மாநிறம் ஓவரா இல்லாம சிம்பிளான makeup.. ஜஸ்ட் பவுடர் வித் குட்டியா ஒரு பொட்டு, அதுக்கு மேல additional-லா சந்தனம் எப்பவுமே இதாங்க நம்ம தென்றல் அவளுடைய கேரக்ட்டர் பத்தி போக போக தெரிஞ்சிக்கலாம்...)

"யாருக்குடி வேணும் உன்னோட ஐஸ் கிரீம்? நானே already பஸ் வரலீன்னு கடுப்புல இருக்கேன்.. நீ வேற ஏண்டி தென்றல்…? இந்த யுனிவர்சட்டிகாரண யாருடி மதியமா எக்சாம் வைக்க சொன்னது? மார்னிங் வச்சிருந்தா இந்நேரம் வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போட்டிருப்பேன்.. ஆனா இப்போ பாரு மணி 6 ஆக போது...." என்றாள் உமா


"அடியே உமா நா ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன்னுதான சொன்னேன்.. இதுக்கு ஏண்டி இப்படி தேவை இல்லாம புலம்பிட்டு இருக்க.... எம்மா தாயே 2 மினிட்ஸ் ஐஸ் கிரீம் மட்டும் வாங்கிட்டு வந்துடுரேன்...."என்று பாவமாக கூறினாள் தென்றல்..

மேடம் இப்படியெல்லாம் உமாவிடம் கெஞ்சுவதற்குகு காரணம் 2 நாளுக்கு முன்புதான் ஃபீவர் வந்து வீட்டில் இருக்கும் அணைவைரையும் படாத பாடு படுத்தி எடுத்து விட்டாள்.. மருந்து மாத்திரையின் உதவியால்தான் இப்பொழுது மெல்ல மெல்ல normal ஆகி வருகிறாள்..
இப்படி ஒரு நேரத்தில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டால் நிச்சயம் வீட்டில் உள்ள அனைவரிடமும் உமா அவளை காட்டி கொடுத்து விடுவாள்.. பிறகு வீட்டில் கிடைக்கும் பஜனையை யார் சமாளிப்பது..... என்பதற்க்காகவே இந்த கெஞ்சல்ஸ் கொஞ்சல்ஸ் ....

உமா தென்றல் இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடுதான்... LKG UKG-யிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். உமாவுக்கு தென்றல் மீதும் தென்றலுக்கு உமா மீதும் carrieng அதிகம்.

அந்த carriengதான் இப்பொழுது தென்றல், உமாவிடம் கெஞ்சி கொண்டிருப்பதற்கு காரணம்.

"தென்றல் பஸ் வந்துடும் ...இந்த பஸ்ஸ மட்டும் விட்டோம் அடுத்து நம்ம வீட்டுக்கு பாதயாத்திரையாத்தான் போகணும்."என்று உமா கூற

"உமா இன்னிக்குதா நம்ம காலேஜ் last day.. அதா ஐஸ் கிரீம் சாப்டலாம்nu நெனச்சேன் தப்பா .” என்று கேட்டாள் தென்றல்

"எம்மா தாயே போ போய்ட்டு பஸ் வரதுகுள்ள வா..."என்று உமா சொல்ல

"சூப்பர் டீ உமா!!! இதோ 2 மினிட்ஸல வந்துடூர்டுறேன்"

குதுகலமாகச் சொன்னவள் குடுகுடுவென ரோட்டை கடந்து எதிர்முனையில் உள்ள ice cream கடையை நோக்கி ஓடினாள்

"சேகர் அண்ணா 2 வெண்ணிலா கொஞ்சம் சீக்கிரமா தாங்காண்ணா.. பஸ் வரபோகுது.."

"பிடிமா தென்றல்.. காலேஜ் முடுஞ்சுடுச்சு, இனிமேல்லாம் நம்ம பாத்துக்க முடியாதுல.. என்ன மறந்துடாதமா, லைஃப இப்ப மாதிரியே எப்பவும் நல்லா என்ஜாய் பண்ணி வாழுமா, அதே போல இப்போ மாதிரியே 2 பேரும் எப்பவுமே happy-யா இருங்க." என்று சொன்னவரின் முகத்தைப் பார்த்து சிரித்தவள் அவரிடம் ice cream வாங்கியவாரே

"உங்கள எப்டின்னா மறப்பே." என்றாள்..

அச்சமயம் அவள் காதுகளில் ஒலித்தது உமாவின் குரல்..

"ஏய் தென்றல் பஸ்டி"

"ஹான் இதோ வரே" என சொல்லியாவாரு தென்றல் road ஐ cross செய்ய முயற்சி செய்த பொழுது சரியாக ஒரு lorry அவள் மீது மோத வந்தது..

இதை கவனித்த இரு கண்கள் படாரென அவள் கையை பிடித்து இழுத்தது..


எழில் நம்ம கதையோட ஹீரோ.. அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ், ஆறடி உயரம், முருக்கிவிட்ட மீச, மாநிறம் , சிரிச்சா அழகா இருப்பான் ஆனா இவனுக்கு சிரிக்க காசு தரணும் போல அப்டின்னு பாக்குற பொண்ணுங்க எல்லாரும் சொல்ற மாதரி முகத்த இருக்கமாவே வச்சுருப்பான். ஆனா, பசங்ககிட்ட செம்ம ஜாலி. இதாங்க நம்ம எழில்... அவன் ஏன் இப்டின்னு போக போக தெரிஞ்சுக்கலாம்....

தென்றல் ரோட் கிராஸ் செய்யும் பொழுது அவள் மீது லாரி மோத வருவதை பார்த்த எழில்தான் அவள் கையை பிடித்து இழுத்தான்..

அவன் இவளை இழுத்த வேகத்தில் அவன் மேல் மோதி அவன் நெஞ்சில் சாய்ந்து கண்கள் இரண்டையும் இறுக மூடி இருந்தாள் தென்றல்..

பயத்தில் அவள் உடலெங்கும் நடுக்கம் எடுத்தவாரு அவன் மீது சாய்ந்து இருந்தாள் தென்றல். ....

ஆனால் இத்தனை ரணகளத்திலும் கையில் இருந்த ஐஸ் கிரீமை மட்டும் அவள் கீழே விடவே இல்லை..

இதை கவனித்த எழில்..


‘எப்படி நடுங்குறா?, ஆனா இந்த ice cream-ம மட்டும் எப்டி பிடிச்சிருக்கா பாரு.. சரியான தின்னி பண்டாரம் போல..ம் ம் ம் பாவம் இவள கட்டிக்க போறவன், இவளுக்கு ice cream வாங்கி கொடுத்தே தன் சொத்த ஃபுல்லா அழிச்சுக்க போரான்.” என்று மனதிற்குள்ளார் அவனுக்கு அவனே சாபம் விட்டுக் கொண்டான் ...

அது வரை அவன் நெஞ்சில் சாய்ந்து நடுங்கிக் கொண்டிருந்த தென்றலை அவன் குரல்தான் எழுப்பியது..

"ஏய் லூசு எழுத்துரு விட்டா என் நெஞ்சுலயே படுத்து தூங்கிடுவ போல.... அறிவு இல்லையா உனக்கு ரோட் கிராஸ் பன்றப்போ பாத்து கிராஸ் பண்ண தெரியாதா .. சின்ன பப்பாவ நீ.... "
என்று அவன் இவளை திட்டி கொண்டிருந்த நேரத்தில் அவன் போன் ரிங் ஆனது...

“எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று

பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது…

என்ற பாடல் ரிங் டோனாக ஒலிக்க, அதை கேட்ட தென்றல் அவனை ஒரு மாதிரியாக பார்த்து, தன்னிலை மறந்து சிரித்தே விட்டாள்.

அதில் அவளை பார்த்து முறைத்த எழில் " ஏய் என்ன சிரிப்பு? ஆளையும், dress-சையும் பாரு, நல்லா மாரியம்மன் கோவிலுக்கு கூல் ஊத்துற மாதிரி .. மஞ்ச மஞ்ஜேருனு வந்துட்டா ரோட் கூட கிராஸ் பண்ண தெரியாம" என்று அவளை வாரினான்..

அதில் கோபமானவள் "excuse me.. நீங்க என்ன பைத்தியமா? நா எந்த கலர்ல ட்ரெஸ் போட்டு வந்தா உங்களுக்கு என்ன…? எனக்கு கூடதான் உங்கள பாத்தா நிஜ போலீஸ் மாதிரி தெரியல.. எதோ பிராங்க் வீடியோ பண்ண வந்த டம்மி போலீஸ் மதிரிதான் தெரியுது .... நா எதாச்சும் கேட்டேனா.. இதுல ரிங்டோன பாரு"
என்று சொன்னவள் மீண்டும் சிரிக்க தொடங்கி விட்டாள் .. ஸ்ரீ யும் அவளுடன் இணைந்து சிரிக்க தொடங்கி இருந்தான்..

ஸ்ரீ, எழிலோட பாசமான ஆருயிர் தோழன்.. இன்ஸ்பெக்டர் ... இவர்களும் உமா தென்றலை போலத்தான்.. LKG, UKG- லயிருந்தே ஒண்ணா படிச்சு, ஒண்ணா டிரெய்னிங் முடிச்சு ,ஒண்ணா போலீஸ் பரீட்சை பாஸ் பண்ணி, ஒண்ணா டியூட்டில ஜாயின் பண்ணி, இப்போ ஒரே டீம்ல ஒர்க் பண்றாங்க...


ஸ்ரீ சிரிப்பதை பாத்து அவனை ஒரு முறை முறைத்தான் எழில்..

"மச்சா பாவம்டா விட்ரு போட்டும்" என்று அவன் கண்களால் சிரித்து கொண்டே சொல்ல எழில் தென்றலை கோவமாக பாத்தவாறு ,

“ஒழுங்கா இங்க இருந்து கிளம்பு..” என்று சொன்னான்..

"முடியாது.. என்னால போ முடியாது" என்று தென்றலும் கோவமாக சொன்னாள்

"ஏய் என்ன கொழுப்பா ... போகாம இங்கேயே இருந்து என்னோட உயிர வாங்க பிளான் பன்றியா...ஏண்டி போக முடியாது…?" என்று கேட்டான் அவன்..

"எனக்கு ஆச பாரு இப்டியே உங்க பக்கத்துலயே நிக்கணும்ன்னு… இப்படி என் கைய பிடிச்சு இருந்தா நா எப்டி போறதாம்..."என்று அவள் கேட்க

எழில் அப்பொழுதுதான் அவள் கையை தன் கரம் பற்றி இருப்பதை கவனித்தான்..

"ஏய் உன் கைய ஏண்டி என் கைக்குள்ள வச்சிருக்க, கைய விடு" என்று கோவம் மாறா முகத்துடன் சொன்னான் எழில்..

"யோவ் போலிசு நீ லுசாயா.. நீதாயா என் கைய பிடிச்சு வச்சிருக்க ... கைய விடுயா லூசு போலிசு" என்று சொல்லி விட்டு எழில் கைக்குள் இருக்கும் தன் கையை எடுத்துக் கொண்டு Road cross செய்தாள் தென்றல்..

இதை கண்ட எழில் நிலைதான் பாவமாய் போனது.. காரணம் அவள் தன்னை லூசு என்று திட்டி விட்டு சென்ற கோவத்தில் அருகில் இருந்த jeepன் மீது ஓங்கி குத்தி கொண்டவன் அவன் கையை அவனே damage செய்து கொண்டான்..

"டேய் மச்சா ஸ்ரீ இவ என்ன லுசாடா.... அவ உயிர காப்பாத்திருக்கேன்.. ஒரு தங்ஸ் கூட சொல்லாம இப்படி திட்டிட்டு போரா.. எனக்கு வந்த கோவத்துக்கு அவள ஓங்கி அரயலாமான்னு தோணுச்சு" என்றவனை நக்கல் பார்வை ஒன்று பார்த்தான் ஶ்ரீ..

"ஹா ஹா மச்சா நீ அவள அரய பாத்தியா.... அட போடா, விட்டா அவ உன் மேலயே கேச போட்டு , இவன் என் கைய பிடிச்சு இழுத்தான்னு சொல்லி உன்னையே உள்ள தள்ளிருவா போல... ஆனா ஒன்னு மச்சா .. நீ கவனிச்சியா .. ? அவ உன்ன போலீசாவே கன்சிடர் பண்ணலடா.." என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து அவன் பங்கிற்கு வம்பிழுத்து எழிலின் கோவத்தை இன்னும் அதிகமாக்கி அதில் ஆனந்தம் கண்டான்...

அதில் அவனை மீண்டும் ஒரு முறை முறைத்தான் எழில்

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று

பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது.

மீண்டும் போன் ரிங் ஆக வந்த காலை பேசி விட்டு "டேய் பல்ல காட்னது போதும் கிளம்பு போலாம்.. நம்ம பிளான் படி அந்த கன்டெய்னர் ஒத்தயடி பாத இருக்க காட்டுக்குள்ளதான் போயிருக்கு .. அங்க இருந்த நம்ம ஆளுங்க அவங்கள பிடிச்சு ஸ்டேஷன்க்கு கூப்டு போய்ட்டாங்க...." என்றான் எழில்

"Wow சூப்பர் மச்சா எப்படிடா கரெக்டா கெஸ் பண்ண , நானும் இந்த கன்டெய்னர three டைம் ட்ரேஸ் பன்னி மிஸ் பணிட்டேன்.. but நீ அவனுங்கள ஒரே டைம்லியே தூக்கிட்டடா.. சூப்பர் மச்சா எப்டிடா?" என்று தன் நண்பனை வியந்து பார்த்தவாறு கேட்டான் ஶ்ரீ..

"மச்சா அதுக்கெல்லாம் கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணனும்.. நீ த்ரீ டைம்ஸ் ரெய்டு பண்ண ok , எல்லா பிளான்ஸ்மே பக்காதான், but அது ஒவ்வொரு தடவையும் ஃபெயிலியர் ஆச்சுல் ரீசன் என்னணு யோசிச்சியா???...."


"Yes மச்சா நா அது பத்தி திங்க் பண்ணேன்.. எனக்கென்னமோ நம்ம டிபார்ட்மெண்ட்குள்ள இருந்துதான் மேட்டர் வெளிய போதுன்னு தோணுச்சு .. ஸ்டேஷன்குள்ள ஆள் வச்சு இன்பர்மேசன் கலெக்ட் பன்ற அளவுக்கு செல்வாக்கு அந்த சங்கர்க்குதான் இருக்கு.. அதான் இந்த கேஸ்ல உன்னயும் இறங்க வச்சிருக்கேன் மச்சா ...." என்று சொன்ன ஶ்ரீயின் முகம் கடந்த காலத்தில் நிகழ்ந்த சில விஷயங்களை மனதிற்குள் எண்ணியவாறு கோவத்தில் இறுகியது....

"மச்சா உன்னோட guessing correctதான் ... நீ நினைச்ச மாதிரி இது அந்த சங்கர் வேலையேதான்.... அதான் அவனுக்கு கொஞ்சம் விளையாட்டு காட்டுனேன்.. எப்பவும் போல same லொகேஷன்ல ரெய்டு பண்ண சொன்னேன்.. நம்ம ஸ்பாட்டுக்கு வந்த 15 மினிட்ஸ்ல அவனுக்கு info போகிருக்கும் then அவன் regular ஆ தப்பிச்சு போர அந்த காட்டுக்குள்ளயும் நாம ஆள் நிறுத்தி இருக்குற இன்பர்மசனும் சேந்தே போயிருக்கும்... அடுத்து என்ன நடந்திருக்கும் நீயே சொல்லு..."

"அடுத்து என்ன ? அவனுக்கு information போனதும், இந்த காலேஜ் அடுத்து இருக்க காட்டுக்குள்ள போலாம்னு பிளான் பண்ணி வந்திருப்பான்.. but நீ 10 மினிட்ஸ் முன்னாடி இந்த காலேஜ் முன்னாடி வந்துட்ட.. நம்ம இங்க வந்த விஷயமும் அவனுக்கு போய் சேந்துட்டுச்சு... So அவனுக்கு இப்போ வேற வழியே இல்ல, எப்டினாலும் இந்த காலேஜ்க்கு கொஞ்சம் முன்னாடி இருக்க அந்த ஒத்தயடி பாத மட்டும்தான் இருக்கு.. இப்ப கண்டிப்பா அவன் அந்த ஒத்தயடி பாதைலதான் போயாகனும் .. இப்போ நம்ம அங்க காட்டுக்குள்ள நிப்பாட்டி இருக்க ஆளுங்கள இந்த ஒத்தயடி பாதைக்கு மாத்துனா again info போய்டும்.. அவன் alert ஆகிடுவான்.. so நீ நமக்கு நம்பிக்கையான நம்ம டீம் அந்த 4 பேர அனுப்பி அவன் கன்டெய்னர தூக்கிட்ட.... Am I correct மச்சா?…” என்று எழில் செய்த விஷயங்களை கனகச்சிதமாக அனுமானித்து கூறினான் ஶ்ரீ..

அதை கேட்டு ஆம் என்பது போல தலை அசைத்த எழில்

"இனி இருக்கு அவனுக்கு,.. நம்ம யாருனு அவனுக்கு காட்டலாம்.. இப்போ கிளம்பலாம் வா..." என்றவன் அவனுடன் அங்கிருந்து கிளம்ப தயாரானான்

இங்கே அவனை திட்டி கொண்டே உமாவிடம் வந்தாள் தென்றல் .. ஆனால் அவளை தீயாய் முறைத்தவாரு நின்று கொண்டிருந்தாள் உமா..

"ஏண்டி ஐஸ் கிரீம் வாங்கிட்டு வறேன்ற பேர்ல என்ன கூத்து பண்ணிட்டு வந்திருக்க? இதுல பாவம் உன்ன காப்பாதின அவர்கிட்ட thanks கூட சொல்லாம போலீஸ் அப்டீன்னு கூட பாக்காம அவர லுசுன்னு திட்டிட்டு வர.. ஏண்டி உனக்கு பயமாவே இல்லையா" என்று கேட்டாள் உமா..

"ஏய் போடி நா ஆரம்பத்துல thanks சொல்லலாம்னுதான் நினச்சேன்.. but அந்த ஆளுதான் ஆளையும் டிரசையும் பாரு நல்லா மாரியம்மா கோவிலுக்கு கூல் ஊத்துற மாதிரி மஞ்ச மஞ்ஜேருனு வந்துட்டா… ரோட் கிராஸ் பண்ண தெரியாம. அப்டின்னு சொல்லவும்தான் நான் tension ஆகி சண்ட போட்டேன் ...." என்று தன் மீது நியாயம் உள்ளது போல் பேசினாள் தென்றல்..

"போடிங் இவளே.... நீ பண்ண கூத்துல last ஆ இருந்த ஒரு bus ம் போய்டுச்சு. இனி அடுத்து நைட் ஏலு மணிக்குதான் பஸ்"

"ஹே பிளீஸ் உமா ஃபீல் பண்ணி புலம்பாத.. வா நம்ம ஜாலியா நடந்து போய்டலாம் ..என்ன ஒரு அர மணி நேரம்தான ஆகும். ஜாலியா போலாண்டி வாடி " என்று தென்றல் கூற பின் உமாவுக்கும் வேறு வழி இல்லாமல் இருவரும் நடக்க தொடங்கினர்..

ஆனால் அவர்கள் நடக்க ஆரம்பித்த அடுத்த 5 நிமிடத்தில் மழை பொழிய தொடங்கியது..

இதை கண்டு உமாவின் கோவம் எல்லையைக் கடந்தது..

ஆனால் அவளுக்கு தென்றலை திட்டவும் மனமில்லை.. காரணம் தென்றல் எதாவது முக்கியமான நாள் என்றாலே அதில் எதாவது memories இருக்க வேண்டும் என்று நினைப்பாள் அப்படி இருக்கும் பொழுது இன்று காலேஜின் கடைசி நாள்..

அதனால்தான் இந்த ஐஸ் கிரீம் மேட்டர்...இந்த பாதயாத்திரை..

"ஹே தென்றல் உன்னோட இந்த காலேஜ் last day மெமரிஸ்கு என்ன பலி ஆக்கிடீல" என்றவளை பார்த்து பல்லை காட்டிய தென்றல்

“ ஹா ஹா ஹா ப்ரெண்ட்சிப்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா. ." என்றாள்..


இவர்கள் இப்படி பேசியவாரு மழையில் நனைந்து கொண்டே செல்லவும் அதை பார்த்த ஶ்ரீ தான் ஓட்டி வந்த jeep- ஐ நிறுத்தி விட்டு எழில் காதுக்குள் ஏதோ சொன்னான்.. பின் அவர்கள் இருவரையும் அழைத்தவன்

"கொஞ்சம் நில்லுங்க ...ஏ ரெண்டு பேரும் நடந்து போறீங்க அதுவும் நனஞ்சுகிட்டே..." என்று கேட்டான்..

"வேண்டுதல் சார் எங்களுக்கு .. அதா நடந்து போரோம்.. ஏன் சார் எதாச்சும் பிரபலமா உங்களுக்கு ?..." என்று எழிலை சற்று கோவ பார்வை பார்த்தவாறு பேசினாள் தென்றல்..

"இல்லம்மா எனக்கென்னமோ நீங்க பஸ் வராம இருக்கவும் நடந்து போற மாதிரி தோணுச்சு, அதான் ட்ராப் பண்ணலாம்னு கேட்டேன் ....." என்று ஶ்ரீ சொன்னதுதான் தாமதம்

"என்னது ட்ராப் பண்ண போரியா? ஶ்ரீ நீ போலீஸ் நியபாகம் இருக்கட்டும்.. நீ ஒன்னும் cab டிரைவர் இல்ல ரோட்டுல போர எல்லாரையும் கூப்ட்டு போய் வீட்ல விட .. ஏண்டா உனக்கு அறிவே இல்லயாடா 5 நிமிஷம் பேசுனதுக்கே மண்ட காஞ்ஜிடுச்சு. இதுல வீடு வரைக்கும் போய் விட போறியா? " என்று எழிலும் தென்றலை முறைத்தவாரு தன் நண்பனை பொரிந்து தள்ளினான்..

"டேய் எழில் விளையாடாத மச்சா... ஒரு போலீசா பொன்ன்னுங்கள பாதுகாக்க வேண்டியது நம்ம பொறுப்பு" என்று ஶ்ரீ கடமை உணர்வுடன் பேச

"ஹே நான் ஒன்னும் விலையாடலடா.. நானும் நிஜமாதாண்டா சொல்ரே எதாச்சும் எமர்ஜென்சி நைட் டைம் அப்டின்னா ஓகே.. but இப்போ வெளிச்சமாதான இருக்கு" என்றான் எழில்

"எங்கடா வெளிச்சமா இருக்கு மழை வேற வருது டைம் 6:30 ஆக போது..." என்று ஶ்ரீ சொல்ல

"ஹே விடுடா இவளுக்கு இருக்க திமிருக்கு நடந்து போகட்டும் கொழுப்பாச்சும் குறையும், கூட சேந்த பாவத்துக்கு அந்த பொண்ணும் நடக்கட்டும்..." என்றான் எழில்

"டேய் நீ ரொம்ப ஓவரா போற .. சும்மா இருக்க மாட்டியா ....எதாச்சும் பேசின மீசைட்ட மாட்டி விட்டுறுவேன் பாத்துகோ."என்று கூறினான் ஶ்ரீ..


அதுவரை தென்றலை திட்டி கொன்டு இருந்த எழில் ஸ்ரீ சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு அமைதி ஆகினான் …(யார் இந்த மீீீசை??🤔)

"நீங்க ரெண்டு பேரும் ஜீப்ல ஏறுங்கமா..." என்று ஶ்ரீ சொல்ல

"ஒரு நிமிஷம் இருங்க 2 பேரும்.. டேய் ஸ்ரீ நீ சொல்றத நான் கேக்கணும்னா நான் சொல்றத நீ பண்ணு.. அப்டின்னா அவ உள்ள வரலாம் இல்லாட்டி நா என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்.." என்றான் எழில் வீம்பாக


"என்னடா பண்ணணும் சொல்லு" என்று கேட்டான் ஶ்ரீ

"என்ன டம்மி போலீஸ் அப்படிண்ணுதான சொன்னா அவ .. so அவ மட்டும் கைல ஹேன்ட் கஃப் (கை விலங்கு) போட்டுதான் வரணும் இதுக்கு ஓகேவான்னு கேளு.. இல்ல ஜீப்ப எடு.. எனக்கு நிறைய ஒர்க் இருக்கு .. அந்த சங்கர தீத்துகட்ட பிளான் பண்ணனும்' என்று எழில் தன் முடிவை சொன்னான்

எழில் சொன்னதை கேட்டு கோவமான தென்றல் " ஹா.. ஆஹான் அதெல்லாம் முடியவே முடியாது. இதுக்கு நா நடந்தே போய்டுவேன்.. ஏய் உமா வாடி போலாம்" என்று கோவமாக சொன்னவாறு தென்றல் உமாவின் கைகளை பிடித்து இழுத்தாள்..

இங்கு ஸ்ரீயோ எழிலை சமாதனம் செய்ய முடியாமல் போகவே உமா பக்கம் திரும்பியவன் “ தங்கச்சிமா பிளீஸ்..” என்று தென்றலை சமாதானம் செய்யுமாறு கண்களால் சொல்ல

உமா அவனின் தங்கச்சிமா என்ற சொல்லில் கண்கள் கலங்கி அதற்கு ஒத்து கொண்டாள்..

6 மாதத்திற்கு முன்பு தன் அண்ணனை இழந்த உமாவிற்கு இந்த தங்கச்சிமா என்ற சொல் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ... யாரும் பார்க்கும் முன் தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு தென்றலை சமாதான படுத்த தயாரானாள் அவள்.

அவளுக்கு காய்ச்சல் இருப்பதை மனதில் கொண்டும் , மேலும் தன்னை இப்படி நனைந்தவாரு நடக்க வைத்த தென்றலுக்கு இந்த தண்டனை சரியே என்று சிரித்துகொண்டு அவளை சமாதன்படுத்தினாள்

"இங்க பருடி தென்றல் நீ பண்ண வேலைக்கு இந்த பணீஸ்மெண்ட் கரெக்ட்டுதான் .... So வீம்பு பண்ணாம வா"என்றாள் உமா

"ஹ்கூம் .. போடி ......... நா வரல நீ வேணும்னா போ...." என்று அடம் பிடித்தாள் தென்றல்..

"நீ மட்டு இப்போ வரல வீட்ல நீ ஐஸ் கிரீம் சப்பட்டதுன்னாலதான் பஸ்ஸ விட்டு இப்படி மழையில நனஞ்சு நடந்து வந்தோம்ன்னு சொல்லி போட்டு விட்டுருவேன் பாத்துக்கோ...."என்று உமா அவளிடம் மிரட்டலாக கூறினாள்

"அடியே உமா நீயல்லாம் ஒரு பிரெண்டா?"என்று முகத்தை பாவமாய் வைத்து கொண்டு கேட்டவளை பார்த்து சிரித்த உமா

"ஈ ஈ ஈ நட்புக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா...." என்று சொல்லி கொண்டே அவள் கையை இழுத்து எழிலிடம் கொடுத்தாள்..

எழில் அவள் கையை இழுத்து தன் மடியில் வைத்து அங்கும் இங்குமாக அழுகும் தோனியில் சிலுப்பி கொண்டிருப்பவளின் முகத்தை பார்த்து ரசித்து கொண்டே அவள் கையில் ஹேன்ட் கஃபை மாட்டினான்

அவன் மாட்டிய பின் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி உமாவை ஸ்ரீ அருகில் அமர வைத்து விட்டு தென்றலை அழைத்து பின் சீட்டில் அமரவைத்து அவனும் அவள் எதிரே அமர்ந்து அவள் படும் அவஸ்தைகளை ரசித்துக்கொண்டே வந்தான்.....

எழில் தென்றல் வருவார்கள்..

Hi friends எழிலின் தென்றல் நாவல் பற்றிய உங்கள் கருத்துகள நீங்க கீழ comments ல சொல்லலாம்.. உங்க comments இந்த நாவலுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். நன்றி..

Leave a Reaction

Reader Comments

No reactions yet. Be the first!

NovelClicks Footer