வரமென வந்த காதலே
மாங்கல்யம் தந்து நானே நம ஜீவன ஹேத்துனான்னு மங்கள வாழ்த்து பாடுன அய்யர் ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்த மஞ்சள் கயிற எடுத்து சீனு கையில கொடுக்க சிரிச்ச முகத்தோட வாங்கிகிட்டவன் தன் பக்கத்துல தாமரை மலர் போல பவ்யமா அமர்ந்து குனிஞ்ச தலை நிமிராம இருந்த ரதியோட கழுத்துல கட்டுனான்..
சுத்தி இருந்த எல்லாருமே சிரிச்ச முகத்தோட அவங்க பல ஆண்டுகாலம் சந்தோஷமா வாழனும்னு ஆசீர்வதிச்சு தங்கள் கைகள்ள இருந்த மலர ரெண்டு பேரு மேலயும் தூவ அந்த இடமே நாதஸ்வர சத்தமும் கெட்டிமேல சத்தமும் ஒன்னு சேர்ந்து களைகட்டி அங்கே இருந்தவங்களுடைய சந்தோஷத்தை இன்னும் அதிகமாகுது…
கல்யாணம் முடிஞ்ச கையோட சீனு ரதீயும் அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து அவன் அவ காலுல மெட்டி போட்டு விட்டு அதுக்கப்புறம் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாமே முடிஞ்சு மணமகனும் மணமகளும் வீடு திரும்பினாங்க
வீட்டுக்குள்ள நுழைஞ்சவங்களுக்கு பாலும் பழமும் கொடுக்கிற கலாட்டா நிகழ்ச்சி முடிஞ்சதும் அடுத்தடுத்த சம்பிரதாயங்களும் முடிஞ்சு அவங்கள கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி தனித்தனி ரூமுக்கு அனுப்பி வச்ச பெரியவங்க அடுத்து ஆக வேண்டிய வேலைகள கவனிக்க ஆரம்பிச்சாங்க..
மாப்பிள்ளையோட அம்மா பொண்ணோட அம்மாகிட்ட வந்து சம்பந்தி பொண்ணு ரெடியா சீக்கிரம் ஆக வேண்டிய வேலையை பாருங்க ஐயர் குறிச்ச தேதி முடியறதுக்குள்ள ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தாங்கனாதா வம்சம் விருக்தியாகும் அவங்க வாழ்க்கையும் நல்லபடியா இருக்கும்ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்ல
இதோ சம்மந்தி பொண்ணு குளிச்சு முடிச்சுட்டா sharee எல்லாம் மாத்தியாச்சு அவங்க பிரெண்ட்ஸ் எல்லாருமே அவள அலங்கரிச்சுகிட்டு இருக்காங்க நீங்க சொன்னா உடனே அழிச்சிட்டு வந்துற வேண்டியதுதான்ன்ணூ சொன்னதும் சரிங்க அப்ப அழைச்சிட்டு வாங்கன்னு சொல்லி வேகமா அடுப்படிக்கு போனவங்க
பால சுண்ட காச்சி எடுத்துட்டு வந்து வெளியே நிக்கவும் ரதியுடைய அம்மா அவள அழைச்சிட்டு வரதுக்கும் நேரம் சரியா இருந்துச்சு..
அதுக்கு அப்புறமா அம்மாமார்கள் இரண்டு பேரும் தனியா வர சீனுவுடைய அம்மா காச்சி வச்சிருந்த பால அக்கா முறைல உள்ள ஒரு பொண்ணு எடுத்துட்டு வந்து கொடுக்க அவளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நீ மட்டும் பால குடிச்சீராதடி மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் கொடு இல்லன்னா மாப்பிள்ளை கோவிச்சுக்கிட்டு அவர் கோவத்த வெர மாதிரி காமிச்சிட போராறுன்னு சொல்லி சிரிச்சுகிட்டே அவளை மாப்பிள்ளையோட ரூமுக்குள்ள அனுப்பி வச்சாங்க
அவ்வளவு நேரம் எல்லார்கிட்டயும் சகஜமா பேசிக்கிட்டு இருந்த ரதியுடைய ஹார்ட் பீட் இப்போ பயங்கரமா துடிக்க ஆரம்பித்தது குனிஞ்ச தலையோட ரூமுக்குள்ள போனவ சீனுவ நிமிர்ந்து பார்க்கிறதுக்கே தயங்கினா.. ஆனால் அவனோ ரொம்ப நார்மலா ஓய் வா வா உள்ள வான்ணூ பேசவும்
அவளுக்குள்ள ஓரளவுக்கு தைரியம் வந்துச்சு.. மெதுவா அவனோட பக்கத்துல போயி பால அவன்கிட்ட கொடுத்துட்டு கொஞ்சம் தள்ளி ஒக்காந்தா
ஏ இவ்வளவு தூரம்ன்ணூ அவன் கொஞ்சம் கிண்டலா சிரிச்ச முகத்தோட கேக்க
அ அ அத்.. அது வந்து அப்படின்னு சொல்ல முடியாம வார்த்தைய மென்னு முழுங்குணவளுடைய பார்வ அங்குட்டும் இங்குட்டும் சோளி உருண்ட மாதிரி சுழல ஆரம்பிச்சது..
இத எல்லாம் பாத்தவனுக்கு அவளுடைய activites சிரிப்ப வர வச்சாலும் அவ எதுக்காக இப்படி எல்லாம் பயபடுறான்றத புரிஞ்சுகிட்டவன் அவகிட்ட ரொம்ப சாஃப்ட்டா
இங்க பாரு உன்னோட விருப்பம் இல்லாம எதுவுமே நடக்காது.. சோ பிளீஸ் be நார்மல்ன்ணூ அவன் சொல்ல அதுக்கு பின்னாடிதான் கொஞ்சம் நார்மல் ஆனா ரதி
நா உண்ண பொண்ணு பாக்க வந்ததுல இருந்து இப்ப வர நீ என்கிட்ட எதுவுமே பேசுணதே இல்ல.. சோ ஃபர்ஸ்ட் நம்ம ரெண்டு பெரும் ஃபிரண்ட்ஸ் ஆகலாம்.. உண்ண பத்தி சொல்லுன்ணூ அவன் கேக்க
அவளோ அவன்கிட்ட பேச கொஞ்சம் தயங்குனா..
நீ பேசமாட்டே நானே கேக்குறேன்ணூ சொன்னவன் உனக்கு என்னை பிடிச்சிருக்கான்ணூ கேக்கவும்
அவகிட்ட இருந்து எந்த ஒரு பதிலும் வராம இதழ்கள்ள சிரிப்பு
மட்டுமே இருந்தது..
அந்த சிறிப்புல ரதி அவன் கண்ணுக்கு தேவதையா தெரிஞ்சா..
கியூட் உன் சிரிப்பு ரொம்ப அழகா இருக்குன்னு சொல்ல அவளுடைய கண்ணம் ரோஜா பூ மாதிரி சிவந்து போச்சு
அதையும் கவனிச்சவன் அவகிட்ட
என்ன நீ இப்படி continues ஆ என்ன அட்டாக் பண்ணிக்கிட்டே இருக்க?ன்ணூ சொல்லவும் அப்பவும் வெட்கம் கலந்த அழகிய சிறிப்புதான் பதிலா வந்துச்சு..
நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியான்னு அவன் கேட்க
என்ன விஷயம்ன்ணூ அவ பார்வையாலேயே கேக்க
உனக்கு இதுக்கு முன்னாடி ஃபர்ஸ்ட் லவ் ஏதாச்சும் இருந்துச்ஸான்னு அவன் தயக்கத்தோடு கேட்க
அந்த கேள்வி அவளுக்குள்ள சுருக்குன்னு இருந்துச்சு
அதிர்ச்சி நிறைந்த கண்களோட அவனை நிமிர்ந்து பார்த்தான்
ஹே ஹே சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு இல்லனா வேணாம்.. நா சும்மா தெறிஞ்சிக்கலாமேன்னுதான் கேட்டேன்னு அவன் நார்மலா பேசவும்
அந்த மாதிரி எல்லாம் இல்ல திடீர்னு நீங்க இந்த மாதிரி கேட்கவும் எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு மத்தபடி எனக்கு crush ஃபர்ஸ்ட் லவ் அந்த மாதிரிலாம் எதுவுமே கிடையாதுன்னு சொல்லவும்
அவன் சூப்பர் அப்படின்னு சொல்லி சிரிக்க அவகிட்ட இருந்தும் தயக்கம் கலந்த ஒரு சிரிப்பு வந்துச்சு
சரி எனக்கு ரொம்ப tired ஆ இருக்குது நான் தூங்கட்டுமா இல்ல வேற ஏதாவது என்கிட்ட பேசணும்மான்னு அவன் கேட்க
அந்த மாதிரி எதுவுமே இல்லைன்னு அவ தயங்கிகிட்டே சொன்னான்
இங்க பாரு நீயும் நானும் மட்டும்தான் இங்க இருக்கோம் உண்ண நான் ஒண்ணும் பண்ண மாட்டேன் நீ ரிலீபாவே இருக்கலாம் சரியான்ணூ சொல்லிட்டு அவன் அவள கட்டில்ல படுக்க வச்சிட்டு அவனும் அவ பக்கத்துல படுத்தான்..
அவளுடைய அழகான ரோஜா பூ இதழ்களை பார்த்தவன் மனசுக்குள்ள அதிக தொட்டு தழுவி முத்தம் கொடுக்கணும்ன்ணூ ஆசையா இருந்துச்சு ..
ஆனாலும் அவனுக்குள்ள ஒரு தயக்கம் இருந்தாலும் தன்னோட ஆசையை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாதவன் தன்னோட கைகளால அவ கன்னத்தை தொட்டு முத்தமிட்டு அவள பாக்க
அவளோ கூச்சத்துல அவனை நிமிந்து கூட பாக்காம அமைதியா சிரிச்ச முகத்தோட இருந்தா..
ஆரம்பத்துல சொன்னதுதான் உன்னோட அனுமதி இல்லாம எதுவுமே நடக்காது அண்ட் எனக்கு தெரியும் கல்யாண பிசில நீ எந்த அளவுக்கு டயர்டா இருந்திருப்பேன்ன்ணூ உன் கண்ண பார்த்தாலே தெரியுது தூக்கம் எந்த அளவுக்கு கண்ணனுக்குள்ள நீக்குதுன்னு சோ நீ தூங்குணனு சொன்னவன் ஒரு குழந்தைய போல அவள தூங்கா வச்சான்.. அவ மனசுக்கு ஒரளவுக்கு நிம்மதியா இருந்துச்சு.. அதே சமயம் ஏதோ ஒன்னு குறையா இருக்கேன்னு தோனவும் கொஞ்சம் தயக்கத்தோட அவனுடைய மார்பில கையை போட்டவ மெதுவா கண்களை மூடி தூங்கினா.. சீனுவோ அவளுடைய அழகான வட்ட வடிவமான முகத்தை ரசிச்சுகிட்டே இருந்தான்.. அப்படியே அவளை பாத்துக்கிட்டு அந்த நாள் இரவு கழிய
மறுநாள் வழக்கமான சம்பிரதாயங்களும் சடங்குகளும் நடக்க அடுத்தடுத்து மூன்று நான்கு நாட்கள் அப்படியே போச்சு
அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இன்னும் அந்த கூச்சமும் சங்கோச்சமும் கலந்த பேச்சு தான் இருந்துகிட்டே இருந்துச்சு
எல்லா சடங்கு சாம்பிராதாயமும் முடிஞ்சு சகஜமான வாழ்க்கைக்கு அவங்க திரும்ப சீனுவுடைய அம்மா அவன்கிட்ட எப்போ ஆபீஸ் போறேன்னு கேட்க
அம்மா இன்னும் ஒரு டூ வீக்ஸ் இருந்துட்டு போரன்ம்மான்ணூ சொல்லவும்
சரிடா..।। ரைட்டு ரைட்டு புது மாப்பிள்ளை ஆசைப்படுற இருந்துக்கோன்ணூ கிண்டலும் கேளியுமா சொன்னாங்க அவனுடைய அம்மா
சரிமா ரதி நீ வா நா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்பிடுவேன்ணூ அவங்க கூப்படவும்
அய்யோ அத்தை இல்ல வேணாம் நானே எடுத்து வச்சு சாப்பிட்டுகிறேன்ன்ணூ அவ கொஞ்சம் தயங்கிகிட்டே சொல்லவும்
இங்க பாரு ரதி அந்த மாதிரி ஃபார்மாலிட்டீஸ்ல்லாம் இங்க தேவையில்லை எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம் எனக்கு பசிச்சா நீ எடுத்து வை உனக்கு பசிச்சா நான் எடுத்து வைக்கிறேன்ன்னு சொன்ன சீனு உடைய அம்மா அவள் பக்கத்துல வந்து அவ கன்னத்துல ஆசையா முத்தமிட்டு
இங்க பாருமா உங்க வீட்ல உன்னை எப்படி பார்த்துக்கிட்டார்களோ அதே மாதிரி ஏன் இன்னும் சொல்லப்போனால் அதைவிட நான் உன்னை
ரொம்ப நல்லா பாத்துக்கணுமா
ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை எல்லாம் சொல்லிட்டுதான் இவன் எங்களை உண்ண பொண்ணு பாக்கவே கூப்பிட்டு வந்தான் தெரியுமா..
உன் புருஷன் உன் மேல அந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கான்.. but இருந்தாலும் அவன் என்கிட்ட இந்த கண்டிஷன் போடலைன்னாலுமே நான் நிச்சயமா உன்ன அந்த மாதிரிதான் பாத்துப்பேன்ண்டி செல்லம் வா சாப்பிடலாம்ன்ணூ சொல்லிட்டு கீழ போனாங்க சீனு அம்மா
என்ன எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு தன்னோட கணவர் அவர் அம்மாகிட்ட சொன்னத நினைச்சும் அவங்க இவள்கிட்ட நடந்துகிட்டத நினச்சும் அவ ரொம்பவே சந்தோஷப்பட்டா..
இதுக்கு எல்லாம் காரணமான அவன வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கிட்டே இருக்க
இப்படியே என்ன பாத்துகிட்டு இருந்தா அடுத்த அடுத்த வேலையில யாரும் பார்க்கிறதுன்னு சீனு அவளை பார்க்காமலேயே கேக்க
இவரு எப்படி என் பக்கம் திரும்பாமலே ன்ஆ அவர் பாத்தேன்ணூ கண்டு பிடிச்சாறுன்ணூ அவ தனக்குள்ளயெ யோசிக்க
தேவையில்லாம ரொம்ப யோசிச்சு உன்னோட குட்டி மூளையை கன்பியூஸ் பண்ணி ஹீட் ஆகிட்டாத வா சாப்பிட்டு வரலாம்.. நா திரும்பி பார்க்காமலேயே எப்படி நீ என்னை பாத்தத கண்டு பிடிச்சேன்ற சீக்ரட்ட சாப்பிட்டு வந்து சொல்கிறேன்ன்ணூ சொல்லி அவளை கீழே அழைச்சிட்டு போயி சாப்பிட வச்சிட்டு மறுபடியும் ரூமுக்கு அழைச்சிட்டு வந்தான்
அப்போ ரதி அவன்கிட்ட ஏதோ ஒரு விஷயத்தை சொல்லணும்னு சொல்லி தயங்கிகிட்டே இருக்க
அதை கவனிச்ச சீனுவும் என்ன என்கிட்ட ஏதாவது பேசணுமான்னு கேட்க
இல்ல அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை நான் தூங்கணும்னு சொல்ல சரி தூங்குன்ணூ சொல்லிட்டு சீனு தன் வேலையை கவனிக்க ஆரம்பிச்சான்
ரதி தூங்கி எந்திரிக்கவும் அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வரவும் சரியா இருந்துச்சு கீழ போனவ புது பொண்ணா அவங்க எல்லார்கிட்டயும் அறிமுகமான
கல்யாணத்துக்கு வராத கெஸ்ட் எல்லாருமே இப்போ வீட்டுக்கு வந்திருந்தாங்க அவளை பாத்துட்டு நல்ல மருமகளா தான் உனக்கு கிடைச்சிருக்கான்ணூ சொல்லி புதுப்பொண்ணையும் புது மாப்பிள்ளையும் வாழ்த்திட்டு வீட்டுக்கு கிளம்ப அப்படியே சாயந்திர நேரமாகி இருந்துச்சு கொஞ்ச நேரம் டிவி பார்த்தவங்க நைட் சாப்பாட்ட முடிச்சிட்டு மறுபடியும் மேல ரூமுக்கு வந்தாங்க
அப்போ ரதி இப்பயாச்சும் கண்டிப்பா சொல்லிரனும் அவரு என் மேல எந்த அளவுக்கு பாசமா இருக்காரு .. எல்லாரு முன்னாடியும் என்னை எவ்வளவு நல்லா நடத்துறாரு.. அவரை நான் ஏமாத்த கூடாதுன்ணூ நினைச்சவ ஒரு தைரியத்தை மனசுக்குள்ள வர வச்சுக்கிட்டு
என்னங்க உங்க கிட்ட நான் ஒரு விஷயம் பேசணும்னு சொல்ல
பேசு அப்படின்னு சீனு மறுபடியும் அதை சிரிச்சு முகத்தோட சொல்லவும்
அன்னைக்கு நீங்க என்கிட்ட யாரையாவது லவ் பண்றியா ன்னு கேட்டீங்கல்ல
ஆமா கேட்டேன்.. நீ கூட இல்லைன்னு சொன்ன.ன்ணூ அவன் சொல்லவும் .
ஆமா நான் யாரையுமே லவ் பண்ணினது இல்லை ஆனா.. ன்ணூ அவ கொஞ்சம் தயங்க
ஆனா என்னன்ணூ அவன் மறுபடியும் கேட்க
எ எ .. என்ன ஒருத்தர் லவ் பண்ணி இருந்தாருன்னு சொல்லவும்
wow சூப்பர் யாரு.. அது ஸ்டோரி பத்தி கொஞ்சம் சொல்லேன்ணூ அவன் முகத்துல எந்த ஒரு சலனமும் இல்லாம கேட்டான்
எனக்கு கிளாசிக்கல் டான்ஸ்னா ரொம்பவே இன்ட்ரஸ்ட் அதனால நான் ஸ்கூல் படிக்கிறப்போ டான்ஸ்.. அன்னிக்கு ஒரு நாள் என்னோட டிரைனர் வரல.. சோ இன்னொரு டிரைனர் அவங்க டீம்ல ஒரு சீனியர் பையன எனக்கு சொல்லி கொடுக்க சொன்னாங்க
அந்த பையன் சொல்லி கொடுக்க நானும் கத்துகிட்டேன்.. அப்பாராம கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு போறப்போ அந்த பையன் என்ன கூப்பிட்டான்
எவ்வளவு அழகா டான்ஸ் சொல்லி கொடுத்தே ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டீங்களான்ணூ அந்த பையன் கேட்க திரும்பிப் பார்த்து தேங்க்ஸ்னு சொன்னேன்
உங்க பேரு என்னன்னு என்கிட்ட கேட்கவும் என்னோட பேரு நான் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன் ஆனா மறுநாளும் அவன் என் முன்னாடி வந்து நின்னா
நேத்து டான்ஸ் சொல்லி கொடுத்தீங்க அதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டேன் அப்புறம் எதுக்கு மறுபடியும் இன்னைக்கு வந்து டிஸ்டர்ப் பண்றீங்க ன்னு கேட்டேன்
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு உங்களை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுச்சு அதனாலதான் ஃபாலோ பண்ணலாம் லவ் பண்ணலாம்னு நினைச்சேன் அது தப்பான்ணூ அவன் என்கிட்ட கேட்டதுமே பேசணும் எனக்கு அதை பார்த்து கோபப்படுறதா இல்ல அதிர்ச்சியாகுறதானே தெரியல.. எதுவும் பேசாம அமைதியாவே நின்னேன்
என்ன ஏதும் சொல்லாம இருக்கீங்கன்னு அவன் கேட்க
அவன் கேட்ட அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்ணூ கூட தெரியாத வயசு நான் அப்பதான் டென்த் முடிச்சு 11 போய்கிட்டு இருந்தேன்னு சொல்ல அதை கேட்ட சீனு சிரிச்சான்
மேற்கொண்டு என்ன ஆச்சு சொல்லுன்ணூ அவன் ஆர்வத்தோட கேக்கவும் அவளும் தயக்கத்தோடயே அவனை பார்த்துக்கிட்டே மீதி கதையை சொல்ல ஆரம்பிச்சா
இங்க பாருங்க இந்த மாதிரி நினைப்போட எல்லாம் என் பின்னாடி வராதீங்க எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்ல நான் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் எங்க அம்மா அப்பா பேர காப்பாத்தணும் அப்படிதான் என்கிட்ட எங்க அம்மா அப்பா சொல்லி இருக்காங்க சோ இனிமே என் பின்னாடி வராதீங்கன்னு சொல்லிட்டு நான் அங்க இருந்து கிளம்புனேன்
பட் அவன் என்கிட்ட நீ சொன்னா நான் உன்னை விட்டுரனூமா அதெல்லாம் விடமாட்டேன் நிச்சயமா நீ படி ன்ஆ உண்ண டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. நல்ல வேலைக்கு போ நல்ல ஜாலியா உன் லைப என்ஜாய் பண்ணு ஓகே.. அதே மாதிரி நானும் உன்னை சீக்கிரமா வந்து கல்யாணம் பண்ணிக்கிடுவேன் ஐ லவ் யூ ன்னு சொல்லிட்டு போய்ட்டான்ன்னு சொல்லி ரதி தன்னுடைய பிளாஷ்பேக்க நிறுத்த
அத ஆர்வமா கேட்டுக்கிட்டு இருந்த சீனு அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்க அதுக்கப்புறம் அவ்வளவுதான் நான் அவனை அன்னைக்குதான் லாஸ்ட்டா பார்த்தேன் அப்புறம் பார்க்கவே இல்லை எனக்கு அவனை நினச்சு பயத்துல டான்ஸ் கிளாஸ்க்கு போறதுக்கு பயமா இருந்துச்சு..
அதனால நான் ஒரு டூ வீக்ஸ் போகவே இல்ல அதுக்கு அப்புறம் வீட்ல இருக்கவங்க ஏன் போகலைன்னு கேட்கவும் இந்த விஷயத்தை சொல்றதுக்கு பயமா இருந்துச்சு எங்க இத சொல்லி ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்கலோன்ணூ யோசிச்சுட்டு இந்த விஷயத்த சொல்லுறதுக்கு பதிலா டான்ஸ் கிளாஸ் போறதே மேல் அவன் வந்தா சமாளிக்கலாம்ன்னு கிளாஸ்க்கு தைரியத்தோட போனேன்
ஆனா அங்க நான் எதிர்பார்த்த மாதிரி அவன் வரவே இல்ல ரெண்டு மூணு நாள் நானும் அவனை தேடி பார்த்தேன் ஆனா அவன் வரல அதுக்கப்புறம் ஸ்கூலு காலேஜ் வேலை இப்படியே போயிருச்சு ..
சீக்கிரமா நல்ல வேலைக்கு போயிட்டு வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னவன் அதுவரைக்கும் வரவே இல்ல
எனக்கு தெரிஞ்சுஅவ என்ன லவ் பண்ணதே மறந்து போயிட்டான்ன்ணூ நினைக்கிறேன் அப்புறமாதான் நீங்க வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு தயங்கிக்கிட்டே அவ சொல்லவும்
அப்போ நீ அவனை தேடி இருக்க அப்படித்தானேன்ணூ அவன் கொஞ்சம் சீரிசான முகத்தோட கேட்க
எங்க இவன் தன்னை சந்தேகப்படுறானோன்ணூ நினாச்சவ மனசுக்குள்ள பயமும் உடல்ல நடுக்கமும் கண்கள்ல கண்ணீரும் தேங்க ஆரம்பிச்சது..
ஹே என்னாச்சு ஏன் இவ்வளவு சிவியர் ஆகுற நா சும்மா ஜஸ்ட் ஒரு ஆர்வத்துலதான் கேட்டேன் நீ அவன தேடினியா இல்லையான்னு ஓகேவா இதுக்கெல்லாம்மா பயப்படுவானகண்ணு அவன் குறும்பு பார்வையுடயே அவளை பார்த்து கேட்க
எனக்கு இத பத்தி சரியா சொல்ல தெரியல சின்ன வயசுல நடந்த ஒரு விஷயம் நம்மள ரொம்ப தாக்கி இருந்துச்சுன்னா அத அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாதுன்னு எல்லாருமே சொல்லுவாங்க பொதுவா இந்த விஷயம் காமனான ஒன்னு
அந்த மாதிரிதான் இந்த விஷயம் சின்ன வயசுல பசுமரத்தாணி போல என் மனசுக்குள்ள பதிஞ்சது.. அதனால எப்பயாவது ஒரு சில சமயம் அவன் வருவானா மாட்டானான்னு என் மனசும் கண்ணும் தேடும்னு சொல்லவும்
அவ சொன்னத கேட்டுகித்து இருந்த சீனுவுடைய கண்கள்ள ஒரு மாற்றம் தெரிஞ்சது.. ரதியும் அவனை கவனிச்சா
எங்க அவன் தன்னை தப்பா நினைச்சுக்கிட்டானு நினைச்சு அவளுக்குள் மறுபடியும் பயம் வர ஆரம்பிச்சது
என்னங்க அப்படின்னு வார்த்தை வெளிய வந்து வராமலும் தயங்கிகிட்டே அழுத குரலோட கேட்க
நீ அவனைத் தேடிருக்க அதுவும் ஒரு ஆர்வத்தோடன்ணூ கேட்கவும்
ரதி பதில் எதுவும் சொல்லாம கலங்கிய கண்களோட ஆமானு சொல்லி அவ தலையாட்டி முடிக்கிறதுக்குள்ள சீனு தன்னுடைய இதழ்களை அவ இதழ்கள்ள பொறுத்தி இருந்தான்.
இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவ ஒண்ணுமே புரியாமல் தன் கண்கள்ள தேங்கி இருந்த கண்ணீர கன்னத்துல சிதறவிட்ட
உடனே அதை தொடச்சி விட்டவன்
இனி ஒரு தடவை கூட உன் கண்ணுல இருந்து கண்ணீர் சிந்தக்கூடாது
உன் சீனு உன்கிட்ட வந்த பின்னாடி இனி எப்படி செல்லம் உன்னை கண்ணீர் சிந்த விடுவேன் எப்பவுமே விடமாட்டேன்னு சொன்னவன்..
மறுபடியும் பழைய பேச்சுக்குள்ள போனான்
ஆமா நீ அவன் உன கண்ணு முன்னாடி வரவே இல்லீள சோ ஏதாவது பண்ணி நீ அவன பத்தி தெரிஞ்சுக்க நினைச்சியான்ணூ அவன் கேட்டதுக்கு
அந்த மாதிரி எல்லாம் எதுவுமே இல்லைன்ணூ அவ வெறுமையா பதில் சொன்னா
அப்படியா நீ தான் அவன பத்தி அந்த அளவுக்கு எதுவுமே தேடி தெரிஞ்சுக்கல பட் அவன் உனக்காக எல்லாம் பண்ணி இருக்கான்னு தெரியுமான்னு கேட்கவும்
ரதிக்கு ஒண்ணுமே புரியல
என்ன சொல்றீங்கன்ணூ அவ கேக்க
ஆமா நீ அந்த டான்ஸ் கிளாஸ்ல அவன பார்த்துட்டு போனதுக்கு அப்புறமா இன்னைக்கு வரைக்கும் உன்னை பாலோ பண்ணிக்கிட்டுதான் இருக்கான் ஆனா உனக்கு தான் அந்த விஷயம் தெரியாம இருக்குதுன்னு சொல்லவும்
ரதிக்கு குழப்பம் அதிகமாச்சு அப்போ இவருக்கு இந்த விஷயம் முதல்லயே தெரியுமா? அவன் அவனது இவர்கிட்ட சொல்லிட்டாரா அவன் என்னை இன்னும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கானான்னு நினைச்சவளுக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு..
அந்த அதிர்ச்சியை தாங்க முடியாதவ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பிச்சா
அட நான் சொல்றத முழுசா கேளு அவன் உனக்காக உன்னை தொந்தரவு பண்ணக்கூடாதுன்ணூ நினைச்சுட்டு ரொம்ப நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் அதே சமயம் வேறு யாருமே உன்னை வந்து லவ் பண்ணிரக் கூடாது மீறி வந்தாலுமே அவன பாதியிலேயே துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடுற அளவுக்கு டார்ச்சர் பண்ணி ஓட விட்டுட்டு கடைசியா அவன் நினைச்சது மாதிரியே நல்ல வேலைக்கு போய் அவ அம்மா அப்பாகிட்ட அந்த பொண்ண பத்தி எடுத்து சொல்லி கல்யாணம் பண்ணி இப்போ உன் முன்னாடி உட்கார்ந்து இருக்கான்ன்ணூ சொல்லி அவளை பாத்து கண்ணடிச்சு கியூட்டா ஸ்மைல் பண்ணா சீனு..
ரதி முழுசா புரிஞ்சும் அதே சமயம் confusion ஆவும் சிரிச்சா முகத்தோட அவன பாக்க
நான் தாண்டி செல்லம் உன்னோட சீனுன்னு உனக்கு டான்ஸ் சொல்லி கொடுத்துட்டு உனக்கு ப்ரபோஸ் பண்ணவண்டி ஏன் பொண்டாட்டின்ணூ சொல்லி தன் இரு கைகளயும் அகல விரிக்க
வேகமா வந்து அவன் நெஞ்சுளா சாஞ்சுகிட்டவ கண்ணீர துடச்சிக்கிட்டே அவன அவனை டைட்டா hug பண்ணிக்கிட்டா
அப்போ நிஜமா நீங்க தான் அந்த சின்ன பையன்ன்னான்னூ அவ தயங்கின குரலோட கேட்க
ஆமாடி பொண்டாட்டி..அது எதுமே தெரியாம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்ன தேடினேன்ன்ணூ என்கிட்டயே சொன்ன பாத்தியா எனக்குள்ள எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சுன்னு தெரியுமா அப்போ உன் மனசுக்குள்ள நான் இருந்திருக்கேன்தானே ஐ லவ் யூ டி செல்ல குட்டி ரதின்ணூ ஃபர்ஸ்ட் டைம் அவன் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ன்ணா
இதய கேட்ட ரதியால எந்த ஒரு வார்த்தையும் பேசவே முடியல
அவன் எதிர்பார்க்காத சமயத்துல தன்னுடைய இதழ்களை அவன் இதழ்கள் நூலச்சு மூச்சு கூட விட முடியாத அளவுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சா..
இத கொஞ்சம் கூட ரதிக்கிட்ட இருந்து எதிர்பார்க்காத சீனு மிரண்டு போயிட்டான்
அவன் மனசுக்குள்ள பத்தாயிரம் பட்டாம் பூச்சி ஒண்ணா சேந்து பரக்கூற மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்..
நான் ஆம்பளடி உனக்கு சலச்சவான் கிடையாதுன்னு அவனும் அவளுக்கு விடாது முத்தம் கொடுத்துக்கிட்டே இருக்க ரெண்டு பேரோட கைகளும் மாறி மாறி மற்றவர்களுடைய உடம்புல கோலம் போட ஆரம்பிச்சது
இந்த முத்த போராட்டத்துல ஒரு கட்டத்துக்கு மேல ரதிக்கு மூச்சு வாங்க இப்போ அவளுக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்தவன்.. முத்தம் கொடுக்கிற மொத்த வேலையையும் தானே எடுத்துக்கிட்டான்
என்ன உங்களுக்கு இந்த அளவுக்கு பிடிக்குமா எவ்வளவு லவ் பண்ணி இருக்கீங்க .. எனக்கு எதுமே தெரியாமலேயே என் லைப் எதையுமே ஸ்பாயில் ஆக்காமலேயே தூரத்தில இருந்தே லவ் பண்ணி கடைசில இப்போ உங்க பக்கத்துல உங்க பொண்டாட்டியா உட்கார வச்சிருக்கீங்க இத ன்ஆ எப்படி சொல்லுறதுன்னு தெரியல.. நா எப்போ செஞ்ச புண்ணியமோ நீங்க எனக்கு ஹஸ்பண்டா வந்திருக்கீங்க.. என் வாழ்க்கைல எனக்கு வரமா கிடச்ச காதல் சீனு நீங்க.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச்..।। ஐ லவ் யூ சோ மச் சீனுன்ணூ சொல்லிக்கிட்டு மறுபடியும் அவன டைட்டா hug பண்ணவ அவன் மாடி மேல எரி உக்காந்துட்டு தீரா காதலோட அவன் முகமெங்கும் முத்த மல பொலிஞ்சா ரதி கொடுத்த இந்த ஃபர்ஸ்ட் கிஸ்ஸஸ் அண்ட் அவன் இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு எதிர்பார்த்து காத்துகிட்டிருந்த அந்த இ லவ் யு ன்ற வார்த்த இத எல்லாம் அனுபவிச்சதும்
என்ன சொல்றதுன்னு தெரியாம அவன் நெத்தியில இருந்து கன்னம் காது கழித்து மார்பு வயிறு அப்படின்னு உள்ளங்கால் வரைக்கும் முத்த மலைய ஒரு இடம் கூட விடாம பதிச்சுக்கிட்டே இருந்தான்..
ரதியும் அவனுக்கு வாகா அவனுடைய சில்மிஷங்கள் எல்லாத்துக்கும் அனுமதி கொடுத்துக்கிட்டு இருக்க ரெண்டு பெரும் ஒன்னோட ஒன்னு காலந்தாங்க
ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தங்களோட தீரா காதல காமம் கலந்த முத்ததோட அள்ளி தெளிச்சு அவங்களுக்குள்ள இருந்த அழகான காதல ரசிக்க ஆரம்பிச்சாங்க
ஓய் ரதி உண்மையாவே நீ பேருக்கு ஏத்த மாதிரி அவ்வளவு அழகுடி செல்லம் மாமா உன்னை எடுத்துக்காட்டான்ணூ அவன் கேக்க
வெக்கத்துல அவளோட முகம் சிவந்திருந்ததை பார்த்தவனுடைய கண்கள்லயும் மனசுலையும் அப்படி ஒரு சந்தோஷம்
அவளே பர்மிஷன் கொடுத்ததுக்கு அப்புறமா காத்திருக்க வேண்டிய அவசியம் என்னடான்ணூ இத்தனை நாளா தனக்குல அடக்கி வச்சிருந்த காதல தன்னோட கை வித்தைகள் மூலமாவும் செயல்கள் மூலமாவும் அவகிட்ட காட்ட ஆரம்பிச்சான்..
ஜன்னல் வழியா வெளிச்சம் கொடுத்த அழகிய நிலவும் நட்ச்சத்திரமும் இவங்க காதல் விலயாட்ட பாத்து வெட்கபட்டு மேகத்துக்குள்ள ஓடி மரஞ்சுகிடுச்சு..
இப்படி ஒரு அழகான ரம்மியமான இரவு பொழுதில் அழகான காதல் அத்தியாயம் அவர்கள் வாழ்வில் மலர்ந்தது…
காதல்ன்ணா பாத்தது ப்ரபோஸ் பண்ணி ஃபாலோ பண்ணி அதுல இண்டரெஸ்ட் இல்லாதவங்கள டார்ச்சர் பண்ணி அவங்க லைப spoil பண்ணி உங்க வீட்ல இருக்கவங்க மனசயும் அவங்க வீட்ல இருக்கவங்க மனசயும் கஷ்டபடுத்துராது கிடயாது..
நம்ம சீனு மாதிரி கூட நீட்டா செம்மையா சூப்பரா லவ் பண்ணி லைப்ல சக்ஸஸ் ஆகி மனசுக்கு பிடிச்சவங்கள கல்யாணம் பன்னிக்கலாம்.. Just try it… ur life will be superb … stay tune with lovely mind…
By மின்மினி