அத்தியாயம் 9
விக்ரம் அமைதியாக இருப்பதை பார்த்த மதிக்கு எரிச்சல் வந்தது. அவன் விக்ரமின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தான். அஞ்சலியின் வீட்டு வாசல் முன்பு வந்து நின்று, “அஞ்சலி!” என்று கூப்பிட்டான். வீட்டுக்குள் குழப்பத்தோடு நின்றிருந்த அஞ்சலி, மெதுவாக வெளியே வந்தாள்.
“அஞ்சலி உன் கிட்ட இப்படி பேசுறதுக்கு நீ என்னை மன்னிச்சுக்கோ.விக்ரம் உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவர் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நடந்துக்கிட்டாரு. ஒரு பொண்ணுக்கு இப்படி நடந்துருச்சேன்னு அவர் ரொம்பவே ஃபீல் ஆயிட்டாரு அதனால அவரை நீ எதுவும் தப்பா எடுத்துக்காத அது மட்டும் இல்லாம உனக்கும் அவனுக்கும் பொருத்தம் இல்லன்னு உனக்கே தெரியும். உன்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது. உனக்கு ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லு நாங்க ரெண்டு பேரும் செய்கிறோம். நீ என்ன படிச்சிருக்கேன்னு சொல்லு.
படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாச்சும் வேலையோ இல்ல சொந்தமா ஏதாவது பிசினஸ்சோ நாங்க அரேஞ்ச் பண்ணி தரோம், இந்த ஊர்ல நீ இருக்க வேண்டாம். நீ பக்கத்துல இருக்குற டவுன்ல போய் தங்கிக்கோ. இல்லாட்டி என்கூட வா நான் உன்னை நல்ல லேடிஸ் ஹாஸ்டல்ல பார்த்து சேர்த்து விடுறேன். உனக்கு எந்த மாதிரி உதவி வேண்டுமானாலும் ஒரு சகோதரனா இருந்து நான் உனக்கு செய்யறேன். அதை விட்டுட்டு விக்ரம் வாக்கு கொடுத்துட்டாரு அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ பிரச்சனை பண்ண கூடாது புரியுதா?!” என்று மதி கொஞ்சம் கராரான குரலில் அதே சமயம் சங்கடத்தோடும் பேசினான்.
அஞ்சலிக்கு மதி சொல்லும் எல்லா காரணங்களும் சரி என்று தான் தோன்றியது. அவள் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் விக்ரமின் முகத்தை கூர்ந்து பார்த்த படி இருந்தாள். “நீங்க சகோதரன் மாறின்னு சொன்னதுனால நானும் அப்படியே நினைச்சுகிட்டு ஒரு விஷயத்தை சொல்றேன். என்னால தொடர்ந்து இந்த ஊர்ல இருக்க முடியாது அப்படியே நான் இருந்தாலும் என்னுடைய குடிகார மாமனும் அந்த கந்து வட்டி காரனும் என்ன மானத்தோட வாழ விட மாட்டாங்க. அதனால நான் இந்த ஊரை விட்டு போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என் கையில சுத்தமா காசு இல்ல எனக்கு பக்கத்து ஊர்ல ஏதாவது ஒரு நல்ல வேலையோ இல்ல நீங்க தங்கி இருக்கிற ஊர்ல பாதுகாப்பான வேலையோ வாங்கி கொடுத்தா எனக்கு போதும். மேற்கொண்டு உங்களையோ இல்ல உங்களுடைய நண்பர் டாக்டர் விக்ரமயோ நான் தொல்லை பண்ண மாட்டேன்.” என்று அவள் உறுதி மொழி கொடுக்கவும் மதி மகிழ்ந்தான்.
“சூப்பர் மா நீ ரொம்ப புத்திசாலி பொண்ணு கண்டிப்பா உனக்கு நான் உதவி செய்கிறேன். நீ உன்னுடைய துணிமணி எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்பு நம்ப இன்னைக்கே சென்னைக்கு போலாம்.” என்று மதி சொல்லவும் விக்ரமிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
அஞ்சலி மெதுவாக தலையசைத்து விட்டு வீட்டிற்குள் போனாள். விக்ரம் இப்போது மதியின் கையைப் பற்றிக் கொண்டு, “வாடா!” என்று இழுத்துக் கொண்டு நடந்தான்.
“என்ன டா என்ன உனக்கு பிரச்சனை?” என்று விக்ரம் அவன் கையை உதறிவிட்டு கத்தினான்.
“நீ பண்ணது எனக்கு சுத்தமா பிடிக்கல நீ ஏன் அந்த மாதிரி சொன்ன?” என்று விக்ரம் எரிச்சல் பட்டான்.
“நீ பைத்தியக்காரன் மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருப்ப நான் கைய கட்டி வேடிக்கை பார்க்கணுமா?
இதெல்லாம் நல்லா இல்ல விக்ரம் நான் வந்தனாவுக்கு போன் பண்ணி நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிடுற” என்று மதி மிரட்டினான்.
“டேய் முட்டாள் தனமா எதுவும் பண்ணாதே!” என்று விக்ரம் அவன் கையில் இருந்த செல்போனை பறிக்க முன்றான். ஆனால், மதி தன்னுடைய செல்போன் வைத்திருந்த கையை பின்னால் மறைத்துக் கொண்டு, “ஓ நான் பண்றதுக்கு பேரு முட்டாள் தனம்மா அப்ப நீ பண்றதுக்கு பேரு புத்திசாலித்தனமா? நல்லா இருக்குடா ரொம்ப நல்லா இருக்கு.” என்று நக்கலடித்தான்.
“டேய் நீ பேசுறது எனக்கு பிடிக்கலடா பாவம் டா அஞ்சலி”
“வாய முடுடா பாவம் ..னா சாப்பாடு போடலாம். வேலை வாங்கி குடுக்கலாம். ஆனா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கறன்னு சொல்ற?
அந்த பொண்ண இவ்வளவு சீக்கிரம் ஒகோ சொல்லும்னு எதிர்பார்க்கவே இல்ல அந்த பொண்ணே பெரிய மனசு பண்ணி ஒத்துக்குச்சி. நீ எதுக்கு இப்ப புதுசா மறுபடியும் குட்டைய குழப்பிக்கிட்டு இருக்க. அமைதியா இரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அவளுக்கு நான் பொறுப்பு. ஒரு அண்ணனா அவளுக்கு நான் வாக்கு கொடுத்த படி அவ நல்ல லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து அவ படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு வேலை வாங்கி தரேன். கொஞ்ச நாள் போகட்டும். அவளை ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல்ல சேர்த்து விடுவோம். அப்படி இல்லன்னா ஏதாவது ஒரு நல்ல பையனா கிடைக்கறானான்னு பார்க்கலாம். அவளுடைய தகுதிக்கு ஏத்த மாதிரி கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம்” என்று மதியின் மிக நிதானத்தோடு மீண்டும் தன் எண்ணத்தை விக்ரமிடம் பதிய வைக்க முயன்றான்.
மதி என்ன பேசினாலும் அது விக்ரமின் மனதிற்குள் பதியவில்லை. அவன் அஞ்சலி தனக்கானவள் என்று நினைத்தான். அதற்கு காரணம் ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை. விக்ரமின் வாய் ஏதோ சொல்ல துடித்தது. ஆனால், மனமோ வாயை அடக்கி, ‘டேய் முட்டாள்! அஞ்சலி இங்கிருந்து உன் கூட்டிட்டு போலாம்னு சொன்னா இவன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான் இவன் சொல்ற பிளான் படியே போவோம். அஞ்சலி மனசுல என்ன இருக்குங்குறத முழுசா நம்மளே நேர்ல போய் பேசி தெரிஞ்சி கிட்டு அதுக்கப்புறம் முடிவெடுப்போம்.’ என்று அவனுக்கு உபதேசம் செய்யவும் அவன் அடங்கிப் போனான். அவன் மனம் அஞ்சலியின் பெயரை மந்திரம் போல் உச்சரித்தப்படி இருந்தது. அவன், அவளுடம் மனதிற்க்கு கை கோர்த்து நடக்க ஆரம்பித்திருந்தான்.
To be continued….
By மகிழம் பூ