அத்தியாயம்- 6
முரளிதரன் கோபத்தோடு விக்ரம் பக்கத்தில் போனார்.
“விக்ரம் என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்று மெதுவான குரலில் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டார்.
“ஒன்னும் இல்ல டாக்டர் மைண்ட் என்னவோ டிஸ்டர்பா இருக்கு!” என்று தயக்கமான குரலில் விக்ரம் பேசவும் முரளிதரனுக்கு என்னவோ போல் இருந்தது.
“உனக்கு என்ன பிரச்சனை?”
“பிரச்சினனு ஒன்னும் இல்ல.”
“அப்புறம் எதுக்கு டிஸ்டர்பா இருக்குன்னு சொன்ன?” என்று முரளி கேட்டார்.
“இல்ல அது வந்து?!” என்று அவன் தயங்கினான்.
“என்ன விக்ரம் நான் என்ன உனக்கு சீனியர் டாக்டர் மட்டும் தானா அதையும் தாண்டி உன்ன நான் ஒரு பிரதரா தானே பார்க்கிறேன் எதுவா இருந்தாலும் சொல்லு?” என்று அவர் அழுத்தி கேட்டார்.
“அது அது ஒன்னும் இல்ல டாக்டர் அந்த பொண்ணு அஞ்சலியுடைய அம்மா செத்து போயிட்டாங்க அவ இப்போ ஆதரவு இல்லாம நிக்கிறது எனக்கு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு. அவளுக்கு எதாவது செய்யனம் போல இருக்கு.
அவளுக்கு இப்போ என்ன பிரச்சனை?
அவ நல்லா இருக்காளா? இல்ல அவ கிட்ட யாராவது கஸ்டப்படு த்தறாங்களான்னு தெரிஞ்சுக்கணும்னு என் மனசு ஏதோ துடிக்குது.”
“என்ன விக்ரம் இப்படியெல்லாம் பேசுற நீ இந்த மாதிரி பேசக்கூடிய ஆள் கிடையாது.”
“இல்ல சீனியர் என்னால் வேலையில்ல கான்சன்ட்ரேட் பண்ணவே முடியல அந்த பொண்ணு நினைப்பாவே இருக்கு.
அவளுக்கு திருப்பி ஏதோ பிரச்சனைன்னுயும் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. நான் அவளை போய் ஒரு தடவ பார்த்துட்டு வந்துடவா இஃப் யூ டோன்ட் மைண்ட், பக்கத்துல யார் கிட்டயாவது வண்டி கடன் வாங்கி கொடுக்க முடியுமா?” என்று விக்ரம் தன் மனதில் இருந்ததை அப்படியே அவரிடம் சொன்னான்.
“விக்ரம் நீ ஒரு ஓட்டு தப்புனு எனக்கு தோணுதுபா அவளுக்கு ஏதோ பரிதாபப்பட்டு காசு கொடுத்து ஹெல்ப் பண்ண. அவருடைய நடத்திய தப்பா பேசன அந்த கடன்காரனையும் அவளுடைய தாய் மாமனையும் போட்டு மிதிச்ச. அதெல்லாம் கரெக்டு தான் அதோட நிறுத்திக்கோ அதுக்கப்புறம் அந்த பொண்ணு தேடி போறது. அவ எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் நினைக்கிறது எல்லாம் உனக்கு நல்லது இல்ல.” என்று கோவமாக சொன்னார்.
“இல்ல டாக்டர் நீங்க சொல்றது எல்லாமே எனக்கு புரியுது. ஆனா மனசு ஏதோ தவிப்பா இருக்கு. அவளை ஒரே ஒரு தடவை போய் நான் பார்த்துட்டு அவளுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா?!”
“விக்ரம் மனச கொஞ்சம் காமா வச்சுக்கோ நாம இங்க வந்தது மெடிக்கல் கேம்ப் பண்றதுக்கு மட்டும் தான் அந்த பொண்ணு மாதிரி ஊர்ல 1000 பொண்ணுங்க இருப்பாங்க. ஏன் சென்னையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையா? இல்ல நம்மளுடைய மெடிக்கல் காலேஜ்ல படிக்கிற படிச்ச பொண்ணுங்களுக்கெல்லாம் பிரச்சனை இல்லையா?
எல்லாருக்கும் பிரச்சனை இருக்குப்பா அவங்க அவங்க பிரச்சனையை அவங்க அவங்க தான். தீர்த்துக்கணும் அதையும் தாண்டி முடியலன்னா அவங்களுடைய க்ளோஸ் சர்க்கிள்ல இருக்கிற யாராவது ஒருத்தர் ஹெல்ப் பண்ணிட்டு போவாங்க உனக்கு இது தேவை இல்ல.
நீ ஊர விட்டு ஊரு வந்து இருக்க வந்த வேலையை மட்டும் பாரு.” என்று அவர் தன்னுடைய ஜூனியர் ஆன விக்ரமிற்கு ஒரு சகோதரன் ஸ்னத்தில் இருந்து அறிவுரை கூறுவதாக நினைத்து சொன்னார். ஆனால், அது எதுவுமே விக்ரமின் மண்டைக்குள் போகவே இல்லை.”சார் ப்ளீஸ்!”என்று அவன் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கவும் முரளிதரனால் அதற்கு மேல் மறுத்து சொல்ல முடியவில்லை. “மணி!” என்று சற்று தொலைவில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஆளை பெயர் சொல்லி கத்தி அழைத்தார். மணியும் அவசரமாக அவர் பக்கத்தில் ஓடி வந்தான்.
“நம்ம டாக்டர் விக்ரமுக்கு வண்டி வேணுமாம் உன்கிட்ட ஏதாவது வண்டி இருக்கா இல்ல நீயே ஊருக்குள்ள கூட்டிட்டு போய் அவரை அவர் சொல்ற இடத்துல விட்டுட்டு வரியா?”
“நானே விட்டுட்டு, வேலை முடிஞ்சதும் இருந்து கூட்டிட்டு வரேன்.” என்று காலை முதல் மாலை வரை கிராமத்து மக்களை ஒழுங்கு செய்து களைத்துப் போயிருந்த, மணி சொன்னான்.
அவனுக்கு அந்த வேலையில் இருந்து தப்பித்து கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியதன் காரணமாகத்தான் ஒப்புக்கொண்டான்.
விக்ரம், முரளிதரனுக்கு நன்றி தெரிவித்து விட்டு மணியோடு அஞ்சலி வீட்டிற்கு கிளம்பினான். போகிற வழியில் அவன், அஞ்சலி பற்றி மணியிடம் எதுவும் பேசவில்லை. விக்ரம், அஞ்சலி வீட்டுக்கு தான் போகிறான் என்று தெரிந்தும் மணியும் எதுவும் சொல்லவில்லை.
இருவருமே பாராங்கல்லை விழுங்கியது போல் அமைதியாக இருந்தனர். அஞ்சலி வீட்டு முன்பு வண்டி நிற்கும் பொழுது அங்கு ஒரு கூட்டம் கூடி இருப்பதை பார்த்து விக்ரம்க்கு என்னவோ பயம் தோன்றியது. அவன் அந்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழையவும் அவனைத் தொடர்ந்து மணியும் நுழைந்தான்.
அங்கு குடிகார தாய் மாமன் அஞ்சலியின் கையைப் பிடித்து இழுத்து, “என்னடி கண்ணகி மாதிரி சீன் போடுற நீ ஊர் பெயர் தெரியாத அந்த டாக்டர் கூட இருப்ப என்கூட இருக்க மாட்டியா?
வாடி வா! உனக்கு என்ன மஞ்ச கயிறு தானே வேணும் இப்பவே மாரியம்மன் கோயில வச்சு தாலிய கட்டுற இன்னிக்கு ராத்திரியே நம்ப குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறோம்.” என்று நிறைய குடித்து விட்டு போதையில் தன்னிலை மறந்து அவளிடம் தகராறு செய்து கொண்டு இருந்தான்.
அதைப் பார்த்த விக்ரமுக்கு ஏனோ கோபமும் எரிச்சலும் அதிகமானது. அவன் பக்கத்தில் கிடந்த ஒரு தடியால் அந்த குடிகாரனின் தலையில் ஓங்கி அடித்தான். அதை சற்றும் எதிர்பாராத அந்த குடிகாரன் தட்டு தடுமாறி அஞ்சலியின் காலில் விழுந்தான். அவனை காய்ந்த மலத்தை அருவருப்போடு பார்ப்பது போல அஞ்சலி பார்த்தாள்.
“ஏ..னாடி ஆள் வச்சி அடிக்குறயா?” என்று அஞ்சலியின் குடிகார மாமன்னான காட்டமுத்து கத்தினான்.
தடுமாறி எழுந்து நின்று அவிழ்ந்த தன் வேட்டியை சரி செய்ய முனைந்து தேற்று போய் மீண்டு கிழே விழுந்தான்.
To be continued….
By மகிழம் பூ