அத்தியாயம் 4
கோபமான விக்ரம் அந்த புல்லட்காரனை பார்த்து, “டேய் நீ எல்லாம் ஒரு மனுஷனா?” என்று கத்த ஆரம்பித்தான்.விக்ரமின் குரல் கேட்டு அந்த புல்லட் காரன், விக்ரம் பக்கம் திரும்பினான்.
“இது யாரு டா புது ஹீரோ” என்று விக்ரமைப் பார்த்து நக்கலாக கேட்டுவிட்டு, “என்ன பாப்பா புதுசா செட்டப் பண்ணி இருக்கியா? ஆள் பார்க்க படிச்சவன் மாதிரி இருக்கா டாக்டரா! அது சரி உனக்கு வயசு இருக்கு அய்யாவுக்கு பணம் இருக்கு” என்று திமிரோடு அஞ்சலியிடம் சொல்லிவிட்டு,” நீ ஊருக்கு வந்து ரெண்டு நாள் கூட முழுசா ஆகல அதுக்குள்ளே நீ செட்டப் பண்ணிட்டியா? நீ கில்லாடி தான். ஆனா இவ கண்ணகி பரம்பர பேல பேசுவளே உன் கிட்ட மட்டும் எப்பிடி?” என்று விக்ரமிடம் கேலியாக கேட்டான்.
அவனுடைய அநாகரிகமான பேச்சையும் செயலையும் பார்த்த விக்ரமால் இனி பொறுக்க முடியாது என்று அவருடைய சட்டியை பிடித்து நான்கு காரை விட்டு அவனை கீழே தள்ளி அவருடைய நெஞ்சின் மீது தன்னுடைய வலது காலை வைத்து மிதித்தான். சுற்றி நின்றிருந்த கூட்டம் இந்த காட்சியை பார்த்து விட்டு மிரண்டு விட்டது.
அஞ்சலிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று எதுவுமே புரியவில்லை இதனால் வரை அவளும் அவளுடைய அம்மாவும் தனியாகவே நின்று தங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து சோர்ந்து போயிருந்தனர்.
அஞ்சலி தனக்கிருந்த ஒரே துணையான அம்மாவையும் இழந்துவிட்ட நிலையில் இனி இந்த ஊரில் எப்படி வாழ போகிறோம் தன்னை கழுகாக கொத்தி திங்க காத்திருக்கும் இந்த கூட்டத்திடமிருந்து தன்னை எப்படி காப்பாற்றிக் கொண்டு மானம் மரியாதையோடு வாழ போகிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டு நின்று சமயம் விக்ரம் தானாகவே வழிய முன்வந்து அவளுக்கு நடக்கும் அந்த அநியாயத்தை தட்டி கேட்பதை அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்கவும் முடியவில்லை. விக்ரம் அவளுக்கு செய்த செய்து கொண்டிருக்கும் இந்த உதவியை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவளுக்கு புரியவில்லை.
“சார் டாக்டர் சார்!” என்று முதல் முறையாக அவனை மரியாதையோடு அழைத்த அஞ்சலி அவனுடைய தோளை பற்றி இழுத்து, “சார் அவன் ஒரு பொறுக்கி சார் அவன்கிட்ட எல்லாம் எதுக்கு சார் நீங்க போய் சண்டை போட்டுக்கிட்டு உங்களுடைய தகுதிக்கு இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் நீங்க நின்னு கூட பேசக்கூடாது சார். நீங்க போங்க சார் உங்க வேலைய பாருங்க. இந்த பொறுக்கிங்களோட மல்லிகட்டணும்னு எனக்கு தான் தலையில எழுதி இருக்கு.” என்று அவள் தலையில் அடித்துக் கொண்டு அம்மாவின் மீது விழுந்து அழ ஆரம்பித்தாள். கீழே விழுந்து கிடந்த அந்த புல்லட் காரன் வேகமாக எழ முயன்றான். ஆனால், அவனால் எழுந்திருக்க முடியவில்லை.
அவன் மெதுவாக எழுந்து உட்கார்ந்து, அஞ்சலியை பார்த்து, “என்னடி இவன பர்மனெண்டா செட்டப் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டியா?
டாக்டர் நல்லா சம்பாதிக்கிறான். இவனோட டவுன்ல போய் செட்டில் ஆயிட்டான்னு பிளான் போட்டு வச்சிருக்கியா?
நீ என்ன வேணா பண்ணிக்கோ டி ஆனா உங்க ஆத்தா காரி என்கிட்ட வாங்குன ₹20,000 கடனை எண்ணி வச்சிட்டு எங்க வேணா எவன் கூட வேணா ஓடிப் போடி.” என்றான்.
“ஏ..ய் கொஞ்சம் நாக்க அடக்கி பேசு” என்று அஞ்சலி கத்தினாள்.
“என்ன டி என்ன காச குடுக்க வக்குல்ல ஆனா வாய் மட்டும் நல்ல பேசுற”
“ஏ..ய் உனக்கு என்ன காசு தானே வேணும் எனக்கு கொஞ்சம் டயம் குடு. நான் உழைச்சி சம்பாதிச்சி குடுத்துடுற” என்று அஞ்சலி கண்ணீருடன் சொன்னாள்.
“என் காச மட்டும் ஏமாத்தலாம்னு திட்டம் போட்ட நீ எங்க இருந்தாலும் தேடி வந்து உன்னையும் இந்த டாக்டரையும் சேர்த்து வெட்டுவேன்.” என்று அவன் பேசவும் அஞ்சலிக்கு மேலும் அழுகை பிரிக் கொண்டு வந்தது. அவள் வேதனை அதிகமாகி தன் அம்மா மீது விழுந்து அழு ஆரப்பித்தாள். விக்ரம்க்கு அந்த புல்லட் காரனின் பேச்சு அருவருப்பாக இருந்தது.
“டேய் நாக்க கொஞ்சம் அடக்கி பேசுடா யாரை பத்தி பேசிட்டு இருக்க? ” இன்று விக்ரம் சூடாகவும் அந்த புல்லட் காரனுக்கு விக்ரமை திருப்பி அடிக்க நல்ல வழி கிடைத்தது .
“உன்ன பத்தி தான்டா பேசிக்கிட்டு இருக்கேன் டாக்டர்ங்கற பேருல்ல ஊர் ஊரா போய் பொண்ணுங்களோட?” என்று புல்லட் காரன் வார்த்தையை முடிப்பதற்கு உள்ளாகவே விக்ரம் மீண்டும் அவனைக் கீழே தள்ளி அவனுடைய கழுத்தில் தன் காலை வைத்து மிதிக்க ஆரம்பித்தான்.
அங்கு நடக்கும் ரகளையை பார்த்து அஞ்சலி, “ஐயோ கடவுளே எனக்குன்னு பேச இந்த ஊர்ல ஒருத்தர் கூட இல்ல, இந்த வெளியூர்க்காரர் ஆனா இந்த டாக்டர் ஏதோ எனக்காக சப்போர்ட் பண்ணி ரெண்டு வார்த்தை பேசிட்டாரு ஆனா அதையும் பொறுக்காமல் நீ ஏன் தான் இப்படி பிரச்சினை பன்றியோ தெரியல உனக்கு காசு தானே வேணும் நான் எப்படியாவது உழைச்சி சம்பாதிச்சு கொஞ்சம் கொஞ்சமா உனக்கு குடுத்துடுறேன் இப்போதைக்கு பிரச்சனை பண்ணாம இங்கிருந்து போயிடு!” என்று அவனை பார்த்து சொல்லிவிட்டு, விக்ரமின் காலை அவனுடைய கழுத்தில் இருந்து போராடி எடுத்து விட்டாள். “ஏய் நீ விடு இவன்லாம் உயிரோடவே இருக்க கூடாது.” என்று விக்ரம் திமிரினான்.
“இல்ல டாக்டர் அந்த ஆள் கிட்ட எங்க அம்மா கடன் வாங்கினது உண்மைதான் அதையே சாக்கா வச்சுக்கிட்டு இவன் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்கான் எங்க அம்மா கிட்டேயும் என்கிட்டயும் நல்லா வாங்கியும் கட்டிக்கிட்டு இருக்கான்.
அதை மனசுல வச்சிட்டு தான் இவன் இப்படி பேசுறான்.
இப்போ எங்க அம்மா செத்து போயிடுச்சு எங்க அம்மாவ அடக்கம் பண்ண கூட என் கையில காசு இல்ல ஆனா இந்த சூழ்நிலையில் இப்படி எல்லாம் இவங்க ரெண்டு பேரும் நடந்துக்குறாங்களே எல்லாம் என் தலையெழுத்து.” என்று அஞ்சலி நடப்பதை எல்லாம் நின்று போதையில் தள்ளாடியப்படி வேடிக்கைப் பார்த்தபடி இருந்த தன்னுடைய மாமாவையும் அந்த புல்லட் காரனையும் ஒருமுறை முறைத்து விட்டு அழுதாள்.
விக்ரம் இப்பொழுது அவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு டாக்டர் முரளிதரனை தேடி போனான்.முரளிதரன் தள்ளி நின்ற அங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தன்னை பார்த்து திடீரென்று விக்ரம் வருவதை கவனித்ததும், அவருக்குள் ஒரு பதட்டம் தோன்றியது. விக்ரம் அவர் பக்கத்தில் வந்ததும் “விக்ரம் உனக்கு எதுக்குப்பா இந்த ஊர் பிரச்சனை எல்லாம் நம்ம இன்னும் ஒரு ரெண்டு நாள்ல இந்த மெடிக்கல் கேப்ப முடிச்சுட்டு கிளம்பிடுவோம் அதனால நீ அந்த பிரச்சனையில் எல்லாம் தலையிடாதே!” என்று கிசுகிசுப்பான குரலில் அவனுக்கு உபதேசம் செய்தார்.
“சார் நீங்க சொல்றது எல்லாமே கரெக்டு தான் ஆனா நான் அவன அடிச்சிட்டேன் இது பெரிய பிரச்சனையா ஆய்டுமோன்னு எனக்கு தோணுது அதனால?”
“அதனால என்ன விக்ரம் நடந்தது நடந்து போச்சு நீ அமைதியா விட்டுடு.”
“இல்ல சீனியர் அந்த மாதிரி விட எனக்கு மனசு வரல அந்த பொண்ணு வேற பாவம் நிற்பதியா நிக்குற அதனால?”
“அதனால என்ன பண்ண போற?”
“இந்த கேப்ல நான் ஒர்க் பண்ணா நீங்க எனக்கு என்ன பேமெண்ட் கொடுக்குறதா சொன்னீங்க?” என்று விக்ரம் கேட்கவும் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
“சொல்லுங்க டாக்டர் எனக்கு என்ன பணம் கொடுப்பீங்க?” என்று மீண்டும் விக்ரம் அழுத்தத்தோடு கேட்கவும் முரளிதரன்,’இவன் என்ன செய்ய போறான்.’ என்று குழப்பினார்.
To be continued….
By மகிழம் பூ