இந்த கதை முழுக்க முழுக்க என் கற்பனையால் உருவாக்க படுவதே..
கதை களத்திற்கு ஏற்ப லாஜிக்குகள் உருவாக்க பட்டிருக்கும் ..
இந்த ஸ்டோரி ஃபுல்லா horror love suspense thriller ன்னு எல்லாம்மே பயங்கரமா மிங்கில் ஆகிதா இருக்க போகுது.
so jollyaa படிச்சு இந்த suspense thriller and horror love storya செம்மையா என்ஜாய் பண்ணுங்க…
என்னால முடிஞ்ச அளவுக்கு horror and love combovaa even ஆ mingle பண்ணி கொடுத்து உங்கள entertain panna try pandren….
பிழைகள், குறைகள் இருந்தால் மன்னித்து ஏற்று கொள்ளவும்.. முடிஞ்சளவு இந்த கதையை செம்ம விருவிருப்பா interesting ஆ செம்ம பெஸ்ட்டா சூப்பரா கொடுக்க try பண்றேன்.. சப்போட் பண்ணுங்க செல்ல குட்டீஸ்… *********************************
One shot – the strange love
அப்பதான் பயங்கரமான ராட்சஸ மழை பெஞ்சு ஒன்ஜிருந்த ராத்திரி நேரம்…
மின் மினி பூச்சி அங்கயும் இங்கேயும் மாறி மாறி மூஞ்சில பட்டு பறந்து திடீர்னு கானாமா போக வண்டும் தவளையும் கிர் கிர்ருண்ணு கத்துற சத்தம் காடு மொத்தமும் எதிரொலிச்சு அந்த இடத்தையே மிரள வைக்குது .
எச்சி கூட முழுங்க முடியாத அளவுக்கு உடம்பெல்லாம் பயங்கரமா நடுங்கி பல்லெல்லாம் கிடு கிடுண்ணு ஆடுற அளவுக்கு ஜில்லுன்னு வாட காத்து அடிச்சிட்டு இருக்கு..
இருந்தாலும் கஷ்டபட்டு தன்னோட ரெண்டு கையையும் பர பரண்ணு சூடு பறக்க தேச்சு ரெண்டு கண்ணத்துளையும் வச்ச அந்த ஆளு தன்னோட முதுகுக்கு பின்னால இருக்க துணி மூட்ட பையில இருந்து ஒரு நீளமான கம்பளி போர்வய்ய எடுத்து போத்திகிட்டு தன் காலுக்கு கீழ வச்சிருந்த பெட்டர்மாக்ஸ் லைட்ட எடுத்துகிட்டு முன்னாடி ரெண்டு அடி எடுத்து வைக்க திடீர்னு எதோ ஒரு பூச்சி கன்னத்தை கீரி விட்டு கண்ண உரசி எரிச்சல கிளப்பி விட்டு போக அந்த ஆளு கன்ன தேச்சுகிட்டே தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கிறாரு..
இத்தன நேரம் வண்டும் தவளையும் மட்டும் கத்திடிருந்த அந்த காட்டுக்குள்ள திடீர்னு ஓநாய் ஊலையிடுற சத்தமும் பயங்கரமா கேக்க ஆரம்பிக்குது..
இவ்வளவு நேரமா எந்த பயமும் இல்லாம தா எடுக்க வந்த பொருள எப்படியாச்சும் கண்டிப்பா எடுத்துட்டு போகணும்னு பிடிவாதமா நடந்திட்டு இருந்த அந்த ஆளுக்கு இந்த ஒனாயோட ஊளையிடுற சத்தம் ஒரு மாதிரி லைட்டா பயத்த வர வைக்குது..
அப்பண்ணு பாத்து சூறாவளி காத்து பயங்கரமா அடிக்குது கொஞ்ச நேரத்துலேயே
இடியும் மின்னலும் பயங்கரமா அடிக்க அந்த சூறாவளி காத்துல கையில இருந்த பெட்டார்மாக்ஸ் லைட்டு அனஞ்சு போகுது
“என்ன இது இந்த லைட்டு நேரம் கெட்ட நேரத்துலதா அனஞ்சு போகணுமா? ஏற்கனவே அடிக்கிற வாட காத்துல குளிரு என்ன நடக்க விடாம பண்ணுது.. இப்போ இந்த லைட்டு வேற.. பத்தா குறைக்கு இந்த ஓநாயி ஊளையிடுற சத்தம் வேற அடி வயித்துல புளிய கரைக்குது.. இப்பவே இப்படின்னா இன்னும் நா எவ்வளவு தூரம் போக வேண்டி இருக்கு??? ஹம்கும் என்ன ஆனாலும் சரி இன்னிக்கு அத எடுக்காம நா இந்த காட்ட விட்டு போக கூடாது.. எனக்கு அது வேணும்.. ” அப்படீன்னு தனக்கு தானே பேசிக்கிட்ட அந்த ஆளு தன்னோட பையில இருந்த தீப்பெட்டிய எடுத்து பொறுத்த தீ குச்சி எரிஞ்ச பாடே இல்ல
அடிக்கிற அந்த பயங்கரமான காத்துக்கு அது அனஞ்சு போய்க்கிட்டே இருக்கு..
” அட இந்த காத்து கொஞ்ச நேரம் நின்னாதான் என்னாவாம்.. தீக்குச்சி சுத்தமா பத்தவே மாட்டேங்குதே அமஞ்சி போய்ட்டே இருக்குதே.. ஹம்ம்ம் எல்லாம் என் நேரம்..” அப்படீன்னு சொல்லிட்டே எரிச்சலா மண்டய சொரிஞ்ச அந்த ஆளு தன்னொட துணி மூட்ட பைய காத்தடிக்கிற பக்கமா மறைவா வச்சு எப்படியோ கஸ்ட பட்டு தீகுச்சிய எரிய வச்சு அந்த லைட்ட பத்த வைக்கிராரு..
“அப்பாடா ஒரு வழியா விளக்க எரிய வச்சாச்ச்சு.. இனி நேரம் கடத்தாம சீக்கிரமா அங்க போகணும் ” அப்படீன்னு சொல்லிகிட்டே பைய எடுத்து தோல்ல மாட்டுணவரு லைட்ட எடுத்துகிட்டு எழுந்து நின்னு நடக்க திடீர்னு கழுத்துக்கு பின்னாடி எதோ ஒன்னு ஊருற மாதிரி தோணுது..
எதாவது பூச்சியா இருக்கும்ன்னு நெனச்சுக்கிட்டு தட்டிவிட்ட அந்த ஆளு தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கிறாரு
அப்போ இத்தனை நேரமா ஒரளவுக்கு கேட்டுக்கிட்டு இருந்த அந்த ஓநாயோட சத்தம் இன்னும் அதிகமா கேட்க ஆரம்பிக்குது..
ஒரு விதமான வாசனை அந்த இடம் முழுசும் பரவி இத்தனை நேரமா எந்த ஒரு தயக்கமும் இல்லாம நடந்துகிட்டு இருந்த அந்த ஆள லேசா தடுமாற வைக்கிது..
யாரோ அவருக்கு பின்னாடி நடந்து வர்றது மாதிரியே ஒரு நினைப்பு அவருக்குள்ள தோணுது
“என்ன நாம மட்டும்தான இந்த காட்டுக்குள்ள வந்தோம்.. ஆனா இப்ப எனக்கு பின்னாடி யாரோ வரது மாதிரியே தோணுது” அப்படின்னு நினைச்சுட்டு திரும்பி பார்க்க அவருக்கு பின்னாடி யாருமே இல்ல
ஆனா ஒரு கருப்பு பூனை மட்டும் அவர பார்த்தவாக்குல நிக்குது.. அது கண்ணு ரெண்டும் பளிங்கு கல்லு மாதிரி மின்ன அத பார்த்து லேசா மிரண்டு போன அந்த ஆளு மறுபடியும் தன்னைத்தானே தேத்திகிட்டு
” அட பூன இது சத்தத்தை கேட்டுதான் யாரோ பின்னாடி வராங்கன்னு நினைச்சுட்டேனா? அதான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு சொல்லுவாங்கலே அது சரியா தான் இருக்கு போ..
ராத்திரி நேரம் ஒத்தையா போறதுனால அது மட்டும் இல்லாம நான் கிளம்புரதுக்குகு முன்னாடி அங்க இருக்கவங்க எனக்கு சொல்லி அனுப்புன அந்த எச்சரிக்கைய எல்லாம் மனசுக்குள்ள போட்டு குழப்பிக்கொண்டு இருந்ததாலதான் எனக்கு என்னென்னமோ மனசுக்குள்ள தோனி என்ன நானே பயமுறுத்துகிறேன் முதல்ல என்னை நானே தைரியப்படுத்துகிறனும் ..இங்கே எதுவுமே இல்லை எல்லாரும் சொல்றதும் கட்டு கத…
யாருமே அந்த ஒரு விஷயத்தை அடையக் கூடாது அப்படின்றதுக்காக யாரோ கிளப்பி விட்ட புரளிதான்..
மத்தபடி இங்க எல்லாரும் சொல்லுற மாதிரி பயப்படறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல…
இந்த நடு ராத்திரியில நான் இவ்வளவு நேரமா ஒத்தையில இவ்வளவு தூரம் வந்து இருக்கேன் ஆனா இதுவரைக்கும் எனக்கு எதுவுமே ஆகல நான் நல்லாதான் இருக்கிறேன்
இதுலையே தெரிய வேணாம் நீங்க பயப்படற மாதிரி எதுவுமே இல்லைன்னு..
அதனால நான் கண்டதை நினைச்சு மனச போட்டு குழப்பிக்கிட்டு பயந்துட்டு இருக்காமா நிச்சயமா இன்னைக்கு நான் தேடி வந்த அந்த பொருளை எடுக்காம இந்த செங்கமல காட்டை விட்டு நான் போறதா இல்ல” அப்படின்னு தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கிட்ட அந்த ஆளு மறுபடியும் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கிறாரு…
ஆனாலும் அவருக்கு பின்னாடி மறுபடியும் சலசலன்னு ஒரு சத்தம் கேட்குது..
” எதுக்காக இந்த பூனை எனக்கு பின்னாடியே வருது? அதுக்கு என்னதான் வேணுமா?” அப்படின்னு சொல்லி திரும்பி பார்க்க அந்த இடத்தில் அப்போ தெரிஞ்சு அந்த கருப்பு பூனையை இப்ப காணோம்
” என்ன பூன அப்பாத என் பின்னாடிதானே வந்துட்டு இருந்துச்சு ஆனா இப்ப காணாம் ..அப்பறம் எதுக்கு எனக்கு பின்னாடி மறுபடியும் யாரோ நடக்கிற மாதிரி சலசலன்னு சத்தம் கேட்குது” அப்படின்னு அவர் நினைச்சுட்டு இருக்கும் போதே அந்த இடத்துல பயங்கரமா காத்தடிக்குது
“அதா இப்படி சூறாவளி காத்து பேய் மாதிரி அடிக்குதே இந்த காத்துக்கு இலை ஏதாவது பறந்து வந்திருக்கும்” அப்படின்னு மறுபடியும் தனக்குள்ள தைரியம் சொல்லிக்கிட்டவரு
” இதுக்கு மேல எந்த சத்தம் கேட்டாலும் அதை மண்டைக்குள்ள போட்டு குழப்பிக்க கூடாது நேரா நம்ம போக வேண்டிய இடத்துக்கு போய் ஆகணும்..நமக்கு நேரம் கொஞ்சம் கம்மியாதான் இதுக்கு மேல போச்சுன்னா நம்ம அந்த பொருளை எடுக்குறதுக்கான நேரம் தவறிடும்” அப்படின்னு நினைச்சவரு தனக்கு பின்னாடி வர எந்த ஒரு சத்தத்தயும் காதுல வாங்காம நடக்க ஆரம்பிக்கிறாரு
ஆனால் அவர் நடக்க நடக்க இதுக்கு முன்னாடி வந்து சத்தத்தை விட இன்னும் பயங்கரமான சத்தம் அங்கயும் இங்கேயும் கேக்க ஆரம்பிக்குது..
நேரம் ஆக ஆக அவருக்கு பின்னாடி யாரோ நடந்து வர சத்தம் பயங்கரமா கேக்க ஆரம்பிக்குது
இத்தனை நேரமா தூரத்தில் கேட்டுக்கிட்டிருந்த அந்த ஓநாயோட சத்தம் இப்ப அவருக்கு ரொம்ப பக்கத்துல கேட்குது
அவருக்கு லேசா பயத்தை வர வச்சாலும் அவரு மனசு தளரவிடாம தொடர்ந்து நடந்து போக மறுபடியும் அவர் கழுத்தில் ஏதோ ஊருர மாதிரி ஒரு உணர்வு
மறுபடியும் பூச்சியாதான் இருக்கும்ன்னு நெனச்சு அவர் தட்டிவிட பார்க்க அது பூச்சி இல்லை அவர் கழுத்து ஃபுல்லா தலைமுடியா இருக்கு..
இது என்ன இவ்வளவு தலைமுடி அப்படின்னு ஒரு முடிய இழுத்துப் பார்க்க அந்த முடி ரொம்ப நீளமாக போய்க்கிட்டே இருக்கு ..
அவரு கழுத்து வேற ரொம்ப பாரமாக ஆரம்பிக்குது யாரோ ஒருத்தவங்க கழுத்து மேல ஏறி உட்கார்ந்த மாதிரி ஒரு உணர்வு அவருக்குள்ள வருது
இவ்வளவு நேரமா ரொம்ப வேகமா நடந்துகிட்டு இருந்த அவருடைய அந்த நடை இப்போ கொஞ்சம் கொஞ்சமா கம்மியாக ஆரம்பிக்குது.
காரணம் அவர் கழுத்துக்கு மேலே இருந்த அந்த பாரம்தான்
“என்ன இது கழுத்தில் எவ்வளவு பாரமா இருக்கு ?” அப்படின்னு சொல்லிக்கிட்டே மேலே நிமிந்து பார்க்க அங்க ஒன்னுமே அவருக்கு தெரியல..
ஆனாலும் அந்த கழுத்தில் இருந்த பாரம் குறையவே இல்லை
அதனால தன்னோட கையால மேல தொட்டு பார்க்க அப்பயும் அவருக்கு ஒன்னும் தெரியல
ஆனா அவரோட கழுத்துல இருந்தா அந்த தலை முடிகலோட நீளம் மட்டும் இன்னும் அதிகமாகிக்கிட்டே இருக்கு..
” என்ன இது இவ்வளவு நீள தலைமுடி இது எங்க இருந்து வருது.. கழுத்துக்கு மேல பாரமா இருக்கு ஆனா ஒண்ணுமே இல்ல என்ன நடக்குது என்ன சுத்தி?” அப்படின்னு யோசிக்க யோசிக்க அவர் முகம் எல்லாம் பயத்துல வேர்க்க ஆரம்பிக்குது
கை கால் எல்லாம் இத்தனை நேரம் குளிர்ல நடுங்கியதை விட பயத்தில் ரொம்ப அதிகமாகவே நடுங்குது.எச்சி கூட முழுங்க முடியாத அளவுக்கு அவருக்குள்ள பயம் தொத்திக்குது
அப்போ ரொம்ப அதிகமா பயங்கரமான ஒரு காத்தடிக்க கீழ கிடந்த மண்ணெல்லாம் ஒன்னு சேர்ந்து அந்த இடத்துல புழுதிய கிளப்ப
அவர் கண்ணுக்குள்ள அந்த தூசி எல்லாம் பட்டு கண்ணெல்லாம் பயங்கரமா எரிய ஆரம்பிக்குது கண்ணு கூட அவரால் முழிக்கவே முடியல..
கண்ணை கசக்கி கிட்டே கஷ்டப்பட்டு அவர் கண்ணை திறந்து பார்க்க இத்தனை நேரமா எரிஞ்சுகிட்டு இருந்த அந்த பெட்டர்மாஸ் லைட் மறுபடியும் அனஞ்சு போகுது
“அட சே எதுக்காக இந்த லைட்டு இப்படி பொழுதுக்கும் அமர்ந்துகிட்டே இருக்குதுன்னு தெரியல?” அப்படின்னு சொல்லிக்கிட்டே அவர் மறுபடியும் தன்னுடைய துணி மூட்ட பையில இருக்க தீப்பெட்டிய எடுக்க போன சமயம்
அவரோட அந்த பைய யாரோ பிடிச்சு இழுத்தது மாதிரியான ஒரு உணர்வு
திடீர்னு அந்த பை தூர பறந்து போய் கீழ விழுது
அந்த இருட்டான காட்டுக்குள்ள பை எங்க போய் விழுந்துச்சுன்டு அவரால சுத்தமா கண்டுபிடிக்கவே முடியல
இருந்தாலும் கஷ்டப்பட்டு கை கால வச்சு தடவி தடவி அந்த பைய தேடி பாக்க அது கிடச்ச பாடே இல்ல
“எப்படி? இ… இ.. இத்… இது எப்படி நடந்துச்சு? என் கைல இருந்து பை எப்படி பறந்து போய் கீழே விழுந்துச்சு? எங்க போய் தொலைஞ்சுச்சுண்ணு தெரியலையே?? ஒரு வெளிச்சமும் தெரியல . இப்ப எப்படி நான் நடந்து போறது ?? என்ன பண்றது ?” அப்படின்னு நினைச்சுக்கிட்டு தனது கையால தரையை தடவி பார்க்க திடீர்னு ஏதோ கொலுசு போட்டு இருந்த ரெண்டு கால் அவர் கையில தட்டுப்படுது..
அந்தக் காலில் இருந்த ஈரப்பசை அவர் கை முழுவதும் ஒட்டிக்க அந்த பிசுபிசுப்புல இருந்து வந்த வாசனையை வச்சு அது ரத்தம்ன்னு அவரு கண்டுபிடிக்கிறாரு
“என்ன இது ரத்த கதற மாதிரி இருக்கு எப்படி இது? என்ன நடக்குது ?இங்க யாரோட காலு இது ?” அப்படின்னு நினைச்சவரோட மனசுக்குள்ள இப்போ பயம் தலை விரிச்சா ஆட ஆரம்பிக்குது..
அவரோட காதுல ஒரு பக்கம் ஓநாய் தன் பக்கத்தில் நின்னு கத்துற சத்தமும் இன்னொரு பக்கம் அந்த கருப்பு பூண பயங்கரமா மியாவ் மியாவ்ன்னூ கத்துற சத்தமும் கேட்க இத்தனை நேரமா தனக்கு முன்னாடி கிடந்த அந்த ரத்தக்கரையோட காலு எழுந்து நிண்ணு ஜல் ஜல்னு ஓட ஆரம்பிக்குது
தூரத்தில் எங்கேயோ விழுந்து கிடந்த துணி மூடிட்ட பை இப்போ அவர் முன்னாடி வந்து விழுது
” என்னதா நடக்குது இங்க?? எல்லாமே வித்தியாசமா இருக்கு ரொம்ப பயமா இருக்குது? எப்படி காணாம போன பை மறுபடியும் என்கிட்டே வந்து விழுகும்”னனு நினச்சு கிட்டே கைஎல்லாம் நடுங்குணவாக்குல வேகமா அதுக்குள்ள இருந்த தீப்பெட்டிய எடுத்து பத்த வைக்க அவருக்கு முன்னாடி வந்த காட்சியை பார்த்து மிரண்டு போறாரு
ஒரு உருவம் தல விரி கோலத்தோட தல கீழா அந்த ஆளு முன்னாடி தொங்கிட்டு இருக்குது… அதோட தலை முடி அந்த ஆளோட கழுத்த நெரிக்க ஆரம்பிக்குது..
அடுத்து என்ன நடக்க போது ?அவரோட உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமா? எதுக்காக இவர் இந்த செங்கமல காட்டுக்குள்ள வரணும்? அவர் தேடி வந்த அந்த பொருள் என்ன?
இது எல்லாத்தையும் நாம நாளைக்கு தெரிஞ்சுக்கலாம்….
Wait for the strange love…….
Plz comment about this episodes செல்ல குட்டீஸ்…
மின்மினி🦋
nice opening …