Ch 01 - வர்ணம் by மேகா

"நல்லா கேட்டுக்கோ ரிஷி இந்த stars எல்லாமே நிலா பக்கத்துல அதோட surroundings-ல மட்டும்தான் இருக்கணும் நிலாவுக்கும் stars-க்கும் நடுவுல அதிகமா gaps வேணாம்... நம்ம plan பண்ண theme நல்லா ஞாபகத்துல இருக்குதுல.. சொதப்பிடாதடா ப்ளீஸ்.." என்று ரிஷியிடம் கண்களில் கெஞ்சலோடு சொன்ன மேகா அடுத்து அவன் சொல்ல வரும் வார்த்தைகள் எதையும் கேட்கும் முன்பே அங்கிருந்து சிட்டாக பறந்தாள்...


"அம்மாடி மேகா நீ சொன்ன மாதிரியே எல்லா flowers-சயும் colour combination ஓட கரெக்ட்டா வச்சுட்டேன்.. ஒரு தடவை எல்லாம் கரெக்டா இருக்குதான்னு செக் பண்ணி பாரு.." என்று சொல்லிக் கொண்டே அவளை நோக்கி வந்தான் விஷ்வா...


"சூப்பர் விஷ்வா அண்ணா எல்லா colour combo -வும் சூப்பரா இருக்குது.. அது மட்டும் இல்லாம பார்க்கிறதுக்கு அது ரொம்பவே அழகா இருக்குது.. உங்கள மாதிரியே .." என்று புன்னகையுடன் சொன்னவள் விஷ்வா சொல்ல வரும் வார்த்தைகளையும் கேட்காமல் அங்கிருந்து சிட்டாக பறந்தாள்..


விஷ்வாவை நோக்கி வந்த ரிஷி
" என்ன விஷ்வா அண்ணா நீங்க சொல்ல வரதயும் கேட்காம உங்ககிட்டயும் டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டாளா அவ ..?" நக்கலாக கேட்டவாறு சிரித்துக்கொண்டே விஷ்வாவின் தோளில் கைகளை போட்டான் ..


மலுப்பலான பார்வையுடன் ரிஷியைப் பார்த்து சிரித்த விஷ்வா "ஆ..ஆ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.. மேகா ஏதோ அவசர வேலையில இருக்குது.. அதனாலதான் நான் சொல்றது அதுக்கு காதுல சரியா விழுகலைன்னு... நினைக்கிறேன்.." சமாளிக்க முயற்சி செய்தார்..

"அட போங்க விஷ்வா அண்ணா, என்கிட்டயே பொய் சொல்லலாம்னு பாக்குறீங்களா ? உங்கள மாதிரியேதான் நானும், அவகிட்ட சொல்ல வந்துட்டு பல்பு வாங்கி நின்னுகிட்டு இருக்கேன்... ஆனா இன்னைக்கு மட்டும் இத பத்தி நாம அவகிட்ட பேசல நம்ம ரெண்டு பேருடைய நிலைமையும் என்ன ஆகும்னு தெரியும்ல.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க .." என்று சொல்லி ரிஷி மேலாக வானத்தை அன்னார்ந்து பார்க்க விஷ்வாவும் அவன் கைநோக்கிய திசையில் பார்த்தார் ..

தங்களுக்குள் இருக்கும் விஷயத்தை இன்று மேகாவிடம் பேசவில்லை என்றால் நடக்கப் போகும் சம்பவத்தை நினைத்து பார்த்தவனுக்கு அடிவயிற்றில் புளியை கரைப்பது போன்று ஒரு பயம். பயத்துடனே தலையை உலுப்பிக்கொண்டு ரிஷியைப் பார்த்தார்...

"என்ன அண்ணா நடக்க போறது இப்பவே கண்ணு முன்னாடி ரீல் பெட்டி மாதிரி ஓடுதா ?" என்று கேட்டான் ரிஷி..

ஆமாம்.. என்பது போன்று பாவமாக தலையசைத்த விஷ்வா

"டேய் ரிஷி, இப்ப நாம என்னடா பண்றது? இந்த மேகா பிள்ள நாம என்ன பேச வரோம்னு தெரிஞ்சுக்கிட்டே தெரியாதது மாதிரி நம்ம கையில சிக்காம எஸ்கேப் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு .. ஆனா அந்த old iron lady மேகாகிட்ட இத பத்தி பேசாம வந்தா நாளைக்கு காலைல நம்ம ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டோம்னு மிரட்டி அனுப்பி வச்சிருக்கு .. இப்ப நாம என்ன ரிஷி பண்ணுறது?" என்று பாவமாக கேட்ட விஷ்வாவை பார்த்த ரிஷி

"நீங்க ஒன்னும் பயந்துக்க வேண்டாம். எவ்வளவு நேரம்தான் இவ அங்க இங்கனு ஓடிக்கிட்டே இருப்பா? எப்படி இருந்தாலும் எல்லா வேலையும் முடிச்சிட்டு அவ நம்மகிட்டதான வந்தாகணும் அப்ப அவளை கரெக்டா லாக் பண்ணி வச்சு நாம பேச வேண்டியத பேசிடலாம்ண்ணா.." என்று சொன்னவன் மேகாவின் பக்கம் திரும்பினான்..

அவளோ அந்த engagement function-னுக்கு வரப்போகும் அனைவரது மனதையும் கவர்ந்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் அத்தனை கலை நயத்துடன் decorative work - ஐ பார்த்துக் கொண்டு இருந்தாள்..

மேகா.. பெயருக்கு ஏற்றார் போன்று மென்மையான மனமும், அன்பான குணமும் கொண்ட அழகிய பதுமை..

தன் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்திருந்தவளை அவளுடைய பாட்டிதான் அத்தனை அன்போடும் பாசத்தோடும் இன்று வரை வளர்த்து வருகிறார்.

Fashion technology துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்த மேகாவுக்கு ஆடைகளை அலங்கரிப்பதிலும், உருவாக்குவதிலும் ஆர்வம் வரவில்லை..

ஏனோ இது போன்ற event decorative
டெக்கரேட்டிவ் விஷயத்தில்தான் அவளுக்கு அதிக அளவு ஆர்வம்.. அதனால்தான் வர்ணம் by மேகா என்ற ஒரு event organization business ஒன்றை ஆரம்பித்து கடந்த இரண்டு வருடங்களாக இத்துறையில் சாதனை புரிந்து வருகிறாள்...

கல்யாணம் ,காதுகுத்து , பர்த்டே பங்க்ஷன் இது போன்ற அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் அந்த ஊரைச் சுற்றி உள்ள அனைவருமே மேகாவின் event organization -னையே புக் செய்யும் அளவிற்கு அவளுடைய வேலை அந்த அளவிற்கு அழகாகவும் மனதை மயக்கும் விதமாகவும் உருவாகி இருந்தது ..

இப்பொழுது மேகாவின் வீட்டிற்கு அருகில் உள்ள தெய்வானையின் மகள் விஜியின் நிச்சயதார்த்தத்திற்காகதான் decorative வேலை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது ..

அப்பொழுது அவளை நோக்கி வந்தார் தெய்வானை..

" என்ன மேகா குட்டி எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சா ?" என்று கேட்டார் ..

"ஹ்ம் எல்லா வேலையும் நல்லபடியா முடிஞ்சிருச்சு தெய்வாம்மா. ஆமா, பங்க்ஷன் எப்போ ஸ்டார்ட் ஆகுதுன்னு சொல்லி இருந்தீங்க?" என்று கேட்டாள் மேகா

" அதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்குது மேகா .."என்று சொன்னார் அவர்

"ஓ அப்படியா தெய்வாம்மா வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு, இன்னும் பத்து நிமிஷம்தான் மேலாப்ல touchup work மட்டும்தான் பார்க்கணும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னவளை பார்த்த தெய்வானை "உன்ன மாதிரியே உன்னோட வேலையும் அவ்வளவு அழகாவும் சுத்தமாவும் இருக்குது. அதான் இந்த சின்ன வயசுலேயே நீ இவ்வளவு தூரம் வளர ஆரம்பிச்சிட்ட"என்று சொன்னார் ..


"எல்லாம் உங்கள மாதிரி நல்லவர்களுடைய ஆசீர்வாதம்தான் தெய்வாம்மா" என்று தன்மையாக கூறி அவரைப் பார்த்து சிரித்தாள் மேகா..

"ஆமா மேகா நான் உன்கிட்ட ரிங் கொடுத்து வச்சி இருக்க சொன்னேன்ல எடுத்துட்டு வந்துட்டியாடா?" என்று கேட்டார் தெய்வானை..

"ஆ எடுத்துட்டு வந்துட்டேன்.." என்று சொல்லப்போனவள் எதையோ உணர்ந்தவளாக

ஸ்..என்று நாக்கை கடித்துக் கொண்டே தலையில் கை வைத்தவாறு தெய்வானையை பாவமாக பார்த்தாள்..


அதை கண்டு " என்ன மேகா .. என்ன ஆச்சு?" என்று சிறிது பதட்டத்துடன் கேட்டார் தெய்வானை..

"தெய்வாம்மா அது வந்து.. வர அவசரத்துல மறந்து வச்சிட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன்.." என்று தயக்கத்துடன் சொன்னவளை பார்த்தவர்

"என்ன மேகா குட்டி இப்படி சொல்ற? வீட்ல இவ மாமன்காரன் பொண்ணு தரலைன்னு இந்த நிச்சயதார்த்தத்த நிறுத்துறதுக்கு தேவையான எல்லா வேலையும் பண்ணிட்டு இருக்கான்.. அதுனால எங்க மோதிரத்தை எடுத்துக்கிட்டு கடைசி நேரத்துல பிரச்சனை பண்ணிடுவானோன்னு பயந்துதான் உன்கிட்ட கொடுத்தேன்.. ஆனா நீ என்னடான்னா இப்ப வந்து மறந்து வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்லுற..?"என்று பதட்டத்துடன் கேட்டவரின் அருகில் வந்த மேகா அவரை தேற்றும் விதமாக அவருடைய கன்னத்தை பிடித்தாள்..

" தெய்வாம்மா இப்ப எதுக்காக நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க ? வர வர உங்களுக்கு BP அதிகமாயிடுச்சு.. போன மாசமே டாக்டர் என்ன சொல்லி விட்டாங்க.. அவங்க சொன்ன எல்லா விஷயத்தையும் கரெக்ட்டா ஃபாலோ பண்றீங்களா ?"என்று கேட்டாள் ..

"ஏண்டி நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க?"

" அட தெய்வாம்மா மோதிரம்தானே .. நம்ம வீடு ஒன்னும் இங்கிருந்து ஆயிரம் மயில் தூரத்துல இல்லையே .. பத்தே பத்து நிமிஷம்தான் .. போனா ரிங் எடுத்துக்கிட்டு அடுத்த 10 நிமிஷத்துல இங்க வர போறேன் .. இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்.." என்று கேட்டாள்..

அப்பொழுதுதான் தெய்வானைக்கு பதட்டமே குறைந்தது..

"அட ஆமால்ல .. இத ஏ நா யோசிக்கல..? இப்பதான் எனக்கு மூச்சு வாங்குரதே கம்மி ஆகுது .. " என்றார்..

"சரி சரி இப்படி ஓரமாக ஒக்காந்து தண்ணி குடிச்சிட்டு இருங்க.. உங்க டம்ளர்ல இருக்க தண்ணி காலியாகுறதுக்குள்ள மேகா ரிங்கோட வந்துருவா.. ஓகேவா "என்று சொன்ன மேகா விறுவிறுவென்று வெளியே சென்றாள்..

'தெய்வாம்மாகிட்ட வீராப்பா சீக்கிரம் வந்திடுவோம்ன்னு பேசிட்டு வந்துட்டோம்.. ஆனா இப்போ எதுல போறது... நம்ம வரப்பவே ஸ்கூட்டி பஞ்சர் ஆகி mechonic shop ல இருக்கு. இப்ப என்ன பண்ணலாம்?' என்று யோசனையோடு இருந்தவளின் கண் முன் வந்து நின்றான் ரிஷி ..

"என்ன மேகா யாரையோ தேடுற மாதிரி தெரியுதே.." என்று நக்கல் ஆகவே கேட்டான் அவன்

' இவனா ?... கண்டிப்பா இவன்லாம் சரிப்பட்டு வரவே மாட்டான். ' என்று யோசித்தவாரே மீண்டும் பல்லை கடித்துக் கொண்டு அவள் யோசனைக்கு சென்றாள்...

" மேகா.. இங்க பாரு யோசிச்சதெல்லாம் போதும் .. இப்போ உனக்கு வேற ஆப்ஷனே இல்லை. சீக்கிரமா வீட்டுக்கு போய் ring எடுத்துக்கிட்டு வரணும்னா நீ என்னுடைய பைக்லதான் வந்தாகணும்.. கண்டிப்பா இப்ப நான் பேசுரதை கேட்டுத்தான் ஆகணும்.. " என்று கெத்தாக நின்றவாறு சொன்னவனை பார்த்து முறைத்தாள் மேகா..

" எது உன் கூட, அதுவும் உன்னோட பைக்ல.. நான் உன் கூட பைக்ல வந்து அந்த ரிங்க எடுத்துட்டு வரதும் ஒன்னு... நடந்து போய் எடுத்துட்டு வரதும் ஒன்னு.. டேய் நீ வச்சிருக்கதுக்கு பேரு பைக்கா? அதுக்கு சைக்கிள் தேவைல போல" என்று கிண்டலாக சொல்லி சிரித்தாள்

"ஹே.. போதும்டி என் பைக்கை கிண்டல் பண்ணாதன்னு உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.." என்று கோபமாக கேட்ட ரிஷியை பார்த்து மீண்டும் சிரித்தாள் அவள்

" என்ன சொன்ன நான் உன்னை கிண்டல் பண்றேனா? கிடையவே கிடையாது.. நான் உண்மையத்தான் சொல்றேன்.." என்று அவனிடம் சண்டை இடும் தோரணையிலேயே சிரித்துக் கொண்டு பேசினாள் அவள் ..

"இங்க பாரு இப்போ உனக்கு என்னுடைய உதவி தேவையா இல்லையா?" என்று சிறிது கடுப்புடன் கேட்டான் ரிஷி..

சற்று யோசித்தவன் " ஹ்ம் உன்ன விட்டாலும் இப்பதிக்கு வேற வழி இல்ல. சரி வா.."

" பாருடா ஹெல்ப் கேட்டு வாங்குரதுல கூட உனக்கு இவ்வளவு திமிரா?" என்று கேட்டவனை பார்த்து முறைத்தவள்

" சரி சரி ரொம்ப ஓவரா பண்ணாத வண்டியை எடு .." என்று சொன்னவாரே ரிஷியின் பைக்கில் ஏறி அமர்ந்தாள் மேகா

பைக்கை ஸ்டார்ட் செய்த ரிஷி " மேகா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்.." என்று பேச வந்தவனை தடுத்து நிறுத்தியவள்

"இங்க பாருடா.. ஏற்கனவே உன் வண்டி ஒரு ஓட்டை வண்டி எந்த நேரம் பிரேக் ஃபெயிலியர் ஆகும், எந்த நேரம் டயர்ல காத்து போகும்ன்னே தெரியாது.. அதனால பேசுரத விட்டுட்டு கரெக்ட்டா ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டு.." என்று சொன்னவள் தன் கவனத்தை சாலை பக்கம் திருப்பினாள்..

' என் bike -அ குற சொல்லாட்டி இவளுக்கு தூக்கம் வராது போல' முனுமுனுத்தவன் பைக் ஓட்டுவதில் கவனமாகினான்..

இரவு நேரம் என்பதாலும், அது one way என்பதாலும் ஆள் நடமாட்டம் சற்று குறைவாகவே இருந்தது ..

அது மட்டுமில்லாமல் மின்விளக்குகள் கூட ஒரு இடத்தில் எரிந்தும், இன்னொரு இடத்தில் எரியாமலும்தான் இருந்தது ..

பற்றாக்குறைக்கு மழை வேறு தூர ஆரம்பித்துவிட்டது.

அதனால் ரிஷி முடிந்த அளவிற்கு தன்னுடைய பைக்கை நல்லவிதமாக வேகமாக வீட்டிற்கு ஓட்டி செல்ல முயற்சி செய்து கொண்டு இருந்தான் ..

அச்சமயம் ரோட்டோர சாலையில் ஒரு பெண்மணி தன் குழந்தையைப் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் அழுது கொண்டு இருந்தாள்..

அதை கவனித்த மேகா "டேய் ரிஷி ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்து.." என்றாள்..

" ஏண்டி .. ஏற்கனவே என் bike ஒரு நல்ல flow ல போறதே அதிசயம்.. அப்படி இறுக்கப்ப இப்ப திடீர்னு எதுக்கு bikeஅ நிறுத்த சொல்லுற?" என்று கேட்டான் அவன் ..

" ரிஷி பேசுறது நிறுத்திட்டு வண்டியை நிறுத்துன்னு சொன்னேன். "என்று அவள் மிரட்டலாக சொன்னதுமே அவள் குரலில் உள்ள சீரியஸை உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பைக்கை நிறுத்தினான்..

மறுகணம் வேகமாக பைக்கில் இருந்து இறங்கிய மேகா அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்மணியையும் குழந்தையையும் நோக்கி சென்றாள்..

" ஐயோ என் குழந்தை .. என் குழந்த.. யாராவது காப்பாத்துங்க .. என்னோட குழந்தை .. என் குழந்தையை காப்பாத்துங்க ..
அந்தப் பெண்மணியின் கதறலும் அந்த குழந்தையின் நிலையும் மேகாவின் முகத்தில் பதட்டத்தை எழச் செய்தது..

Leave a Reaction

Reader Comments

A
Arunkishore Baskaran ❤️ Love

Nice

minmini Writer

Thank you. keep reading

NovelClicks Footer