Ep 1 செக் மேட்

“சார் மீட்டிங்க்கு டைம் ஆச்சு” என்று மேனேஜர் சிறிது பணிவும், பயமும் கலந்த குரலில் சொல்ல

“yah i’ll come” என்று சொன்னவன் தன் முன் இருந்த laptop -ஐ ஆஃப் செய்து விட்டு, தனது போனில் யாருக்கோ ஒரு massage -ஐ சென்ட் செய்தவன் chair-ல் இருந்து எழுந்து தனது கேபினை விட்டு வெளியே போக போன சமயம் படாரென்று அந்த cabin - னிற்குள் நுழைந்து அவனை வெளியே செல்ல விடாமல் தடுத்தார் கேசவன்.

கேசவன் வந்திருந்த வேகத்தையும் அவர் முகத்தில் இருந்த கோவத்தையும் பார்த்து அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட ஆதி கேசவன் அவரை பார்த்து நக்கலான சிரிப்பு ஒன்றை சிரித்தான்..

“என்ன ஆதி நினச்சுட்டு இருக்க உன் மனசுல, நீ எதுக்காக இந்த மாதிரி பண்ணுற, இதுல என்ன பாத்து நக்கலா வேற சிரிக்குற, இங்க பாரு ஆதி நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்ல” கேசவன் கோவமாக கத்தினார்..

கதையின் நாயகன் ஆதி கேசவன் அதை காதில் வாங்கி கொள்வதாக இல்லை அவரை அலட்சிய பார்வை ஒன்றே பார்த்தான்..

“இங்க பாருங்க dad உங்க lecture, philosophy, teaching, blaw blaw இது எல்லாத்தையும் கொஞ்சம் நேரம் கழிச்சு வச்சிக்கலாம்.. இப்ப எனக்கு மீட்டிங் இருக்கு .. also இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு so நம்ம conversation - அ நாம அப்பறமா வச்சிக்கலாமா?” சொன்னவன் தன் அப்பாவை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்..

அவனது இந்த அலட்சிய பேச்சில் கோவமான கேசவன்

“என்னவே அலச்சிய படுத்திட்டு போறியா? நா உனக்கு அப்பண்டா, எனக்கு இருக்க திமிருல பாதிதான் உன்கிட்ட இருக்கு, நா அதயும் எப்படி overcome பண்ணுறேன்னு மட்டும் பாரு”

தனக்கு தானே சவாலாக சொல்லிக் கொண்டவர் தன் phone ஐ எடுத்து யாருக்கோ கால் செய்து சில விஷயங்களை சொன்னார்..

உடனே எதிர்முனையில இருந்து

“சார் என்ன சொல்லுறீங்க? கொஞ்சம் யோசிச்சு.........” எதிர் முனையில் இருந்து குழப்பமான குரல் கொஞ்சம் பணிவாக வந்தது..

“இங்க பாரு, நா என்ன சொல்லுறேனோ அத மட்டும் பண்ணு அத விட்டுட்டு என்ன ஏதுன்னு question கேட்டு எனக்கே அட்வைஸ் பண்ணுற வேலை எல்லாம் வச்சிக்காத.. நான் சொன்ன வொர்க்க மட்டும் இம்மீடியட்டா பண்ணி முடி.. got it“ கட்டளை இடும் தோரணையில் சொல்லி முடித்தார் கேசவன்..

“ஓகே சார்”

எதிர் முனையில் போன் கால் துண்டிக்கப்பட்டது

“ஹா ஹா ஹா .. செக் மேட் .. கேம் ஓவர் ஆதி.. இனி நா சொல்லுறதத்தான் நீ கேப்ப.. கேட்டு ஆகணும்.. you don’t have any option” சொன்னவர் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்.

இங்கே ஆதி மிகவும் தீவிரமாக clients உடன் ஒரு business meeting ல் இருக்க அச்சமயம் அவன் phone ன் message tone ஒலித்தது.. மறுகணம் அவன் பார்வை தன் மேனேஜரை நோக்கிச் சென்றது..

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மேனேஜர் அவனுடைய போனை எடுத்து பார்க்க அடுத்த நொடி அவன் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தது..


டென்ஷனாக தலையில் கை வைத்தவாறு “oh my god” என்று முணுமுணுத்தான்..

மேனேஜரின் டென்ஷனான பேஸ் ரியாக்ஷனை கவனித்த ஆதி ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டவனாக அடுத்த 10 நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துவிட்டு மேனேஜரின் பக்கம் திரும்பினான்..

அதை கவனித்த மேனேஜர் நடுங்கி போன குரலில் “சார் அது வந்து.. பெரிய ப்ராப்ளம் ஆக்கிடுச்சு சார்..”
என்றவன் அடுத்து சொல்ல வந்த வார்த்தைய சொல்ல முடியாமல் தயங்கி போய் நின்றான்..

“என்ன ரோகன் எதுக்காக இவ்வளவு டென்ஷன், என்ன ப்ராப்ளம் quick ஆ சொல்லு சும்மா இழுத்து நீட்டி என் டைம வேஸ்ட் பண்ணாத ஓகே? “ ஆதி கொஞ்சம் கரரான குரலில் கேட்டான்..

மறுகணம் மேனேஜர் என்ன பிரச்சனை என அனைத்தையும் ஒப்பித்தான்

“ வாட்? வாட் தி ஹெல் ஆர் யூ டாக்கிங்? என்ன பேசிகிட்டு இருக்க நீ?”

“சார் நிஜமாதான் சொல்லுறேன்.. இதோ massages ” என்றவன் போனை ஆதியிடம் கொடுத்தான்..

போனை வாங்கிய ஆதி அதிலிருந்த மெசேஜ் முழுவதையும் படித்து முடித்துவிட்டு

“dad நீங்க இவ்வளவு criminal minded - ஆ? உங்ககிட்ட இருந்து நான் இதை கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல”

கோவமா சொன்னவன் தன் போனை தூக்கி வீசி எறிய அவன் எரிந்த வேகத்தில் அது அங்குள்ள சுவற்றில் பட்டு சுக்கு நூறாக சிதறியது..

அவனது இந்த செயலில் பதறிப்போன ரோகன்

‘அய்யோ கோவத்துல போன தூக்கி எறிஞ்ச மாதிரி என்ன தூக்கி வீசுனாலும் வீசிற போராறு’ என்ற எண்ணத்தில் இரண்டு அடி பின்னால் நகர்ந்து கொண்டான்.

கோபத்தில் மூச்சிரைக்க மேனேஜரை கோபமாக பார்த்தவன் வேகமாக அங்கிருந்து கிளம்பி தன் அப்பாவை பார்க்கச் சென்றான்..

ரோட்டில் வரும் எந்த ஒரு காரும் வைக்கும் அவனது கண்களுக்குத் தெரியவில்லை. அந்த அளவிற்கு கோபம் அவன் கண்களை மறைத்து இருந்தது..


பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் கார் வேகமாகச் சொல்லக் கூடியது.. அப்படி இருக்க ஆதி தன் ஒட்டுமொத்த கோபத்தையும் அந்த காரின் வேகத்தில் காட்ட , அவனுக்கு ஆப்போசிட்டில் கார் மற்றும் பைக்கில் வந்த அனைவருமே எங்கே கார் தங்கள் மீது மோதிவிடுமோ என்ற பயத்தில் ஒதுங்கி நின்று கொண்டனர்..

ஆதியோ அது எதையும் கண்டுகொள்ளாமல் வேகமாக காரை ஒட்டி சென்றவன் நேராக தன் வீட்டின் முன்பு வந்துதான் அந்தக் காரின் வேகத்திற்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைத்து காரை நிறுத்தினான்..

“dad.. dad” கோவக் குரலில் கத்திக் கொண்டே அவன் வீட்டிற்குள் நுழைய
உள்ள கேசவனோ ஹாயாக சோபாவுல சாய்ந்து அமர்ந்தவாறு

“என்ன வேலாயுதம் சூப்புல காரம் ரொம்ப அதிகமா இருக்கும் போல.. ம் ம் ம் ..செம்ம டேஸ்ட்டா இருக்கு போ”
சொல்லிக்கொண்டே அந்த சூப்பை ஆசையாக ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்..

அவரது இந்த அலட்சியமான activities ஏற்கனவே கோவமாக இருந்த ஆதியின் கோவத்தை இன்னும் அதிகமாக்கியது..

இதற்கு மேல் தன் கோபத்தை ஒரு second கூட control பண்ண முடியாது என்ற ஸ்டேஜ்க்கு போனவன்

“Dad....” என்று அத்தனை கோபமாக கத்தினான்.. அவன் கத்திய வேகத்தில் அங்கே மிகப் பெரிய சூறாவளி புயல் அடித்து ஓய்ந்ததைப் போன்று ஒரு உணர்வு..

“நம்ம ஹீரோ ஆதி கேசவனோட இந்த அனல் தெரிக்கிற கோவத்துக்கு என்னதான் காரணம்?

startingல அவன் அப்பா அவன தேடி வந்தப்போ அவர்கிட்ட அலட்சியமா நடந்துகிட்டவன் இப்ப எதுக்கு அவர தேடி இவ்வளவு கோவமா வீட்டுக்கு வந்திருக்கான்?

அப்படி ஆதியோட அப்பா கேசவன் பண்ணி வச்சிருக்க வேலதான் என்ன?....

அடுத்த episode ல தெரிஞ்சுக்கலாம் stay with novel clicks .. also please post your comments
by மின்மினி ......

Leave a Reaction

Reader Comments

No reactions yet. Be the first!

NovelClicks Footer