அத்தியாயம்.. 2
அஞ்சலி பதட்டம் அடையவும் விக்ரமுக்கு அந்த பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை.”டாக்டர் சீக்கிரம் வாங்க.” என்று மீண்டும் அஞ்சலி அவனுடைய கையில் பற்றி இழுத்துக் கொண்டு வேக வேகமாக நடந்தாள். விக்ரமுக்கு அவள் தொடுவது கொஞ்சம் எரிச்சலை தான் கொடுத்தது. ஆனால், அவன் அதை பெரிது படுத்தாமல் இந்த முறை அவள் ஒரு வேகமாக சேர்ந்து நடந்தான். அவர்கள் இருவரும் அஞ்சலியின் வீட்டின் முகப்பை அடைந்தனர். அங்கு ஒரு சின்ன கூட்டம் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்தபடி இருந்தது. அஞ்சலி வருவதை பார்த்துவிட்டு கூட்டத்தில் இருந்த கிழவி ஒரு தீ முன்னாள் வந்து.”ஏண்டி கூறு கெட்டவளே உங்க அம்மா அம்மா மயங்கி கிடக்க, நீ எங்கடி காலங்கட்டால ஊர் பொறுக்க போன்னா?” என்று கத்தினாள்.
அதைக் கேட்டதும் அஞ்சலிக்கு கோபம் வந்தது. அவள் பற்களை கடித்தபடியே,”ஏ..ய் கிழவி உன் ஊத்த வாயில வந்தது எல்லாம் பேசாதே! எங்க அம்மா மயங்கி விழுந்துடுச்சு நான் முகத்துல தண்ணீ தெளிச்சி எழுப்ப பார்த்தேன். அது எந்திரிக்கல அதான் பக்கத்துல கூடாரம் போட்டு இருக்காங்கல்ல டாக்டருங்க அவங்கள ஒருத்தர கூட்டிட்டு வரலாம்னு போன .” என்று சொல்லிவிட்டு, “இதோ இவரும் டாக்டர் தான் அம்மா பார்க்கத்தான் கூட்டிட்டு வந்து இருக்கேன் தள்ளு.” என்று கிழவியை அதிகாரமாக நகர்த்தி விட்டு அஞ்சலி ஒரு கையால் இறுக்கமாக பிடித்திருந்த விக்ரமின் கையை இழுத்து கொண்டு தன்னுடைய குடிசை வீட்டுக்குள் நுழைந்தாள்.
அஞ்சலி இழுத்த இழுப்பில் விக்ரமுடைய தோல் அவள் தோள் மீது இடித்தது. அவாள் உடலில் இருந்து வந்த வியர்வை வாசனை அவனை கொஞ்சம் முகம் சுழிக்க வைத்தது. அவன் எரிச்சல், கோவம், அன்னிஈசி என்று எல்லாம் கலந்த கலவையாக நின்றிருந்தான்.
“வாங்க சார் எங்க அம்மாவ பாருங்க.” என்று அவள் அவசரப்படுத்தியது. விக்ரமிற்கு மேலும் எரிச்சலை கொடுத்தது. அவன் அவசரத்தில் அவளோடு கிளம்பிய காரணத்தால் அவனுடைய கையில் இப்பொழுது முதலுதவி பெட்டி கூட இல்லை.
“சார் என்ன சார் அமைதியா இருக்கீங்க எங்க அம்மாவுக்கு என்னாச்சி?.” என்று அஞ்சலி கொஞ்சம் பதட்டத்தோடு கேட்டாள். விக்ரம் வண்டி இட்டு கீழே உட்கார்ந்து கீழே மயக்கத்தில் கிடந்த அஞ்சலியின் அம்மாவின் கையை பிடித்தான்.
கையில் நாடி துடிப்பு இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. விக்ரம்க்கு எதற்கும் இதயத்துடிப்பை செக் செய்து பிறகு சேம்பிற்கு கொண்டு போய் அவளுடைய நிலையை உறுதி செய்யலாம் என்று தோன்றவும், தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை தடவி செல்போனை வெளியே எடுத்தான். அதில் சுத்தமாக டவர் இல்லை என்பது அவனுக்கு மேலும் ஒரு எரிச்சலை கொடுத்தது. அவன் அந்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு வெளியே வந்து டவர் கிடைக்கும் இடமாக பார்த்து நடந்தான். பத்தடி தூரத்தில் அவனுக்கு டவர் கொஞ்சம் கிடைக்கவும். அவன் டாக்டர் முரளி நம்பருக்கு டயல் செய்தான்.
எதிர்முனை டாக்டரின் செல்போன் அடிப்பது நன்றாகவே அவனுக்கு கேட்டது. சில வினாடிக்கு பிறகு முரளிதரன் காலை அடன் செய்து, “சொல்லு விக்ரம்?” என்றார்.
“டாக்டர் நம்மள பாக்க காலையில ஒரு பொண்ணு வந்தா இல்ல அந்த பொண்ணு வீட்ல இருந்தா நான் கால் பண்றேன். அவங்க அம்மா அல்மோஸ்ட் டெத்துன்னு எனக்கு தோணுது. எதுக்கும் கன்பார்ம் பண்ணிக்க நம்ம கேம்புக்கு கொண்டு வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். நீங்க ஏதாவது வண்டி அரேஞ்ச் பண்ணி அனுப்ப முடியுமா?” என்று அவன் மூச்சு விடாமல் விஷயத்தை சொல்லி முடித்தான்.
“ஐயோ விக்ரம் இருந்த ஒரு ஆம்புலன்ஸையும் நான் இப்பதான் பக்கத்துல இருக்குற டவுனுக்கு அனுப்பி விட்டேன் இப்ப என்ன பண்றது?” என்று எதிர்மறையில் முரளிதரன் கையை பிசைந்து கொண்டு நிற்கவும் விக்ரம்க்கு எதுவும் புரியவில்லை. டாக்டர்கள் இருவருமே சில வினாடிகள் தடுமாறினர்.
“ஓகே டாக்டர் நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க நாங்க எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்.” என்று விக்ரம் போனை வைத்து விட்டான்.
அவனுக்கு பின்னால் கோபமாக வந்து நின்றிருந்த அஞ்சலி, “என்ன டாக்டர் நீங்க எங்க அம்மா கைய புடிச்சு பார்த்தீங்க அப்புறம் போன் எடுத்துட்டு வெளிய வந்துட்டீங்க. அவங்களுக்கு என்ன ஆச்சு அவங்கள ஏன் நீங்க ஊசி போட்டு காப்பாத்தல.” என்று கடுப்போடு கேட்டாள்.
“ஏய் என்ன ரொம்ப அதிகாரம் பண்ற?” என்று கோவமாக ஆரபித்தவன் பிறகு, அவள் நிலைமையை உத்தேசித்து,”நீ தரத்தரன்னு என் கைய புடிச்சு இழுத்துட்டு வந்துட்டு, ஊசி போடலையான்னு கேள்வி கேக்குறியா? என்னுடைய மருந்து பாக்ஸ் எல்லாம் கேப்பில் இருக்கு. இப்போ உங்க அம்மா அப்பா அங்க தூக்கிட்டு போனா தான் என்னால என்னன்னு பாத்து சொல்ல முடியும்?” என்று விக்ரம் அதே கடுப்போடு திருப்பி அவளுக்கு பதில் கொடுக்கவும் அவள் தலைகுனிந்து நின்றாள்.
“என்ன மன்னிச்சிடுங்க.” என்றாள்.
எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண், “இந்தாடி அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்று கத்தினான்.
அவனைப் பார்த்ததும் அஞ்சலியின் முகம் சூடாக மாறியது.
“ஏய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அடி புடி எல்லாம் கூப்பிடாதே னு” என்று அஞ்சலி பதிலுக்கு கத்தினாள்.
“ஏண்டி கூப்டா என்ன நான் தானே உன்னை கட்டிக்க போறேன் மாமன் தானே என்ன தப்பு.”
“கட்டிக்கப் போறேன்னு சொன்ன பல்லு தட்டிக் கையில கொடுத்துடுவேன்.” என்று அவள் அக்னி கன்னியாக மாறினாள்.
“ஏண்டி சொன்னா என்ன எப்படி இருந்தாலும் நான் தான் நான் உன்னை கட்டிக்க போறேன்.” என்று சொல்லிவிட்டு அவன் வேண்டுமென்று அவளுடைய அந்தரங்கங்களில் பார்வையை ஓட விட்டான்.
அதை பார்த்த விக்ரமுக்கு அந்த ஆள் மீது எரிச்சல் வந்தது. அவன் மீது வீசிய சாராய வாடையும் அவன் கண்களில ஏறியிருந்த பழுப்பு நிறமும் அவன் பேச்சில் இருந்த திமிரும்,’இவன் சரியான குடிகாரனா இருப்பான் பேல இருக்கு.’ என்று விக்ரமை நினைக்க வைத்தது.
அந்த குடிகார்னை இழுத்து போட்டு மிதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்கிவிட்டு,
“ஏய் உங்க பேமிலி பிரச்சினை எல்லாம் அப்புறம் பாத்துக்கோங்க அந்த அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்.”என்று அவர்கள் இருவரையும் பார்த்து பொதுவாக அதட்டினான். பிறகு,
“இந்தப் …பா போயி பக்கத்துல எதாவது வண்டி கிடைக்குமான்னு இங்க இருந்து மெடிக்கல் கேம்புக்கு கொண்டு போனாதா அந்த அம்மாவை காப்பாத்த முடியுமா இல்லையான்னு எனக்கு தெரியும்.” என்று அஞ்சலியை வம்பு கிழித்த அந்த ஆளிடம் அவன் சத்தம் போடவும் அஞ்சலியின் மனதில் ஒரு பரபரப்பு எற்ப்பட்டது.
To be Continued…..
by மகிழம் பூ