ஒரு டம்ளரில் பால் மற்றும் மாத்திரையை எடுத்து கொண்டு மேலே ரூமிற்கு சென்று யாருடனோ தீவிரமாக ஃபோனில் பேசி கொண்டிருக்கும் எழில் காதில் கேட்கும் அளவிற்கு அருகில் இருந்த டேபிலில் டம்ளரை டங் என்று சத்தமாக வைத்து விட்டு அந்த சத்தத்தில் அவன் இவளை பார்ப்பதை தெரிந்து கொண்டு இரவு சாப்பிட வேண்டிய மாத்திரை சாப்பிட்ட சாப்புடு இல்லாட்டி போ என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு மாத்திரையை பால் டம்ளர் அருகில் வைத்து விட்டு அவனிடம் எதும் பேசாமல் சென்று பெட்டில் டம்மென்று விழுந்து படுத்து கொண்டாள்..
இதை எல்லாம் கால் பேசி கொண்டே கவனித்த எழில் கால் கட் செய்து விட்டு வந்து…
“ஹே சூறாவளி என்ன இது ???”
“பாத்தா தெரியல???”
“ஹே அது இல்ல சாப்பிடாம எப்படி டேப்லடஸ் சாப்டிரது????சாப்பாடு எங்க???”
தென்றலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை…
“ஹே சூறாவளி…ஹே ஹே தென்றல்…. என்ன பதிலையே கானா…இது வேலைக்கு ஆகாது” என மனதில் நினைத்தவன்….அவனும் பெட்டில் விழுந்து…தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த தென்றலின் தோல் மேல் கையை போட்டு
” ஹே பொண்டாட்டி” என்று அழைக்க…
அவனின் இந்த செய்கையில் பயந்து போனவள் பெட்டில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்ய எழில் அவளை விட்டால்தானே…..
” ஹே பொண்டாட்டி எங்கடி ஓட பாக்குற மாமாவ விட்டு…”
“கை……கை…கைய..எடு…..ங்க எழில்……..”
“முடியாது…என்னடி பண்ணுவ…”
“எழில் சொன்னா கேளுங்க…கைய எடுங்க… இல்லன்னா”
“இல்லன்னா என்னடி பண்ணுவ”
“என்ன பண்ணுவேன்னா கேக்குற??உண்ண” என்று சொல்லிக் கொண்டே தன் மேல் இருந்த எழிலின் கையை கடித்து விட்டு அவன் கத்தும் நேரத்தில் அங்கிருந்து ஓட முயற்சிக்க..சுதாரித்த எழில் அவளை மீண்டும் பிடித்து இழுத்தான்…
அதில் மீண்டும் பெட்டில் அவன் புறம் விழுந்தவள் அவன் நெஞ்சில் ஓங்கி குத்தியவாரே ” டேய் டேய் விடுடா என்ன விடுடா…”
“என்னாது டேயா??”
“ஆமாடா டால்டா விடுடா என்ன?”
“முடியாதுடி என்ன பன்னுவது எங்கடி எனக்கு சாப்பாடு??”
“என்னாது சாப்பாடா .போ.. போய் சமச்சீ சாப்பிடு…என்ற எதுக்கு கேக்குற….எனக்கு பசி இல்ல சோ நா எதும் சமைக்கல”
“ஹே என்னடி பொண்டாட்டி நா பாவம் இல்லயாடி உடம்பு சரி இல்லாதவண்டி…உனக்கு என்ன பாத்தா பாவமா இல்லயா????”
“இருந்துச்சு… இன்னிக்கு மதியம் வரை… பட் இப்போ இல்ல… காலைல என்னமோ தேவ இல்லாம திட்டுறீங்க… மதியம் நா சாப்பாடு கொண்டு வந்து நின்னா கண்டுக்காம போன பாத்துட்டு இருக்கீங்க சரி சாப்பிடும் போது சாப்பிடட்டும்னு சாப்பாட வச்சிட்டு போனா வந்து பாக்குறேன் சாப்பிடவே இல்ல….. எவ்ளோ கஷ்டபட்டு சமைச்சே ஏ சாப்பிடல அதா கோவம் வந்து சமைக்கல… அதுவும் இல்லாம எனக்கு பசிக்கல சோ உங்களுக்கு வேணும்னா போய் சமச்சு சாப்பிடு இல்லன்னா போ…”
“அடியே லூசு பொண்டாட்டி…,லூசு லூசு”
“யாரு நா லூசா..”
“ஆமா நா லூசு ஹ ச்சி சாரி சாரி நீ லுசுதாண்டி..அதுவும் இல்லாம தப்பு உன் மேலதா….. “
“என்னடி இப்படி முறைக்கிற…உன் பாசக்கார அண்ணன் ராம் உண்ட்ட என்ன சொல்லிட்டு போனான்…எனக்கு காய்ச்சல் சரி ஆகுற வர உண்ணத்தான ஊட்டி விட சொன்னால பட் நீ என்னடான்னா அவன் சொன்ன மாதிரி வந்து என் கைல இருக்க மொபைல்ல பிடுங்கி கீழ எரிஞ்சிட்டு மண்டைல செல்லமா நாலு கொட்டு கொட்டி மாமாக்கு ஊட்டி விடாம உற்றுண்ணு மூஞ்சிய வச்சிட்டு நின்னுட்டு அப்படியே போய்ட்ட… சரி கொஞ்சம் நேரம் கழிச்சு வருவேன்னு நினைச்சேன் நீ வந்ததும் உண்ண வம்பிலுத்து ஊட்டி விட சொல்லலாமுண்ணு நினைச்சா நீ என்னடான்னா வரவே இல்ல…. வேர வழியே இல்லாம நானா சாப்பிடலாமுண்ணு நினச்சு போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரதுகுள்ள நீ வந்து அந்த திட்டு திட்டி சாப்பாட எடுத்துட்டு போகிட்ட…. இப்போ என்னாடான்ன என் மேல தப்பு சொல்லிட்டு சாப்பாடு செய்யல சொல்ற ..எனக்கு பசிக்குதுடி…”
“அதுக்கு நா என்ன பண்றது..ராம் அண்ணா எதோ விளையாட்டா சொல்லிட்டு போனா அதையே நினச்சுகிட்டிருந்தா நா என்ன பண்றது… என்னாலைல சமைக்க முடியாது…”
“என்னடி நா சொல்லிட்டே இருக்கே என்ன பொண்டாட்டி நா அன்னிக்கு சொன்ன பணிஷ் மெண்ட் மறந்து போச்சா…. நானு வந்ததில இருந்து பாக்குறே நா சொன்னத கேட்டது மாதிரியே தெரில்ல… ஹ்ம்ம் என்ன நா சொன்னது மறந்து போச்சா… “என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் தன் விரலால் கோலம் போட…
“எழில்..எழில்…என்ன பண்றீங்க..”
“என்ன பன்றே…???”
“எழில் ஃபர்ஸ்ட் தள்ளி போங்க நா…நா …வந்த..னிக்கே..உங்களுக்கு..சம…ச்சி தந்……தேனே…நீங்கதான் வேணாம் சொல்லிட்டீங்க…”
“எது அந்த உப்புமா பண்ணியே… அத சொல்றியா…”
“ஹம்…ஆமா…”
“என்னடி ஆமா ..யேண்டி டிராவல் பண்ணிட்டு வந்து டயர்டா ரொம்ப பசியா இருக்கப்போ …யாராச்சும் உப்புமா பண்ணுவாங்களடி அறிவு கெட்ட ஏ மக்கு பொண்டாட்டி. ..நீ மூஞ்சி முன்னாடி உப்புமா நீட்டவும் எனக்கு இருந்த மொத்த பசியும் அடங்கி போச்சு… நா சரியான ஃபுட்டி(foodie) அப்படீன்னு சொலாலிகிறவன் கூட உப்புமாவ நீட்டுன 10 மலை தாண்டி தல தெறிக்க ஓடுவான்….. அப்படி இறுக்கப்போ நா எப்பிடிடி அதா ஒர்க் இருக்குன்னு எஸ் ஆகி ஓடிட்டேன்.. மறுநாள் காலையில நீ தூங்கிட்டிருந்த.. சரி டிராவல் பண்ணி வந்ததுல டயர்டா இருப்பேன்னு விட்டுடேன்.. இதா சாக்குண்ணு நீ எனக்கு சமைக்காமலே விட்டுடடி… என்னடி முளிக்குற.. .சரி சரி எதோ சின்ன பொண்ணு t தெரியாம பண்ணிட்ட இந்த ஒரு தடவ மண்ணிச்சு விடுறே இப்போ போ போய் சூடா இட்லி செஞ்சி கொண்டு வா மாமாக்கு போ…”
“என்னாது நீ என்ன மண்ணிகுறியா…நா அன்னிக்கு வேனும்னுதான் உப்புமா பண்ணேன்.. அதுவும் இல்லாம இப்போ என்னால சமைக்க முடியாது போடா உன்னால என்ன பண்ண முடியும்?? என்ன பண்ணுவ??”
“என்ன பண்ணுவேன்னா?? யேண்டி உனக்கு கொஞ்சனாச்சும் மண்டைல எதாச்சும் இருக்கா?? இந்த வீட்டுல இப்போ நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம்…அதுவும் இல்லாம நா உன் புருசன் நீ என் பொண்டாட்டி உனக்கு என் மேல எல்லா உரிமையும் இருக்கு எனக்கும் உன் மேல எல்லா உரிமையும் இருக்கு சோ…”
“சோ……….”
“நா நினைச்சா உனக்கு எப்படி வேணும்னாலும் பணிஸ் மெண்ட் கொடுப்பேன்.. அதுனால நீ இப்போ எண்ணபன்றீன்னா நேரா கிச்சனுக்கு போற போய் மாமாக்கு இட்லி செஞ்சி கொண்டு வர” என்று குறும்பு சிரிப்புடன் அவளிடம் சொல்ல அதை பார்த்து பயந்தவள்
“முடியாது…”
“முடியாதா….நீ சொன்னா கேக்க மாட்ட…” என்று சொல்லி கொண்டே அவளை தன் பக்கம் இழுத்தவன் அவள் அறியும் முன் தன் முதல் முத்தத்தை அவள் இதழில் பதித்தான்….
அவள் எவ்வளவு முயற்சி செய்தும் அவன் பிடியில் இருந்து அவளால் விலக முடியவில்லை நீண்ட நேரத்திற்கு பிறகு அவளை விடுவித்தவன் அவளை பார்த்து குறும்பாக சிரித்துகொண்டே .
அவள் இதழை தன் கை விரலால் வருடியவாரே….
“ஓய் பொண்டாட்டி இப்போ எனக்கு பசி பாதி அடிங்கிடுச்சு… மீதி பசிக்கு இட்லி செஞ்சி கொண்டு வரியா..இல்ல..” என்று மீண்டும் குறும்பாக சிரித்தவன் அவளை பார்த்து தன் இரண்டு கண்களை சிமிட்டியவனை பார்த்து முறைத்து விட்டு எழுந்து சென்றால் நேராக கிச்சனுக்கு…
“ச்சே என்ன இவ இப்படி பிலாக் மெயில் பண்றான்… பொண்டாட்டின்னா, தாலி கட்டிட்டா,,என்..எனக்கு முத்தம் கொடுப்பானா….:
“என்ன தென்றல் மேடம் இதெல்லாம் உங்க புருஷன் உங்ககிட்ட சொல்ரப்போ அவண்ட பேசி இருக்கலாமுல.. வாய மூடிட்டு இருந்தவ என்ன லவ்ஸா” என்று அவள் மனசாட்சி நக்கலடிக்க…
“ஏய் ஒழுங்கா ஒடிரு இல்ல உண்ண தூக்கி போட்டு மிதிச்சுடுவே பாத்துக்கோ”
“அடி ஆத்தி இவ மிதிச்சாலும் மிதிச்சுபுடுவா… ஓழுங்க மரியாதியா எஸ் ஆகிடலாம்”
“யோவ் போலீசு உண்ண என்ன பண்ணுறேன்னு பாரு…” திட்டி கொண்டே சட்னியில் மிளகாயை கூட வைத்து அரைத்து சட்னி செய்து அவனுக்கு சாப்பாட்டை எடுத்து சென்றாள்..
மேலே சென்று அவனிடம் தட்டை நீட்ட..அவளை ஒரு பார்வை பார்த்தான்
அவள் பார்வையின் காரணம் புரிந்தும் எதும் புரியாதது போல் நின்றாள் தென்றல்..
“என்ன பொண்டாட்டி …அதா உனக்கு புரிஞ்சுடுச்சுல அப்பறம் யேன் எது புரியாதது மாதிரி நிக்கிற.. ஹ்ம்ம் சீக்கிரம் ஊட்டி விடு பசிக்குது …. இல்ல மாமா பணீஸ் மெண்டு கொடுத்திடுவேன் பாத்துக்கோ…”
“அடி ஆத்தி இவ பண்ணாலும் பண்ணுவான்…இப்பதிக்கு ஊட்டி விடுவோம்…” என்று நினைத்தவாறே அவனுக்கு ஊட்டி விட
“அடியே..ஷ்…ஷ்..ஆ…ஆ..அம்மா….ஆ…ஆ அடியே ஏண்டி லூசு சட்னில மிளகாய சேக்க சொன்னா நீ மிளகாயில சட்னியை சேத்து எடுத்துட்டு வந்திருக்கா… ஆ..அம்மா எரியுதே.. பாவி பலி வாங்குறியா…உண்ண இந்தா.இந்தா. பிடி நீ ஒரு வாய் சாப்பிடு…”
“ஹ்ம்ம் எனக்கு வேனா..”
“என்னடி நா எதோ பாசத்தோட உனக்கு ஊட்டி விடுற மாதிரி வேனாமுண்ணு சொல்லுற…இந்தா ஆ ஆ பிடி ஆ…” என்று சொல்லி இட்லியில் சட்டினியை அதிகமாக தொட்டு அவளுக்கு ஊட்டி விட…
ஒரு வாய் வாங்கியதும் காரம் தாங்க முடியாமல் கீழே துப்ப போணவளை..
“ஏய் ஏய் கீழ துப்புன. அவ்ளோதான்..ஒழுங்கா முளுங்குற இப்போ” என்று சொல்லி அவளை விழுங்க வைத்தான்…
“ஷ்…ஷ்..ஆ…ஆ..அ அம்மா .அம்மா…”
“என்னடி உரைக்குதா…. ஹா..காரமா இருக்கா.. அப்படிதான இருந்திருக்கும் எனக்கும்…போ போய் எனக்கு இதுக்கு தொட்டுக்க வேர எதாச்சும் செஞ்சு கொண்டு வா போ.. காரம் இல்லாம..இல்ல இந்த ஃபுல் இட்லியையும் சட்னியோட நீதா சாப்பிடணும்”
வேறு வழி இல்லாமல் இட்லி பொடியில் என்னை ஊற்றி எடுத்து வந்து அவனுக்கு ஊட்டி விட.. அவளும் பசி இல்லை என்று சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்தவன் அவளுக்கும் இவனே ஊட்டி விட்டு சாப்பிட வைத்தான்..
இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்த பின் எழிலை மாத்திரை சாப்பிட வைத்து விட்டு
தென்றல் கீழே சென்று பிளேட்டை கழுவி வைத்து விட்டு ரூமிற்கு வந்தால்உள்ளே வந்தவளை பார்த்து எழில் தலையை சொரிந்து கொண்டே சிரிக்க..
என்ன சிரிப்பு..
“இல்ல உன் அண்ணன் இன்னொன்னு சொல்லி இருந்தான் தலைல அந்த ஈர துணி மேட்டரு..தொட்டு பாரு இன்னும் காய்ச்சல் இருக்கு ” என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்ல
“டேய் அண்ணா ராம் நாளைக்கு நீ வீட்டுக்கு வாடா.. உண்ண கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சு அனுபுறே” என்று ராமிற்கு பொரை ஏறும் அளவிற்கு அவனை பொரிந்து தள்ளி கொண்டே அவனுக்கு தலியில் ஈர துணியை வைத்து வைத்து எடுத்தாள்…
அவளிடம் தான் குழந்தையாய் மாறி போவதை நினைத்து சிரித்து கொண்டே அவள் கைகளை பிடித்த எழில்….
“தென்றல் …செம்ம நீ தெரியுமா..,”
“என்ன??”
“என்ன என்ன?? ஒண்ணு இல்லயே..”
“பின்ன எதுக்கு இந்த செம்ம…”
“அது சும்மா.. ஒன்னும் இல்ல விடு…ஆனா ஒன்னு சொல்லனும் நீ. சட்னி மேட்டர்லதான் சொதப்புன.. பட் இட்லி செம்ம டேஸ்ட்..இவ்ளோ டேஸ்ட்டா இட்லி செஞ்ச இந்த கைக்கு எதாச்சும் தரணுமே” என்று சொல்லி குறும்பாக சிரித்து கொண்டே அவளை பார்க்க அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தவள்….
தன் கைகளை அவன் கையில் இருந்து எடுக்க முயல அவன் விடவே இல்லை…
அவள் முக பாவனைகளை ரசித்தவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே அவள் மோதிர விரலில்… ஹாட் ஷேப்பினாலான ஒரு ரிங்கை போட்டு விட்டு
அவள் அதை என்ன என்று பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் குறும்பாக சிரித்தான்.
உடனே தென்றல் முகத்தில் சின்னதாக பயம் தோன்ற அவள் முகத்தில் தெரிந்த அந்த பயத்தினை உண்மை ஆக்கும் விதமாக எழில் அவள் கையில் தன் இதழ் பதித்து முத்தமிட்டு அவளை அனைத்து கொண்டான்…
தென்றலுக்குதான் என்ன நடிக்கிறது என்றே புரியாமல் முழித்து கொண்டிருந்தாள் ..
அவளை அணைத்து இருந்தவன் அவளிடம்
” ‘தென்றல் இந்த ரிங்க எப்பவுமே கழட்ட கூடாது..என் மேல பிராமிஸ்..”என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவள் மடியில் படுத்து கொண்டான்…
தென்றல் ஒன்றும் புரியாமல் அந்த மோதிரத்தையே பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தவாறு தூங்கிப்போனால்…
இடையில் கன் விழித்த எழில் தென்றலை பார்க்க அவள் உட்கர்ந்திருந்தவாரே தூங்கி கொண்டிருப்பதை பார்த்தவன் தன் தலையில் அடித்து கொண்டு…
“டேய் லூசு இப்படி மாடு மாதிரி படுத்து தூங்குற அவளுக்கு முதுகு வலிக்காத இப்படி உட்காந்தவாக்கிலையே தூங்குனா எரும எரும” என அவனை அவனே திட்டி கொண்டு
அவளை பெட்டில் படுக்க வைத்தவன் பெட் ஷீட்டை போத்தி விட்டு அவள் தலையை மெதுவாக கோதி விட்டவன் அவள் நெற்றியில் முத்தமிட நினைத்து அவள் நெற்றிக்கு அருகில் போனவன் என்ன நினைத்தானோ முத்தமிடாமல் சிரித்து கொண்டே அவள் கன்னத்தை கிள்ளி விட்டு படுத்துகொண்டான் அவளருகில் மிக நெருக்கமாக…
******எழில்தென்றல்வருவார்கள்