தென்றலை பின்னிருந்து அணைத்தவாறு நின்றிருந்த எழில் மெதுவாக அவள் வலதுபுற தோள் மீது தன் முகத்தாடையை வைத்தவாரு அவள் காதருகில் சென்று மெதுவாக அவளை அழைத்தான்
தென்றல்…….தென்றல்…… என அழைக்க இதுவரை தன் கண்களை இறுக மூடியிருந்த தென்றல் அவனது அழைப்பில் பயத்துடன் தன் கண்களை மெதுவாக திறந்து..
சாரி அண்ட் தைங்ஸ் என்று சொல்ல.. பாவம் தென்றலுக்கு எதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது…..
எந்த பதிழும் அவளிடமிருந்து வரவில்லை …
அந்த இடம் மட்டும் ஒரு நிமிடத்திற்கு முன்பு அமைதியாக இருந்தது போல் மீண்டும் அமைதியாகவே இருந்தது… அதனால் அந்த அமைதியை களைக்க மனம் இல்லாவிட்டலும் கஷ்டப்பட்டு தன் மனதை சரி செய்து எழிலே அந்த அமைதியை கலைத்து பேச தொடங்கினான்….
“ஏண்டி ஒரு புருஷன் சாரி தைங்ஸ் ரெண்டையும் மாத்தி மாத்தி ஒரே நேரத்துல சொல்றானே ஏ எதுக்குன்னு ஒரு வார்த்தை கேக்குறியாடி…. லூசு பொண்டாட்டி….”
இவன் புருஷன் பொண்டாட்டி என்ற உரிமை பேச்சில் தென்றை அதிசயித்து போய் நின்றாள்…
“யாராச்சும் இருக்காப்போ இப்படி உரிமையா பேசுனா நடிக்குறாருண்ணு ஒத்துக்களாம் பட் இப்போதான் யாருமே இல்லையே நாங்க ரெண்டு பேர் மட்டுமேதான இருக்கோம்… அப்பறம் ஏன் இவ்வளவு உரிமையா பேசுறாரு”
ஒரு வேளை ராம் அண்ணா சொன்னது என்னவோ உண்மையோ என்னமோ?” என தென்றிலின் மனசாட்சி அதன் பங்கிற்கு ஏற்றி விட.. .
“சே சே அப்படியெல்லாம் இருக்காது.. இந்த போலீசாச்சும் நம்மல போய் லவ் பன்றதாச்சும்” என அவள் மனசாட்சிக்கு பதிலடி கொடுத்து கொண்டிருந்த நேரம்
அவள் தோள் மீது தன் முகத்தை வத்திருந்த எழில் மெதுவாக அவளை ஒரு முட்டு முட்டி
“ஏய் சூறாவளி நா என்ன கேட்டுகிட்டிருகேன் நீ பதில் எதும் பேசாம எதையோ யோசிச்சுகிட்டு இருக்க????? ஏண் எதுக்குன்னு கேக்கமாட்டியா…?”
மீண்டும் அவளிடம் எந்த பேச்சும் வராமல் அமைதியே நிலவ
“சரி விடு நீ வாய்க்குள்ள வச்சிருக்க கொழுகட்டைய மெண்ணுகிட்டே இரு நானே பதில் சொல்ரே… ஓகேவா????… தாங்க்ஸ் எதுக்கு சொன்னேனா… நேத்து நைட்டு ஃபுல்லா என்ன நல்லா எங்க அம்மா மாதிரி பாத்துகிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தைங்ஸ் … தென் சாரி எதுக்குனா நீயே இன்னேரம் கெஸ் பண்ணிருப்பியே. கரைக்ட் உன் கெஸ் மார்னிங் உண்ண திட்டுனதுக்கு சாரி ரொம்ப ரொம்ப சாரி என்.. என்.. என்ன மன்னிச்சிடு சூறாவளி நா எதோ ஒரு டெண்சன்ல என் கோவத்த கண்ட்ரோல் பண்ண முடியாம. என்ன பண்ணரதுண்ணு தெரியாம” என்று கோவத்துடனும் மன உளைச்சலுடனும் எதேதையோ சொல்லி தினரியவன் அவளை தன் பிடியில் இருந்து விடுவித்து வேகமாக சென்று கட்டிலில் படுத்து கொண்டான்…
“அவனையே புரியாமல் பார்த்து கொண்டிருந்த தென்றல் இவன் என்ன புரியாத புதிரா இருக்கான்…. திடீர்னு ஃபீல் பன்றா,திடீர்னு சண்ட போடுறான், திடீர்னு வம்பிலுகுறான், திடீர்னு சாரி சொல்ரான், இப்போ எண்ட சாரி சொல்லிட்டு எதுக்கு டென்ஷன் ஆகி வேகமா போய் படுத்துகிட்டா… ஒண்ணுமே புரிய மாட்டீங்குதே …. இதுல இந்த லூசு பிடிச்ச மனசும், ராம் அண்ணாவும் எழில் உண்ண லவ் பண்றான் புரிஞ்சுக்கன்னு குழப்பி விடுறாங்க… எம்மா முடிலடா சாமி ….முதல்ல இதுக்குள்ளாம் ஒரு சொள்யூசன் கண்டு பிடிக்கணும்…” என்று நினைத்து கொண்டே கீழே விழுந்த டம்ளர் தட்டை எடுத்து கொண்டு கீழே செல்ல அவள் ஃபோன் அலறியது.
அண்ணன் தங்கை உறவுக்கு இலக்கனமான ஒரு பாடலுடன் ஃபோன் ஒலிக்க… முகத்தில் சிறு புன்னகையை சிந்தியவள் அந்த காலை அட்டன்ட் செய்து..
“சொல்லுடா அண்ணா என்ன தங்கச்சிக்கு திடீர்னு கால் பண்ணிருக்க…..”
“அது ஒன்னும் இல்ல தங்கச்சி..”
“என்னாது தங்கச்சியா????? புரிஞ்சு போச்சு…”
“என்ன புரிஞ்சு போச்சு…”
“ஹ்ம்ம் என்னோட ஆருயிர் அண்ணன் எனக்கு பாசமா ஃபோன் பண்ணாலே எதோ என்னால காரியம் ஆக வேன்டி இருக்கு அதா… நா சொல்ரது உண்மையா பொய்யா… நீயே சொல்லு ..”
“ஏ பாசத்துலதாண்டி தங்கச்சின்னு சொன்னேன்.உடனே ரொம்பக் ஓட்டுரவ…போடி நா ஃபோன வைக்கிறேன்….’
“டேய் டேய் அண்ணா வச்சிடதா… உடனே கோச்சுப்பான்… சரி ஒத்துக்குறே நீ எனக்கு பாசத்துலதா கால் பண்ணி இருக்குறேன்னு.. போதுமா..”
“ஹ்ம்ம்”
“ஹ்ம்ம்..சரி சொல்லு வீட்டுல இருக்க எல்லாம் எப்படி நலமா?”
“ஹ்ம்ம் எல்லாரும் சூப்பர்…”
“அப்பறம் உங்க ஆளு..என் ஆருயிர் தோழி…”
“ஹ்ம்ம் அவள பத்தி பேசதான் கால் பண்ணேன்…”
“டேய் அண்ணா இப்போதான் பாசமா என்ட பேச கால் பண்ணேன் சொன்ன… பட் இப்போ என்னடான்னா உன் ஆள பத்ததிதான் பேச கால் பண்ணி இருக்கேன் சொல்லுற…”
“அம்மா தாயே என்னால முடியல என்ன விட்ரு.. நா போறேன்..”
“சரி சரி சொல்லு..”
“உமாவுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க போறாங்க…”
“அண்ணா என்னடா சொல்லுற… எப்படிடா.. அவங்க வீட்டுல உங்கள பத்தி தெரியுமேடா அப்படி இருக்கப்போ எதுக்குடா இப்படி திடீர்னு…”
அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை அதற்கு மாறாக அவன் விசும்பல் சத்தம் மட்டுமே இவள் காதில் விழ
“டேய் அண்ணா அழுறியா…டேய் அண்ணா…டேய்..எதாச்சும் பேசுடா..”
“தென்றல்… தென்றல் ..”அவள் பெயர் அலைப்புடன் அழுகை குரலும் சேர்ந்து ஒலிக்க…
“டேய் இப்போ எதுக்கு அழுற அழுகாம என்ன பிரச்சனை சொல்ல போரியா இல்லையா ஹலோ… ஹலோ… என்ன கட் பண்ணிட்டா..”
மீண்டும் கால் செய்ய… அதை ராஜ் அட்டன் பண்ணாமல் ஒரு குரு செய்தி மட்டும் அனுப்பினான்..
“இப்போ வேணாம்…சீனியர் லாயர் கூப்டுராரு இம்பார்ட்டன்ட் ஒர்க் இருக்கு நா அப்பறம் சொல்லுறேன்.. ” என்ற குரு செய்தி மட்டும் வர அதை படித்தவள்… சோகமாக சோபாவில் அமர்ந்து உமாவிற்கு கால் பண்ண 2 முறை கால் செய்த போதும் கட் பண்ணி விட மூன்றாவது முறை அழைத்த போது சுவிச் ஆஃப் என்று வர குழம்பி போனவள்
வேதாவிற்கு கால் பண்ண பிஸி என்றே வந்தது. .தொடர்ந்து ஆறு ஏலு முறை முயற்சி செய்தும் பிஸி என்றே வர கடுப்பானவள் போனை எரிந்து விட்டு கிச்சனில் நுழைந்து மதிய சாப்பாட்டை ரெடி செய்து சாப்பாட்டை எடுத்து கொண்டு ரூமிற்கு சென்று எழிலை பார்க்க அவன் இவள் சாப்பாட்டுடன் வந்து நிற்பதை நிமிர்ந்து பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் போனையே பார்த்து கொண்டிருந்தான்
அவனை ஒரு முறை முறைத்து விட்டு அவன் அருகில் சென்று சாப்பாடு என்று சொல்ல அவன் பதில் எதும் சொல்லாமல் போனையே பார்த்து கொண்டிருந்தான்..
அவன் செய்கையால் கடுப்பானவள் சாப்பாட்டை அருகில் இருந்த டேபில் மீது வைத்து விட்டு கீழே சென்று தனக்கு சாப்பாட்டை எடுத்து கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவள் மீண்டும் ஒரு முறை வேதாவுக்கு கால் பண்ணி பாக்கலாம் என நினைத்து தான் விட்டெரிந்த போனை தேடி எடுத்து பார்க்க அது டிஸ்ப்ளே நொறுங்கி போய் டச் ஒர்க் ஆகாமல் போகி இருந்தது..
மீண்டும் அதை எழிலை நினைத்து அவன் இவள் சாப்பிட சொல்லியும் கண்டு கொள்ளாமல் போனையே பார்த்து கொண்டு இருந்ததை நினைத்து அந்த போனை கீழே விட்டெரிந்து விட்டு சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்த்தாள்…
சாப்பிட்டு முடித்து விட்டு மேலே சென்று எழிலை பார்க்க கட்டிலில் அவனை கானவில்லை..சரி அவன் சாப்பிட்ட பிலேட்டையாவது எடுத்துட்டு போலாம்னு பாத்தா அவன் சாப்பாட்டையும் சாப்பிடாம அப்படியே வச்சிருக்க கோவமான தென்றல்…
“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் இவன் மனசுல… போனா போது காய்ச்சலா இருக்கானேனு கவனிச்சுக்கிட்டா … தேவை இல்லாம திட்டுறா தேவ இல்லாம டென்ஷன் ஆகுறா.. இப்போ சாப்பிடாம சாப்பாட்டை அப்படியே வச்சிருக்கான்…இருக்கட்டும் கவனிச்சுகிறேன்….” என்று வாய் விட்டு திட்டி கொண்டிருக்க …
எழில் அவள் பின்னால் சுவற்றில் சாய்ந்தவாறு இரு கைகளையும் குறுக்கே கட்டி கொண்டு நின்றான்….அவன் தனக்கு பின்னால் நிற்பதை பார்த்த தென்றல் மனதிற்குள்…
“அடி ஆத்தி இவ இல்லைன்னு நினச்சுதான சத்தமா இவன திட்டினோம் இப்போ என்னடான்னா பின்னாடி ஒரு மாதிரி பாத்துகிட்டு நிக்கிரா…தென்றல் நீ எதுக்குடி பயப்படுற பயப்படாத… உன்மேல என்ன தப்பு உண்மையத்தான சொன்ன.. அவ சாப்பிடாதது தப்புதான.. சோ மூஞ்சிய பயந்த மாதிரி காட்டாம கோவமா வச்சுக்கோ… ஹம் கரைக்ட்… அப்பெடிதா .. மூஞ்சியா டெரரா வச்ச மாதிரியே கிளம்பிடு..” என்று தனக்குள் தானே புலம்பி கொண்டவள் அங்கிருந்த சாப்பாட்டை எடுத்துகொண்டு அவனை ஒரு முறைக்கும் பார்வை பார்த்து விட்டு ரூமை விட்டு வெளியே சென்றாள்….
கீழே வந்தவள் கோவம் குறைய தனது லேப் டாப்பில் சேவ் பண்ணி வைத்திருந்த கல்லூரி காலத்தில் பெண்கள் அனைவருக்கும் விருப்பமான பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் என்ற கொரியன் சீரியசை பார்க்க ஆரம்பித்தாள்….
இரவு 8 மணியே ஆகி போனது அதை கூட கவனியாது அனைத்து எப்பிசிட்களையும் முடித்து விட்டு மணியை பார்க்க அது 8 என காட்ட ..
பசி இல்லாமல் தூக்கம் வருவதை போல் உணர்ந்தவள் நேராக கிச்சனுக்குள் சென்று பால் காய்ச்சி ஒரு டம்ளர் குடித்து விட்டு….
பால் இன்னும் மீதம் இருக்கவே ஆபத்துக்கு பாவம் இல்லை என நினைத்து ஒரு டம்ளரில் பால் மற்றும் மாத்திரையை எடுத்து கொண்டு மேலே ரூமிற்கு சென்று யாருடனோ தீவிரமாக ஃபோனில் பேசி கொண்டிருக்கும் எழில் காதில் கேட்கும் அளவிற்கு அருகில் இருந்த டேபிலில் டம்ளரை டங் என்று சத்தமாக வைத்து விட்டு அந்த சத்தத்தில் அவன் இவளை பார்ப்பதை தெரிந்து கொண்டு இரவு சாப்பிட வேண்டிய மாத்திரை சாப்பிட்ட சாப்புடு இல்லாட்டி போ என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு மாத்திரையை பால் டம்ளர் அருகில் வைத்து விட்டு அவனிடம் எதும் பேசாமல் சென்று பெட்டில் டம்மென்று விழுந்து படுத்து கொண்டாள்..
இதை எல்லாம் கால் பேசி கொண்டே கவனித்த எழில் கால் கட் செய்து விட்டு வந்து…
“ஹே சூறாவளி என்ன இது ???”
“பாத்தா தெரியல???”
“ஹே அது இல்ல சாப்பிடாம எப்படி டேப்லடஸ் சாப்டிரது????சாப்பாடு எங்க???”
தென்றலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை…
“ஹே சூறாவளி… ஹே ஹே தென்றல்…. என்ன பதிலையே கானா… ” இது வேலைக்கு ஆகாது என மனதில் நினைத்தவன்….
அவனும் பெட்டில் விழுந்து…தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த தென்றலின் தோல் மேல் கையை போட்டு ஹே பொண்டாட்டி என்று அழைக்க…
முதலில் கண்களை இறுக மூடி எழில் பேசுவதை கண்டுகொள்ளாமல் படுத்திறுந்தவள் பின் எழிலின் கை தன் மீது இருப்பதை உனர்ந்தவள் அவனின் இந்த செய்கையில் பயந்து போனவள் பெட்டில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்ய எழில் அவளை விட்டால்தானே…..
“ஹே பொண்டாட்டி எங்கடி ஓட பாக்குற மாமாவ விட்டு…” அவளை பிடித்து இழுத்தவன் தனது அருகில் படுக்க வைத்து அவளை விடாது இறுக பிடித்து கொண்டான்.
“எழில் …..விடுங்க ….. விடுங்க எழில்…….. எழி…… தென்றல் குரல் குலைந்து போய் காணாமல் போனது அவனின் செய்கையால்”
******எழில் தென்றல் வருவார்கள்