எழிலின் புலம்பலால் குழப்பத்தின் உச்சிக்கே சென்ற தென்றல் யோசித்து யோசித்து நேரமானதை கவனிக்காமல் இருக்க மடியில் படித்திருந்த எழில் திரும்பி படுக்கும் போது அதில் நினைவுக்கு வந்தவள் தன் மொபைலில் மணியை பார்க்க அது 11:47 PM என்று காட்டியது… அச்சச்சோ மணி 12 ஆக போதா இவருக்கு ஈர துணி தலைல வச்சி எடுக்கணுமே… என்று தனக்கு தானே பேசி கொண்டவள் தன் மடியில் படுத்திருந்த எழிலின் தூக்கம் கலையாமல் அவனை தலையணைக்கு மாற்றியவள் கீழே சென்று தண்ணீர் காட்டன் துணி எடுத்து வந்து அவன் தலையில் வைத்து வைத்து எடுத்து அவனுக்கு மீண்டும் ஒரு முறை தைலம் தேய்த்து விட்டு அவன் அருகில் அமர்ந்தவாறு உறங்கி போனால்… தூக்கம் கலைந்து கண் முழித்த தென்றல் மணியை பார்க்க அது 5:30 என காட்ட அன்று எழில் இவளுக்கு பணீஸ்மெண்ட் என்று சொல்லி சொல்லிய அந்த வார்த்தைகளே நியாபகத்திற்கு வந்தது… இனிமேல் நீ 5டூ5:30குள்ள தூங்கி எழுந்திரிச்சுடனும் எழுந்திரிச்சு குளிச்சு ரெடி ஆகி நேரா சமயல்கட்டுக்குள்ள போய் எனக்கு செம்மையா டேஸ்டா பிரேக் பாஸ்ட் ரெடி பண்ணனும் ….. என்று அவன் சொன்னதை நினைத்தவள்..உமா சொன்ன மாதிரி இதெல்லாம் ஒரு பனீஸ்மெண்ட்டா .. கல்யாணம் ஆகி போற எல்லா பொண்ணும் பன்ற வேலைதான இது பட் இவன் எதுக்கு இத போய் பனீஸ் மென்ட்டா எனக்கு கொடுத்திருக்கான்… ஒரு வேளை என்ட விளையாடி இருப்பானோ நம்மதா தப்பா புறின்ஞ்சிகிட்டமோ சே…
மனசாட்சி:பரவாவில்லையே தென்றல் நேத்து நா உண்ட பேசுனதுக்கு அப்பறமா கொஞ்சம் தேரி இருப்ப போல….தப்பா யோசிக்காம நல்ல விதமா யோசிக்க ஆரம்பிச்சுட்ட…குட்.. இப்படிதா இருக்கணும்…
தென்றல்:ஹே ஒழுங்கா ஓடிரு இல்ல உத வாங்குவ
என்று சொல்லி சிர்த்துகொண்டவள்..எழிலை தொட்டு பார்க்க காய்ச்சல் நேற்றைய நிலமைக்கு இன்று பரவா இல்லாமல் சற்று குறைந்து இருந்தது… அவனை பார்த்து சிறு புன்னகையை சிந்தியவள் குளிக்காமல் கிச்சனுக்குள் மட்டும் போன பனிஸ்மென்ட் வேற மாதிரி இருக்கு என்று எழில் சொன்னது நியாபகத்துக்கு வர அவனை பார்த்து குறும்பாக முறைத்தவள் வேகமாக குளித்து விட்டு கிச்சனுக்குள் சென்று அவனுக்கு&
சப்பாத்தி ராகி இட்லி செய்து இரண்டுக்கும் ஏற்றார் போல் குருமா செய்து எழிலை எழுப்புவதர்காக மேலே செல்ல அங்கு அவனை கட்டிலில் காணவில்லை..
அவனை சுற்றி முற்றி தேட அப்பொழுது துண்டால் தன் முகத்தை துடைத்து கொண்டே வாஷ் ரூமில் வெளியே வந்தான் எழில்…
தூங்கி எழுந்த எழிலுக்கு நேற்று மயங்கி விழுந்தது மட்டுமே மனதில் இருக்க தான் எப்படி இங்கே வந்தோம் தலைல தைலம்ல்லா தேச்ச மாதிரி இருக்கு…என்று யோசித்தவன்..இரவு தென்றலிடம் தலை வலிக்குதுண்ணு சொன்னது அவகிட்ட அம்மா நியாபகம் வருதுன்னு சொன்னது இது எல்லாம் மனசுக்குள்ள வந்து வந்து போக எதோ கனவு மாதிரி இருக்க இது நிஜமா பொய்யா..நம்ம அவகிட்ட நேத்து பேசினோமா சே சே கண்டிப்பா பேசிருக்க மாட்டோம் நம்மதா அவள் மேல கோவமா இருக்கோமே..என தென்றல் தந்தை விஜயன் சொன்னதை தன் மனதிற்குள் நினைத்து கொதித்தெழுந்தவன்…கண்டிப்பா இது கனவாதான் இருக்கும் என்று நினைத்தவன் தென்றல் மாடி படியில் ஏறி வரும் கொழுசொலி சத்தம் கேட்டு நேராக வாஷ் ரூமிற்குள் சென்று கதவை சாத்தி கொண்டான்….
அவன் வாஷ் ரூமில் இருந்து வெளியே வருவதை பார்த்த தென்றல் அவனிடம்
எழுந்திருச்சுடீங்களா எழில்?? இப்போ எப்படி இருக்கு பரவா இல்லையா ஃபீவர்???
முகத்தை துடைத்தவரே அவளை ஒரு பார்வை மட்டும் பார்த்த எழில் பதில் எதும் பேசாமல் மீண்டும் துண்டை வைத்து தன் கைகளில் இருந்த தண்ணீரை துடைக்க ஆரம்பித்தான்…
அவன் பார்வையின் அர்த்தம் புரியாத தென்றல்
என்ன நா கேட்டுகிட்டு இருக்கே எதுவுமே பேசாம அமைதியா இருக்கீங்க..சரி வாங்க ப்ரேக் பாஸ்ட் ரெடி பண்ணிட்டேன்.. சாப்பிட்டு அப்படியே டேப்லட் சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடுங்க..வாங்க சாப்பிட போலா…
எழில் தன் கோவத்தை அடக்கியவாரே எனக்கு வேணாம் நீ போய் சாப்பிடு…
அட என்ன போலீஸ் நீங்க சாப்பிடாம இருந்து ஏற்கனவே உடம்ப கெடுத்துகிட்டது பத்தாதா..வாங்க போலிஸ் போய் சாப்பிட்டு வந்திடலாம்..என்று சொல்லி அவன் கையை பிடித்து இழுக்க
ஏய் கைய விடுடி … நாந்தா சாப்பாடு வேனாமுண்ணு சொல்றேன்ல அப்பறம் எதுக்கு உயிர வாங்கி தொலையுற.. பெருசா வந்துட்டா எதோ அக்கரை இருக்க மாதிரி… என்று அவன் கத்த அவன் கோவத்தில் பயந்து போன தென்றல் அங்கிருந்து கிளம்பி கீழே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு அழ தொடங்கினாள்..
அவள் கண்ணில் வழிந்த கண்ணீரோடு கோவமும் சேர்ந்து வந்தது…அவள் மனசாட்சியை தன் கோவம் தீறும் அளவிற்கு திட்டி தீர்த்தாள்…
நேத்து என்ன சொன்ன … என்னமோ பெருசா டயலாக்ஸ்ல்லா விட்ட இப்போ பாத்தியா அவன் எப்படி பேசுனான்னு நீயும் கேட்டிருப்பீல ….இனிமேல் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்து என்ட்ட வந்து பேசுன அப்பறம் இருக்கு உனக்கு..என்று யோசித்தவல் கண்கள் மூடி அப்படியே தூங்கி போனால்…
10மணி ஆன போது காலிங் பெல் சத்தம் கேட்டு தன் கண்ணில் வழிந்த காய்ந்து போய் தடமாக மாறி இருந்த கண்ணீரை துடைத்து கொண்டு வெளியே சென்று கதவை திறக்க அங்கு ராம்தான் எழிலை செக் பண்ணுவதற்காக வந்திருந்தான்..
வாங்கண்ணா வாங்க……
ஹாய் தென்றல்…. எங்க அவன் ?? இப்போ எப்படி இருக்கு ஃபீவர்??
ஹ்ம்ம் இப்போ பரவாயில்லைண்ணா.. மேல ரூமிலதான்னா இருக்காரு…
ரூம்ல இருக்கான ஓகே வா போய் பாக்கலாம்… ஆமா மார்னிங் டேப்லெட் சாப்பிட்டானா ?
இல்லன்னா…
டேப்லெட் சாப்பிடலையா?? ஏ ??
மார்னிங் ப்ரேக் பாஸ்ட் ரெடி பண்ணி சாப்ட கூப்பிட்டா வேண்டா சொல்லிட்டாரு…
சாப்பாடு வேணாம் சொன்னானா?? என்ன நினச்சுகிட்டிருக்கான் அவ?
இருவரும் பேசி கொண்டே ரூமிற்கு செல்ல எழில் அங்கு தூங்காமல் எதயோ யோசித்தவாரு படுத்திருந்தான்
டேய் என்னடா சாப்பாடு வேணாம் சொன்னியாம்?? எதுக்கு?? ஃபீவர் எப்படி இருக்கு??
இப்போ பரவா இல்லடா…பசி இல்ல அதான் சாப்பிடல
டேய் ஆல்ரெடி சாப்பிடாம இருந்துதான் இப்படி ….. சோ ஒழுங்கா சாப்பிடு இல்ல மவனே உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது … சரி ஓகே திரும்பி படு நா இஞ்செக்சன் போடணும் என்று ராம் சிரித்து கொண்டே சொல்ல
டேய் மச்சான் ஒரு இம்பார்ட்டன்ட் கால் வருது நா பேசிட்டு வந்துறே என வராத போனை எடுத்து காதில் வைத்து அங்கிருந்து காய்ச்ச்லினால் வந்த கை கால் வலியின் காரணமாக தட்டு தடுமாறி வெளியே ஒடினான் எழில்… அதை பார்த்து வயிறு வலிக்கும் அளவிற்கு ராம் சிரிக்க தென்றல் ராமை புரியாமல் முழிக்க பின் அவனிடமே கேட்டு விட்டாள்..
அண்ணா இப்போ எதுக்கு இப்படி சிரிகிறீங்க.. அவர் கால் வந்துதான பேச போகியிருக்காரு அதுக்கு போய் இப்படி சிரிக்கிரீங்க என்னாச்சுன்னா…
அய்யோ தென்றல் தென்றல் ஹா….. ஹா… ஹா… அவன கவனிச்சியா தென்றல் வராத போனை எடுத்து காதுல வச்சிட்டு ஒடுறா..
தென்றலும் அப்பொழுதுதான் யோசித்தாள்.
ஆமால்ல போன் ரிங் ஆகவே இல்ல.. கால் வராத ஃபோன எடுத்து காதில வச்சுக்கிட்டு யார்க்கிட்ட பேச இந்த ஓட்டம் ஒடுறாருன்னா…
தென்றல் உன்னால இன்னுமா கெஸ் பண்ண முடில அவனுக்கு ஊசினாலே பயம்… சின்ன வயசுல இருந்தே ஊசி போடணுமுன்னாலே ஒரே அழப்பரைய கூட்டிருவான் .நேத்து நைட்டு சார் மயக்கத்துல இருக்கப்போ இஞ்செக்ஸன் போட்டதுனால உனக்கு எதும் தெரியாம போச்சு இல்லன்னா நேத்து நைட்டே இந்த மேட்டர் உனக்கு தெரிஞ்சிருக்கும் இப்போ கூட நீ இங்க இருக்கீல அதா உன் முன்னாடி மானம் போகிட கூடாதுன்னு வெளிய ஓடிட்டா… இல்லைன்னு வை நா மட்டும் இங்க இருந்திருந்தேன் இன்னியாரம் என்ன போட்டு அடி பின்னி வெளிய துரத்திருப்பான்…சின்ன வயசுல டாக்டர் கூடயே இன்ஜெக்ஸன் போட கூடாது இல்ல நா சாப்பிட மாட்டேன்னு சொல்லி சார் போராட்டலா பண்ணி இருக்கானா .. ஸ்ரீ சொல்லி இருக்கா …
அய்யோ அண்ணா சூப்பர் மேட்டர் அண்ணா .. உடனே அவர பிடிச்சு இங்க இழுத்துட்டு வாங்கன்னா .நா கூட ஊசி போடணும் திரும்பிக்கோ சொன்னது ரூம்ல இருந்து வெளியே போகிடலாம்னுதான் நினச்சே. பட் நீங்க இப்போ இப்படி ஒரு மேட்டர் சொல்லி இருக்கீங்களா சோ நா போக மாட்டேன்… இருந்து என்னால சேட்டதனம். நடக்குதுன்னு பாக்க போறேன் சீக்கிரமா போய் அவர இங்க இழுத்துட்டு வாங்க….
பின் ராம்,… தென்றல் அங்கு இருப்பதால் தனக்கு எதும் அடி விலுகாது என்ற குருட்டு தைரியத்தில் அவனை பிடித்து வம்பாக இழுத்து வர அவனை விட சொல்லுமாறு போராட்டம் செய்து கொண்டே வந்த எழில் தென்றல் அங்கு ஹாயாக சுவற்றில் சாய்ந்து நின்றிப்பதை பார்த்து திரு திருவென முளித்தவன் மெதுவாக ராம் காதில் மட்டும் கேட்குமாறு முனு முனுத்தான் அது அவள்காதிலும் கேட்டு விட்டதோ என்னவோ..
அண்ணா என்னாலைல்லாம் இங்க இருந்து போக முடியாது … நா இங்கதா இருப்பேன்…
ஹே லூசு நீ முத வெளிய போடி …இங்க என்ன வித்தையா காட்டுராங்ங போக மாட்டேன்னு அடம் பிடிக்குரவ இப்போ போக போரியா இல்லையா…
ஹலோ ஹலோ இந்த வாடி போடின்னு மிரட்டி உருட்டுர வேலையெல்லாம் என்கிட்ட வேனாம்… என்னால போக முடியாதுன்ன போக முடியாது.. என்னவா காலைல திட்டின நல்லா அனுபவி என தன் மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டே வீம்பாக அவன் அருகில் வந்து நின்று கொண்டால்..
எழிலோ இவள் கரராக பேசியதை பார்த்து ராமிடம் மச்சா இடுப்புல ஒன்னும் ஊசி போட வேணாம்.. கைல போடு
டேய் இது கொஞ்சம் பவரான இன்ஜெக்சன் சோ அதற்குள் எழில் அவனிடம் சைகயால் கணகளால் கெஞ்சி கொண்டே நீங்க மூடிட்டு போடுங்க என்பது போல் பாவனை செய்ய அதை பார்த்து தென்றல் சிரிக்க ராமோ இவ ஊசி போட ஒத்துகிட்டதே பெருசு என மனதில் நினைத்தவாரு அவனுக்கு ஊசியை போட இரண்டு முறை ஊசி போடும் முன்னே கத்தியவன் தென்றல் அவனை பார்த்து கேலியாக சிரிப்பதை பார்த்தவன் வாயை தன் கைகளாலேயே மூடி கொள்ளவும் ராம் அவனுக்கு ஊசியை போட பயத்தில் அருகில் இருந்த தென்றலின் கைகளை இருக பிடித்து கொண்டவன் ராமை
விடுடா டேய் டேய் விடுடா என இரூமுறை கெஞ்ச அவன் எதையும் காதில் வாங்காமல் ஊசி போட்டு கொண்டிருக்க ராமின் தோளை பிடித்து கடித்து வைத்து விட்டான் எழில்…
பாவம் லேசாக அசைத்தாலும் உள்ளே சென்ற ஊசி நெளிந்து உடைந்து விடுமே என்று நினைத்தவன் கஷ்ட பட்டு வேகாமாக ஊசியை போட்டுவிட்டு அவனை தள்ளி விட்டான்..
டேய் டேய்… ஏண்டா எறும மாதிரி வளந்திருக்கீல ஒரு ஊசி போட்டுக்க உனக்கு என்ன வலிக்குது
ம்ம் நீ ஊசி போட்டீல என் கை அங்கதா வலிக்குது…
டேய் எதாச்சும் பேசுன வாயிலயே ஊசிய எடுத்து குத்திருவே பாத்துக்கோ..இந்த கடி கடிச்சு வைக்கிற நாயே …ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…… ஆ …ஆ…ஆ….. அம்மா வலிக்குதே உன்ன…
எழில் முகத்தை பாவமாக வைத்திருக்க ராம் வலியில் கத்த இருவரையும் பார்த்த தென்றல் விழுந்து விழுந்து சிரித்தாள்…
அதெப்படிடா ஊசி போடுரப்போ உன் பொண்டாட்டி கைய இருக்கமா பிடிச்சுகிட்ட என் கைய கடிச்சு வச்சிட்ட… விவரமான ஆளுதான்டா நீ.. இன்னும பிடிச்ச கைய விட்டிருக்கானா பாரு என ராம் தன் கைகளை தேய்த்து கொண்டே அவர்கள் இருவர் கைகளையும் பார்த்தவாரு கேட்க… தன் கையை எழில் பிடித்திருப்பதை அப்பொழுதே உணர்ந்த தென்றல் வேகமாக தன் கையை எடுத்து கொண்டாள்….
இவன் கைய பிடிச்சது கூடவா தெரியாத அளவுக்கு சொரன இல்லாம இருப்ப தென்றல் என அவள் மனசாட்சி நக்கலான ஒரு கேள்வி கேட்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவளும் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ராம் பக்கம் திரும்பி கொண்டாள்
தென்றல் நா சொன்ன மாதிரி நேத்து தலைல ஈர துணி வச்சு எடுத்தியா ….
ஹ்ம்ம் பண்ணே அண்ணா.. பட் ரெண்டு தடவதான் பண்ணேன் தல மட்டும் ரொம்ப வலிக்குது கண்ணெல்லாம் எரியுதுண்ணு சொன்னாரா அதா ஈர துணிய அடிக்கடி வச்சுட்டே இருந்தா தல ரொம்ப வலிக்கும்னு விட்டுடே….
ஓஹ் ஓகே தென்றல்… விடு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… நா இப்போ தலவலிக்கும் சேத்தே டேப்லெட் கொடுத்துட்டு போறேன்… தலை வலி இருக்காது…. இன்னிக்கு நைட்டு ஒரு தடவ ஈர துணி வச்சி எடு.. இன்னும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு டியூட்டி போக வேணாம் லீவ் போட சொல்லிரு… ஒகேவா
ஹ்ம்ம் ஓகே அண்ணா..
ஹ்ம்ம் சரிமா.. அவன இப்போவாச்சும் சாப்ட சொல்லிட்டு இந்த டேப்லட் போட சொல்லுமா
இல்லன்னா நா சொல்ல மாட்டேன் நீங்களே உங்க பிரெண்ட சாப்ட சொல்லுங்க என்னால முடியாது
ஏ என்னாச்சு ….
தென்றல் பதில் எதும் சொல்லாமல் லேசாக கண்கள் கலங்கியவாரு எழிலை கோவமாக பார்த்து நிற்க அவள் பார்வை செல்லும் திசையை பார்த்த ராமும் எழில் முகத்தை பார்த்தவாறே
என்னாச்சு தென்றல் என்று கேட்க தென்றல் காலையில் நடந்ததை பிசிறு தட்டாமல் ஈ அடிச்சா காப்பி போல் நடந்த எல்லாத்தையும் சொல்ல… அதை கேட்டு ராம் அவனை முறைக்க பட் எழில் இவர் இருவர் பேச்சையும் கேட்காமல் தென்றல் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்…
தென்றல் ராம்கிட்ட நேத்து நைட்டு அவனுக்கு ஈர துணிய தலைல வச்சி எடுதேண்ணா அப்படீன்னு சொல்லவும் அதை கேட்ட எழில் அப்போ காலைல எனக்கு தோனுனது எல்லா உண்மையா… நா கணவுண்ணு நெனச்சே.. பட் அது உண்மை .. அவ எனக்கு தைலம் தேச்சு விட்டுறுக்காளா… என்ன அம்மா பாத்துகிட்ட மாதிரியே நைட்டு என்ன பாத்துகிட்டாளா… அவகிட்ட அம்மா நியாபகம் வருதுன்னு சொல்லி ஃபீல் பண்ணிருக்கேன்..அவ மடில படுத்து தூங்கினேனா…. என்று இரவு நடந்த அனைத்தையுமே தன் மனதில் நினைத்து அதையெல்லாம் நிஜம் என்று உறுதி படுத்தியவன் சே இது எதயும் தெரியுமா மாமா சொன்னத நினைச்சுகிட்டு இருந்துட்டு அவ மனச கஷ்ட படுதிட்டேனே என்று வருந்தியவன் மீண்டும் நேற்று இரவு நடந்த அந்த நிகழ்வுகளை மனதிற்குள் சந்தோசத்துடன் அசை போட்டு கொண்டே அவள் முகத்தை பார்த்தவாறு நின்றிருந்தான்…
டேய் உண்ணத்தாண்டா டேய் நா பேசுறது உனக்கு காதுல விழுதா இல்லாயா???
என்னடா வேணும் உனக்கு இப்போ எதுக்குடா இப்படி கத்திட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க???
என்னது டிஸ்டர்ப் பன்றேன்னா… எரும எதுக்குடா தென்றல திட்டின .. அவ சாப்டதான்ன கூப்பிட்ட அதுக்கு போய் அவள இப்படி எல்லாம்திட்டுருக்க?? உனக்கு அறிவு இருக்கா??
என்னாது நா திட்டுனேனா?? நா எப்படா திட்டுனே ??
டேய் சாப்ட கூபிட்டதுக்கு வராம அவள திட்டுனேனு இப்போதானடா உன் கண்ணு முன்னாடி அவ சொன்னா ??
டேய் அவ பொய் சொல்ராடா
பொய் சொல்லுறாளா?? தென்றல்….இவ என்னமா இப்படி சொல்றான்
அய்யோ அண்ணா அவன்தான்னா பொய் சொல்லுரான்..டேய் நீ என்ன திட்டல உண்மைய சொல்லு உண்மைய சொல்லு என்று அவன் சட்டை காலரை பிடித்து தென்றல் மிரட்ட ..
டேய் மச்சான் என்னடா இவ பொசுக்குண்ணு உண்ண போடா வாடான்னு சொல்லிட்டா…
டேய் என் பொண்டாட்டி என்ன சொல்றா உனக்கு என்ன…. ஏ என் தங்கச்சி சீதாகிட்ட கூட எத்தன தடவ நீ தர்ம அடி வங்கிருக்க நா எதாச்சும் சொல்லி இருக்கேன்னா… அப்படிதாண்டா இதும் என் பொண்டாட்டி என்ன போடா சொல்லுவா வாடா சொல்லுவா டார்லிங் சொல்லுவா உனக்கு எங்க எரியுது என்று அவன் காதுக்குல் சொல்ல …
ராமும் அவனிடம் மிகவும் அமைதியாக மச்சான் என்னடா இப்படி பொண்டாட்டிதாசனா மாறிட்ட …
ஈ ஈ ஈ ….ஈ ஈ ஈ……… எழில் ராமை பார்த்து சிரிக்க
கோவமான தென்றல் மீண்டும் அவன் சட்டை காலரை உழுக்கி
டேய் என்னடா பல்ல காட்டிக்கிட்டு நிக்கிற.. நீ என்ன திட்டுனதானடா….
தன் சட்டையை பிடித்திருந்த தென்றலின் இரு கைகளையும் தன் இரு கைகளாலும் பிடித்த எழில் ..
என்ன செல்லம் நா எப்போ உண்ண திட்டினே எனக்கு கையெல்லாம் ரொம்ப வலிக்குது என்னால சாப்பாட எடுத்து சாப்பிட முடில அதுனால நீ ஊட்டி விடுனுதான சொன்னேன்… நீதான முடியாதுன்னு சொல்லிட்டு கீழ போன…
டேய் பாவி … பாவி இப்படி அண்ட புழுகு புழுகுறியேடா… அண்.. அண்ணா..அண்ணா இவ பொய் சொல்றான் நம்பாதீங்க..இவ என்ன நிஜமாவே திட்டினாண்னா இப்போ பொய் சொல்றான்..
ஹே நா எங்கடி பொய் சொல்றே நீதா பொய் சொல்லுற..
இந்த பாருடா போடி வாடின்னு சொன்ன
என் பொண்டாட்டிய நா போடி வாடீண்ணு சொல்லுவே உனக்கு என்ன???
நீயும்தா என்ன ஒரு அசிஸ்டன்ட் கமீஸ்னருண்ணு கூட பாக்கமா போடா வாடா சொல்லுற நா எதாச்சும் சொன்னேனா…
ஹா ஹா அசிஸ்டன்ட் கமீஸ்னரா.. ஒரு சின்ன ஊசிக்கு போய் பயப்படுற நீ… நீங்க … ஹா ஹா….
டேய் ராம் இங்க பாருடா .
எங்கடா பாக்க நீங்க பன்ற இந்த கூத்தவா.. எப்பா என்னால முடிலடா…நா முதல்ல கிளம்புறேன் நீங்க அப்பறமா என்ன கூத்து வேணும்னாலும் பண்ணுங்க…
டேய் டேய் போரதுதான் போற அதுக்கு முன்னாடி இவள எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு என்ன சாப்ட வைக்க சொல்லிட்டு போ எனக்கு கை வலிக்குது என்னால சாப்பாட எடுத்து சாப்பிட முடியாது… சோ….
சோ..என்னடா சோ …. டேய் நா உனக்கு நண்பேண்டா என்ன போய் ..
டேய் டேய் நீ என் நண்பன் அதாண்டா உண்ட சொல்லி சொல்ல சொன்னேன் என் மேல உனக்கு அக்கறையே இல்ல போடா போ.. என்று அழுவது போல் பாவனை செய்ய..
டேய் போதும் நடிச்சது.. பாக்க முடில்ல இந்தாம்மா தென்றல் போமா இவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து ஊட்டி விடுமா இல்லன்னா இவ சாப்டவே மாட்டான்மா. .
என்னால எல்லாம் முடியாது..
பிளீஸ் தென்றல் ..
முடியாதுன்னா…
முடியாதா ..அப்போ எழில் சொன்னதுதான் உண்மை.. அவ உண்ண திட்டவே இல்ல நீதா பொய் சொல்லிற்க
அய்யோ அண்ணா இல்ல.. என்ன நம்புங்க
அப்போ அவனுக்கு ஊட்டி விடு அப்பதா நம்புவேன்…
சரி என்று முகத்தை சிறு பிள்ளை போல் தூக்கி வைத்து கொண்டே அவனுக்கு சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி விட….
கொஞ்ச நேரம் அங்கிருந்த ராம்
மச்ச நா கிளம்புறேன் டைம் ஆச்சு.. ஹாஸ்பிடல் போகனும் சோ நா கிளம்புறேன்.. நீ நல்லா ரெஸ்ட் எடு தென்றல் நா இன்னும் ஒண்ண முழுசா நம்பல சோ இவனுக்கு ஃபீவர் சரி ஆகுற வர இவனுக்கு நீயே ஊட்டி விடு சரியா ..
ராமை பார்த்து அவள் முறைக்க அங்கிருந்து ஜெட் வேகத்தில் கிளம்பினான் ராம்…
அவனை போன பின்னும் அவன் சென்ற திசையை பார்த்து முறைத்து கொண்டே எழில் கடைசி வாயை ஊட்டி விட அவன் அவள் கையை கடித்தவன் அவள் கையை விடவே இல்லை…
வலியில் கத்திய தென்றல் அவனை போட்டு அடித்து அவன் வாயில் இருந்து ஒரு வழியாக கஷ்ட பட்டு தன் கைய விடுவித்து அவன் தலையில் கொட்டி விட்டு அவனுக்கு மாத்திரைகளை முறைத்து கொண்டே எடுத்து கொடுத்து சாப்பிட வைத்து விட்டு அங்கிருந்த பிளேட் டம்ளரை எடுத்து கொண்டு கீழே செல்ல போனவளை பின்னிருந்து அணைத்தான் எழில் …
அவன் திடீர் அனைப்பு மற்றும் மிக அருகில் இருந்த அவனின் மூச்சு காற்று அவள் மேல் பட்டதில் பதறி போன தென்றல் தன் கையில் இருந்த பிளேட் டம்ளரை கீழே போட்டாள் …
அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனாய். அவள் பின்னிருந்தவாரே அவளது வலதுபுற தோல் மேல் சாய்ந்து பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டான்…அவனது வேகமான அந்த சூடான மூச்சு காற்றால் நிலை தடுமாறிய தென்றல் கை கால்கள் நடுங்க பின் தன் நிலை உணர்ந்து சுதாரித்தவள் தன் இடையை இரு கரங்கள் கொண்டு சுற்றி வலைத்திருப்பவனின் கைகளை தன் முழு பலம் கொண்டு எடுக்க முயல பாவம் பெண்ணவளால் அவனின் ஒரு விரலை கூட எடுக்க முடியாமல் மிக நீண்ட நேரமாக அசையாமல் கூட முடியாமல் இருக்கும் அவனின் அணைப்பில் திணறி போய் திகைத்து போய் தன் இரு கண்களை இருக மூடி நின்றாள் அவனின் அவள்……………..
************* எழில் தென்றல் வருவார்கள்