வேலை முடித்து மிகுந்த சோர்வுடன் வீட்டிற்கு வந்த எழில் தென்றலை பார்த்தும் பார்க்காதது போல் வீட்டிற்குள் செல்ல, உள்ளே சென்றவன் நான்கடி கூட முழுதாக செல்லாமல் மயங்கி கீழே விழுந்தான்… அதை பார்த்து பதறி போன தென்றல் அவன் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப அவன் கண் விழிக்கவே இல்லை …உடனே அவன் கன்னத்தில் நான்கு தட்டு தட்டியவள் அப்பொழுதுதான் அவன் உடல் முழுதும் அனலாக கொதிக்கவும் அவனுக்கு காய்ச்சல் என்பதை உணர்ந்து அவள் பதறி போனால்… பின் அவனை எவ்வளவு முயன்றும் எழுப்ப முடியாமல் போகவே… எழில் நண்பன் ராம் அவர்கள் இருக்கும் தெருவில்தான் இருக்கிறான் சென்னை வந்ததில் இருந்து அவன் மனைவி சீதா இவளின் நெருங்கிய தோழியாக மாறி விட்டாள்.. தென்றலுக்கு ராம் டாக்டர் என்ற விசயம் நியாபகத்திற்கு வரவே சீதாவிற்கு கால் செய்தவள் ராமை வீட்டிற்கு வர செய்தால்.. அவனும் நண்பனுக்கு உடல்நிலை சரி இல்லை என்பதை அறிந்து வேகமாக எழில் வீட்டிற்கு விரைந்தான் தான் இருக்கும் மருத்துவ மனையில் இருந்து… ராம் வீட்டிற்கு வரும் முன் எப்படியோ அவனை போட்டு தட்டி உழுக்கி அந்த நிலையிலும் அவன போட்டு படாத பாடு படுத்தி அறை குறையாக கண் முழிக்க வைத்து அவனை எழுப்பி நிற்க வைத்து தன் தோலின் மேல் அவன் கைகளை வைத்து அவனை தங்கள் அறைக்கு அழைத்து வந்தவள் அவனை கஷ்டபட்டு அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தாள்..
அவனை படுக்க வைக்கவும் ராம் வரவும் நேரம் சரியாகவே இருந்தது….பின் ராம் எழிலை செக் செய்து விட்டு இரண்டு ஊசிகளை போட்டு விட்டு தென்றலிடம் வந்தவன் அன்று இரவும் மறுநாள் காலையிலும் அவன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை கொடுத்துவிட்டு
தென்றல் இந்தா இந்த டேப்லெட்ஸ் இன்னிக்கு நைட்டும் நாளைக்கு காலைல எழுந்ததும் சாப்ட வச்சிட்டு கொடு…தென் நைட்டு தூங்கும் போது தலைல ஈரத்துணி வச்சு வச்சி எடுத்துவிடு… அவன் ஒழுங்கா சாப்பிடுறானா…
அடி ஆத்தி இவரு என்ன இப்படி கேகிராரு.. நா எதும் இவருக்கு சமச்சு தரல இவராதா எதோ சமைச்சு சாப்புடுவாரு நா ஒழுங்கா கவனிக்கல என்க்கு தெரியாது அப்படீன்னு சொன்னா நமக்கு ஆப்புதான் போல.. தென்றல் அவசரப்பட்டு எதையும் உலரிடாதடி உசாரு..
நல்லதா அண்ணா சாப்டுறாரு…
பாத்தா அப்படி தெரிலயே ரொம்ப வீக்கா இருகா அதா மயங்கி விழுந்திரிக்கா ..அதுவும் இல்லாம எதய்யோ நினச்சு திங்க் பண்ணிட்டே இருந்து ரொம்ப ஸ்டிரஸ்ல இருந்திருக்கா..
கொஞ்சம் ஹெல்த்தி ஃபுட்ஸா சாப்பிட வை தென் இவன் உடம்பு சரி ஆகுற வர எதயும் திங்க் பண்ண விடாம நார்மலா இருக்குற மாதிரி பாத்துக்கோ.. ஓகே??
ஹ்ம்ம் ஓகே அண்ணா நா பாத்துக்கிறேன்…
ஓகே தென்றல்.. நா கிளம்புறேன் மார்னிங் வந்து பாக்ரே…
ஹ்ம்ம்.. சரி அண்ணா..
தென்…தென்றல் நீ தப்பா நினைக்கலனா ஒன்னு கேக்குறேன்..
சொல்லுங்க அண்ணா
உனக்கு எழிலுக்கும் எதாச்சும் பிரச்சனையா… ஏன் நா அப்படி கேகுரேன்னா அஸ் எ டாக்டர் ஒரு பேசண்ட்ட பாத்ததும் அவங்களோட ஹெல்த் கண்டீசன பத்தி சரியா கெஸ் பண்ண முடியும் அத வச்சுத்தான் சொல்ரே எழில் கிட்டத்தட்ட இந்த ஒன் வீக் ஃபுல்லா அவன் ஒழுங்கா சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்ல சார் பயங்கர வீக்கா இருக்கா இப்போதீக்கு யார் வந்து அவனை அடிச்சாலும் அவனால திரும்பி அடிக்க கூட அவன் உடம்புல தெம்பு இல்ல அப்படி ஒரு நிலமைல அவன் இருக்கான் பட் நீ அவன் நல்லா சாப்பிட்டான் சொல்லுற இத வச்சே என்னால கெஸ் பண்ண முடியுது உங்க ரெண்டு பேருக்குள்ள எதோ பிரச்சன அப்படீன்னு மட்டும் எனக்கு தெரியுது சோ அப்படி நா சொல்ற மாதிரி எதாச்சும் பிராப்லன்னா அத நீதா சரி பண்ணனும் பட் அவன விட்டுட்டு மட்டும் போகணும் நினைக்காத பிகாஸ் அவன் உண்ண அந்த அளவுக்கு லவ் பண்றா.. அவனால உண்ண விட்டு இருக்க முடியாது.. சொல்ல போனா அவன் உண்ண லவ் பண்றத அவனே இன்னும் உணரல..
பட் நாங்க உங்க கல்யாணத்துக்கு முன்னாடி பேச்சுலர் பார்ட்டிலியே நானும் ஸ்ரீ யும் கெஸ் பண்ணிட்டோம் அவன் உண்ண எந்த அளவுக்கு லவ் பன்றாண்ணு நீதா புரிஞ்சு நடந்துக்கணும் ஒரு அண்ணனா உன்ட்ட சொல்லணும் தோணுச்சு சொல்லிட்டே.. சோ நீதா .. புரியும்ன்னு நினைக்குறே..நா வரே
ராம் அங்கிருந்து கிளம்பிய பின் என்னாது இந்த போலிசு நம்மல லவ் பண்ணுதா நம்புற மாதிரியா இருக்கு
சே சே இருக்காது… எங்க ரெண்டு பேருக்கும் ஆகாதுன்ன்றத எப்படியோ கெஸ் பண்ணவங்க எங்க நா இவர ஒழுங்கா பாத்துக்காம போனா ஃபீவர் அதிகமாகிடுமோ நினச்சு நா ஒழுங்கா அவர கவனிச்சுக்கணுமுண்ணு நினச்சுதா ராம் அண்ணா எதயோ உலரிட்டு போராரு போல் என மனதிற்குள் நினைத்தவள் பின் மயக்கத்தில் உறங்கி கிடந்த எழிலை ஒரு பார்வை பார்த்து விட்டு நேராக கிச்சனிற்குள் சென்று
செம்ம டேஸ்டா இட்லி வித் சாம்பார் அண்ட் தக்காளி சட்னி செஞ்சு எடுத்துட்டு வந்து அதை எழிலுக்கு அவளே ஊட்டி விட்டு மாத்திரையை சாப்ட வச்சிட்டு எழில பெட்ல படுக்க வச்சிட்டு கீழ போய் அவள் சாப்பிட்டு பிளேட் வாஷ் பண்ணி வச்சிட்டு ரூமுக்கு வந்து எழில் துங்கிட்டானா பாக்க அவன் துங்காம ரெண்டு கையையும் தலைல வச்சி கீழ குனிஞ்சு உக்கத்திருக்க
எழில் என்னாச்சு ஏ இப்படி உக்காந்திருக்கீங்க தூங்களியா.. உடம்புக்கு எதும் பண்ணுதா..என்று அவன் கண்ணத்திலும் கழுத்திலும் கை வைத்து பார்க்க அவன் காய்ச்சல் சற்றும் குறையவில்லை
அவள் கேட்க கேட்க அவன் பதில் எதும் பேசாமல் தலையில் கை வைத்தவாறு கீழே குனிந்து இருக்க அவன் அருகில் அமர்ந்த தென்றல் மெதுவான அக்கறை குரலில்
எழில் என்ன பாருங்க என்று அழைக்க அதில் நிமிர்ந்தவன் கண்கள் இரண்டும் கலங்கி இருக்க அதை பார்த்து பதரியவள்
எழில் என்னாச்சு ஏ அழுறீங்க…?? என்னாச்சு எழில்..?? சொல்லுங்க?? அதை பார்த்து எழில் மனதிற்குள் எனக்காகவா தென்றல் இப்படி பதருர என்று சந்தோசபட்டாலும் மூன்று நாட்களுக்கு முன் விஜயன் எழிலிடம் ஃபோனில் பேசியது நியாபகத்திர்க்கு வர அதில் கவலை அடைந்தவன் நீதா என்ன நம்பலீல பின்ன எதுக்கு எனக்காக இப்படி துடிக்குற… என்று நினைத்து கொண்டிருந்தவன் தென்றல் அவனை பிடித்து உழுக்கியதில் நினைவு வந்தவனாய்
ஹே ஹே தென்றல் ரிலாக்ஸ். ஒன்னும் இல்ல தலை பயங்கரமா தல வலிக்குது கண்ணு வேர ரொம்ப எரியுது அதா ஆட்டோமேட்டிக்கா கண்ணுல இருந்து தண்ணி வருது.. நீ ஒன்னு பதராத..
தல வலிச்சா எண்ட சொல்லலாம்ல இருங்க
நா தைலம் தேச்சு விடிறேன் நீங்க துங்குங்க… நல்லா ரெஸ்ட் எடுங்க…
தென்றல் எனக்கு எங்க அம்மாவா பாக்கணும் போல இருக்கு அம்மா நியாபாகமாவே இருக்கு.. அவங்க மடில படுத்து துங்கனும் போல இருக்கு ..நீ நீ…நீ தப்பா நினசுக்கலேனா உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா பிளீஸ் என்று கெஞ்சும் கண்களால் கேட்க அவன் பிளீஸ் என்று கெஞ்சியதில் உடைந்து போனவள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே
எழில் எண்ட போய் எதுக்கு பிளீஸ் அப்படீண்ணெல்லாம் …நீங்க படுத்துக்கோங்க என்று அவனை தன் மடியில் படுக்க வைத்தவள் அவனுக்கு தைலத்தை தேய்த்து விட்டு கட்டிலில் தலையணையை நிமிர்த்து வைத்தவள் அதில் சாய்ந்தவாறு அமர்ந்து தன் இரண்டு கைகளையும் எழில் மேல் வைத்து அவனுக்கு தட்டி கொடுத்தவாறு அமர்ந்திருக்க…
எழில் தன் மனதில் உள்ள பல கவலைகளை மறந்து எதோ தொலைந்து போன ஒன்று மீண்டும் கிடைத்ததாக நினைத்து சந்தோசத்தில் நிம்மதியாக உறங்கினான்…
ஆனால் தென்றல் மனம் அவளை உறங்க விடவில்லை அவளிடம் பல கேள்விகளை கேட்டு அவளை படாத பாடு படுத்தி எடுத்தது. அவள் மனதுடன் அவள் மிக பெரிய உரையாடலே நடத்தி கொண்டிருந்தாள்…
மனசாட்சி : என் மேடம் எதோ கவலையா இருப்பீங்க போல…
தென்றல்: அவரு எதுக்கு எண்ட பிளீஸ் அது இதுன்னு பேசுறாரு.. அவரு எண்ட்ட யாரோ மாதிரி பேசுனது ஒரு மாதிரி இருக்கு..
மனசாட்சி: தென்றல் அவர் கேட்டதுள்ள என்ன தப்பு??? உன்மேல அவருக்கு என்ன உரிமை இருக்கு??
தென்றல்: என் மேல என்ன உரிமை இருக்கா?? அவரு எனக்கு தாலி கட்டுன புருசன்…அந்த ஒன்னு போதும் என் மேல எல்லா உரிமையும் இருக்கு..அப்படி இருக்க என் மடியில படுத்து தூங்க எதுக்கு பர்மிஷன் கேக்கணும்.
மனசாட்சி: ஹா … ஹா.. என்னாது புருஷனா?? எல்லா உரிமையும் இருக்கா?? ஹே தென்றல் நீ என்ன லூசா?? இந்த மாதிரி டயலாக்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வாழ போறவங்க சொன்னா சரியா இருக்கு பட் நீங்கதான் டிவோஸ்வாங்கிட்டு அபி கடைசி ஆசய நிறைவேத்த போறீங்களே .. அப்படி ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கப்போ எப்படி தென்றல் இப்படியெல்லாம் பேசுற முடில என்னால உனக்கு மனசாட்சியா பிறந்து மீ ரொம்ப பாவம்…
தென்றல்: ஹலோ ஹலோ…உண்ண யாரு எனக்கு மனசாட்சியா பிறக்க சொன்னது?? அதுவும் இல்லாம எதோ டிவோஸ் வாங்கனும் அப்படீன்னு நா மட்டும்தான் நினைக்குர மாதிரி சொல்லுற??
மனசாட்சி: ஆமா அதான்னே உணமை..
தென்றல்:யார் சொன்னா?? எழில் ஆச கூட இதுதான்..
மனசாட்சி: எழில் அப்படி இதுவர உண்ட எதாச்சும் அப்படி டிவோஸ் பத்தி பேசி இருக்காரா??அவர் இந்த மாதிரி ஒரு தடவ கூட பேசனது இல்ல.. அன்னிக்கி கூட எதோ பேச வந்தவன எதுமே பேச விடாம நீயாதான் அவன்ட்ட நீங்க நினைக்கிற மாதிரி நம்ம டிவோஸ் வாங்கிடலாம் சொன்ன..அந்த மனுஷன் அப்படி எதாச்சும் உண்ட சொண்ணான.. ஏண்டி லூசு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கி பேசுற பேச்சா இது?? ஒரு வேளை அவரு வேர எதாவதுகூட பேச வந்திருக்கலாம்ல நீயா எதுக்கு தப்பா ஒரு முடிவு எடுத்துக்கிற.. இப்போ கூட பாரு ராம் அண்ணா உண்ட பேச்சுலர் பார்ட்டி லவ் அது இதுன்னு எதோ சொன்னாங்க பட் மேடம் எங்க காதுல வாங்குனீங்க … நீங்களா எதோ நினச்சுகிட்டீங்க ராம் அண்ணா சொன்னது பத்தி ஒரு நிமிசமாச்சு யோசிச்சு பாத்தியா…
தென்றல்:அது ..அது வந்து …
மனசாட்சி:ஹே என்ன வந்து போய் நா சொல்தரத நல்லா யோசி…
தென்றல்:ஹே போ போ நீ…நீ.. நீ என்ன குலப்பாத
மனசாட்சி:யாரு நா உன்ன குலப்புறேன்னா…. எப்பவுமே லூசுத்தனமா யோசிச்சு யோசிச்சு தப்பு தப்பா முடிவு பன்ற மூளைக்கு லைட்டா மருந்து அப்ளைபண்ணிருக்கேன்… லூசு
தென்றல்:ஹே……………………..
மனசாட்சி:என்ன???? இல்ல என்னான்னு கேக்குறே நா சொன்னதில என்ன தப்பு….. உன் மூளை எப்பவுமே மென்டல் மாதிரிதான முடிவு எடுக்கும்…..அப்படி இல்லனா நீ ஒரு தடவையாது அபி விசயத்த பத்தியும் உன்ட்ட இருக்க எவிடன்ஸ் பத்தியும் இவன்ட்ட சொல்லி இருக்காலாம்ல.. இவன் போலீஸ்தான?? ஏ சொல்லல?? எனக்கு தெரியும் தென்றல் உனக்கு எந்த போலீஸ் மேலையும் நம்பிக்கை இல்லைன்னு பட் இவன் உன் அப்பா பாத்து கல்யாணம் பண்ணி வச்ச பையன்.. கண்டிப்பா இவன் நல்லவனாதான் இருப்பான்.. அவனை பார்த்தா கூட ஒரு நல்ல நேர்மையான போலீஸ் அதிகாரி மாதிரிதான் தெரியுது…இவன் நல்ல அதிகாரியா இல்லாம இருந்திருந்தா இந்த சின்ன வயசுல இவனால அசிஸ்டன்ட் கமிஷ்னர் நிலைக்கு வந்திருக்க முடியுமா?? இதெல்லாம் ஏன் தென்றல் உன் மூளை யோசிக்கல??
தென்றல்:இந்த முறை தென்றலிடம் அமைதி மட்டுமே நிலவியது…பதில் வரவில்லை…
மனசாட்சி:என்ன அமைதியா இருக்க?? கொஞ்சனாச்சு யோசி… அவன பத்தி புரிஞ்சுக்க டிரை பண்ணு ஒரு வேளை ராம் அண்ணா சொன்னது கூட உண்மையா இருக்கலாம்.. சோ நல்லா யோசிச்சு பாரு ..அதுக்கு முன்னாடி அங்க எழில் எதோ தூக்கத்துல புலம்புக்கிட்டு இருக்கா அவனை போய் என்னனு பாரு நா கிளம்புறேன் டாட்டா…
இப்படி சில நேர மனசாட்சி போராட்டத்துக்கு பின் வெளி வந்த தென்றல் எழிலை பார்க்க…அவன் அவள் மனசாட்சி சொல்லிவிட்டு சென்றது போல் எதோ உலரி கொண்டிருந்தான்…
அம்மா அம்மா…. உன்ன பாக்கனும் போல் இருக்கும்மா..அம்மா..அம்மா…
என்னதான் போலீசா இருந்தாலும் தன் தாயின் பிரிவை தாங்காமல் தவிக்கும் ஒரு பிள்ளையாகவே அங்கு இருந்தான் எழில்
அவன் தூக்கத்தில் தன் தாயின் பிரிவை தாங்க முடியாமல் உலருவதை கண்டு கண் கலங்கியவல்.. எழில் ரிலாக்ஸ் கூல் கூல் என்று சொல்லி கொண்டே அவளை அறியாமலே அவன் கண்ணத்தில் தன் இதழ் பதித்தாள் தென்றல்..
பின் தன் நிலை கண்டு சிரித்தாள்.. நம்ம ஏ நம்ம மனசாட்சி சொன்னது பத்தி திங்க் பண்ணி பாக்க கூடாது….
மனசாட்சி:தென்றல் மேடம் அப்படி வாங்க வழிக்கு
தென்றல்:ஹலோ ஹலோ நா யோசிக்கிறேன்னுதான் சொல்லி இருக்கேன் ஓகேவா…
மனசாட்சி:இது போதுமே..அங்க பாரு அங்க பாரு உன் புருசன் மறுபடியும் எதோ புலம்ப ஆரம்பிச்சுட்டா…பாரு
அவள் இதழ் முத்தத்தில் அமைதியாக சிறிது நேரம் தூங்கிய எழில் புலம்பல் சத்தம் மீண்டும் கேட்டது
அம்மாவையும் மீராவையும் கொன்ற அவன் இப்போ உன்னையும் கொல்ல பாக்குரானா?? அவன உயிரோட விட மாட்டேன்… உன்னையும் என்ன விட்டு போக விட மாட்டேன்….நீ ஏ என்ன நம்பல???
இவன் உலரலை கவனித்த தென்றல் அட என்னடா இவன் எதோ டிசைன் டிசன்னா உலரிட்டிருக்கான் யாரு இவன நம்பல??? யார இவன் இவன விட்டு போக விட மாட்டான்?? ஆமா யாரு இந்த மீரா??? அவள் இவன் புலம்பலால் குழப்பத்தின் உச்சிக்கே சென்றாள்..
******எழில் தென்றல் வருவார்வார்கள்……
பிரண்ட்ஸ் மறக்காம இந்த எபி எப்படீன்னு கமென்ட்ல சொல்லுங்க ஃபிரன்ட்ஸ்😍😍