விஜயா தென்றல எழிலுக்கு டீ போட்டு எடுத்துட்டு வர சொல்லவும் எழில முறச்சிட்டே உள்ள போன தென்றல் அவன வார்த்தையாலியே பொறிஞ்சு தள்ள
டேய்..டேய் … எரும மாடு லூசு.. வாலு இல்லாத குரங்கு நா எதுக்குடா உனக்கு டீ போட்டு தரணும்..சார் மார்னிங் போட்ட சபதத்த இப்போ நிறைவேத்த பாக்குறீங்களோ உண்ண ..என்ன பண்றேன் பாரு நா போட போற இந்த டீய குடிச்சுட்டு..இனி வாழ்க்கை முழுக்க நீ டீயே குடிக்க மாட்டேன்னு முடிவு எடுக்கனும்….
ஹே தென்றல் என்னடி தனியா உலரிட்டு இருக்க…
வாடி உமா…இவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்ன டீ போட்டு தர சொல்லி இருப்பான்… அவன
ஹே என்னடி பன்ற டீயில போய் இத எதுக்குடி கொட்டுற
ஹே நீ சும்மா இருடி…
ஹே தென்றல் நில்லுடி போகாத…தென்றல்..இவள..அய்யோ இப்போ என்ன பண்றது…
இவள் கத்தி கொண்டே இருக்க அதை எல்லாம் காதில் வாங்காமல் டம்ளருடன் அங்கு வந்த தென்றல் டம்ளரை அவனிடம் நீட்ட… அதை வாங்காமல் தென்றல் எப்புடுடி உண்ண நா சொன்ன மாதிரி எனக்காக டீ போட வச்சேனா…என்பது போல் அவளை பார்க்க .அவன் டம்ளரை வாங்காமல் இருக்க ஸ்ரீ அவனிடம்
தென்றல் டம்ளர என்ட கொடுத்துட்டு கிளம்பு இல்ல அவ உண்ண ஊட்டி விடணும் சொன்னாலும் சொல்லிடுவா…
நீ வேர எதுக்கு ஸ்ரீ இப்படி எல்லாம் அவனுக்கு எடுத்து தர….என மனதிற்குள் நினைத்த தென்றல்.. பட் இப்போ மட்டும் நீங்க சொன்ன மாதிரி அவன் சொன்னா செம்ம அவன அப்படியே வச்சி செஞ்சுடுவே என்று நினைத்வாரு அவனை பார்த்து ஒரு கேலி சிரிப்பு சிரித்து விட்டு சென்றாள்..
மச்சா இந்தா குடி டீ செம்ம கலரா இருக்கு மசாலா டீ போல… குடி…..
எழில் ஸ்ரீ சொன்னதை காதில் வாங்காமல் தென்றல் சிரிப்பின் சூட்ச்சம் புரியாமல் அவளையே கேள்வியாக பார்த்து கொண்டிருந்தவன் தூரத்தில் நின்ற உமா அந்த டீ சாப்ட வேண்டாம் என்பது போல் சைகை காட்ட… எதோ தப்பா இருக்கு என்பதை புரிந்து கொண்ட எழில் ஸ்ரீ கிட்ட
மச்சா இந்த டீய நீயே குடி என் பொண்டாட்டி போட்ட டீ எப்படி இருக்கு குடிச்சு பாத்து சொல்லு.. ..
இல்லடா நீ குடி… உன் பொண்டாட்டி உனக்காக ஆசையா போட்டது.. சோ நீயே குடி…
இல்ல மச்சா நீ குடி
பாசக்கார பயன்… என்று ஒரு மடக்கு டீயை குடித்த ஸ்ரீ அடுத்து வாயை திறந்து கத்தும் முன் எழில் அவனை மச்சா வா உனக்கு கால் வருது என்று.. அவனை கத்த விடாமல் வாயை இருக மூடி அவனை வெளியே இழுத்து சென்று விட்டான்…
டேய் ……அம்மா…அம்மா… பண்ணி… சி …..தண்ணி….. ஹா நாக்கு… ஹா…எரியுதேயெப்பா..ஹா எரியுதே . .நாக்கு… நாக்கு…..மச்சா டேய் என்னடா உன் பொண்டாட்டிக்கு டீ போட தெரியாதாடா ….
ஏ மச்சா காரம் கொஞ்சம் தூக்கலோ…..
அப்போ உனக்கு தெரியுமாடா….டேய் நா பாவம் இல்லயாடா இப்படி கருணையே இல்லாம மிளகாய் பொடி போட்ட டீய என்ன குடிக்க வச்சிட்டியேடா…
அவன் பேசி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த விஜயா… ஸ்ரீ தம்பி இந்த டீய குடிக்காம அப்படியே வச்சிட்டு வந்துட்டீங்க….
அய்யோ ஆன்டி…டீ குடிச்சா நாக்கெரிச்சலுண்ணு புதுசா ஒரு நோய் வருதா இப்போதா வோர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேசன்ல இருந்து கால் பண்ணி சொன்னாங்க.. அதுனால அந்த டீய யாரையும் குடிக்க விடாம குழி தோண்டி புதச்சிடுங்க…. எப்பா சாமி வாடா இங்க இருந்து ஒடிடலாம் என சொல்லி எழிலை அங்கிருந்து இழுத்து செல்ல..
அதையெல்லாம் மறைந்து நின்ற பார்த்து வயிற்றை பிடித்து சிரித்து கொண்டிருந்த தென்றல் சே மிஸ் ஆகிடுச்சு…பட் இப்போ நா யாருன்னு அவனுக்கு புறின்ஞிருக்கு இனி எண்ட வால் ஆட்ட மாட்டான்..என தனக்கு தானே பேசி கொண்டிருக்க..
ஹே தென்றல் என்னடி நினச்சிட்டுறுக்க உன் மனசுல. எதுக்குடி இப்படி பண்ண???லூசு
உமா இவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்ன டீ போட்டு தர சொல்லி இருப்பான்…அதா அப்படி பண்ணேன்…
ஹே அண்ணா உன்னோட ஹஸ்பன்டுடி அந்த உரிமைலதானடி கேட்டாரு…அதுவும் இல்லாம உன் மேல இருக்க லவ்வுலத உண்ண போட்டு வர சொல்லி இருக்காரு….
என்னாது லவ்வா…ஹே போடி அவனுக்காச்சு என் மேல லவ் மண்ணாகட்டியாச்சு… அதெல்லா ஒரு காலமும் வராது வரவு விடமாட்டேன்.. சோ நீ சொல்ரதுலாம் ஒன்னும் இல்ல என்ன நடந்துச்சுண்ணு தெரியாம பேசாத…
என்ன நடந்துச்சு…சொண்ணாதானடி தெரியும்…
என்ன நடந்துச்ணா…தென்றல் நேத்து நைட்டு நடந்ததுல இருந்து.இப்போ வர எல்லாத்தையும் சொல்ல
பின்ன நீ பண்ண வேலைக்கு உனக்கு பணிஷ்மெண்ட் தராம என்ன பண்ணுவாங்களா …யாராச்சும் கல்யாணம் முடிஞ்சு முழுசா ஒரு நாள் கூட முடியரதுகுள்ள டிவோஸ் அப்ளை பண்ணலாம் சொல்லுவாங்கலா …எண்ணலா கேட்டா அண்ணன் உனக்கு கொடுத்து இருகுறதுக்கு பேரு பணீஸ்மெண்டே கிடையாது… கல்யாணம் ஆகி போன ஒவ்வொரு பொண்ணு தன் கணவன் வீட்ல பன்ற வேலைதான் இதெல்லாம்… இத ஒரு பொண்ணு கடமைன்னு கூட சொல்லலாம் அப்படி இருக்கப்போ இதுக்கு போய் நீ எதுக்குடி இவளோ சீரியஸா எடுத்துக்குற… அண்ணா சும்மா உண்ட விளையாடி இருப்பாறுடி… எனக்கென்னமோ அவர் இப்படியெல்லாம் சின்ன பிள்ளை தனமா பண்ணிருக்கத பாத்த அவரு உண்ண லவ் பன்றாருண்ணுதான் தோணுது…கொஞ்சம் அவர புரிஞ்சுக்க ட்ரை பண்ண தென்றல்
ஹே போடி நீ என்ன லூசா கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கும் எனக்கும் எவ்ளோ ஏகா பொருத்தமா இருக்கும் தெரியும்ல அப்படி இறுக்கப்போ அவன் எப்படி என்ன லவ் பன்றான்னு சொல்டர அவ என்ன கஷ்ட படுத்தி பாக்கணும்ன்றதுக்காகதாண்டி உமா இதெல்லாம் பன்றா சோ நீ என்ன சொன்னாலும் என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியாது
இதெல்லாம்னா??
இதெல்லாம்னா .. இந்த கல்யாணத்தை…
என்னடி சொல்ர….
எஸ் உமா..நா டிவோஸ்க்கு அப்பிளை பண்ண போறேன் பண்ணிட்டு அபி கடைசி ஆசைய நிறைவேத்த நா ஜாரனளிசம் படிச்சு முடிச்சு அந்த பாவிங்கல கண்டிப்பா பலி வாங்காம விட மாட்டேன்…அதுவும் இல்லாம உமா நா மாப்பிள்ளை யாருன்னு கூட கேக்காம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டது கூட வர போற பையங்கிட்ட பேசி விவாகரத்து வாங்கிடலாம்ன்ற நம்பிக்கைலதான்… பட் மாப்பிளையா எழிலே இருப்பாருனு நா கொஞ்சம் கூட நினச்சு பாக்கல பரவா இல்ல அவர் இருக்கது நல்லதா போச்சு அவருக்கு என்ன சுத்தமா பிடிக்காது சோ ஈசியா டிவோஸ் கிடாச்சிடு… நானு அபி ஆசைய நிறைவேத்திடுவேன்..
ஹே என்னடி பெரிய இவ மாதிரி பேசிட்டு இருக்க .. கூட பிறந்த தங்கச்சி எனக்கு என் அண்ணன் மேல இல்லாத அக்கறை உனக்கு எதுக்குடி… நீ யாருடி அவன் கடைசி ஆசைய நிறைவேத்த…
என்ன சொன்ன உமா இப்போ நீ என்ன சொன்ன..அபிக்கு நா யாருன்னு உனக்கு தெரியாதா எனக்கு அவன் மேல உரிமை இல்லையா… நீ என்னடி சொல்றது…நா அப்படிதா பண்ணுவே…அபி ஆசையை நா கண்டிப்பா நிறைவே…அவள் பேசி முடிக்கும் முன் உமா தென்றலை அறைந்திருந்தாள்..
ஹே நிருத்திடி இன்னொரு தடவ இனிமே டிவோஸ் அபி ஆசையை அது இதுன்னு பேசிட்டு வந்து என் மூஞ்சில முளிச்சிடாதா என்று சொல்லிக் கொண்டே உமா அங்கிருந்து செல்ல தென்றல் கலங்கிய கணகளுடன் அங்கயே நிற்க…
தான் விட்டு சென்ற மொபலை எடுப்பதற்காக அங்கு வந்த எழில் இவர் இருவர் பேசியதையும் கேட்டு விட்டு அமைதியாக அங்கேயே நிற்க பின் ஸ்ரீ வந்து அழைக்கவும் அவனுடன் அங்கிருந்து நகன்றான … ஒருவழியாக அன்றைய மறு வீடு என்ற சம்பிரதாயம் முடிந்து வீட்டுக்கு வந்த எழில் தென்றலிடம் எதும் வாயாடமல் ஒன்றிரண்டு வார்த்தை மட்டும் அவ்வபோது பேசி விட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தான் காரணம் அன்று உமவுடன் தென்றல் பேசையதை கேட்டுதான் .. பின் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் விருந்து என சொந்தங்கள் வீட்டிற்கு சென்று அந்த வாரத்தை கடத்த பின் எழிலின் டிரான்ஸ்ஃபர் காரணமாக தென்றல் எழில் இருவரும் சென்னை கிளம்பி வந்தனர்……
ஹலோ ருத்ரன்….
யா சங்கர் டெல் மீ….
ருத்ரன் ஐ ஹேவ் ஒன் குட் நியூஸ் அண்ட் ஒன் பேட் நியூஸ்…நம்ம அனுப்புன லோட் எல்லாம் பார்டர் தாண்டி போய்டுச்சு..அதுக்கான டாலர்ஸ் எல்லாம் அக்கவுண்ட்ல டிரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு
யா மிஸ்டர் இது எனக்கு ஆல்ரெடி தெரிஞ்ச ஓல்ட் நியூஸ்.. சோ இட்ஸ் நாட் நியூ நியூஸ்…. நெக்ஸ்ட் அந்த பேட் நியூஸ் என்ன
எழில் எழில்…எழில்..
என்ன மேன் எழில் எழிலுன்னே அவன் பேரா சொல்லி உலறிகிட்டே என்ன டென்ஷன் ஆக்காத… ஓகே…
யா ருத்ரன்… அந்த எழில் இப்போ சென்னைக்குதா டிரான்ஸ்ஃபராகி வந்திருக்கான்…அதுவும் நீங்க இங்க வந்த விசயம் தெரிஞ்சே இங்க வந்து இருக்கான்
ஹா. ஹா சங்கர் இது பேட் நியூஸ் இல்ல வெரி வெரி குட் நியூஸ்…..அவன் உயிர் என் கயில போக போறதுக்கான நாள் நெருங்கிடுச்சு…… அவன் இந்த சிங்கம் இருக்குற குகைக்குள்ளியே வந்துட்டான்ல இனி நா அவன் பாத்துக்குறேன் நீ நம்ம நெக்ஸ்ட் லோட் அனுப்புற மேட்டர டீல் பண்ணு… ஓகே
ஓகே ருத்ரன்….
கால் கட் செய்த ருத்ரன்…எழில்… என கண்ணில் கொலை வெறியுடன் சிரித்தவன் அவன் அருகில் பயத்துடன் சோஃபாவில் அமர்ந்திருக்கும் அவளிடம்….லூனா பேபி உண்ட்ட நா எவ்ளோ டைம் சொல்லி இறுக்கே இந்த மாதிரிலாம் பயப்பட கூடாதுன்னு… இங்க பாரு உடம்புல எப்படி நடுங்குதுண்ணு…. வொய் பேபி இதுக்கெல்லாம் போய் இப்படி பயப்படுற…ஒன் ஆப் தி பெஸ்ட் மாஃபியா கேங் லீடரோட பியூட்ச்சர் லவ்வபுல் வொய்ஃப் ..தற்போதைய ஸ்வீட் ஹார்ட் காதலி இப்படி பயப்படலாமா… நோ நோ ஸ்மைல் ஸ்மைல் என்று சொல்ல லூனா தனது பிஞ்சு போன்ற முகத்தில் புன்னகையை சிலிர விடவும் அதை கண்டு மகிழ்ந்தான்…
மை ஸ்வீட் பேபி என அவள் கண்ணத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு அவளை சாப்பிட டைனிங் டேபிளிற்கு அழைத்து சென்றான்….
சென்னை வந்த பின்பும் எழில் தென்றலிடம் ஒரிரு வார்த்தை பேசிவிட்டு தனக்கு தெரிந்த அளவு தானே சமைத்து சாப்பிட்டு டியூட்டிக்கு சென்று சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி வந்ததன் முக்கிய காரணத்தை மனதில் கொண்டு ருத்ரனுக்கு எதிராக பலமான ஆதாரம் தேடி சேகரித்து அவனை போட்டு தள்ளுவதற்கான நாளை எதிர்பார்த்து வானில் அரிதாக பறக்கும் கருடன் போல் காத்திருந்தான் எழில்.. இப்படியே எழில் தென்றல் வாழ்க்கை ஒரு மாதத்தை கடந்திருந்தது… எழிலே ஏனோதானோவென்று சமைத்து சாப்பிட்டு வேலைக்கு சென்று வருவது தென்றலுக்குதான் என்னவோ போல் இருக்க… தென்றல் நம்ம தப்பு பன்றமோ??… ரொம்ப ஓவரா போரேனோ…??? என அவள் மனதிற்குள் புலம்பி கொண்டு இருக்க மிகவும் உடல் சோர்வுடன் வீட்டிற்கு வந்தான் எழில் வந்தவன் நான்கடி எடுத்து வைத்தவன் மயங்கி விழுந்தான்…
*********எழில் தென்றல் வருவார்கள்