அட போயா..நீ இன்னும் என். நண்பன பத்தியும் உன் தொங்கச்சிய பத்தியும் முழுசா புரிஞ்சிக்காம இருக்க…யோவ் நீ லாயர்தான..
ஆமா அதுல என்ன உனக்கு சந்தேகம்???
இப்போ பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல உன் தொங்கச்சி உனக்கு கால் பன்றாளா இல்லையான்னு
ஹுஹு அவ எதுக்கு எனக்கு கால் பண்ணனும் அதுவும் இந்த நேரத்துல என்று ஸ்ரீ யிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே…தென்றல் ஃபோன் கால் ராஜை அழைக்க…திகைப்புடன் ஸ்ரீயை பார்த்து கொண்டே அட்டெண்ட் செய்து ஹலோ
அண்ணா நீ வக்கீ….ஹே எழில் விடுங்க..ஹே எழி…. ல்…இப்..போ விட போறீங்களா இல்லையா..எழில் கைய விடுங்க..
அவள் பேசுவதை கேட்டு வேதா உமா இருவரும் சிரித்து கொண்டே அங்கிருந்து விலக ஸ்ரீ முகைத்தை ராஜ் பார்க்க அவனோ..நம்ம நண்பனா..அவனா.. இப்படி இல்லையே அவன் இப்படி ….இல்ல இல்ல. ….
எழில் ரூமுக்குள்ள வந்த தென்றல் எழில சுத்தி சுத்தி தேட அவன் அங்க எங்கும் இல்லாமல் இருக்கவும் கொஞ்சம் மனதிற்கு நிம்மதி வந்தவளாக கைல இருந்த பால் சொம்ப பக்கத்துல இருந்த டேபில் மேல வச்சிட்டு கட்டில்ல உக்காந்து அந்த ரூம ஃபுல்லா பார்வையிட்டுகிட்டிருந்தவளோட கண்ணு ஒரு இடத்தில அப்படியே சடன் பிரேக் போட்டு நின்னுச்சு…. எழில் பின்னாடி தலைய கோதிவிட்டவாரு ரெட் கலர் டீசர்ட்ல அழகா சிரிச்சுட்டு இருக்க ஃபோட்டோ சுவத்துல தொங்கிட்டு இருக்க அதையே பாத்தவ நேரா அந்த ஃபோட்டோ பக்கத்துல எழுந்து போய் நின்னு
யோவ் டம்மி போலீஸ் என்னயா நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல …… நீ எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலாம் ??? எவ்ளோ தைரியம் இருந்தா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருப்ப??? என்ன அப்படி பாக்குற?? நீ மட்டும் எதுக்குடி ஓகே சொன்ன அப்படீண்ணுதான பாக்குற??? நா நா எதோ சூழ்நிலை.. ஆனா ஒன்னு சத்தியமா சொல்ரே நீதா மாப்பிள்ளைனு எனக்கு மட்டும் முதல்லியே தெரிஞ்சு இருந்துச்சு கண்டிப்பா நா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கவே மாட்டே…… என்னவா கல்யாணம் பண்ணிருக்க இருடி மகனே உண்ண என்னலாம் பன்றே பாரு
என்ன பண்ணுவ???
(எழில் தான் தனக்கு பின்னால் நின்று கேள்வி கேட்கிறான் என்பதை கூட தென்றல் உணராமல் அவனை தன் மனதில் தோன்றியவாறு திட்டி கொண்டிருந்தாள்… ஹே தென்றல் கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருமா…அவன் உன் பின்னாடிதான் நிக்கிறான்)
என்ன பண்ணுவேனா…என்ன பாத்து நக்கலா சிரிக்கிற இந்த பல்ல கழட்டி உன் கைலயே குடுத்து எண்ண வைக்கிறேன் பாரு… என்னடா அப்படி பாக்குற
எப்பிடி பாக்குறாங்க??
ஹம் எப்பிடின்னா கேக்குற…உண்ண..இன்னொரு தடவ இப்படி பாத்த என்ன கிண்டலா பாக்குற இந்த கண்ணு ரெண்டையும் நோண்டி குழம்பு வச்சு காக்காவுக்கு ஊத்திட்டு மிச்ச குழம்ப உனக்கே சோத்துல பினஞ்சு ஊட்டி விடுறேனா இல்லையா பாரு…
அடி பாவி கொலகாரி
என்னாது கொலகாரியா….ஆமா இப்போ யாரு நம்மகிட்ட பேசுனது…. ஒருவேளை எழிலா இருக்குமோ??😨 அவன்தான் என்று புரிந்து கொண்டவள் எழில்….. .. 😱😱 என்று அவள் சிறிதும் கூட சத்தம் வெளியே எட்டி பார்க்காமல் சொல்லி கொண்டிருக்கும். போதே அவனின் சூடான அந்த மூச்சு காற்று இவள் முதுகில் பட…அதில் இவள் உடலெங்கும் சிலிர்த்து.. உடலெங்கும் வியர்த்து கொட்ட…. மதியம் எழில் கூறியது நினைவிற்கு வர
****அட சூறாவளி பாப்பா நா இந்த மாதிரி சின்னப்பிள்ளை தனமான விளையாட்டெல்லாம் விளையாடுறது இல்ல… மாமாக்கு இப்படி விளையாட்டு எல்லாம் பிடிக்காது..வேர மாதிரிதான் விளையாட பிடிக்கும் அத அப்பறமா விளையாடலாம் பாக்கலாம் அப்போ யார் வின் பன்றான்னு****
என்று அவன் சொன்னதை நினைத்தாவள் உடல் னடுக்கத்துன் மெதுவாக தனக்கு பின்னால் நிற்கும் எழிலை பார்க்க அவன் புறம் திரும்பி நிற்க
அங்கே எழில் கிரீன் கலர் பட்டு சட்டை மற்றும் பட்டு வேஸ்டியனிந்து தன் இரு கைகளையும் கட்டி கொண்டு அவள் முன் நிற்க.. பேதையவள் பாவம் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க …பின் தன்னை சுதாரித்தவள்
அவனிடம் தைரியமாக எதையோ பேச வந்தவள்… அவள் இருக்கும் சூழ்நிலையை அந்த அறையில் உள்ள அந்த பூக்களின் அலங்காரம் அவளுக்கு உணர்த்த மீண்டும் இரண்டாவது முறையாக் எழில் மதியம் சொன்ன வார்த்தை நினைவிற்கு வர
****அட சூறாவளி பாப்பா நா இந்த மாதிரி சின்னப்பிள்ளை தனமான விளையாட்டெல்லாம் விளையாடுறது இல்ல… மாமாக்கு இப்படி விளையாட்டு எல்லாம் பிடிக்காது..வேர மாதிரிதான் விளையாட பிடிக்கும் அத அப்பறமா விளையாடலாம் பாக்கலாம் அப்போ யார் வின் பன்றான்னு****
இன்னும் அதிக அளவு பயம் அவளை தொற்றி கொல்ல பயத்தில் பின்னால் நகன்று சுவற்றில் மோத…. பேச எதும் வார்த்தை வராமல் நாக்கு உலர…
அது அது… வ.. வ…வந்து…
ஹ்ம்ம் நா வந்துட்டே சொல்லு..
என அவள் அருகில் வந்து தன் கைகள் இரண்டையும் சுவற்றில் ஊண்டி அவள் அருகில் சென்று சொல்ல
நா.. நா… சாரி..தெரியாம…
அவள் பயம் உணர்ந்தவன் மேலும் அவளை சீண்டி பார்க்க ஆசைப்பட்டு
சாரி சொன்னா உண்ண சும்மா விட்றுவேனா….. ஒரு அசிஸ்டன்ட் கமிஷனருனு கூட பாக்காம என்னா பேச்சு பேசுற.. இன்னொரு தடவ இந்த குரல உசத்தி பேசுன….உண்ண…..என்று சொல்லிக்கொண்டே அவள் தோளில் முன் புறம் தொங்கி கொண்டிருந்த பூவை வாடை பிடித்து கொண்டே அவளை பார்க்க…தன் கண்கள் இரண்டையும் மூடிய நிலையில் முகத்தில் பயத்துடன் இருந்தவளை பார்த்து சிரித்து கொண்டே அவளின் என்ட்ட அதிகம் பேசுர இந்த உதட்ட என்று சொல்லி கொண்டே அவள் கீழ் உதட்டை பிடித்து கொள்ள கண்களை மூடியிருந்த தென்றல் உடலெங்கும் நடுங்க
பின் ஒரு சில நொடி கழித்து முன்பை விட அவனின் சூடான அந்த மூச்சு காற்று இன்னும் அவளுக்கு மிக அருகில் இருக்க அதை உனர்ந்தவள் படாறென்று கண்களை திறக்க எழில் அவளுக்கும் அவனுக்கும் நூலளவு கூட இடமில்லா தூரத்தில் இருந்து கொண்டு இவள் உதட்டை பார்த்தவாறு இருந்தான் உடல் முழுக்க கூசி போன தென்றல் படாரென்று அவனை தள்ள
எழில் விடாது மீண்டும் அவளுக்கு நெருக்கமாக வந்து தன் பார்வையலையே என்ன என்பது போல் சிரித்து கொண்டே பார்க்க
தென்றல் ஹ்க்க்ம் ஹ்க்க்ம் என்று சினுங்க அவளை பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டான். பின் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தவளை விடுவித்தான்….உடனே அங்கிருந்து நகன்றவள் வேகமாக சென்று மூச்சு வாங்க கட்டிலில் பயத்துடன் அமர்ந்து கொண்டாள்..
அதன் பின் இருவருக்கும் இடையில் அமைதியே நிலவியது…. அறை மணி நேரம் கடந்த நிலையில் எழில் ஹ்க்கும்ம் என தொண்டைய செரும.. எதோ யோசனையில் இருந்த தென்றல் எழில் தொண்டையை செருமுவதை உணர்ந்து அவனை பார்க்க
தென்றல் நா உண்ட ஒன்னு சொல்லணும்….
ஹ்ம்ம் நம்மகிட்ட இவன் என்ன சொல்ல போரான்..ஒரு வேளை நம்ம நினைச்சு இருகுறதத்தான் சொல்ல போரானோ என்று யோசித்தவள் அவனை என்னவென்பது போல் பார்க்க..
உனக்கும் எனக்கும் விருப்பமே இல்லாம நடந்த இந்த மேரேஜ் ….
வெயிட் எழில் நீங்க என்ன சொல்ல வரீங்கனு எனக்கு புரியுது…ரெண்டு பேருக்கும் விருப்பமே இல்லாம நடந்த இந்த கல்யாணத்துனால உங்களுக்கும் லைஃப் கஷ்டம் எனக்கும் லைஃப் கஷ்டம் சோ நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து வாழமுடியாது ஒருவேளை அட்ஜஸ்ட் பண்ணிட்டாலும் நம்மனால சந்தோசமா வாழ முடியாது அதுனால நம்ம பிரிஞ்சிடலாம் டிவோஸ்க்கு அப்ளை பண்ணிடலாம் .நம்ம பிரிஞ்சிடலாம் அதான சொல்ல வரீங்க ….எனக்கு ஒண்ணு பிரச்சனை இல்ல நா டிவோஸ் குடுத்துடிரே.. எனக்கு கூட ஜார்ணலிசம் படிக்கணும்னு ஆச பட் அப்பா ஒத்துக்கல
ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கு டிவோஸ் கிடச்சிட்டா அப்பாவ எப்படியாச்சும் சம்மதிக்கவச்சு நா ஜார்நளிசம் படிக்கலாம்… சோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அண்ணா கூட லாயர்தான் அவண்டயே சொல்லி இந்த பிராபலத்தை சால்வ் பண்ணிடலாம் என்று சொல்லிகொண்டே… ராஜ்க்கு கால் செய்தால் தென்றல்…
அவள் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் இருந்த எழில்.. பின் ராஜ்க்கு கால் செய்யவும் அவளை தடுத்து அவளிடம் இருந்து மொபைலை வாங்கினான்…
ஹே லூசு இப்போ எதுக்குடி அவனக்கு கால் பண்ணிருக்க… போன் கட் பண்ணு ஃபர்ஸ்ட்..
ஹலோ அண்ணா என்ன பண்ற சாப்டியா…உண்ட ஒன்னு சொல்லணும் …ஒரு சின்ன ஹெல்ப்.. ஹலோ அண்ணா லைன்ல இருக்கியா… ஹலோ
ஏய் சொல்லிட்டே இருக்கேன் போன கொடுடி ஃபர்ஸ்ட்
அண்ணா நீ வக்கீ….ஹே எழில் விடுங்க..ஹே எழி…. ல்…இப்..போ விட போறீங்களா இல்லையா..எழில் கைய விடுங்க..(இத கேட்டுதா நம்ம ஸ்ரீ குழம்பி போனது)
அவள் கையில் இருந்து போன் வாங்கி காலை கட் செய்தவன்…
அடியே நீ என்னடி லூசா…கல்யாணமான அன்னிக்கே யாராச்சும் இப்படி வீட்ல இருக்கவங்களுக்கு கால் பண்ணி இந்த மாதிரி பேசுவாங்களா…அதுவும் இந்த டைம்ல உண்ண நா பாக்குறப்போ எல்லா லுசுணுதான் நினைச்சுட்டு இருந்தே பட் இப்போ அதுகண்பார்மே பண்ணிட்டே நீ லுசுதா போடி போ போய் ஒழுங்கா மரியாதையா துங்கு இல்ல உண்ண. …. உண்ண.. என்ன பண்ணுவேன்னே தெரியாது..என்று சொன்னவன் வேகமாக வாஷ் ரூமிற்குல் சென்று கதவை டம்மென்று சாத்தி தாழ்ப்பாள் போட்டு கொண்டான்…
இவன் என்ன லூசா நம்ம சரியாத்தான பேசினோம்… அவணு இதத்தான நினச்சிருப்பான் …இல்லையோ..ஒரு வேளை நம்மதா தப்பா புறின்ஜிகிட்டு வாய விட்டுடோமோ… என்று அவள் தீவிர சிந்தனையில் இருக்கும் போதே முகம் கை கால் கழுவி ரீஃபிரஷ் ஆகி வெளியே வந்த எழில் அவளை பார்க்க.. அவள் இன்னும் தூங்காமல் எதோ யோசனையில் இருப்பதை கண்டவன்…
உண்ட என்ன சொல்லிட்டு போனேன் ..நீ இன்னும் தூங்கலியா….
இல்ல…அது. ..அது …ஹா ..யார் மேல படுக்குறது…யார் கீழ படுக்குறதுண்ணு யோசிச்சுட்டிருக்கே….
வாட்… ஹே ஹே மென்டல்….உண்ண என்னதாண்டி… உன் மண்டைக்குள்ள இருக்க மூளை மட்டும் எப்படி இப்டில்லாம் யோசிக்குது…நீ அப்படியே 100 கிலோ..நா ஒரு 150 கிலோ ரெண்டு பேரும் பாக்க அப்படியே குண்டு பூசணிக்காய் மாதிரி இருக்கோ ஒரு ஆள் மேலையும் ஒரு ஆள் கீழ படுக்க .. போடிங் போடி போ போ இவளோ பெரிய பெட் இருக்குல நீ அந்த சைட் படுத்துக்க நா இந்த சைட் படுத்துக்குறேன். … என்று எழில் சொல்லி கொண்டே கட்டிலின் ஒரு முனையில் படுத்து கொண்டு…எப்பா சாமி இவள கல்யானம் பண்ணி முதல் நாள் ராத்திரிக்கே நம்மள இவ்ளோ பாடு படுத்தி இப்படி கத்த வைக்கிறாளே இனி வாழ்க்கை ஃபுல்லா என்ன பண்ண கத்திருக்காளோ என்ற யோசனையில் எழில் மூழ்கி இருக்க….
என்ன இவன் நிஜமாவே அசிஸ்டன்ட் கமீஸ்ணர்தானா…..பாத்தா அப்படியா இருக்கு…எதோ 7வயசு சின்ன குழந்தை அம்மாகிட்ட கோவ பட்டு கத்துற மாதிரி கத்திட்டிருக்கான் .. அய்யோ அய்யோ என்று இதழில் புன்னகை சிந்தி கட்டிலின் மறுமுனையில் தென்றல் படுத்திருக்க….
இருவரும் வேறு வேறு சிந்தனையில் ஒருவர் மற்றவரை நினைத்தவாறே பல மணி நேரம் தூக்கத்தை தொலைத்தவர்கள் பின் அப்படியே தங்களை அறியாது தூங்கி போனார்கள்….
****எழில்தென்றல் வருவார்கள்