உமாவிடமிருந்து வந்த மெசேஜை பார்த்துவிட்டு முகத்தில் புன்னகை சிந்தி எஸ் என்று வெற்றிக்கொடி சொல்லிக்கொண்டு வண்டியை ஜவுளி கடை நோக்கி செலுத்தினான்..
“ஹே உமா நம்ம ஏரியா சைடு இல்லாத கடையா இவளோ தூரம் கூப்டு வந்திருக்க.”
“இங்கதானடி அவங்க வர சொன்னாங்க.”
“யாருடி… யாரு வர சொன்னா?”
“அய்யோ உமா இப்படி உளரிட்டியேம்மா …….ஹே அதாண்டி யாரு?? வர சொன்னா..ஹ யாரு வர சொன்னாங்க தெரியாதா உனக்கு.”
“ஏ என்னடி இப்படி உளரிட்டிருக்க.”
“உளரலடி தென்றல்..அதா தென்றல் உனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின்ஸ் ரெண்டு பேருமே ஒன்னா டான்ஸ் ஆடி ஒரு விளம்பரம் ஆக்ட் பண்ணி இங்க வர சொன்னாங்கல ….. அததாண்டி சொன்னே… உனக்கு கூட அந்த அட்வடைஸ்மென்ட் ரொம்ப பிடிக்கும்ல அதா கூப்ட்டு வந்தே.. ஈ ஈ ஈ எப்பா ஒரு வழியா உளரியே சமாளிச்சுட்டேன்.”
“அட போடி … லூசு.”
“என்னாது நா லூசா….. உண்ண….சரி வாடி உள்ள போலா…வெளியவே ரொம்ப நேரம் நிக்கவும் நம்ம எதோ டொனேஷன் கேட்டு கட வாசல்ல நிக்க போரோம் நினைக்க போறாங்க.”
அவள் சொல்லிட்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தனர் ஸ்ரீ எழில்…. தென்றலை பார்த்த எழில்…மனதில் ஒரு வித சந்தோசத்துடன்….
என்ன சூறாவளி இன்னிக்கு இந்த பக்கம் ஐஸ் கிரீம் காரண தேடி துரத்திட்டு வந்தியா…கூட உன் பிரெண்டயும் சேத்து கூப்பிட்டு வந்துட்ட போல… பாத்தூமா இன்னிக்கு எவனாச்சும் தூக்கிட்டு போகிட போரணுங்க…பின்ன நான்தா வந்து உனக்காக அடி வாங்கி சண்ட போட வேண்டி இருக்கும்…இன்னிக்கு நா கொஞ்சம் பிஸியா வேர இருக்கேன்…ஒரு வேளை நீ…அவன் பேசிட்டிருக்கப்பவே அவன் பேச்சை இடை நிறுத்திய தென்றல்
“ஹலோ மிஸ்டர் டம்மி.”
“என்னடி சொல்ல போர டம்மி போலீஸ் அதான சொல்லு சொல்லு.. உன் பல்ல கழட்டி கைல கைல கொடுதுடுறேன் பாரு.”
“ஹ்ம்ம் கலட்டுவீங்க…நீங்க கலட்டுற வர என்ன பண்ணுவே நினச்சீங்க.”
“என்னடி பண்ணுவ..”
“யோவ் போலிசு இன்னொரு தடவ என்ன டி போட்டு பேசின.”
“என்னடி பண்ணுவ…அப்படிததாண்டி பேசுவேண்டி என்னடி பண்ணுவடி டி டி டி.”
“யோவ் உன்ன.”
“இவர்கள் சண்டையை பார்த்து நொந்து போன உமா, ஸ்ரீ போச்சு ஆரம்பமே அமர்க்களம்… என்ற தோரணையில் நிற்க பின் உமா ஸ்ரீ யிடம் அண்ணா எதாச்சும் பண்ணுங்க.” என்பது போல் கண்ணை காட்ட… இருவரின் சண்டைக்குள் இடை நுழைந்தான் ஸ்ரீ
தெய்வங்களா போது முடில பாகுறப்பலா சண்ட போட்டு சாவடிக்கிரீங்க… எங்களால முடில…டேய் ஒழுங்கா உள்ள வா இல்ல உண்ண என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது மரியாதையா வந்திடு..
பின் நான்கு பேரும் ஒன்னாவே உள்ளே சென்றனர். அதன் பின் ஸ்ரீ உமா மற்றும் அந்த கடைல செட் பண்ணி வச்சிருந்த ரெண்டு ஆளுங்க மூலமா நேற்று போட்ட பிளான எக்சிக்கியூட் பன்ன ஆரம்பிச்சாங்க…
உமா தென்றல் பாய்ஸ் செக்சன் சைடும் எழில் ஸ்ரீ அதுக்கு ஆப்போசிட்ல இருந்த கேர்ள்ஸ் செக்ஸன் சைடு போய் நிக்க பிரேம் செட் பண்ணி வச்ச ஆளு எழில் ஸ்ரீ பக்கத்தில வந்து அவங்களுக்கு ஒவ்வொரு டிரஸ் காட்ட ஆரம்பிச்சான்.
சார் இது ஓகே வானு பாருங்க. இல்ல இந்த சைஸ்..இல்லஇந்த கலர்…இல்ல கலர் நல்லா இல்ல
சார் ஒரு டவுட் வீட்ல இருந்து லேடிஸ் யாரு வர்லியா… மேரேஜ்க்குக் வேர எடுக்குரோம்னு சொல்றீங்க… அப்படி இருக்கப்போ லேடிஸ் வந்து எடுத்தாதான் நல்ல இருக்கு…அட்லீஸ்ட் இங்க இருக்க பொண்ணுல யார் மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுங்க சார்…
டேய் நா இன்னும் ஒரு தடவ கூட பொன்ன பாத்ததில்ல அப்படி இறுக்கப்போ இந்த ஆளு இப்படி சொல்றாரு…
ஸ்ரீ சிறிது நேரம் யோசிப்பவன் போல பாவனை செய்து விட்டு.. தேவாவிற்கு கால் செய்தான்…
ஹலோ அப்பா….(சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகன்று எழிலை பார்த்து கொண்டே அவரிடம் பேசுவது போல் பாவனை செய்ய)
சொல்லுடா நா பெத்து எடுக்காமலே எனக்கு கிடைச்ச என் சொந்த மகனே..திட்டம் எல்லா பயங்கரமா போய்ட்டு இருக்கு போல அதுக்குள்ள கால் பண்ற சீன் வந்துடுச்சா … இவளோ வேகமா ஸ்கிரிப்ட் பிளே பண்ற ஸ்ரீ.. சூப்பர் …என்ன அந்த நாய் நீ என்ன பேசுறேன்னு ஒன்னுமே புரியாம முழிசுட்டு இருக்கானா…ஹ ஹ ஹ… இப்போ என்ன சொல்லி சமாளிக்க போர…
மீசை டாடி… விளையாடாதீங்க…அப்படீன்னு சொல்லிட்டே எழில் பக்கத்துல வந்து ஓகே டாடி ஓகே செண்ட் பண்றே பாத்து சொல்லுங்க… அப்படீன்னு சொல்லிட்டே போன கட் பண்றா. ..
டேய் அவருக்கு எதுக்குடா கால் பன்ன…. என்ன அவர லேடி கெட் அப் போட்டு வர சொல்லிருக்கியா. …
டேய் சும்மா இருக்கியா. .அப்படி சொல்லிட்டே ஆப்போசிட்ல அங்க ஒர்க் பண்ணிட்டிருக்க பொண்ணுங்க அவங்க பக்கத்துல போய் அவன் பிராப்ளம் என்னானு சொல்லி கூடவே தான் யாருன்றதையும் சொல்லி போட்டோ எடுக்க பெர்மிஷன் கேட்டு ஃபோட்டோ எடுத்து அவங்க மீச டாடிக்கு செண்ட் பண்றான்…
டேய் என்னடா நாயே … நீ பேசாம அவருக்கு கால் பன்ன ..அங்க போய் அந்த பொண்ணுங்க கிட்ட எதோ பேசின ,அதுங்கள ஃபோட்டோ எடுத்த…. அத மீசைக்கு வேற செண்ட பண்ற
அவன் பேச பேச போனை பார்த்து தேவாவின் மெசேஜ் ஜுக்காக வெயிட் செய்வது போல் அவன் பேச்சை காதில் வாங்காமல் நின்று கொண்டிருந்தான்..
டேய் எரும உண்டதான் கத்திட்டு இருக்கே இப்படி அசையாம நிக்கிற …
டேய் கத்தாதடா காது வலிக்குது…அது ஒண்ணும் இல்லடா இவரு யார் மாதிரி பொண்ணு இருக்கும்னு சொல்ல சொன்னாரா…அதா அப்பா மட்டும்தான பொன்ன பாத்திருக்காரு அதா அவருக்கு கால் பன்னே அவரு என்னடான்னா இங்க இருக்க பொண்ணு ரெண்டு மூணு பேரு ஃபோட்டோ எடுத்து அனுப்ப சொன்னாரா..அதா அந்த பொண்ணுங்க கிட்ட சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரு போட்டோவை அனுபுனே. .
டேய் நீ என்ன லூசா பொண்ணு எப்படி இருக்கும்னு இந்த ஆளுதான கேட்டாரு அதுக்கு எதுக்கு அவருக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்புன
டேய் எரும எரும… நிஜமாவே நீ அசிஸ்டன்ட் கமிஷ்னர் தானா … வெளில சொல்லிடாத எவனும் நம்பாம அசிங்கபடுத்த போரானுங்க.
டேய்…….
பின்ன என்னடா…அந்த ஆளு பொண்ணு யார்மாதிரி இருப்பாங்கன்னு கேட்டதுனாள .நா இங்க இருக்க இந்த பொண்ணுங்க போட்டோவ எடுத்து அனுப்பி இருக்கே இப்போ அவரு ஃபோட்டோ பாத்திட்டு யார் மாதிரி ஹைட் அண்ட் வெயிட்ல பொண்ணு இருக்குனு அவரு சொல்லிடுவார் அத வச்சி அந்த பொன்னுகிட்ட சொல்லி பெர்மிஷன் வங்கி கல்யாண பொண்ணுகு டிரஸ் எடுக்கலாம் பிலான் பண்ணோம் இது தப்பா அட போடா….அப்படீன்னு சொல்லிட்டே மெசேஜ்க்காக வெயிட் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருக்க எழில் அவனை முறைத்து கொண்டிருக்க ஸ்ரீ அடுத்த ஸ்கிரிப்டை நடிக்க ஆரம்பித்தான்…… இதோ அப்பா ரிப்ளே பண்ணிட்டாரு…. மச்சா சூப்பர்டா மீச உனக்கு செம்மையா ஆப்பு வச்சிட்டாரு….
என்னடா என்ன பண்ணி வச்சிருக்காரு??
இங்க பாரே நா செண்ட் பன்ன இந்த ரெண்டு பொண்ணுங்க கல்யாண பொண்ணு ஹைட்ல இல்லையா…பட் தெரியாதனமா ஃபோட்டோ ஃப்ரேம் குள்ள வந்த நம்ம சூறாவளி அப்படியே கல்யாண பொண்ணு ஹைட் அண்ட் வெயிட்லதா இருக்கா சோ அந்த பொண்ணுகிட்ட பேசி டிரஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்காருடா…
டேய் என்ன நினச்சிட்டிறுக்காரு அந்த ஆளு ..கொஞ்சனாச்சு அறிவு இருக்கா உங்களுக்கு….எனக்கென்னமோ சரியா படல வா போலம் வீட்டுக்கு கிளம்பு….
டேய்… இருடா பேசி பாப்போம்…நீ பேசாம கிளம்ப சொல்ற.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு ..நம்ம சைடு பொண்ணுக்கு நம்மதாண்ட இதெல்லாம் பண்ணனும்… நம்ம வீட்ல பொண்ணுங்க யாருமே இல்ல சோ நாமதா எடுக்கணும் சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மச்சா… இல்ல உன் விருப்பப் படி இந்த கல்யாணம் நடக்க கூடாது அப்பா மனசு கஷ்ட படனும் , நா உண்ட பேசக்கூடாது நினைச்சா போடா போ…
டேய் டேய் நிருத்துடா போதும் போதும் போறே போய் கேட்டு தொழைக்குறே…..
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ…..
இழிக்காத…. கொல வெறில இருக்கே…
நேரா உமாகிட்ட போரா எழில்
எக்ஸ் கியூஸ் மீ….
இவரு என்ன நம்ம பக்கத்துல வந்து நின்னு நம்மல கூப்டுராரு ஸ்க்ரிப்ட் படி இப்போ அவரு தென்றல் கிட்டதான போனு… சரி சமாளிப்போம்
என மனதில் நினைத்துக் கொண்டே உமா
“சொல்லுங்க அண்ணா”
“சிஸ்டர் நாங்க இப்போ கல்யாண பொண்ணுக்கு ட்ரெஸ் எடுக்கணும்”
“ஹம் எடுங்க அண்ணா.”
“அய்யோ … ஒன்னும் இல்லம்மா பொண்ணு இப்போ வர முடில கடைக்கு சோ.”
“சோ.”
“கல்யாண பொண்ணு …உங்க பிரெண்ட் மாதிரிதான் இருப்பாங்க …சோ வந்து கொஞ்சம் ஹெல்ப் பன்னா நல்ல இருக்கு.”
அது வரை அமைதியாக இருந்த தென்றல், “ஹலோ மிஸ்டர் என்ன பாத்தா எப்படி இருக்கு என்னால முடியாது.”
“சிஸ்டர் உங்க பிரெண்ட்கிட்ட சொல்லுங்க.”
“ஹே தென்றல்.”
“நீ எதும் பேசாத உமா.. நீ வா கிளம்பூ வீட்டுக்கு போலா… டிரஸும் எடுக்க வேண்டாம் ஒன்னு வேண்டாம் வாடி போலா.”
“ஹே ஹே தென்றல் நில்லுடி ஹே அப்படீன்னு உமா சொல்லிட்டு இருக்கப்பவே அவள கைய பிடிச்சு இழுத்துட்டு போரா தென்றல்..பட் உமா ஸ்கிரிப்ட பிளே பன்ன ஆரம்பிச்சுட்டா.. போற வழில அழகுக்காக டேபில்ல வச்சிருந்த ஒரு பொம்மைய தட்டி விட அது கீழ விழுந்து உடன்ஜு போச்சு.”
சவுண்ட் கேட்டு அங்க வந்த சூப்பர்வைசர்…
“ஹே என்ன பண்ணி வச்சிருக்கீங்க. இடியட்ஸ் கண்ணு தெரில.”
பயந்து போன மாதிரி உமா நடிக்க தென்றலே பேச தொடங்குறா
“சார் சாரி சார் …தெரியாம..”
“என்ன தெரியாம கண்ண என்ன பொடனிலயா வச்சி நடந்த.”
அந்த டைம்ல எழில் அண்ட் ஸ்ரீ அங்க வர அத பாத்த அந்த சூப்பர்வைசர்…
“ஹாய் சார்.”
“ஹாய் மணி..என்ன சத்தம் எதுக்கு இவங்கள திட்டுறீங்க.”
“சார் இங்க பாருங்க அழகுக்காக வச்சிருந்த இந்த ஸ்டாச்சுவ இவங்க உடச்சுட்டாங்க. இனி ஓனர் வந்து என்னதான் திட்டுவாங்க.”
எழில், தென்றல் காதருகில் சென்று “என்ன சூறாவளி உனக்கே இப்போத கெத்தா ஒரு சீன் வந்துச்சு அதுக்குள்ள அது இப்படி புஸ்ஸுனு போச்சு..ஹ ஹ ஹ. சரி சரி நா வேணும்னா ஹெல்ப் பண்றேன் பட் நா சொன்ன மாதிரி நீ ட்ரெஸ் செலக்ட் பன்ன வரணும் ஓகே?”
தென்றல் முடியாது என்பது போல் திமிர் பார்வையில் முறைக்க…
அப்போ போடி உன் திமிர் இருக்கே, அத வச்சே இந்த ஆள சமாளி… இப்போ பாரு
“மணி கூல் ..திட்டாதீங்க… இதுக்கு எதாச்சும் சொல்யூசன்
எஸ் சார் உடச்ச இந்த பொருளுக்கு உரிய அமொண்ட பே பண்ணிட்டா போதும் no பிராபலம்…. இல்லன்னா இவங்க மேல கம்பலைன் பண்ணுவோம்.”
“எவ்ளோ அமௌண்ட் நா பே பண்றே” என தென்றல் சொல்ல…
ஓஹ் மேடம் ரொம்ப பெரிய இடமோ சரி சொல்றே கேட்டுகோங்க 30,00000 வித் ஃபயின் அமௌன்ட் 50000 மொத்தமா 30,50000
அடி ஆத்தி 30,50000…தென்றல் பாவம் போல் முகத்தை வைத்து..டீலுக்கு ஓகே என்பது போல எழிலை பார்க்க அவன் சிறித்து கொண்டே மச்சா இவர நீ டீல் பன்னிட்டு வா வா போய் என்னோட டீல் முடிக்கிரே அப்படீன்னு சொல்லிட்டே அங்கயிருந்து போக தென்றலும் அவன் பின்னாடி போரா…
இங்க உமா ஸ்ரீ கிட்ட…”அண்ணா சூப்பர்..செம்ம”
“ஹ்ம்ம் பட் என்ன என் பிரெண்ட கல்யாணம் பண்ணிக்க போர உன்னோட பிரெண்ட் ரொம்ப மக்கா இருக்கா.. 600 பொம்மைய 30,50000 சொன்னது நம்பிருச்சு.. ஹி ஹி”
இருவருக்குள் பேசி சிரித்து கொண்டே உள்ளே செல்ல அங்க ரெண்டு பேரும் வழக்கம் போல சண்டய ஸ்டார்ட் பண்ணி சண்ட போட்டுகிட்டுதான் இருந்தாங்க…
இதை பார்த்து மிரண்டு போன ஸ்ரீ..இதுங்களுக்கு வேர வேலையே இல்ல இரு வறே..இதுங்கள
“டேய் ஒழுங்கா சண்ட போடாம செலக்ட் பண்ணுங்க என்னால முடில சத்தியமா..உங்க அலும்பு தாங்க முடியல்ல.”
“டேய் நா என்னடா பண்ணேன் இவாதா.. நா என்ன சொன்னாலும் எதாச்சும்..ஒரு குறை கண்டுபிடிச்சுகிட்டே இருக்கா மச்சா…”
“யார் நானா நீங்க எடுக்குறது எல்லா ஒரு ட்ரசா.. இந்த உலகத்துல உங்கள மாதிரி யாரு இவளோ கேவலமா செலக்ட் பன்ன முடியாது.”
“ஹலோ ஹலோ நா எடுக்கிறது கேவலமா இருக்கா.. நீ எடுக்கறத பாரு…கொஞ்சனாச்சு இந்த காலத்து பொண்ணு மாதிரி எதாச்சும் செலக்ட் பண்றியா.. எதோ பாட்டி காலத்து டிரஸ் மாதிரி செலக்ட் பண்ற..இதெல்லாம் என் ஒய்ஃப் எப்படி போடுவா அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது… வேர செலக்ட் பண்ணு நல்லா அழகா..லக்ச்சனமா.”
ஆனா ஒண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ணு ஓகே சொல்லிருக்காளா. அட கடவுளே அந்த பொண்ணு ரொம்ப பாவம்…போன ஜென்மமோ இந்த ஜென்மமோ எப்பனு தெரில அவ எதோ பாவம் பண்ணிடா அதா உங்கள கல்யாணம் பண்ணிக்க போரா.. ஹி ஹி ஹி.. உங்களையே ஓகே சொல்லிருக்க்கா ஒருத்தி கண்டிப்பா அவளுக்கு நா எடுக்குற செலக்சன் ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ஹ்ம்ம் இதெல்லாம் நா செலக்ட் பன்னது உமா பாரு எப்படி இருக்கு சொல்லு.?”
“ஹ்ம்ம் நல்லா இருக்குடி.?”
ஸ்ரீ யும் அவர்கள் இருவருடன் சேர்ந்து கொண்டு…”ஹ்ம்ம் சூப்பர் எல்லா கலைக்சன்சும் சூப்பர்.. நைஸ்.”
எழில் கண்ணுக்கு மட்டும் அது நல்லா இல்லாதது மாதிரியே இருக்க என்ன இவனுங்க லூசா எதும் நல்லாவே இல்ல பட் இதுங்க ரெண்டு அவள இப்படி புகழ்ந்து தல்லுதுங்க லூசா இதுங்க.”
“டேய் உனக்கு கண்ணு எதும் போச்சா.”
“டேய் உணக்குதா கண்ணு போச்சு.”
(என்ன ஸ்ரீ இவன் இப்படி சொல்லிட்டே இருக்கா எல்லாமே நல்லாதான இருக்கு அழகா🤔🤔🤔ஹ்ம்ம் அதுக்கு ஒரு வழி இருக்கு இப்போ பாரு அவ மேல இருக்க லவ்வ நா கண்டு பிடிகிரே)
“இந்தாம்மா சூறாவளி பிளீஸ்..இதுல எதாச்சும் ஒரு சரிய போட்டு வர முடியுமா பிளீஸ்…இந்த நாய் என்ன சொன்னாலும் கேக்க மாட்டா.. பிளீஸ்”
சரி என்பது போல் தலையை ஆட்டி ட்ரையல் ரூம்க்கு போய் புடவைய மாத்திட்டு வரா தென்றல்
“ஒயிட் கலர் வித் பிங்க் பார்டர் கலர் பட்டு சேரி… சேரி ஃபுல்லா அங்க அங்க குட்டி குட்டியா மயில் படம் போட்ட எம்பிராய்டிங்… ஹ்ம்ம் தென்றலுக்கு அந்த சேரி அழகா இருக்கா…இல்ல இல்ல அவ கட்டிருகதுனாலதான் அந்த சேரியே அழகா இருக்குடா லூசு… முதல்ல நீதான்ன அவ செலக்சன் எதும் நல்லா இல்ல சொன்ன…இப்போ இப்படி பாக்குற அவள…அப்போ அவ கட்டுனதுனாலதான அந்த சேறியே அழகா தெரியுது…. அப்படீன்னு எழில் அவன் மனசாட்சி கூட அவனே சண்ட போட்டுகிட்டு இருக்கா.”
“எப்படி இருக்குடி உமா.?”
“ஹே தென்றல் அழகா இருக்குடி…எவ்ளோ அழகா இருக்க தெரியுமா.?”
ஸ்ரீ யும் அவளுடன் சேர்ந்து கொண்டு பேசாம இந்த சேரிய நீங்களே வச்சுக்கோங்க நாங்க வேர வாங்கிகுறோம்
தென்றல் சிரித்து கொண்டே எழில் பக்கம் திரும்பி “நல்லா இருக்கா டம்மி போலீஸ்.”
பட் சார்கிட்ட இருந்த எந்த பதிலும் வர்லா… அவருதா டிரையல் ரூம்ல இருந்து வெளிய வந்ததுல இருந்து அவளையே வச்சா கண்ணு வாங்கம்மா பாத்துக்கிட்டே இருக்கானே….
“பனிகூட உன்மேல் படும் வேளையில்குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமேமலர்கூட உன்னை தொடும் வேளையில்பூவென்று தானே சூட நினைக்குமேஅமுதம் உண்டு வாழ்ந்தால்ஆயுள் முடிவதில்லைஉன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லைஉன்னை காணும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே“
என்ற வரிகளை அவனை அறியாமல் அவன் உளரிகொண்டிருக்க ஸ்ரீ தான் அவனை உலுக்கி நினைவுக்கு கொண்டு வந்தான்….
“டேய் …எழில்…எழில்.. அடேய்… டேய்
ஹா சொல்லு மச்சா”
“என்னடா உளரிட்டு இருக்க?”
“டேய் அது க…விதை… அது …சூறா.. அழ கா.”
“என்னடா க கா கி கீ படிக்கிரியா நாயே!”
“டேய் இல்லடா நெக்ஸ்ட் வீக் கவிதை போட்டி இருக்குல அதா
என்னாது கவிதை போட்டியா என்னடா எதோ ஸ்கூல் பையன் மாதிரி பேசிட்டு இருக்க? எரும”
“இல்ல மச்சா நெக்ஸ்ட் வீக் நம்ம ஐ.ஜி பர்த்டே வருதுல…அதா பார்டில ஒரு கவிதை சொல்லலாம் நினைச்சேன் அதா மச்சா போய் அவ சேரி மாத்திட்டு வர வரைக்கும் சொல்லி பாத்திட்டு இருந்தேன் அதா அவ வந்தத கவனிக்கல.”
“மச்சா நீ.. அதுவும் ஐ ஜி பர்த்டேக்கு … ஹ்ம்ம் சரி மச்சா நம்பிட.”
“டேய் நிஜமாதான்.”
“நிஜமா தான் மச்சா நானு சொல்ரே நம்பிட்டே”
“போடா டேய்.”
பின் தென்றல் செலக்சன்ல 3 சேரி எழில் செலக்சன்ல 2 சேரி எடுத்துட்டு உமா தென்றல் கிளம்பி போறாங்க
ஸ்ரீ எழிலை பார்த்து மச்சா எம்புட்டு லவ்வு அந்த கண்ணுல அம்மா மாதிரி தெரிரா வேர ஒன்னு இல்ல அப்படீன்னு சொல்லிட்டு இப்படி பாக்குற… அப்படீன்னு மனசுல நினைச்சுகிட்டே நக்கலா சிரிக்கிறான்
“எதுக்குடா இப்படி பல்ல காட்டுற?”
“ஒன்னும் இல்ல மச்சா வா போலாம்.?
“ஹ்ம்ம்.”
“ஹே தென்றல் நிஜமாவே உனக்கு அந்த புடவை நல்லா இருந்துச்சு தெரியுமா? பேசாம உனக்கு அப்படி ஒரு சேரிஎடுத்துடுவோமா…மேரேஜுக்கு அந்த சேரி கட்டுடி அழகா இருப்ப.”
“எடுத்துட்டா போச்சு பட் உமா ஒரு உண்மைய சொல்லட்டுமா நிஜமா நா எடுத்த சேரிய விட எனக்கு அந்த போலிசு எடுத்த சேரி கலக்சனதா ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா? ரொம்ப நல்லா இருந்துச்சு.”
“அப்பறம் ஏண்டி சண்ட போட்ட.”
“அது சும்மா என்னனே தெரிலடி அவர பாத்தாலே சண்ட போடனும்னுதா தோணுது நா என்னடி பன்ன…. அவரு செலக்ட் பன்ன எல்லாமே சூப்பர் காசு அதிகம் கம்மி இப்படி எதுமே பாக்கல…அந்த பொண்ணுக்கு நல்லா இருக்குமா இல்லயானுதான் யோசிச்சாறு… நிஜமாவே அந்த பொண்ணு லக்கி தான் .
இதை உமா வீட்டில் அனைவரிடமும் சொல்ல…ஸ்ரீ யும் தான் ரெக்கார்டு செய்து வைத்திருந்த எழில் கவிதை உளரல் வீடியோவை அனைவரிடமும் காட்ட…எல்லாருக்குமே கொண்டாட்டம் தான்….
எழில் தென்றல் வருவார்கள்