ஒரு வழியா எழிலும் தென்றலும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க ……பட் எழில் தென்றல்னா யாரு?? எப்படி இருக்கு அந்த பொண்ணு??ஃபோட்டோ எதாச்சும் இருக்கா?? இப்படி எதும் கேக்கல… அங்க தென்றல் அப்பாகிட்ட விசாரிச்ச வர தென்றலும் பையன பத்தி எதும் கேக்கல வீட்ல யார்டயும் ஃபோட்டோ காட்டல இனிதா காட்டனு சொல்ராங்க…
ஒரு வேளை தென்றலும் எழில் மாதிரியே கல்யாணத நிப்பாட்ட எது பிளான் பன்றாலோ சூறாவளி கண்டிப்பா பண்ணாலும் பண்ணு… அதுவும் எழில்தா மாப்பிள்ளைனு தெரிஞ்ச்சு கண்டிப்பா கல்யாணத்த நிருத்திடும்… பிக்காஸ் நம்ம மாப்பிள்ளை பன்ன வேலைலாம் அப்படி…இப்போ என்ன பண்ணலாம் ஒண்ணுமே புரிலயே…..🤔🤔🤔
பிரேம் அண்ணா நீங்க என்ன சொல்றீங்க …. இந்த பிளான் ஓகேவா??(பிரேமுக்கு எழில், ஸ்ரீ பத்தி நல்லாவே தெரியும் பெர்சனலா சொல்லனும்னா இவங்க ரெண்டு பேரையும் தன்னோட சொந்த தம்பி மாதிரிதான் நினச்சிட்டிருக்காரு… இவங்க ரெண்டு பேரு அப்படிதா… அதா இப்போ இவரு கூட இப்படி ஒரு டிஸ்கஷன் பிரேம் வீட்டுல உக்காந்து… பெர்சனலா எப்பவுமே அண்ணா தம்பி சொல்லி பேசிக்குவாங்க சும்மா அஃபீசியலா மட்டுமே சார் என்ற வார்த்தை……)
தம்பி நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புறிலயே… நீங்க பேசாம வந்தீங்க … எழில் தம்பிக்கு கல்யாணம் சொன்னீங்க அப்பறம் நீங்க பேசாம எதையோ புலம்பிட்டிருந்தீங்க
என்னாது புலம்புறேனா… ☹️☹️??
அட ஆமா தம்பி…தென்றல்ன்னு யாரையோ சொல்ட்ற அப்பறம் சூறாவளின்னு எதோ ஒரு பொண்ணோட பேரு வேற சொல்ற எனக்கு ஒண்ணுமே புரில அப்படியிருக்கப்ப என்ட போய்….என்ன பண்ணலாம் கேட்டா நா என்னத்த சொல்றது???
அட ஆமால உங்களுக்கு எதுவுமே தெரியாதோ இங்க வாங்க நா சொல்றே…. அதாவது அண்ணா தென்றல் அப்படீன்றது ஒரு பொண்ணு….அட முறைக்காதீங்க அண்ணா… அதாவது கல்யாண பொண்ணுன்னு சொல்ல வந்தே… தென்றல் தான் சூறாவளி…. சூறாவளி தான் தென்றல்… அன்னிக்கு சங்கர் கன்டெய்னர் பிடிக்க ஒரு காலேஜ் முன்னாடிதா வெயிட் பண்ணோம் அப்ப ஒரு லாரி அந்த பொன்ன மோத வந்துச்சு அப்படீன்றதுல ஆரம்பிச்சு…..
ஹாஸ்பிடல நடந்த கூத்து, அவங்க அம்மா அண்ட் வேதாவ மீட் பண்ணது, தென்றல எழில் அடிச்சது, சரக்கடிச்சுட்டு எழில் உலருனது அடுத்து கல்யாண ஏற்பாடு… அவங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சது இப்படி எல்லாத்தையும் சொல்லி முடிக்கிறான் ஸ்ரீ….
தம்பி நீங்க சொல்றத பாத்தா…. இந்த கல்யாணம் நடக்குமா தம்பி??? …. ஏண் தம்பி இப்படி பாக்ரீங்க … ஆமா இதுங்க ரெண்டு பாத்துகிட்ட வர சண்டதான் போட்டிருக்காங்க… அதா எனக்கு கல்யாணம் நடந்திடுமா அப்படீன்னு சந்தேகம்…. பட் எழில் அன்னைக்கு தென்றல் பத்தி உலருனது வச்சி பாக்ரப்போ எழில் தம்பிய சமாலிச்சிடலாம் தோனுது பட் தென்றல்?,,
அண்ணா எனக்கே அத நினச்சிதா பயமே அதா சண்டே லீவுண்ணு கூட பாக்காம நட்புக்காக உங்கள தேடி வந்திருக்கே….நீங்க என்னடான்னா… போங்கன்னா …..
தம்பி அதா அவங்க அம்மா தங்கச்சி அந்த பொண்ணு யாரு🤔🤔🤔…. உமா இவங்க எல்லாரும் நல்லா பேசினாங்க சொல்டிரீங்கல்ல … பேசாம அவங்களை உதவிக்கு நாடினால் என்ன நாம் இருவரும் 😁😁
நீங்க சொல்றதும் கொஞ்சம் நல்ல யோசனையாதான் இருக்கு… பேசாம இப்டி பண்ணலாமா அண்ணா
எப்படி
அவங்க ரெண்டு பேரையும் ப்ரீயா விட்டாதான மேரேஜ் நிப்பாட்ட ப்ளான் பன்னுவாங்க நம்ம அவங்கள பிசியாவே இறுக்க வச்சிட்டா இன்னு ஒரு சுவாரஸ்யத்துக்கு அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சிட்டே இருந்தா மேறேஜ் வர
அவங்க வீட்டுக்கு போய் ஒரு மீட்டிங் போட்ருவோமா இத பத்தி
சரியா வருமா தம்பி ?
இதுதான் சரியா வரும்… வங்கன்னா போலாம்….இந்த எழில் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் வரை நீங்களும் நானும் கிரைம் பாட்னர்😃🤪
ரெண்டு பேரு கிளம்பி தென்றல் வீட்டுக்கு போறாங்க……போனவங்க …. போனவங்க … 😭😭😭அந்த கொடுமைய ஏ கேக்குறீங்க…😭😭
(மிக அமைதியான குரலில்)…ஹே வேதா யாறுடி.
அம்மா இந்தாள பாத்தா நீங்க சொன்னவன மாதிரிதான் இருக்கு யோசிக்காம மண்டய பொளந்துரும்மா.
அப்படீன்னு வேதா சொன்னதுதான் தாமதம் விஜயா பிரேம் மண்டைலியே உருட்டு கட்டய வச்சு டம்… டம்…டம்
3 அடி பாவம் போட்ட போடுல பிரேம் தலைய பிடிச்சு கத்திகிட்டே கீழ விழ…பிரேம் கத்துர சத்தத்த கேட்டு ஃபோன் பேசிட்டு இருந்த ஸ்ரீ ஒடி வர உமாவும் வேதாவும் போர்வைய வச்சு மூடி அவன கும்மி எடுக்க.
அச்சோ அப்படி என்னதா ஆச்சு? எதுக்காக ப்ரேம் ஸ்ரீக்கு இந்த தர்மடி,?….என்னாச்சுனா ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி தென்றல் வீட்ல
வேதா…… அடியே வேதா…. இருக்கா இல்லையா
இரும்மா தேடிட்டு இருக்கேன்ல எடுத்துட்டு வரே அதுக்கு எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க?
ஹாய் மா…
வா உமா….வா…..
தென்றல் எங்க காணா
அவளும் அப்பாவும் ரேணு இருக்காள்ள அவ பிள்ளைக்கு காது குத்து அதா அங்க போகி இருக்காங்க.
ஹம் சரிம்மா………..ம்… ம்… ம்..ம் ரா…
ராஜ் எங்கம்மா அதான கேக்க போர… என சொல்லி கொண்டே வேதா அங்கு வர…
ஹே இல்லடி நீ பாத்தியா….ஒனக்கு தெரியுமா
அய்யோ சாமி உண்ண பத்தியும் … என் அன்பு அண்ணன் குரங்க பத்தியும் தெரியாது பாரு உங்க ரெண்டு பேர் பத்திதா டோட்டல் குடும்பத்துக்கே தெரியுமே நீங்கதான் எது சொல்லிக்க மாட்டேன்றீங்க …என்னம்மா ரெண்டு பேரும் நடிகிரீங்க…
அம்மா என்னம்மா வீடு தேடி உங்க பொன்ன பாக்க வந்த என்ன உங்க ரெண்டாவது பொண்ணு விட்டு வம்பிலுக்க விடுறீங்க…
அவ சொல்ரது எல்லா உண்மைதான உமா…🤪🤪
அம்மா…. என்னம்மா நீங்களே… போங்க போங்க…நா யார்கூடயும் சேர மாட்டேன்…போங்க
சரி சரி கோச்சுக்காத தங்கம்….. ஹே வேதா வாயாடி எதுக்குடி பாவம் அவ கூட வம்பிலுத்துகிட்டு இருக்க… முதல்ல நீ தேடி கண்டு பிடிச்சு எடுத்தியா இல்லையா…
இல்லம்மா அங்க இல்ல இந்த மிலிட்டரி அத எங்க வச்சிருக்காருனு தெரில..😏😏 ஆனாலும் உன் புருஷனுக்கு இவளோ சீனு ஆகாது…
ஹே என்னாச்சு வேதா… என்னதும்மா காணா…
அது ஒண்ணுமில்ல உமா மாப்பிள்ளை ஃபோட்டோ இன்னும் யாருமே பாக்கல..அந்த மனுஷன் இன்னு யார்ட்டையும் காட்டல அதா…
அம்மா அத விடுங்க… அதா அப்பா இன்னிக்கு ஈவினிங் காட்டுறேன் சொல்லிருக்காருள்ள. விடும்மா…. ஹே உமா நீ சொல்லு நீ எதோ அப்பாத ரா… ண்ணு கேட்டியே…ராஜ் அண்ணானதான கேட்ட…
இல்லையே..
பின்ன
நா ரா..ரா.. ஹா ராத்திரி எதோ நம்ம தெருல கலவரமாம் உள்ள திருடன் வந்துடாங்கலாம்ல அம்மா சொன்னாங்க அதா என்னனு கேக்க வந்தே…
ஹே ஆமாடி உமா… நம்ம மாலா இருக்கால அவா வீட்டுலதா நுழஞ்சிட்டாங்க.. நேத்து காலைல இன்கம் டாக்ஸ் ரெய்டுண்ணு வீட்டுக்குள்ள வந்திருக்காணுங்க ஒரு ரெண்டு மூணு பேரு வந்திருக்கானுங்க வந்தவனுங்க எல்லாம் இடத்துலயும் நல்ல அடையாளம் கண்டு வச்சு நைட்டு வந்து நகை பணம் எல்லாத்தையும் அடிச்சுட்டு போய்ட்டானுங்க …. ஊருக்குள்ள போலீஸ் வந்து விசாரிச்சதுல அவனுங்க இந்த மாதிரி நிறைய இடத்தில காலைல எதாச்சும் வேசத்துல போய்ட்டு என்ன இருக்கு எல்லா விவரமும் பாத்து வச்சிட்டு நைட்டு போய் எடுத்துட்டு போய்டுவானுங்கலா ஆனா இது வர யார்ட்டேயும் மாட்டலியாம் … இப்போ நம்ம ஏறியாகுள்ளப் வந்துட்டாங்க…
என்னம்மா சொல்றீங்க நம்ம ஊரு பயலுக ரொம்ப யோசிக்குறானுங்க… என்னாம்மா பிளான் போட்டு திருடுறானுங்க…. அம்மா எனக்கு ஒரு டவுட்டு அவனுங்க இப்போ நம்ம வீட்டுக்குள்ள வந்தா என்ன பண்றது..
உமா சொல்லிட்டுருக்கும் போதே பிரேம் அண்ட் ஸ்ரீ வந்து வீட்டு கதவ தட்ட. …. இப்போ கெஸ் பண்ணுருப்பீகளே அவங்க ரெண்டு எதுக்கு அடி வங்கினாங்கனு😅😅😅
ஹே உமா உன் முகூர்த்த வாய வச்சு கேட்ட வந்துடானுங்க. ..
ஹே வேதா சும்மா இரு.. யாராச்சும் தெரிஞ்சவங்கலா இருக்க போது நா போய் பாக்குறே அப்படீன்னு சொல்லிட்டு போறப்போ அத தடுத்த வேதா… அம்மா இரும்மா ஒரு வேளை நீ சொன்ன அவனுங்களா இருந்தா என்ன பண்றது அதுனால நீ இந்த கட்டைய பிடி நா போய் கதவ திறக்கிறேன் சொல்லி கதவ திறக்க
ஸ்ரீ எதோ கால் வரவும் அத அட்டென் பண்ணிகிட்டே பிரேம உள்ள போக சொல்ல உள்ள வந்த பிரேம் வேதா டோர் ஓப்பன் பண்ணவும்
ஹாய் நா பிரேம் … இங்க நம்ம ஊரு ஸ்டேஷன்ல கான்ஸ்டபில்லா இருக்கே…இங்க தென்ற…… அவர் பேசிட்டிருக்கப்பவே
(கதவின் பின் புறம் நின்று கொண்டிறுந்த விஜயா மிக அமைதியான குரலில்)…ஹே வேதா யாறுடி……
அம்மா இந்தாள பாத்தா நீங்க சொன்னவன மாதிரிதான் இருக்கு யோசிக்காம மண்டய பொளந்துரும்மா……
அப்படீன்னு வேதா சொன்னதுதான் தாமதம் விஜயா பிரேம் மண்டைலியே உருட்டு கட்டய வச்சு டம்… டம்…டம் …..3 அடி பாவம் போட்ட போடுல பிரேம் தலைய பிடிச்சு கத்திகிட்டே கீழ விழ…
பிரேம் கத்துர சத்தத்த கேட்டு ஃபோன் பேசிட்டு இருந்த ஸ்ரீ ஒடி வர யாரோ ஒருவன் ஒடி வருவதை கண்டு ஒலிந்து கொண்ட உமாவும் வேதாவும் அவன் அறுகில் வரவும்
அவன் முகத்தை கூட பார்க்காமல் போர்வைய வச்சு மூடி அவன கும்மி எடுக்க….. அதாவது உமா போர்வய பிடிச்சிருக்க வேதா அவன போட்டு அடிக்க… விஜயா பிரேமை அடிட்த்ததில் ஸ்ரீயை கவனிக்கவில்லை அடி வாங்கி கொண்டிருந்த ஸ்ரீ வேகமா வேதா ரெண்டு கையையும் பிடிச்சி தன்னோட ஒரு கைக்குள வச்சு இன்னொரு கையால தன் முகத்தை மூடி இருந்த போர்வைய எடுக்க அவன பாத்தது உமா வேதா விஜயா மூணு பேரு ஷாக் ஆகி நிக்க
தம்பி நீங்களா..அடியே வேதா
ஸ்ரீ வேதாவ பாத்து ஹே சுண்டெலி என்னா அடி..எம்மா ஆளு பாக்கதா குட்டியா இருக்க… ஆனா அடி
அய்யோ சாரிங்க..தெரியாம…என்று நடந்ததை சொல்ல முதுகில் வழித்த இடத்தை பிடித்து கொண்டவாறு ஸ்ரீ அதக்குன்னு இந்த அடியா எம்மா …. என்னா அடி? உங்கள??
பின் விஜயா நடந்ததை கூற
சரி பயப்பட வேண்டாம் அவங்கள பிடிசாச்சு சோ டோண்ட் வொரி…. என்று அவர்களிடம் சொல்லி விட்டு பிரேமை எழுப்பி மயக்கம் தெளிய வைத்து அவரை ஆசுவாச படுத்தி நடந்ததை சொல்ல அச்சோ ஸ்ரீ இந்த
அடிதடி குடும்பம் என்று வலி தாங்க முடியாமல் கண்களை மூடியவாறு தலையில் கை வைத்து கொண்டு சொல்ல விஜயா அவரிடம் மன்னிப்பு கேட்க உமா வேதா இன்னும் அதிர்ச்சியில் நிற்க
பின் ஸ்ரீ தான் பிரேமை சமாதானப்படுத்தி அவரை வீட்டிற்குள் அழைத்து செல்ல…விஜயா இருவருக்கு காஃபி போட்டு கொடுக்க அத குடிச்சுகிட்டே கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகிவிட்டு ஸ்ரீ ப்ரேமை பாத்து அண்ணா இப்போ வலி எப்படி? என்று கேட்க பிரேமும் பரவாஇல்லை என்று சொல்ல பின் ஸ்ரீ அவர்களை பார்த்து பேச்சை தொடங்க
எங்க தென்றல் இல்லையா…. இல்லை என்பது போல் வேதா தலை அசைக்க பின் விஜயதான்
இல்ல தம்பி அவளும் அவங்க அப்பாவும் ரிலேசன் வீட்டு ஃபன்ங்சனுக்கு போயிக்காங்க..
ஓ ஓகே ஆன்டி அப்படீன்னா உங்க மூணு பேர்ட்டயே. கேட்டுரேன் நீங்களே சொல்லிடுங்க எழில் பத்தி உங்க தென்றல் மனசுல தாட்ஸ் எப்படி இருக்கு?? … அவன பிடிச்சிருக்கா???… அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்பது போல் கேக்க
இவன் இப்படி கேட்டதும் இவருக்கு எப்படி மாப்பிள்ளையை பத்தி தெரியும் என்று விஜயா உமா முழிக்க
வேதா இவரு எதுக்கு அவரா பத்தி கேக்கணும் ஒரு வேளை இவர்தான் எழிலா… நினைத்து ஒரு நிமிடம் அவளது மனசு சற்றே துடித்தது
இருக்க கூடாது இவரு எழிலா மட்டும் இருக்கவே கூடாது என மனதிற்குள் பல பிரார்த்தனை செய்து கொண்டிருக்க….
ஸ்ரீ மூன்று பேரு எழில் பற்றி கேட்டது முழிப்பதை கவனித்து பிறகே உணர்ந்நு கொண்டான்…. இவங்களுகுதான் எழில் யார்னே தெரியாதே இவங்கதான் அவன் ஃபோட்டோ கூட பாத்ததே இல்லையே இண்ணிகுதான அங்கில் காட்டுறதா சொல்லி இருக்காரு..என்று நினைத்து கொண்டே உமாவை பார்த்து….
எழில் யாரு தெரியுமா??? தங்கச்சி பாத்திருக்கீங்களா???
இல்லன்னா…. பாத்தது இல்ல பட் தென்றல் கல்யாணம் பண்ணிக்கோ போர மாப்பிள்ளை அது மட்டும் தெரியும்
ஓகே…. என் கூட இருக்க பிரெண்ட் நியாபகம் இருக்கா??
ஹ்ம்ம் இருக்கு அண்ணா…
ஓகே அவன பத்தி தென்றல் மனசுல இருக்க தாட்ஸ் என்ன ?? தென்றல் அவனதா கல்யாணம் பண்ணிக்க வேணும் அப்படீன்னு சொன்னா சம்மதிப்பாங்களா?..
அது மட்டு இந்த ஜென்மத்தில நடக்கவே நடக்காது அண்ணா… பட் தென்றல் அவர தப்பான தாட்ஸ் எதும் இல்ல பட் எண்ணனே தெரியாம ஒரு வித பயம் கோவம் எரிச்சல் இந்த ஜென்மத்தில அவங்கள பாத்திடவே கூடாதுன்னு நினைக்குறா…
(ஸ்ரீ மைன்ட் வாய்ஸ் அவனை பார்த்து கிண்டலாக சூப்பர்டா ஸ்ரீ கல்யாணம் ரொம்ப அமர்க்களமாக நடக்க்கு … ஹா… ஹா…ஹா… ஹா…)
பின் அவன் மைண்ட் வாய்சை அடித்து துரத்தி விட்டு .. ஒரு வேளை என் பிரென்ட் தான் எழிலா இருந்தா இப்போ இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்ன தென்றல் அவன கல்யாணம் பண்ணிக்கிருவாங்களா???? ….
வாட்??? அண்ணா நீங்க சொல்றது??
ஸ்ரீ ஆம் என்பது போல் கண் அசைக்க…
வேதா மனதில் நடந்த பிரார்த்தனையை நிறுத்தி விட்டு ஒரு குத்தாட்டமே மனதிற்குள் போட்டுக்கொண்டாள்…எதுக்கு இப்படிலா நினைக்கிறாள் என்ற காரணம் அவளுக்கே தெரியவில்லை
விஜயா சந்தோசத்தில் வாணின் உச்சிக்கே சென்று விட்டார் …
தம்பி நீ சொல்றது நிஜமாவே உண்மையா. . என் பொண்ணு உசுற மூணு தடவ காப்பத்துன அந்த தம்பிதா என் மாப்பிள்ளையா… அன்று ஹாஸ்பிடல விளையாட்டாய் மருமகணா வந்தா நல்லா இருக்கும் சொன்னது நிஜமானதை நினைத்து எண்ணிலடங்கா சந்தோசம்….
வேதா குத்தாட்டத்தை இன்னும் ஸ்டாப் செய்யவே இல்லை
பாவம் உமா…அவள் மனதில் எழுந்த கேள்வியை கேட்டே விட்டாள்
அண்ணா இந்த கல்யாணம் நிஜமா நடக்குமா????உங்களுக்கு நம்பிக்கை இருக்கா???
பிரேம் சிரித்து கொண்டே…எங்களுக்கு இதா சந்தேகமே அதா ஒரு பிளான் போட்டிருக்கோம் அதுக்கு உங்க ஹெல்ப் வேணும்…
என்ன ஹெல்ப் என்பது போல் அனைவரும் பார்க்க ..
ஸ்ரீ அங்கில் அண்ட் ராஜ் ரெண்டு பேரு இங்க இருந்தா நல்லா இருக்கு.. என்று சொல்லி கொண்டு இருக்கு போதே ஒரு கேஸ் விஷயமா வெளிய போகி இருந்த ராஜ் அங்கு வந்து சேர்ந்தான் …பின் விஜயனுக்கு கால் செய்த வேதா ஸ்ரீ பிரேம் வீட்டிற்கு வந்தது முதல் அனைத்தையும் சொல்லியும் சொல்லாமலும் விஜயனை மட்டும் வீட்டிற்கு வர சொல்ல அவரும் இவர்கள் திட்டபடி தென்றலை அந்த காது குத்து விழாவில் இருக்குமாறும் பிறகு தானே வந்து அழைத்து செல்கிறேன் ஒரு சின்ன வேலை இருக்கு என்று சொல்லி வேகமாக கிளம்பி வீடு வந்து சேர்ந்தார்…
அவர் வீட்டிற்கு வந்ததும் ஸ்ரீ தேவா விற்கு அங்கிருந்த லேப்டாப் மூலம் வீடியோ கால் செய்தான் … பின் தன் திட்டத்தை அனைவரிடமும் சொல்ல தொடங்கினான் ..
அதாவது மகாஜனங்களே நம்ம பிளான் படி தென்றலுக்குக்கு எழில் தாலி கட்டுற வர அவங்க ரெண்டு பேருக்கு இவதா பொண்ணு இவன்தான் பையன்னு தெரிய கூடாது….தெரியாமலே ………………….அப்படீன்னு ஸ்டார்ட் பண்ணி தென்றல் வீட்டுக்கு வர வழியில பிரேம் அண்ட் ஸ்ரீ சேந்து போட்ட பிளான் எல்லாத்தையும் சொல்லி முடிக்க…எல்லாரும் கோரசா ஓகே சொல்லி வெற்றி நமதேன்னு கைய தூக்கி கத்த ஸ்ரீ தன் மனசுல இருந்த சந்தேகத்தை விஜயன் விஜய்யா கிட்ட கேட்டுடான்….
நானும் அப்பாவும் எழில் தென்றல கல்யாணம் பண்ணிக்கணு ஒரு பிடிவாதமா நினைக்ரதுக்கு ஒரு ரீஸன் இருக்கு அவ தென்றல் கூட இருக்கப்போ இதுக்கு முன்னாடி அவன் லைஃப்ல நடந்த கசப்பான நிகழ்வுகள மறந்திடுறா..தென் தென்றல் கிட்ட அவன் தன்னோட அம்மாவ தேடுறான் பட் நீங்க என்று தயங்கி கொண்டே கேட்க…….. விஜயா சிரித்து கொண்டே
தம்பி இவரோட பாலிய சின்கிதன்தா தேவா அண்ணா…ரெண்டு பேரோட நட்பும் எப்படீனு எனக்கு தெரியும் ஆனா விதியின் விளையாட்டு இவங்கள பிரிச்சே வச்சிருந்துச்சு இத்தனை வருசமா….. ம்……ம் ……ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்க கூட முடியாத அளவுக்கு அந்த விதி இவங்க நட்புல விளையாடிட்டு இருந்துச்சு பட் இப்போ.. இந்த கல்யாணம் மூலமா அந்த நட்பு ஒன்னா சேர போது இனி யாராலும் இவங்க நட்ப பிரிக்க முடியாது… அதுவும் இல்லாம எழில் தம்பி காப்பாத்துன அந்த உசுரு அவருக்கே சொந்தம்…
அதுனால இந்த கல்யாணம் எங்களுக்கும் ரொம்ப சந்தோசம் அப்படீன்னு சொல்லி முடிக்க…
சூப்பர் ஆன்டி சூப்பர்…நம்ம பிளான்ல முதல் கட்ட காய நாளைக்கே நகர்த்தலாம் உமா நா சொன்ன மாதிரி தென்றல கூப்பிட்டு ட்ரெஸ் எடுக்க வந்திடு ஓகேவா
ஓகே அண்ணா
பிரேம் அண்ணா நா சொன்ன மாதிரி நீங்க அந்த கடைல ஒரு ஆள செட் பன்னிருங்க….
ஓகே தம்பி
ஆன்டி நீங்க நா சொன்னது மாதிரி சொல்லி தென்றல உமா கூட அனுப்பி வைங்க
அப்போ நானு என்று வேதா சிணுங்க
ஸ்ரீ சிரித்துக்கொண்டே உனக்கு ராஜ் மச்சானுக்கும் வேர ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு…
ராஜ் ஸ்ரீ தன்னை மச்சான் என்றும் உமாவை உரிமையாக தங்கச்சி என்று அழைக்கவும் அதைக்கண்டு மகிழ்ந்தவன் பின் உமாவை பார்த்து நக்கலாக சிரிக்க
உமா அவன் சிரிப்பின்காரணம் அறிந்து அவனை முறைக்க வேதா இவர்கள் பாவனைகளை கண்டு நக்கல் செய்ய அவர்கள் அந்த நாளை சிரிப்புடன் கழிக்க மறுநாள் பொழுது விடிந்தது….
ஹே தென்றல் வாடி போய்ட்டு வரலாம்…அதா அம்மா சொல்றாங்கள
அம்மாவும் அப்பாவும் தான் லூசு தனமா எதோ சொல்றாங்கணா நீயுமாடி என்னடி உமா இதெல்லாம் நம்ம மட்டு எப்பட்டி போய் எடுக்கிறது வீட்ல இருக்க எல்லாரும் சேந்துதான போனு
ஹே தென்றல் அது மேரேஜ்குன்னு மாப்பிள்ளை பொன்னுக்குனு முகூர்த்த ட்ரெஸ் அப்பரம் ரெண்டு பேமிலிக்கு சேத்து ட்ரெஸ் எடுகுறப்போ..இது மாப்பிள்ளைக்கு மட்டும் ஸ்பெசலா எடுக்கணுமா உனக்கு புடிச்சமாதிரி லைக் எப்படி சொல்லலாம்..🤔🤔ம்ம் ஒரு கிஃப்ட் ப்ரசன்ட் பன்ன மாதிரி..சும்மா ஒரு சர்ப்ரைஸ் பன்னா நல்லா இருக்கும்ல…..பிகாஷ் அவர கரைக்ட் பண்ண வேனாமா…
ஹே இதெல்லாம் அடுக்கவே அடுக்காகதடி…
ஹே தென்றல் மரியாதையா உமா கூட போய் மாப்பிள்ளை தம்பிகு& 5 நாளைக்கு.5 டிரஸ் எடுத்துட்டு வா… இது அப்பா சொன்னது நா சொல்லல
உன் புருஷனுக்கு வேர வேலையே இல்ல..ஹே. வேதா காப்பாத்துடி
எனக்கு தெரியாதுப்பா நா சின்ன பொண்ணு என்ன விட்டுரு
போடிங்
வேறு வழி இல்லாமல் தென்றல் உமாவுடன் ஜவுளி கடைக்கு போரா நேத்து எல்லாரும் பன்ன ஃபர்ஸ்ட் பிளான் படி
இங்கு ஸ்ரீ கார் ஓட்டி கொண்டு வர எழில் அவனை வறுத்தெடுத்து கொண்டே வந்தான்…
டேய் அந்த மீச ரொம்ப போராருடா அவரு அலும்பு தாங்கல அதுகேத்த மாதிரி நீயும் ஆடிட்டு இருக்கு உண்ண என்னிக்கு தூக்கி போட்டு மிதிக்க போறேன்னு தெரில..அறிவில்ல நண்பனா நீயல்லா எனக்கு ஹெல்ப் பண்ணுடா சொன்ன அந்த ஆளுக்கு சாதகமாவே பன்ற உண்ண..
எழில் அவனை திட்டி கொண்டே வர ஸ்ரீ அதை காதில் வாங்காமல் தன் மொபைலில் வந்த டன் என்றும் மீ அன்ட் தென்றல் ஆன் த வே என்ற குறுஞ்செய்தியை பார்த்து மெலிதாய் புன்னகைத்தான்….
எழில் தென்றல் வருவார்கள்