தென்றல் வேதா எழில் ஸ்ரீ நாலு பேரு உள்ள போறாங்க
பயத்துல இருந்து வெளிய வராத விஜயா அவங்ககிட்ட எதும் பேசாம இருக்காங்க ….
அவங்க பயத்துல இருக்கத புரிஞ்சுகிட்ட எழில். அவங்க கையபிடிச்சு
“தென்றல் வேதாக்கு ஒன்னும் ஆகலை பயபட வேண்டாம் அம்மா.. அப்பறம் இனிமேல் உங்க பொன்ன ஐஸ் கிரீம் சாப்புடுறத கம்மி பண்ண சொல்லுங்க… பாக்ரப்போயெல்லா கைல ஐஸ் கிரீம் வச்சிட்டேதா இருக்காங்க…”
“எங்க தம்பி சின்ன பிள்ளைலயிருந்து நாங்களு எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம்… கேக்க மாட்டரா இது எதோ ஒரு நோய் மாதிரியே போச்சு…… எப்பவாச்சுனா பரவாயில்லை எப்பவுமே இதவே சாப்பிட்டு திரிரா நீங்க மண்டைல்ல நாலு தட்டு தட்டி புத்தி சொல்லிட்டு போங்க தம்பி…”
இப்போ எழிலுக்கு ரொம்பவே சாதகமாகவே போச்சு😀
எழில் சிரிச்சுகிட்டே தென்றல பாக்க…
இங்க தென்றல் அவங்க அம்மாவ முரச்சுகிட்டு “விஜயா நீயெல்லாம் ஓரு தாயா😭😭😡😠😭😭 இப்படி என்ன இந்த போலிசுட்ட மாட்டி விடுறியே … நா பாவம் இல்லையா”
“யாரு நீயாடி பாவம்…தம்பிங்க ரெண்டு பேர் இருக்காங்கனு பாக்குரே இல்ல”
“இல்லனா …. இல்லனா என்ன பண்ணுவ…”
“இல்லனா என்ன பண்ணுவேணா நீ வீட்டுக்கு வாடி.. உங்க அப்பாகிட்ட சொன்னாதா அடங்குவ… யேண்டி காய்ச்சலுக்கு ஊசி போட வந்துட்டு இங்கேயும் வந்து ஐஸ் கிரீம் சப்புட்டு இருக்க….”
“அம்மா மிலிட்டரி கிட்ட சொன்ன.”
“சொன்னா என்னடி பண்ணுவ… நான் சொல்லுவே…”
“சொல்லுவியா …உன்ன?”
“அம்மா பிளீஸ்மா சொல்லாதமா… பாவம்ல… நானு!”
“யாருடி பாவம் நீயா … இன்னொரு தடவ அப்படி சொன்ன உன்ன அக்கானு கூட பாக்க மாட்டே.. மவளே நானே உண்ண கழுத்த நெரிச்சு கொன்னுடுவே…அம்மா வயிறு ரொம்ப வலிக்குதே.. எல்லா உன்னலதாண்டி…”
வேதா வயிற்றை பிடித்துக்கொண்டே திட்ட தென்றல் முகத்தை பாவமாக வைத்து கொண்டு இருந்தாள்….
இங்கு தென்றல் நிலை கண்டு எழில், ஸ்ரீ சிரித்தே விட்டனர்…
பின் எழில், தென்றல் காதருகில் சென்று
“என்ன மேடம் எனி ஹெல்ப்…. நாங்க வேணும்னா …”
தென்றல் சரி என்பதை போல எழிலை பார்க்க…
அதற்கு எழில்..
“பட் ஒரு கண்டீஷன் காப்பத்தனும்னா தைங்ஸ் சொல்லணும் உன்ன காப்பாத்துனதுக்கு
தென் என்னோட சண்ட போட்டதுக்கு சாரியும் சொல்லனும் ஓகே வா?”
“ஹா.. நா எதுக்கு உங்களுக்கு சாரி அண்ட் தைக்ஸ் சொல்லணும்… சொல்லப்போனா உங்களாலதா அவன் என் கழுத்துல கத்தி வச்சா நீங்க மட்டும் அவன தப்பிக்க விடாம இருந்திருந்தா அவன் இங்க வர வந்திருப்பானா இவளோ நடந்திருக்குமா இப்பகூட என்னாலதா அவன பிடிச்சீங்க அதுக்கு ஒரு தைக்ஸ் அண்ட் அவன் என் கழுத்தில கத்தி வைக்க நீங்காத காரணம் அதுக்கு ஒரு சாரி சொல்லுங்க…”
என யாருக்கும் கேட்காமல் எழில் காதில் கேட்கும்படி சொல்ல
எழில் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு….
“அம்மா உங்க பொண்ண அவங்க அப்பாகிட்ட சொல்லி ஒரு டூ வீக்ஸ் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வைக்க சொல்லுங்க….. இது கூட ஒரு விதமான டிரீட் மென்ட்தா…இந்த டிரக்ஸ் அண்ட் ஆல்கஹால்க்கு அடிக்ட் ஆனவங்களுக்கு இப்டிதா டிரீட்மென்ட் கொடுப்பாங்க… மே பீ இப்படி பன்னா கூட உங்கா பொண்ணு ஐஸ் கிரீம் சப்டறத மறக்க சான்ஸ் இருக்கு….”
“சூப்பர் தம்பி ..நல்ல ஐடியா.. அப்டியே பண்ணற….”
தென்றல் எழிலை ஒரு பார்வை பார்த்து முறைக்க … அவன் சிரித்துக்கொண்டே “அப்போ நாங்க கிளம்பறோம்மா கொஞ்சம் இம்பார்டண்ட் வொர்க் இருக்கு..இல்ல உங்கள வீட்ல வந்து விட்டுட்டு போகவாம்மா நாங்க..”
“இல்ல தம்பி நாங்க பாத்துக்கிறோம். நீங்க கிளம்புங்க தம்பி”
“ஹ்ம்ம் சரிங்கம்மா அப்பறம் நா சொன்ன அந்த ஹவுஸ் அரெஸ்ட்… ஹ்ம்ம்…”
“கண்டிப்பா தம்பி…”
தென்றல் அவனை முறைத்தவாரே நிற்க…இருவரும் சிரித்துக் கொண்டே கிளம்ப கதவு வரை சென்ற ஸ்ரீ, வேதாவை திரும்பி பார்த்து, “உங்களுக்கு ரொம்ப பெயினா இருக்குதுனு இப்போ உங்க அக்காகிட்ட சொன்னீங்களே?
வேணும்னா அகைன் ஒரு இன்ஜெக்சன் போட்டுகோங்க”
வேதா இதழில் சிறு புன்னகையுடன் சரி என்று கண்ணசைக்க இருவரும் கிளம்பி சென்றனர்
இருவரும் சென்றதும் இருவரையும் பற்றி புகழ்ந்து தள்ள.. தென்றலுகோ கோவம் இன்னும் கூடியது..
“ரொம்ப நல்ல போலீஸ் தம்பிங்கள்ள ரெண்டு பேரும் ..இந்த காலத்துல எத்தன போலீஸ் இப்படி இருக்காங்க. இவளோ அக்கறையா…இந்த சின்ன வயசுலயே… எவ்ளோ கேரிங்.. ரொம்ப நல்ல பசங்க”
விஜயா சொல்ல சொல்ல வேதா புன்னகையுடன் ஸ்ரீ யை நினைத்து இதழில் சிறு புன்னகை. சிந்தி கொண்டிருக்க
தென்றலோ…… “அம்மா போது ரொம்ப புகழ்ந்து தள்ளாத..என்னால கேக்க முடில …எதோ உன் சொந்த மருமகனுங்கள புகழ்ற மாதிரி புகழ்ந்துட்டு இருக்க”
“நீ சொல்றது கூட எனக்கு கேக்க நல்லா இருக்கு தென்றல் …”
“அய்யோ அம்மா போது வா கிளம்பலாம்…” என்று சொல்லி… தனக்குள் “நம்ம இங்க இப்படி இருக்க அவனுங்கதா காரணம் அது புரியாம பேசுரியேம்மா” என புலம்பிகொண்டாள்
“என்னடி புலம்பிட்டிருக்க வா கிளம்புவோம் வீட்டுக்கு போனது ஃபர்ஸ்ட் அந்த தம்பி சொன்னத பண்ணனு…”
வேதாவும விஜயாவுடன் சேர்ந்து கொண்டு “நீ சொல்ரதுதாம்மா சரி” என்று சொல்லி கிண்டலிடிக்க ..
பின் மூன்று பேரும் வீட்டிற்க்கு சென்றதும் விஜயா விஜயனிடம் நடந்ததை சொல்லி அழுது புலம்பி கண்ணீர் சிந்தி சில பல திட்டுகளை தென்றல்க்கும் வாங்கி கொடுத்து விட்டு எழில் சொல் படி அவளை மூன்று வாரம் ஹவுஸ் அரெஸ்ட் செய்யவும் வைத்தார் விஜயா…
பாவம் தென்றலின் நிலமை அய்யோவென ஆகிவிட்டது… 2 நாட்கள் கூட அவளால் தாக்கு பிடிக்கமுடியவில்லை.
இங்கு போலீஸ் ஸ்டேஷனில் அந்த கன்டெய்னர் லாரி டிரைவர் அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தப்பி சென்ற அந்த கைதியை பிரேம் கோர்ட்டுக்கு அழைத்து செல்ல… எழில் ஒரு முக்கியமான பைலை ஆராய்ச்சி செய்யும் வேலையில் மூழ்கி இருக்க ஸ்ரீ கடந்த ஒரு வாரமாக தனது நண்பன் எழிலின் மாற்றத்தை நினைத்து யோசனையில் அமர்ந்திருக்க அவன் யோசனையை கலைக்க கால் செய்தான் பிரேம்…
“சொல்லுங்க பிரேம்”
“சார் கோர்ட்டுக்கு போர வழில அக்கியுஸ்ட் தப்பிச்ட்டான் சார்…”
“வாட்………”
“எஸ் சார்.. அது மட்டுமில்லாம அவ தப்பிச்சு ஒடுறப்போ அவன ஃபாலோ பண்ணி நாங்க துறத்திக்கிட்டு போனோம் பட் அவனுக்கு ஆப்போசிட்ல வந்த லாரி அவன் மேல மோதிடுச்சு சார்….”
“டேமிட் … என்ன பிரேம்…. இதெல்லாம்.. இவ்வளவு கேர்லசா… ம் ம் ம்…
ஓகே இப்போ அக்கியூஸ்ட் .. ஹூ இஷ் ஓகே? ஆர்?”
“சார் ஹாஸ்பிடல அட்மிட் பண்ணிருக்கோ சார் பட் இன்னும் அவன் கண்ணு முளிக்கல சார்.” என்று சொல்லி முடிக்க … ஸ்ரீ இந்த விசயத்தை எழில் காதுக்கு எடுத்து சொல்ல.. எழில் சந்தேகப்பட்டு அவனை ஹாஸ்பிடல் போக சொன்னான்…ஸ்ரீ யும் சென்றான்.
அவன் போன பின்னாடி நெற்றியில் கை வச்சு யோசனையில் இருந்த எழிலுக்கு ஒரு கால் வர அத அட்டெண்ட் பண்ணி காதுல வைகுரா
“ஹலோ”
(யாருமே எழில்ட பேசல பட் ஒரு பொண்ணு கத்துற சத்தமும் கூடவே ஒரு நாலஞ்சு பேரு அவனுங்களுக்குள்ள பேசிக்கிற சத்தமும் கேக்க மறுபடியும் எழில் தன்னோட போன பாக்க அவனோட பெர்சனல் நம்பற்கு கால் வராம… பொண்ணுங்க குழைந்தைங்க வயசானவங்க இப்படி யாருக்கச்சு எதாச்சும் பிராபலம்னா 100 க்கு அடிஸ்னலா கால் பண்ண சொல்லி எழில் அறிமுகப்படுத்தின இன்னொரு நம்பற்குதான் இப்போ கால் வந்திருக்கு )
“டேய் யாருடா நீங்க எதுக்குடா என்ன கடத்திட்டு வந்தீங்க… டேய் இது என்ன இடம்டா டேய் மொட்ட தலையா.. டேய் கருப்பு பூதம்.. சொல்லுடா யாரு நீங்கல்லாம்… “
“அட யார்டா இவ இம்சயா இருக்கா.. சேகர்ட்ட சொல்லி சங்கர்க்கு கால் பன்ன சொல்லு முதல்ல அவள அமைதியா இருக்க சொல்லுங்கடா.”
இத கேட்ட எழில் யாரோ ஆபத்துல இருக்குறத புரிஞ்சி அந்த நம்பெற டிரேஸ் பண்ணி கால் வந்த இடத்த கண்டுபிடிச்சு ஸ்பாட்டுக்கு போரா…
அங்க தென்றல் கத்திகிட்டே இருக்க…அந்த கூட்டத்துல கறுப்பு கலர் கண்ணாடி போட்டு பல்க்கா இருந்த ஆள் ஒருத்தன் அவ படுத்தின இம்ச தாங்க முடியாமல் அவள பளார் பளார்ருனு நாலு அற அறையவு அதுல பயந்து அமைதியா இருக்கா தென்றல்….
ஸ்பாட்டுக்கு வந்த எழில் இங்க தென்றல் இருக்கத பாத்துட்டு
“ஹே சூறாவளி நீ என்ன பண்ற இங்க…அப்போ நீதா கால் பன்னதா”
“ஆமா நாந்தா”
:ஏண்டி எவ்ளோ தைரியம் இருந்தா போலீசுக்கு கால் பண்ணிருப்ப” அப்படீன்னு சொல்லி அந்த கறுப்பு கலர் கண்ணாடி போட்டு பல்க்கா இருந்த ஆள் அவள அடிக்க வந்து கை ஓங்கி அவள் கண்ணத்துகிட்ட கைய கொண்டுபோகும் போது… அவனோட வயித்த பிடிச்சு அய்யோனு கத்திகிட்டே கீழ விலுரா ஏண்ணா அவன் தென்றல அடிக்க கைய ஓங்கினப்போவே எழில் அவன் வயித்துல ஓங்கி குதிட்டான்… அதன் பின்னாடி அங்க இருக்கவங்க எல்லாரையும் அடிச்சு தும்சம் பண்ரா…
அடுத்து அங்க வந்த போலீஸ் ஃபோர்ஸ் எல்லாரும் மீத இருக்க எல்லாரையும் அடிச்சு ஸ்டேஷன்க்கு இழுத்துட்டு போறாங்க…
அதன் பிறகு எழில் தென்றல்ட்ட
“நீ எப்படி இங்க … எதுக்காக உண்ண கடத்துனாங்க எதாச்சும் தெரியுமா உனக்கு?”
“எனக்கு தெரில”
“எங்க உண்ண கடத்துனாங்க ?
எப்படி கடத்துனான்க?
எதாச்சும் நியாபகம் இருக்கா?”
தென்றல் நடந்த எல்லாத்தையும் சொல்ரா
டூ டேசா வீட்டுக்குள்ளேயே ஹவுஸ் அரெஸ்ட் ஆகியிருந்த தென்றல பாக்க உமா வரா
“ஹாய் தென்றல் என்னடி ஹவுஸ் அரெஸ்ட் அனுபவம்லா எப்படி இருக்கு”
“அட போடி …. .என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா” அப்படீன்னு அமைதியா கேக்குறா
“அது ஏண்டி பாவமா இல்லியான்றத மட்டும் இவளோ அமைதியா சொல்லுற..”
அதுவா…அவ மனசுக்குள்ள வேதாவ நினச்சு கிட்டே ஹாஸ்பிடல நடந்த எல்லாத்தையும் சொல்ல உமா விழுந்து விழுந்து சிரிக்க
“இவளோ நடந்திருக்காடி ..இதெல்லாம் தெரியாதே நீ ஹவுஸ் அரெஸ்ட் அப்படீனுதா தெரியும் ஹ ஹ ஹ…”
“இதுக்கெல்லாம் காரணம் அந்த 2 லுசுங்கதா”
இத கேட்ட எழில்…
“ஹே நிறுத்து நிறுத்து இப்போ யார லூசு சொன்ன மீ அண்ட் ஸ்ரீ தான”
“தெரிஞ்சா சரி…”
“ஹே எவ்ளோ தைரியம்…உண்ணலா கடத்திருக்கா பாரு….”
“இப்போ நா நடந்தத சொல்லனுமா வேணாமா .”
“சரி சொல்லு…”
“நானும் உமாவும் பேசிகிட்டே இருந்தோமா அப்போ ஐஸ் வண்டி சத்தம் கேட்டது..”
“ஹே ஹே உமா உமா ஐஸ் வண்டி உமா”
“ஆமாடி அதுக்கு என்ன இப்போ”
“ஹே பிளீஸ் உமா ஒண்ணே ஒண்ணு மட்டும்”
“ஹே போடி.. எதுக்கு நா உனக்கு ஐஸ் வாங்கி தந்து அந்த மிலிட்டரி என்ன சுட்டு தள்ளவா… முடியாது போடி”
“ஹே அந்த ஆளுக்கெல்லம் சுட தெரியாது போடி”
“முடியாது முடியாது…”
“முடியாதா அப்போ நீ இங்கேயே இரு நா போய்ட்டு வந்துடுறே அப்படீன்னு சொல்லி பின் பக்க க கேட் வழியா ஏறி குதிச்சு வந்தேனா பட் அதுக்குள்ள அந்த ஆளு எங்க வீட்ட தாண்டி போய்ட்டா அப்பறமா நா அவனா ஃபாலோ பண்ணிட்டே வந்தேன்… அவன் முன்னாடி போக அவன் பின்னாடியே நா கத்திகிட்டே நா ரெண்டு தெரு தள்ளி வந்துட்டே அப்போத அங்க யாருமே இல்ல அப்படீன்றதவே நா திங்க் பண்ணுனே நா யோசிச்சு கிட்டிருந்தப்போவே ஒரு நாலு பேர் வந்து என்ன தூக்கிட்டு வண்டாங்கனு அப்பறமா என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இறுந்தப்பொதா என் பக்கத்துல ஒரு பட்டன் செல் இருந்துச்சு அதா வச்சுதா கஷ்டபட்டு என் கால் விரலால உங்களுக்கு கால் பண்ணேன்” அப்படீன்னு அவ சொல்லி முடிக்க தென்றலை அறைந்திருந்தான் எழில்
“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா… ஐஸ் வண்டி போச்சுன்னா பின்னாடியே போகிருவியா.. கொஞ்சம் சீரியஸ்னஸ் இல்ல எப்போ பாரு கைல ஐஸ் கிரீம் வச்சுட்டு எதாச்சும் ஒரு பிராபலம் பண்ணிட்டே இருக்க…. இன்னொரு தடவ இந்த மாதிரி எதாச்சும் நடந்துச்சு…. ” அப்படீன்னு அவள திட்டிக்கொண்டே அவள சுத்தி கட்டியிருந்த கட்ட கழட்டி விடுரா
“எப்படி இப்போ வீட்டுக்கு போவ…”
“நடந்து…”
“என்ன……😠😠”
“ந… நட … நடந்து….. ( மனதிற்குள் கோவத்துடனும் வெளியில் அழுகையுடன் சொன்னால் தென்றல்)
“மரியாதையா வண்டில ஏறு நா வந்து விட்டு. போறேன்…”
“இல்ல வேனாம் நா நடந்தே போய்டுவே….”
“சொல்லிட்டே இருக்கே … இப்போ ஏற போறியா இல்லையா😠😠😠” அவன் கோவம் அறிந்து வண்டியில் ஏறினால் தென்றல்…
ஐஸ் வாங்க போன தென்றல் ரொம்ப நேரமாகியும் வராம இருக்கவும். .. கொஞ்சம் பயந்து போய். அவள தேடி பஸ் ஸ்டாப் வர வரா உமா…
அவ அங்க வரவும் எழில் தென்றல் வரவும் சரியாக இருந்தது…
“ஹே தென்றல் என்னடி எங்க போய்ட்டு வர”
“ஹ்ம்ம் ஐஸ் கிரீம் வாங்க ஏமா நீயாச்சு உன் பிரென்ட்க்கு எதும் சொல்ல மாட்டியா…”அப்படீன்னு நடந்தத சொல்லி “இனிமேலாச்சு கேர் ஃபுல்லா இருங்க..” அப்படீன்னு சொல்லிட்டு கிளம்ப அவள ஓங்கி அறையுறா உமா .
அவ பங்குக்கு அவளும் நாலு திட்டு திட்ட்டி… ராஜ்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டு வீட்டுக்கு போரா உமா…
ராஜ் அவள எந்த அளவுக்கு திட்டி அழ வைக்க முடியுமோ அந்தளவுக்கு திட்ட பின்ன,
விஜயன் விஜயா கோபத்துல எது பேசாம இருக்க வேதா வந்துதா எல்லாரையும் சமாதான படுத்தி வீட்ல எல்லாரையும் இயல்பு நிலைக்கு கொண்டு வரா…
பட் தென்றல்… அவ மைன்ட் எப்படி இருக்குனு அவளுக்கு மட்டும்தான் தெரியும்….
இங்க எழில் அவள இறக்கி விட்டு ஸ்டேசன்க்கு போக ஸ்ரீ யும் கரெக்ட்டா வந்தா
எழில் அவன்ட்ட ஹாஸ்பிடல இருந்த கைதி பத்தி விசாரிக்க
“ஹூ இஸ் கோமா மச்சா…”
“வாட் ..எப்போ சரி ஆகும் எதாச்சும் சொண்ணங்களா?”
“இல்ல எது சொல்ல முடியாதுண்ணு சொன்னாங்க.. எப்போ வேனாலும் கியூர் ஆகலாம் ஆகாமலும் போலா சொன்னாங்க”
“சிட் 😠😠😠😠😠……”
“எஸ் மச்சா பட் நீ சந்தேகப்பட்டு அங்க போக சொன்னது சரிதா… ஒருத்தன் வந்து அவன போட்டு தள்ள பாத்தா பட் நாங்க கரக்ட்டா உள்ள போகும் போது தப்பிச்சு ஒடிட்டா…நா பிரேம சீ சீ டீவி செக் பண்ண சொல்லிருக்கே… தென் பக்கத்துல விசாரிக்க சொல்லிருக்கே.. கண்டுபிடிச்சுடலா….”
“சம்த்திங் ராங் ஸ்ரீ.”
“எஸ் ஆமா நீ எங்க போய்ட்டு வர”
“அதுவா ” என நடந்த அனைத்தையும் சொல்ரா எழில்…..
“என்னாது சூறாவளிய அடிச்சயா?”
“ஹா மச்சா. . .பின்ன ஒரு சீரியானசே இல்லாம இருந்தா அதா கோவம் வந்திடுச்சு மச்சா…”
டேய் அந்த பொண்ணு யாரோட…பின் மனதிற்குள் இவன்ட இப்படி பேசுனா சரி பட்டு வர மாட்டா…… நம்மதா வர வைக்கணு… வர வைக்குறே…
“மச்சா உண்ட நா பேசனு மச்சா …”
“டேய் இப்போ என்ன பண்ணிட்டிருக்க… தாலாட்டு பாடிட்டிருகியா?”
“டேய் இப்போ இல்லடா… நைட் 8′ கிளாக்… நம்ம இடத்துக்கு வந்திடு…. சரியா”
“அங்க எதுக்குடா… மூடு இல்லடா இன்னைக்கு…”
“மூடிட்டு வாடா….”
“டேய் மச்சான்… 😉 என்ன மூடிட்டு வானுலா சொள்ளுரா ரொம்ப பெரிய விஷயமா இருக்குமோ🤔🤔🤔சரி போவோம்….”
ஸ்ரீ சொன்ன இடத்துக்கு எழில் 7:50 க்குளா போய் வெயிட் பண்றா….
அந்த பிளேஸ் ஒரு குட்டி வீடு அந்த வீட்ட சுத்தி ஃபுல்லா கார்டன் அங்க அங்க ரோஸ் செடி ….வெள்ளை செவ்வந்தி செடி..அந்த வீட்ட சூத்திலும் பூத்து குலுங்க… வீட்டுக்கு முன்னாடி வரிசையா 5 தென்னைமரம் அந்த மரத்துல போட்டிருக்க அந்த எல்லோ கலர் லைட் அந்த வீட்டு மாடில அழகா வெளிச்சம் கொடுக்கும் அளவுக்கு பிளான் பண்ணி அங்க அந்த லைட்ட மாட்டிருக்காங்க…அந்த வீட்டுக்கு பின்னாடி ரொம்ப பெரிய மாங்காய் மரம் ரெண்டு . அந்த மரத்துக்கும் பூசெடிக்கு நடுவில குட்டியா ஒரு சுவும்மிங் ஃபூல்… அந்த மரத்துல இருந்து அடிக்கிற காத்து அந்த சுவும்மிங் ஃபூல்ல பட்டு அதில இருந்து வர குளிர் காற்று அங்க இருக்க எல்லாரையும் சிலிர்க்க செய்யும்….இங்க மாடில ஒரு சின்ன டேபில்.. அத சுத்தி மூணு சேர்…. மாடிய சுத்தி சுவத்துல மாட்டிருக்க அந்த வெல்ல கலர் லைட்.. எல்லாமே சேந்து அந்த வீடே செம்மையா இருக்கு ..எழில் ஸ்ரீ மீரா இவங்க மூணு பேரோட சந்தோசம், துக்கம், திட்டம், சில பல உலறல் இது எல்லாமே இந்த வீடு பாத்திருக்கு… அப்படி இன்னிக்கு எழில உலற வைக்கத்தா ஸ்ரீ அவன இங்க வர வச்சிருக்கா.. பிள்ள அது தெரியாம வந்து தனியா உக்காந்து இயற்கைய ரசிசிட்டு இருக்கு….🤭🤭🤭🤭
மாடிக்கு வந்த ஸ்ரீ எழில் அங்க இருக்கத பாத்துட்டு
என்னடா நல்வனே மூடு இல்ல சொன்ன இப்போ எனக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ற.. சொல்லிட்டே 2 மிலிட்டரி சரக்க எடுத்து முன்னாடி வைகுறா
ஈ ஈ ஈ ஈ 😆😆😆😆
“டேய் டேய் பல்ல காட்டினது போது… இத மீசகிட்ட இருந்து எடுக்ரதுக்குள்ள நா பட்ட பாடு எம்மா முடிலடா சாமி…” பேசிட்டே ஆளுக்கு ஒரு பெக் ஊத்த ரெண்டு பேரும் ஸ்டார்ட் பண்றாங்க…. ஸ்ரீ ஒரு பெக்கோட ஸ்டாப் பண்ணிக்க, எழில் அந்த ஒரு பாட்டில் ஃபுல்லா காலி பண்ணி எதோ உலர ஸ்டார்ட் பண்றா …
“நண்பேன்டா நீ… நீ ஏன் நண்பேன்டா.. உம்மா. …”
ஸ்ரீ யும் இதான் சரியான நேரம் நினச்சு அவன் மனசுல இருந்த கேள்விக்கு பதில் தேட தொடங்குறா
“மச்சா… இந்த ஒரு வாரமா நா உன்ன கவனிச்சுட்டிதா இருக்கே… என்னோட பழைய எழில்லாவே நீ மாறி இருக்க மச்சா… நீ பழைய மாதிரி சிரிச்சு பேசுற… நிம்மதியா படுத்து துங்குற…அம்மா மீரா இறந்த பின்னாடி நீ எப்படி இல்ல ரொம்பவே உடன்ஜி போய்ட்ட…உண்ண நீயே தப்பா நினச்சு நினச்சு செத்துகிட்டிருந்த… அப்படி இருந்த நீ பழைய மாதிரி மாறி இருக்குறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா மச்சா..இதுக்குளா காரணம்…?”
“ஹா ஆமாடா ஏன் மச்சா… நா இப்போ ஒரு வாரமா ஹேப்பியா இருக்கே… ஏன் தெரியுமா…”
“தெரியாது மச்சா…(அது என்னனு தெரிஞ்சுக்க த்தான உண்ண இங்க வர வச்சுருக்குறே…மச்சான்)”
“தெரியாதா… நா வே வே வேணும்னா சொல்லட்டா”
“ஹம் சொல்லு சொல்லு சொல்லுப்பா என் ராசா..”
“ஹ்ம்ம் சொல்லுறே… காரணம் அவதாண்டா”
“யாருடா?”
“அவதா அந்த சூறாவளி….”
“நினச்சே.. மேல சொல்லு”
“ம்ம் சொல்றே”
எழில் தென்றல் வருவார்கள்.