“இங்க பாரு ஸ்ரீ என் கூட வாழுறதுல அவளுக்கும் விருப்பம் இல்ல அது மட்டும் இல்லாம எனக்கும் அவ கூட வாழ விருப்பம் இல்ல சோ ரெண்டு பெரும் சேர்ந்து ஆப்டர் ஒன் இயர் கழிச்சு மியூச்சுவல்லா டிவோஸ் வாங்கிக்க போறோம் இதுதான் எங்க ரெண்டு பேரோட முடிவு நீ கேட்ட கோஷ்டியின்க்கு நா ஆன்சர் பண்ணிட்டேன் இதுக்கு மேல என்ன டிஸ்டர்ப் பண்ணாத”என்று சொன்னவன் காலை கட் செய்தான்
“என்ன இவன் இப்படி சொல்லுறான் இதுக்காகவா நாம் இவ்வளவு கஷ்ட பட்டு இவங்கள ஒன்னு செத்து வச்சோம் ஹகும், இது இப்படியே விட்டா நல்ல இருக்காதே இதுக்கு ஒரு வலி பண்ணி ஆகணும் என்ன பண்ணலாம்?”
“ருத்ரன் பிளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்க உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்குறே தயவு செஞ்சு ருத்ரன், என்னால முடில என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நைட்லாம் படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது, என் மேல கருணை காட்டவே மாட்டிங்களா?”
“பேபி என்ன நீ இப்படி பேசுற யாரோ மாதிரி? நா யாரு உனக்கு உன்னோட future husband உன்ன போய் எப்படிடா நா கஷ்ட படுத்தனும்ன்னு நினைப்பேன், நீ உன் மனசுக்குள்ள என்ன நினைக்கிறியோ அதா எல்லாத்தையும் உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தவே உனக்காக ஆனா இப்ப என்கிட்டே ஒரு விஷயம் கேட்டிருக்க பாரு அது மட்டும் நோ சான்ஸ நீ என்ன சொன்னாலும் நீ இப்ப என்கிட்டே கேட்ட இந்த விஷயம் மட்டும் என் காதுல விழாது”
“ஏன் ருத்ரன் ஏன், நீங்க ஏன் இந்த அளவுக்கு ஒரு அரக்கன் மாதிரி இருக்கீங்க?”
“என்னது நா அரக்கனா, உன் கண்ணுக்கு நா அப்படியா தெரியுறேன், உன்னோட விஷயத்துல நா ஒரு ராவணனா வாழ்ந்துகிட்டு இருக்காது உனக்கு தெரியாதா? சொல்லு ” என்று சொல்லி கொண்டே அவள் தாடையை இறுக்கி பிடித்தவன்
“இங் பாரு இந்த மாதிரி பாக்காத உன்னோட பார்வை அப்படியே என்ன கொல்லுது, உன்னோட அழகு இப்பவே உன்ன என் ஆச தீர அனுபவிக்க சொல்லுது, நா நினைச்சா உன்ன என்கிட்ட கூப்பிட்ட வந்தப்பவே என்ன வேணும்னாலும் பண்ணிட்டு முழுசு உன்ன அனுபவிச்சுட்டு தூக்கி வீசி போட்டு பொய் இருப்பேன் ஆனா ந அப்படி பண்ணீனா சொல்லு உன்ன என் மேல விருப்பம் வறட்டும்ன்னு ஒதுங்கி இருக்கேன், ஒரு ராவணனா உன்ன நா கடத்தி வச்சிருக்கேன் தவிர உன் மேல என்னோட தீண்டல் ஏதாச்சும் இருந்திருக்கா சொல்லு அப்படி பட்ட என்ன நீ அரக்கான்னு சொல்லுற?”
“உடம்பளவுல காய படுத்தினா மட்டும்தான் அரக்கன்னு அர்த்தமா? நீங்க சொன்னது மாதிரி என்ன உடம்பளவுல காய படுத்தாட்டியும் மனசளவுல காயப்படுத்துற உங்கல என்ன சொல்ல ? எனக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சு குறுக்கு வழில போய் என்ன பிளாக் மெயில் பண்ணி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க சொன்னீங்க நானும் வேற வலி என்னன்னு தெரியாம என்னோட ஆச கனவு லட்ச்சியம் இதை எல்லாத்தையும் விட்டுடுத்தி நீங்க சொன்னீங்கன்னு இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன், அப்படி பட்ட என்னோட மனச புரிஞ்சிக்காம என் விருப்பத்தை காதுல கூட வாங்கிக்க மாட்டேங்கிறீங்க”
அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை சிகரெட் புகையை இழுத்து ஊதி கொண்டிருந்தான்
தன் பேச்சு இந்த முறையும் எடுபடவில்லை என்று நினைத்தவள் மனது கண்ணீர் சிந்த்தியது
அந்த சமயம் ருத்ரனின் மொபைல் ரிங் ஆனது
“ஹலோ சொல்லு”
“பாஸ் பார்டர் தாண்டி நாம அனுப்பி வச்ச சரக்கு எல்லாத்தையும் அந்த எழில் சீஸ் பண்ணிட்டா?”
“வாட் என்ன சொல்லுற நீ?”
“ஆமா பாஸ்”
“எப்படிடா? பார்டர தாண்டுன பின்னாடி அவனால அங்க போக முடிஞ்சுச்சு”
“அது வந்து நமக்குள்ள ஏதோ ஒரு கறுப்பாடு இருக்குன்னு நினைக்குறேன், என்னால சரியா சொல்ல முடியல”
“என்ன சொல்லுற நீ?”
“ஆமா பாஸ் நா சொல்லுறது கண்டிப்பா நிஜம் நம்ம சைடுல இருந்து எந்த ஒரு ஆள் பக்க பலமும் இல்லாம அவனால் இத பண்ணிருக்கவே முடியாது,அது யாருன்னு தெரில, அது மட்டும் இல்லாம “
“என்ன நிறுத்திட்ட சொல்லு”
“பாஸ் அது வந்து”
“என்னடா திணற சொல்லுடா என் பொறுமையா ரொம்ப சோதிக்காத”
“சரக்குகாக நம்மகிட்ட பணம் கொடுத்த நாலு பார்ட்டீஸ் நாம போலீஸ்கிட்ட பிடி பாத்துட்டோம்ன்னு தெரிஞ்சு அமெண்டா ரிட்டர்ன் கேக்குறாங்க இனி எந்த டீலும் நம்ம கூட வேணாம்ன்னு சொல்லிட்டாங்க”
“போன கட் பண்ணு” ருத்ரனின் கோவம் தலைக்கேறி இருந்தது
எதிர் முனையில் இருந்தவன் அதை நன்றாக தெரிந்து கொண்டு போனை கட் செய்தான்
லூனா தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க ஏற்கனவே எழில் மீது கோவமாக இருந்தவன் என்ன செய்து என்று தெரியாமல் வேகமாக அவளருகில் சென்றவன் அவள் கழுத்தை பிடித்து சுவற்றின் மீது தூக்கினான்
“ஹே உனக்கு பொறுமையா ஒரு தடவ சொன்ன புரியாதா? இப்படி டென்ஷன் ஆகுற மாதிரி ரியாக்ட் பண்ணிட்டு இருக்க உண்ண? ஹ்ம் உன்ன என்ன பண்ணலாம்””
டென்ஷனாக தலையில் குத்தி கொண்டு யோசித்தவன்
“உன்ன உன்ன ஒன்னும் பண்ண முடியாது ஏன்னா நீ எனக்கு வேணும் சோ”என்று சொல்லி கொண்டே அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்
அவன் சிரிப்பு அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது பதறி போன முகத்துடன் மூச்சு கூட விட பயந்தவாறு அவனை அவள் பார்த்து கொண்டிருக்க
யாருக்கோ கால் செய்தான்
“ஹலோ”
“பாஸ் சொல்லுங்க”
“என்ன எல்லாரும் அசால்ட்டா இருக்கீங்களா?”
“ஐயோ இல்ல பாஸ் கண்ணுல வெளக்கெண்ணைய ஊத்திக்கிடாப்புல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கோம் பாஸ்”
“ஹ்ம் சரி கடைசி வர இதே கவனம் இருக்கட்டும் விஷயம் அங்க இருக்க காத்து மூலமா கூட வெளிய போக கூடாது, அப்பறம் ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாடீங்க பாத்துக்கோங்க”
“ஹ்ம் ஓகே பாஸ்”
“ஒண்ணுமில்ல வீரா இங்க நிறைய பேருக்கு என் மேல பயம் இல்லாம போய்டுச்சு என்னவே ஆர்டர் பண்ண ஆரம்பிச்சாச்சு அதுனால அங்க ஏதாச்சும் ஒண்ணா முடிச்சு விடு”
“ஓகே பாஸ்”
“ஐயோ ருத்றன் என்ன சொல்லுற நீ பிளீஸ் வேணா சொல்லு ருத்ரன் பிளீ, இனி நா உன்கிட்ட எதுமே கேக்கல இனி நா இதை பத்தி மூச்சு கூட விட மாட்டேன் பிளீஸ் பிளீஸ் பிளீஸ் ருத்ரன்” என்று அவன் கால்களில் விழுந்து அவள் கதறி கொண்டிருக்க
“உனக்கு என் மேல இருந்த பயம் போய்டுச்சுன்னு நினைக்குறேன், அந்த பயத்த மாரு பையும் கொண்டு வரணும்ன்னா இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணுனா மட்டும்தான் வரும்ன்னு நினைக்குறேன்”
“ஐயோ உனக்கு நா பயப்படலேன்னு யாரு சொன்னது, உன்மேல பயம் அப்படியேதா இருக்கு பிளீஸ் விட சொல்லு ஏதும் பண்ண வேணாம் சொல்லு பிளீஸ்”
அவள் பேசியதை காதில் வாங்கி கொள்ளாமல் தன கால்களை பிடித்திருந்த அவள் கைகளை உதறி விட்டு சென்றான்
“பாவம் அப்பாவி பெண் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது புலம்பினால்
“ஐயோ ஐயோ அவன் பேசாம இருந்தவன நானே டென்ஷனாக்கி இப்ப நானே இல்லத்துக்கு காரணம் ஆகிட்டேன் ஐயோ ஐயோ” என்று அவள் தலையில் அடித்து கொண்டு அழுது புலம்பினாள்
இங்கே ஐ ஜி வர சொல்லி அவரது ரூமிற்கு வந்திருந்தான் எழில்
“வா எழில் சூப்பர் இன்னிக்கு நீ சீஸ் பண்ண எல்லாமே இந்த கேஸுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்னு கண்டிப்பா உன்னோட திறமையை பாராட்டியே ஆகணும் அதுக்காகத்தான் உன்ன இங்க வர சொன்னேன், சோ இன்னும் உனக்கு டிபார்ட்மென்டல இருந்து ஆள் யாரும் வேணும்ன்னா சொல்லு இந்த கேஸ்ல மெயின் அக்கியூஸ்ட்ட எவ்வளவு சீக்கிர பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிடி சரியா?”
“எஸ் சார், இந்த கேஸோட மெயின் அக்கியூஸ்ஸ்ட் இன்னும் கொஞ்ச நாளுல நம்ம ஸ்டேஷன்ல கலி தின்னுவான்” என்று வெளி படையாக சொன்னவன் மனதிற்குள் அவனோட சாவு என்னோட கைலதான் என்று தன மனதிற்குள் கொலை வெறியோடு கொந்தளித்தான்
“ஓகே எழில் சூப்பர் கீப் இட் அப்.அப்பறம் நியூ மேரேஜ் லைப் எப்படி போது? ரெண்டு பெரும் ஜாலியா நல்லா லவ் பண்ணுறீங்களா?”
“சார்”
“ஹா ஹா என்ன கூச்ச படுற நீ எவ்வளவு கம்பீரமானம் மேரேஜ் லவ்ன்னு சொன்னது முகம் இப்படி மாறிடுச்சு”
இவனுக்கு என்ன பேசுறதுன்னே தெரில அவனுக்கு மட்டும்தான தெரியும் அங்க தென்றல் கூட இவன் வாழுற வாழ்க்கையை பத்தி
“சரி ஓகே புது மாப்பிள்ளை இன்னிக்கு ஈவினிங் வீட்ல என் பொண்ணோட birthday party arrange பண்ணிருக்கு சோ நீயும் உன்னோட wifeம் கண்டிப்பா வரணும் ஓகே?”
“என்னது அவளை கூப்டுகிட்ட நம்ம கூப்பிட்டா அவ வர மாட்டாள் வேணும்ன்னே ஏதாச்சும் பண்னுவாளே இதை எப்படி இவர்கிட்ட சொல்லி புரிய வைக்கிறது?”
“என்ன ஏஜில் ஏதோ யோசிக்கிற?”
“சார் அது வந்து”
“என்ன பார்ட்டி வந்து டைம் வேஸ்ட் பண்ண மனசு இல்லையா wife கூட ரொமான்ஸ் பண்ணனுமா?”
“இந்த மனுஷன் என்ன இப்படிலாம் பேசுறாரு நா எப்பயா அவ கூட ரொமான்ஸ் பண்ணே லேசா இடுப்புல கை வச்சதுக்கு முறச்சுட்டு எழுந்து போய்ட்டா இதுல ரொமான்ஸ் வேறையா? ஹகும் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல”
“ஹ்ம் நா பேச பேச ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல கனவுளையே டூயட் போல என்னமோப்பா ஹாப்பியா இருந்தா ஓகே, கண்டிப்பா மறக்காம ரெண்டு பேரும் பார்ட்டிக்கு வரணும்” என்று சொன்னவர் அங்கிருந்து கிளம்பினார்
என்ன செய்வதென்று யோசித்தவன் தன மொபைலை எடுத்து தென்றலுக்கு மெஸேஜ் அனுப்பினான்
“கிளம்பி ரெடியா இரு ரெண்டு பெரும் பார்ட்டிக்கு போகணும்”
“என்னது பார்ட்டிக்கு போகணுமா? கிளம்பி ரெடியா இருக்கணுமா?”
இவன் எதுக்கு நமக்கு ஆர்டர் போடுறான் அதெல்லாம் முடியாது இவன் சொன்னா நா கேட்கணுமா மாட்டேன் என்று தனக்கு தானே பேசி கொண்டவள் போனை பெட்டின் மீது தூக்கி வீசினால்
“ஆனா இந்த மாதிரி அவனை மொத்தமா அவாய்ட் பண்ண அது நல்ல இருக்காதுதானே? ஹ்ம் பார்ட்டிக்கு போலாமா வேணாமா?” என்று அவள் யோசிக்க
அப்போது மீண்டு ஒரு மெசேஜ் வர அதை எடுத்து பார்த்தால்
“என்ன மெசேஜ் பண்ண ரிப்ளை பண்ண முடியாத அந்த மேனஸ் கூடவா இல்ல
“இவன, யாருக்கு மேனஸ் இல்ல, உனக்குதான் அறிவே இல்ல நாந்தான் உன்கூட பேச மாட்டேன்ல அப்பறம் எதுக்கு என்ன பார்ட்டிக்கு கூட்டு என்ன டிஸ்டர்ப் பண்ணி என்ன டென்ஷன் பண்ணுற, என்னால வர முடியாது” என்று ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்பியவல்
தன் மொபைலை வீசி எரிந்து விட்டு கீழே சென்றால்.
*********************எழில் தென்றல் வருவார்கள்