இருவரும் வேறு வேறு சிந்தனையில் ஒருவர் மற்றவரை நினைத்தவாறே பல மணி நேரம் தூக்கத்தை தொலைத்தவர்கள் பின் அப்படியே தூங்கி போக சூரிய ஒளியின் வெளிச்சம் ஜன்னல் வழியே முகத்தில் படவும் கண் விழித்தான் எழில்
அட கடவுளே டைம் 9 ஆச்சு இவ்ளோ நேரமாவா தூங்கிட்டு இருந்திருக்கோம் இன்னைக்கு நம்ம லீவ் அப்ளை பண்ணி இருக்கதுனால சரியா போச்சு இதே மத்த நாள்னா அட்லீஸ்ட் இவளாச்சும் என்ன எழுப்பி விட்ருக்கலாம்ல… இவள என மனதில் நினைத்தவாறு அவன் தென்றலை ரூம் முழுக்க தேட…. மேடம் ஒரு இன்ச் கூட அசையாம மூஞ்சில வெயில் அடிச்சது கூட தெரியாம அப்படியே படுத்திருக்க அடி பாவி உனக்கு நா பரவாயில்லை போல தென்றல்…. தென்றல்… ஹே தென்றல் எழுந்திரு… தென்றல் .. என்ன இவ கும்பகர்ணனுக்கு அக்கா மாதிரி தூங்கிட்டு இருக்கா இவள…… அவள் காதை பிடித்து திருகினான் எழில்… வலியில் கண் விழித்தவள்…
ஷ்ஷ்ஷ்ஷ்….. அம்மா…காது காது என் காது விடுங்க எழில் …என்ன எழில் இப்போ எதுக்கு தூங்கிட்டு இருகப்போ டிஸ்டர்ப் பண்றீங்க
என்னாது டிஸ்டர்ப் பன்றாங்களா…ஹே மணி எத்தனை தெரியுமா…9 கிளாக் ஆச்சு இன்னு துங்கிட்டு இருக்க…
என்ன எழில் இப்படி பண்றீங்க 9 மணிதான ஆகுது..நா எங்க வீட்ல 10 மணி இல்ல 11கிட்டதான் எழுந்திருப்பேன்….நீங்க என்னடான்னா என்ன இப்போவே எந்திரிக்க சொல்றீங்க…
அடி பாவி 10 ,11மணிக்குதான் எழுந்துருப்பியா…இந்த பேச்சுக்குலாம் இனி இங்க வேலை இல்ல இதோட இந்த பழக்கத்தை ஸ்டாப் பண்ணிக்கோ…..என்னவா பாக்ரப்போ எல்லாம் டம்மி போலீசுண்ணு சொல்ர… அதுவும் இல்லாம நேத்து நைட்டு என்ன செம்மையா டென்ஷன் ஆக்கீட்டீல எல்லாத்துக்கும் சேத்து இனிதா உனக்கு இருக்கு நீ பண்ண இந்த சேட்டைக்கெல்லாம் உனக்கு என்ன பணிஸ்மெண்ட் தெரியுமா… அப்படீன்னு சொல்லிட்டே அவன் பக்கத்துல உக்காந்தவன்… அவ கைய பிடிச்சு… தன் கைகுள்ள வச்சு… இனிமே உனக்கு தூக்கமே கிடையாது…உண்ண நான் துங்க விடவே மாட்டேன்…. சரியா என மிகவும் அமைதியான குரலில் குறும்புடன் சிரித்துகொண்டே சொல்ல…அவன் செய்கையில் கொஞ்சம் பதறி போன தென்றல்…
எழில்…கை ..கைய விடுங்க…ஃபர்ஸ்ட்…என்று சொல்லிக்கொண்டே தனது கையை அவன் கை பிடிக்குள் இருந்து எடுக்க முயல ….பாவம் அவள் முயற்சி செய்து தோற்றுதான் போனால்…இவள் தனது கையை அவன் கைக்குள் இருந்து வெளியில் எடுக்க முயற்சி செய்த ஒவ்வொரு நொடியும் அவன் பிடி அதிகமாகி கொண்டே போக கொஞ்ச நேரத்துல அவன் பிடிச்சு இருந்ததுல அவளுக்கு கை வலிச்சதுதான் மிச்சம்…
யோவ் லூசு கைய விடுயா வலிக்குது….
ஒஹ் கை வலிக்குதா… அப்போ நா சொல்றத சொல்லு….
என் ..என் ..சொல்லணும்.. நான்லாம் எது சொல்ல மாட்டேன்…
அப்போ நானும் உன் கைய விட மாட்டே…
பிளீஸ் எழில் கைய விடுங்க ..வலிக்குது…
வலிக்குதா….
ஹ்ம்ம்
அவள் அருகில் இன்னும் அதிகமாக நெருங்கி அமர்ந்து…. சரி எதும் சொல்ல வேணாம்..நா அப்பறமா சொல்ல வச்சிக்கிறேன்… இப்போ நீ எதும் சொல்ல வேணாம்.. பட் இப்போ உண்ண எதாச்சும் பண்ணணுமே என்ன பண்ணலாம்
பாவம் தென்றல் பயத்தில் விழி பிதுங்கி போனால்…
ஹே என்னடி அப்படி முளிக்குற…நீ முளிக்ரத பாத்தா எதோ தப்பா இருக்கு…என்னடி நினச்ச… ஓய்..
நா நா என்ன நினைச்சே .. நா…..ன்…. லாம் ஒன்னு நினை….க்….க…ல…
மேடம் திக்குறதுளையே தெரியுது என்ன நினச்சு இருப்பீங்கனு…. ஹா ஹா நீ நினைச்ச மாதிரிலாம் ஒண்ணு இல்ல..
நா என்ன சொல்ல வந்தேன்னா…இனிமேல் நீ மார்னிங் 5டூ5:30குள்ள தூங்கி எழுந்திறுச்சுடனும் எழுந்திரிச்சு குளிச்சு ரெடி ஆகி நேரா சமயல்கட்டுக்குள்ள போய் எனக்கு செம்மையா டேஸ்டா பிரேக் பாஸ்ட் ரெடி பண்ணனும் ….. அதுவும் நா சொல்ற மெனுஸ்தான் ரெடி பண்ணனும்… குழிக்காம கிட்ச்சன்குள்ள போன .நா தர பணீஸ் மெண்ட் வேர மாதிரி இருக்கும்…புரியுதா…. சமயல் 7குள்ள ரெடி ஆகி டைனிங் டேபிள்ல இருக்கணும் உனக்கு யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க… பிகாஸ் நெக்ஸ்ட் வீக் நம்ம சென்னை போகிடுவோம் அங்க யாரும் இருக்க மாட்டாங்க… நீ நான் மட்டும்தான்… சோ ஒரு வேளை உனக்கு சமைக்க தெறியலீனா இங்க நம்ம இருக்க போற டூ வீக்ஸ்குள்ள நல்லா டேஸ்டா சமைக்க கத்துக்க…தென் மதியம் அண்ட் நைட்டு சமைக்குறதுக்கு மெனுஸ் உன் இஷ்டம்… ஓகே?? இப்போதிக்கி இதுதான் நா உனக்கு தர பனீஸ் மெண்டு…… இவன் பேசிட்டே இருக்கப்போ ஸ்ரீ இவனுக்கு கால் பண்ண
ஹா சொல்லு மச்சா
டேய் எழுந்துட்டியா…
ஹ்ம்ம் இப்போதான்டா….
அப்பறம் மச்சா… சொல்லு
என்னாது அப்பறம் மச்சா. என் சொல்ல??
ஏண்டா நா எத பத்தி பேசுறேன்னு உனக்கு தெரில்ல…. ஹி ஹி ஹி
டேய் டேய் நல்லா திட்ட வாங்கனும்னே காலைலியே எனக்கு கால் பண்ணிருக்கியா…
சரி விடு சூடாகத…அப்பறம் சூறாவளி என் புருஷனா எதுக்குடா டென்ஷன் பண்றேன்னு என்ன எதும் பண்ணிட போது….நா சொல்ல வந்தத சொல்லிட்டு போன்ன வச்சிடிரே….சீக்கிரமா கிளம்பி கீழ வாங்க நம்ம இப்போ கிளம்பி தென்றல் வீட்டுக்கு போகணும் அங்க எல்லாருமே நமக்காகதான் வெயிட்டிங்… சோ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி கீழ வாங்க..
டேய் அவங்கள்ள நேத்து இங்கதானடா இருந்தாங்க…. அப்பறம் ஏண்டா அங்க கிளம்பி போய்ட்டு நம்மலயும் வர சொல்ராங்க…
டேய் லூசு இதெல்லாம் சம்பிரதாயம்டா அவங்கள்ளாம் நேத்து நைட்டே கிளம்பி அங்க போய்ட்டாங்க.. நீங்க கிளம்பி கீழ வாங்கடா…
எழில் போன் பேசிட்டு வைத்த பின்னும் தென்றல் ஷாக்லியே மூஞ்சிய வச்சி இவனை மனதில் வறுத்தெடுத்து கொண்டிருக்க….
ஹே சூறாவளி மூஞ்சிய என்ன அப்படி வச்சிட்டிருக்க,….என்ன கொடுத்திருக்க பனிஸ்மென்ட் பத்தலியா இன்னும் ஹெவியா வேணுமா…
எப்பா சாமி நீங்க கொடுத்திருக்கதே என்னால தாங்க முடியல்ல இதுல இன்னும் வேர எக்ஸ்டராவா…..
அது அந்த பயம் ..
என்னாது பயமா? அதும் உண்ண பாத்து போயா போ போ… யோவ் டம்மி போலீஸ் என்னாலைலாம் நீ சொன்னத பண்ண முடியாது .. உனக்கெல்லாம் என்னால சமச்சு தர முடியாது நீயா உனக்கு சமச்சுக்க..நா நானா எனக்கு சமச்சுக்குவேன்.. போயா…
என்னாது பண்ண மாட்டியா?… அதையும் பாக்கலாம். …நா டம்மி போலீசா? உண்ண எப்படி பண்ண வைகிறதுண்ணு எனக்கு தெரியும்… இப்போ சீக்கிரமாகுளிச்சு கிளம்பீ ரெடி ஆகு உங்க வீட்டுக்கு போகணும்…. ஹ்ம் சீக்கிரம்…என்று சொல்லிவிட்டு அவன் கீழே சென்று விட…. தன் வீட்டுக்கு போக போர குஷியில தென்றல் அறை மணி நேரத்தில் கிளம்பி ரெடி ஆகி இருக்க. …அவ கிளம்பி ரெடி ஆகியிருந்த கொஞ்ச நேரத்துல கீழ போன எழில் மேல வர அவனும் குளிச்சு கிளம்பி ரெடி ஆகி அடுத்த கொஞ்ச நேரத்தில எழில்,தென்றல், ஸ்ரீ ,தேவா எல்லாரும் கிளம்பி தென்றல் வீட்டுக்கு போக அவங்க வருகைக்காக வாசலியே.நின்னுட்டிருந்த விஜயா வேதா ரெண்டு பேரு அவங்களுக்கு ஆரத்தி எடுக்க…ராஜ் விஜயன் ரெண்டு பேரு அவங்கள வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போக … இவங்க வீட்டுக்கு வந்தது தெரிஞ்சுகிட்ட உமாவும் வந்து இவங்களோட ஐக்கியம் ஆகிகிட்டா… உமா வந்த பின்னாடி ராஜ் அவன் வேலைய பார்க்க ஆரம்பிக்க அதாவது உமாவை சைட் அடிக்கிற வேலைய ஆரம்பிக்க…. நம்ம வேதா எப்பவும் போல ஸ்ரீ கூட வம்பிலுத்துட்டு இருக்க… ஒரு கட்டத்துல பொறுமை இழந்த ஸ்ரீ
ஹே சுண்டெலி நீ என்ன காலேஜுக்கு போலியா…
ஹலோ பாஸ் நாங்க எங்க அக்கா மேரஜுக்காக ஒரு வாரம் லீவ் போட்ருக்கோம்…. உங்களுக்கு என்ன வந்துச்சு…
ஏய் உங்க அக்காக்குதான கல்யாணம் .அதுக்கு எதுக்கு உனக்கு கல்யாணம் மாதிரி 1 வாரம் லீவு போட்டு இங்க இருக்க எங்க உயிற வாங்கிட்டு இருக்க..
ஹா ஹ என்ன சொன்னீங்க என் கல்யாணத்துக்கு மாதிரி ஒரு வாரம் லீவு போற்றுக்கேனா…என்ன பத்தி அப்படியெல்லாம் தப்பா கெஸ் பண்ணிடாதீங்க…. நான் லாம் என்னோட கல்யாணத்துக்கெல்லா நல்லா ஆறு மாசம் லீவு போட்டு ஏ புரூஸன லவ்வோ லவ் பண்ணுவே…. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
பார்டா ஆசை எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு. ஆனா ஒன்னு உண்ணாயெல்லாம் எவ கட்டிக்கிட்டு பாடு பட போரானோ…அய்யோ பாவம் அவன்.
உங்களுக்கு எதுக்கு அந்த கவலை….
பின்ன நீ இம்புட்டு வாய் பேசுனா…. கவல வராது…உண்ணைலம் எப்படி வீட்டில் வச்சி சமாளிக்ராங்க… கண்டிப்பா இவங்க எல்லாருக்கும் பெரிய அவார்டே தரணு…
நல்லா சொல்லுங்க தம்பி இவள வச்சி நா படுற பாடு இருக்கே முடில தம்பி இந்தாங்க காபி எடுத்துக்கோங்க… மாப்பிள்ளை நீங்களும் எடுத்துக்கோங்க…
அய்யோ அத்த நா காபி மாட்டேன் பழக்க இல்ல…
அச்சச்சோ தெரியாது மாப்பிள்ளை நா ஒரு லூசு உங்களுக்கு எது புடிக்கு எது பிடிக்காதுண்ணு கேக்காம நா பேசாம காபி எடுத்துட்டு வந்துட்டேன்…
அய்யோ அத்த எதுக்கு இதுக்கெல்லாம் போய்ட்டு இவ்ளோ கவல படுரீங்க நா காபி சாப்டுதான் பழக்கம் இல்லைனு சொன்னே டீ சாப்ட மாட்டேன் சொல்லியே….
இந்தா ஒரு 5நிமிசம் தம்பி டீ போட்டு கொண்டு வந்துடுரே…
அத்த தப்பா நினச்சுக்கலீனா ஒன்னு சொல்லலாமா
என்ன தம்பி இப்படி சொல்றீங்க நா என்ன நினைக்க போரே என்னானு சொல்லுங்க
இல்ல அத்த டீ தென்றல போட்டு எடுத்துட்டு வர சொல்றீங்களா…
எழில் அப்படி சொன்னதுதான் தாமதம் வீட்டில் உள்ள அனைவரும் கிண்டலாக சிரிக்க…
என்ன மாமா எங்க அக்கா போட்ட டீ மட்டுந்தான் குடிபீங்களா ஏன் எங்க அம்மா டீ போட்டா குடிக்க மாட்டீங்களா..
ஹே வேதா அமைதியா இருடி மாப்பிள்ளை தம்பி எதோ ஆசபட்டு கேக்குறாரு உனக்கு என்ன வந்துச்சு பேசாம இரு.. தென்றல் நீ போ போய் மாப்பிள்ளைக்கு டீ போட்டு எடுத்துட்டு வா…என்று விஜயா சொல்ல.. தென்றல் எழிலை திரும்பி ஒரு பார்வை பார்க்க.. எண்ட்டயா மார்னிங் நீ சொல்றது எல்லாம் பண்ண மாட்டே சொன்ன இப்போ என்னடி பண்ணுவ போ போய் நா சொன்ன மாதிரி எனக்கு நல்லா டீ போட்டு எடுத்துட்டு வா போ என்பது போல் அவளை பார்க்க அவன் பார்வையில் அர்த்தம் உணர்ந்த தென்றல் யாரும் அறியாவண்ணம் அவனை முறைத்து கொண்டே உள்ளே செல்ல ….
ஸ்ரீ எழிலிடம்…
டேய் இந்த பூனையும் பால் குடிக்குமா அப்படீன்ற மாதிரி மூஞ்சிய வச்சுட்டு கல்யாணமும் வேனா ஒன்னு வேணா அப்படீன்னு சொல்லிட்டு திரிஞ்சுட்டு இப்போ என்னடான்னா இந்த பூனை பால் என்ன பத்து பாட்டில் சரக்கே ராவா அடிக்கும்ன்ற மாதிரில்ல பண்ணிட்டு இருக்க….
டேய் ஸ்ரீ கொஞ்சம் மூடிட்டு இரு எல்லாரும் இருக்காங்கன்னு பாக்குறே இல்ல
இல்லன்னா என்னடா பண்ணுவ இடை நுழைந்தார் தேவா
அப்பா நீங்களுமா ஏண்பா.. நா பாவம் இல்லயாப்பா
யாருடா நீயா பாவம் ஸ்ரீ சொன்னதில என்ன தப்பு இருக்கு
அய்யோ சம்மந்தி பாவம் மாப்பிள்ளை விடுங்க பாவம்… சொல்லிக் கொண்டு விஜயன் சிரிக்க பின் அங்கிருந்த அனைவரும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை சிரித்து விட்டனர்…
அதற்குள் டம்ளருடன் அங்கு வந்த தென்றல் டம்ளரை அவனிடம் நீட்ட… அதை வாங்காமல் தென்றல் எப்புடி உண்ண நா சொன்ன மாதிரி எனக்காக டீ போட வச்சேனா…என்பது போல் அவளை பார்க்க .அவன் டம்ளரை வாங்காமல் இருக்க ஸ்ரீ அவளிடம்
தென்றல் டம்ளர என்ட கொடுத்துட்டு கிளம்பு இல்ல அவ உண்ண ஊட்டி விடணும் சொன்னாலும் சொல்லிடுவா…
நீ வேர எதுக்கு ஸ்ரீ இப்படி எல்லாம் அவனுக்கு எடுத்து தர….என மனதிற்குள் நினைத்த தென்றல்.. பட் இப்போ மட்டும் நீங்க சொன்ன மாதிரி அவன் சொன்னா செம்ம அவன அப்படியே வச்சி செஞ்சுடுவே என்று நினைத்வாரு அவனை பார்த்து ஒரு கேலி சிரிப்பு சிரித்து விட்டு சென்றாள்.
மச்சா இந்தா குடி டீ செம்ம கலரா இருக்கு மசாலா டீ போல… குடி….. அவன் குடித்ததுதான் தாமதம்
********எழில் தென்றல் வருவார்கள்