Ep..7 . நீயா பேசியது
அடுத்த அடுத்த அழைப்புகளில் அவர்களின் நடப்பு வளர்ந்து, ஆனால் இருவரு இணை துருவங்கள் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் ராஜேஷிற்க்கு அவள் மீது இருந்த ஈர்ப்பு குறையவில்லை.
அடுத்த அந்தச் சில தினங்களில்
ஜெயகாந்தன் எழுதிய அந்தரங்கம் புனிதமானது சிறுகதையில் தந்தை சுந்தரம் செய்தது தவறு என்றும் மகன் வேணு செய்தது சரி என்றும் ராஜேஷ் பேச்சு வாக்கில் கூறினான். அதன் பிறகு வேணுவின் தாய் ரமணியம்மாளையும்
பொறுப்பற்றவள் என்று விமர்சித்தான்.
ராஜேஷ் ,மிகப்பெரிய பழமைவாதி போலும் என்று காவ்யாவிற்கு தோன்றியது.
‘ஏன் பொண்ணுங்க சுதந்திரமா இருக்க கூடாதா அப்படி இருந்தா உங்கள மாதிரி ஆம்பளைங்களுக்கு கண் உறுத்துதா?’ என்று காவ்யாவிற்கு எரிச்சல் வந்தது.
‘ஏங்க பொண்ணுங்க எப்பவும் ஆம்பளைங்களுக்கு அடிமைப்பட்டு தான் கிடைக்குமா? வயசுக்கு வர வரைக்கும் அப்பா அம்மாவுக்கு அடிமை. அதுக்கப்புறம் அண்ணன் தம்பிகளுக்கு அடிமை. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹஸ்பண்டுக்கு அடிமையா இருக்கணும் பெத்து போட்ட பசங்களுக்கு அடிமைய இருக்கணும். என்னங்க இதெல்லாம் நல்லா படிச்சு இருக்கீங்க டீசண்டா இருக்கீங்க ஆனா உங்களுடைய சிந்தனைப் பேச்சு எல்லாமே ரொம்ப பிற்போக்குத்தனமா இருக்கு?” என்று காவியா சீறினாள்.
“இல்ல நீங்கச் சொல்றது ரொம்ப தப்பு, என்ன தான் அம்மா, அப்பாவ இருந்தாலும் மகனுக்கு அப்பா, அம்மா உடைய பர்சனல் தலையிட எந்த உரிமையும் கிடையாது. அது மட்டும் இல்ல உங்களுக்கு என்ன பத்தி உனக்குத் தெரியாது ஆன எப்பிடி என்ன அடாக் பண்ற மாதிரி பேசலாம்.” என்று அவனும் கத்தினான்.
“நீங்கப் பேசறது நல்ல இல்ல.”
“அது எப்படி காவ்யா …., ஆயிர ..ந் தப்பெற்ற அப்பாவா இருந்தாலும் தப்பு பண்ண கண்டுக்காம இருக்குமா? ” ராஜேஷும் அழுத்தமாய் கேட்டான்.
“இல்ல… இல்ல எனக்கு என்னமோ வேணு பண்ணது தப்புன்னு தோணுது.” என்று காவ்யா மீண்டும் அழுத்தமாகத் தன் வாதத்தை வைத்தாள்.
இருவரும் பேசிப் பேசிக் கதையிலிருந்து விலகி வேறு தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். இருவருக்குள்ளும்
நான் என்ற தலைகனம் சிறிது சிறிதாய் தலைதூக்கி அகோரமாய் நகைக்க தொடங்கியது.
காவ்யா, ராஜேஷுடன் விவாதித்துக் கொண்டிருந்ததில் இரவு உணவை மறந்து போனாள்.
“காவ்யா சாப்பிட்டுட்டு பேசு, பாத்திரத்த ஒழிச்ச போட்டு நானும் படுப்ப இல்ல.” என்று காவ்யாவின் அம்மா சுந்தரி அறை வாசலில் நின்று கத்தினாள்.
நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை காவ்யா தாய்க்கு ஜாடையில் கூற, “சாப்பிடு, அப்புறம் பேசு ” என்று சுந்தரி அழுத்தமான குரலில் மகளிடம் கூறினாள்.
சிறிது நேரமாவது அம்மா நிம்மதியாக யாருடனாவது பேச விடுகிறாளா? நொய் நொய்னு ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறாள். எல்லாவற்றிற்கும் அலுத்துக் கொள்கிறாள் . ஏன் தான் இப்படி இருக்கிறாளோ…இந்த அம்மா? என்று காவ்யா மனதிற்குள் தாயை கோபித்த படியே கடிகாரத்தைப் பார்த்தாள். கடிகாரம் பத்தை காட்டியது. இரண்டு மணி நேரமாக ராஜேஷுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று அவளுக்கே வியப்பாக இருந்தது.
அலைபேசியின் எதிர்முனையில் ராஜேஷ், ஜெயகாந்தனின் அந்தரங்கம் புனிதமானது சிறுகதையின் மைய கதாபாத்திரமான சுந்தரத்தின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டுகளை
தீவிரமாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
“சாரி ராஜேஷ் எனக்கு ரொம்ப பசிக்குது நாளைக்கு பேசலாமா? ” என்று ராஜேஷ்சை இடைமறித்துக் காவ்யா கூறினாள்.
அவனும் கடிகாரத்தை பார்த்தபடியே சரி என்று கூறிய அலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.
காவ்யா அழைப்பைத் துண்டித்து விட்டு உணவு உண்ண போய் விட்டாள். ஆனால், ராஜேஷிற்கு ஏனோ உணவு பிடிக்கவில்லை. உறக்கமும் வரவில்லை.
தரையில் பாய் விரித்து, சுவரில் ஒரு தலையணையையும் மடியில் ஒரு தலையணையையும் வைத்துக்கொண்டு, கடனேயெனச் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை நோக்கியபடி அமர்ந்திருந்தான்.
அவனுக்குத் தான் பேசியது காவ்யாவிற்கு பிடிக்காமல் தான் இணைப்பைத் துண்டித்து விட்டாளோ? என்று தோன்றியது .
ஒரு பெண்ணுடன் பேச ….எவ்வளவோ நல்ல கதைகள் இருக்கும்பொழுது ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தேன் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
பிறகு அப்படி ஒன்றும் அது தவறான கதை இல்லையே வேணுவின் மனப்போக்கு சற்று பழமை வாதத்தைப் பிரதிபலிக்கிறது சுந்தரத்தின் மனப்போக்கு சற்று நவீனத்தை பிரதிபலிக்கிறது. அவ்வளவுதான் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
ஒருவேளை தன்னை காவ்யா பழமைவாதி என்றும் பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடுபவன், பெண்ணை மதிக்காதவன், என்றெல்லாம் எண்ணி விட்டாளோ ?
என்று தீவிரமாய் சிந்திக்கத் தொடங்கினான். அவனுடைய புத்தி அவனை வெவ்வேறு தளங்களில் சிந்திக்க வைத்துக் குழப்பி விட்டது.
மனமோ, இல்லை இல்லை அவள் உன்னை விரும்புகிறாள். உன்னிடம் பேச ஆசைப்படுகிறாள். நிச்சயம் அவள் உன்னுடன் பழகுவாள் . உன்னைப் புரிந்து கொள்வாள். என்று ஒயாமல் சமாதானம் கூறிக் கொண்டே இருந்தது.
மனமும் புத்தியும் மாறி மாறி அவனை ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் தள்ளி விட்டு விளையாட்டு காட்டி கொண்டிருக்க, அவன் தன்னையே அறியாமல் உறங்கிப் போனான்.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்த காவ்யாவை சரண்யா கிச்சுகிச்சு மூட்டி ,
“யாருடி அந்த ஷோரூம் மேனேஜர?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
காவ்யாவும் சரண்யாவும் ஓர் அறையிலும் அவருடைய தாய் தந்தை மற்றெரு அறையிலும் உறங்குவதால் சகோதரிகள் இருவரும் உரக்கப் பேசினால் கூட இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது தாய் தந்தைக்கு கேட்க வாய்ப்பில்லை. அந்தத் தைரியத்தில் தான் சரண்யா காவியாவை சீண்டி பார்க்கலாம் என்று பேசத் தொடங்கினாள்.
காவ்யா எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் ஆம் என்று தலையசைத்தாள்.
“என்னவா? ” என்று சரண்யா சகோதரியிடம் கேட்டாள்.
“சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று காவ்யா சுரத்து இல்லாமல் கூறினாள்.
“ஏதோ காரசாரமா ஆர்கியூமேட் போயிட்டு இருந்தது .ஒன்னும் இல்லனு சொல்ற , சும்மா டூ ஹவர்ஸ் பேசுனியா?
என்ன விஷயம்.?” சரண்யா விடாமல் காவ்யாவை கிச்சுகிச்சு மூட்டிய படியே கேட்டாள் .
“லூசு ஒன்னும் இல்லடி, நாங்க சும்மா ஜெயகாந்தனோட ஸ்டோரிஸ் பத்தி பேசிட்டு இருந்தோம். அதுல ஒரு ஸ்டோரி அதைப் பத்தி கொஞ்சம் சீரியஸா பேசிட்டு இருந்தோம். வேற ஒன்னும் இல்ல” என்று சரண்யா கிசு கிசு மூட்டியதில் சிரிப்பை அடக்க முடியாமல் காவ்யா கூறினாள்.
“நான் கூட எங்க சைலேஷ்ச தொங்கல்ல விட்டுட்டுவியோனு நெனச்ச.” என்று சரண்யா வேண்டுமென்றே சீண்டினாள்.
சைலேஷ் என்ற பெயரைக் கேட்டதும் காவியாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ராஜேஷ் உடன் பேசிக் கொண்டிருந்ததில் அவளுக்கு, சைலேஷ் பெண் பார்க்க வந்ததே மறந்துபோனது.
தனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்று அவனிடம் அவகாசம் பெற்றது நினைவுக்கு வர, அது அவளுக்கு ஏனோ எரிச்சலைத் தந்தது.
தூங்கல சரண்யா” என்று கூறிவிட்டு காவ்யா உறங்க முயன்றாள்.
அவருடைய மனதிற்குள் சைலேஷின் முகமும் ராஜேஷின் முகமும் மாறி மாறித் தோன்றிக் கொண்டே இருந்தது. சைலேஷின் முகம் அவளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத எரிச்சலையும் ராஜேஷின் முகம் சிலிர்ப்பும் ஊட்டியது.
அதற்கான பொருளைச் சிந்தித்து அறிய முடியாது, உறக்கம் அவளை ஆட்கொண்டது.
To be continued…
by மகிழம் பூ