அத்தியாயம் 14
பொழுது முழுவதும் விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த கார் விக்ரமின் வீட்டு வாசல் முன்பு சென்று நின்றது. திடீரென்று தன் வீட்டு வாசலில் வந்து நிற்க்கும் கார் சத்தம் பார்வதிக்கு வினோதமாக இருந்தது. அவள் யோசித்த படி வெளியே வந்தாள்.
முன் சீட்டில் இருந்து இறங்கிய மதியை பார்த்து விட்டு உதட்டை பிதுக்கி,’என்ன இந்த லூசு காலங் கத்தால்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்கு.’ என்று மனதிற்குள் நினைத்தான். அதன் பிறகு பின் இருக்கையில் இருந்து இறங்கிய விக்ரமை பார்த்ததும் அவள் கண்களை ஆச்சரியத்தில் அகலமாக விரிந்தது.”என்னடா விக்ரம் அதுக்குள்ள கேப் முடிஞ்சிருச்சா?” என்று ஆர்வத்தோடு விசாரித்த படி மகன் பக்கத்தில் போனாள்.
அப்பொழுது அஞ்சலி காரில் இருந்து இறங்கவும் பார்வதியின் விழிகள் குழப்பத்திற்கு உள்ளாகி அப்படியே தேங்கி நின்றாள். அம்மா அஞ்சலியை குழப்பத்தோடு பார்ப்பதை நன்றாக சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் உதடுகள், “அம்மா இது அஞ்சலி!”என்று விட்டு அஞ்சலியிடம் திரும்பி, “அஞ்சலி இவங்க என்னுடைய அம்மா பார்வதி” என்று சொல்லி விட்டு தன்னுடைய பெட்டியை எடுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
அஞ்சலியின் கழுத்தில் புதிதாக கட்டிய மஞ்சள் கயிறு மினுமினுக்க பார்வதிக்கு லேசாக விஷயம் புரிந்தது போல் இருந்தது. ஆனாலும் அவளுடைய பெத்த மனம், ‘என் பையன் என் கிட்ட சொல்லாம எதுவும் பண்ண மாட்டான்.’ என்று உறுதியாக அடித்துப் பேசவும் அவள் அஞ்சலியை மேலிருந்து கீழாக பார்த்து படி மெதுவாக நடந்தான். அஞ்சலிக்கு பார்வதியின் பார்வை ஒருவித கூச்சத்தை கொடுத்தது. அவள் தன்னுடைய அந்த சின்ன டிராவல் பேக் எடுத்துக்கொண்டு மெதுவாக விக்ரமை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
மதியின் கை கால்கள் வெடவெடக்க ஆரம்பித்தது. அவன் எதுவும் பேசாமல் தன்னுடைய பேக் எடுத்துக்கொண்டு வந்த கால் டாக்ஸிக்கு பணம் கொடுத்துவிட்டு மெதுவாக ஹாலில் வந்து உட்கார்ந்தான். உறக்கங்கம் களைந்து அப்பொழுது தான் முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்த விக்ரமுடைய அப்பா பரந்தாமனுக்கு அஞ்சலியை பார்த்ததும் பிடித்து விட்டது.
அவள் அவரைப் பார்த்ததும் ஜாடையில் வணக்கம் தெரிவித்து விட்டு அமைதியாக விக்ரமுக்கு பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.பார்வதி புதிதாக வந்திருக்கும் அஞ்சலி யார் என்ற குழப்பத்தோடு தன் மகன் பக்கத்தில் போனாள்.”டேய் இந்த பொண்ணு யாரு டா?” என்று குழப்பமும் அவன் தன் மகன் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையுமாக அவள் விசாரித்த விதம் விக்ரமை கொஞ்சம் பயம் கொள்ள வைத்தது.”அம்மா நான் அத பத்தி அப்புறமா சொல்றேன் இப்போ ரொம்ப பசிக்குது எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது டிபன் ரெடி பண்ணு.” என்று சொல்லி விட்டு விக்ரம் தனது அறைக்குள் போய்விட்டான்.
அஞ்சலிக்கு அங்கேயே நிற்பதா அல்லது விக்ரமை பின் தொடர்ந்து அவனுடைய அறைக்குள் போவத என்று சில வினாடிகள் குழப்பம் ஏற்பட்டது. தன்னுடைய அரை வாசலில் போய் நின்ற விக்ரம், அஞ்சலியை உள்ளே வரும் படி கண்ஜாடை காட்டவும், அவளும் தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு விக்ரம் அரைக்குள் போய் விட்டாள்.
அறைக்குள்ள அஞ்சலின் நுழைந்ததும் விக்ரம் பட்டென்று கதவை சாத்தினான். அது பார்வதிக்கு நெருடலாக இருந்தது இருந்தாலும் அவள் தன் மகனாகவே வாய் திறந்து கேட்ட பிறகு உணவு சமைக்காமல் இருப்பாளா பரபரப்போடு போய் காலை சிற்றுண்டி தயாரிக்க ஆரம்பித்தாள்.
பரந்தாமனுக்கு மகன் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறான் என்று தோன்றியது. அஞ்சலியின் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை அவரும் கவனித்தார்.மதி பக்கத்து அரையில் போய் கொஞ்சம் ரிப்ரஷ் ஆகி வெளியே வந்தான்.
“டேய் மதி இப்படி வா!” என்று கொஞ்சம் அதிகாரமாகவே மதியை விக்ரமுடைய அப்பா அழைத்தார்.
மதியின் மனதிற்குள் நடுக்கம் இருந்தாலும் அவன் தன்னை மிகக் கூலாக காண்பித்துக் கொண்டு அவர் பக்கத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தான்.
“டேய் அந்த பொண்ணு யாரு டா?”
“அது அது வந்து?” என்று அவன் வாய் டைப்படித்தது.
“என்ன டா வந்து போயின்னு அந்த பொண்ணு யாரு?
அவ கழுத்துல தாலி வேற இருக்கு விக்ரம் அவளை எதுக்காக திடீர்னு கூட்டிட்டு வந்து இருக்கான். வந்தது மட்டுமில்லாம அவளை தன்னுடைய ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் கதவை சாத்திட்டான். இவன் என்ன நெனச்சிட்டு இருக்கான். கேம்ப்ல என்ன நடந்துச்சு?” என்று சரமாரியாக கேள்விகளால் விக்ரமுடைய அப்பா மதியை விலாசினார்.
‘பண்ணதெல்லாம் உங்க பையன். ஆனா, என்ன நீங்க சரமாரியா கேள்வி கேக்குறீங்களா?’ என்று மதி மனதிற்குள் கேட்டுக் கொண்டு வெளியே நெளிந்தான்.
“அது நான் சொன்னா நல்லா இருக்காது விக்ரம் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் நீங்க அவன் கிட்டயே கேட்டுக்கோங்க!” என்று விட்டு, ‘நம்ப இங்கிருந்து எஸ்கேப் தான் நமக்கு நல்லது.’ என்று மனதிற்குள் நினைத்தான்.
நினைத்தது போலவே சட்டென்று நாற்காலியில் இருந்து எழவும் அவன் முன்பு இப்பொழுது பார்வதி வந்து நின்றாள்.
“டேய் நீ தான் அவன் கூட மெடிக்கல் கேம்ப்ள இருந்த அந்த பொண்ணு யாருங்குற விஷயம் உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் அவ கழுத்துல தாலி வேற இருக்கு விக்ரம் அம்முக்குன்னா கிழங்கு மாதிரி அமைதியா இருக்கா. அந்த பொண்ணோட மூஞ்சி சுத்தமா சரியில்ல.
முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு, அதும் கல்யாணமான ஒரு பொண்ண எந்த ஆம்பளையும் தன்னுடைய ரூமுக்கு கூட்டிட்டு போக மாட்டான். என்னுடைய பையன் கண்டிப்பா அந்த மாதிரி பண்ணவே மாட்டான்.
ஏதோ நடந்திருக்கு அந்த பொண்ணு யாருன்னு சொல்லு விக்ரமுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல.” என்று பார்வதி அழுத்தம் திருத்தமான குரலில் கேட்கவும் இப்பொழுது மதியால் தப்பித்து ஓட முடியவில்லை. அதே சமயம் மதி வாய் திறந்து பதில் சொல்வதற்கு முன்னாலேயே விக்ரம் குளித்து தயாராகி புதிய உடை அணிந்து வெளியே வந்தான். அஞ்சலி கலவரமான முகத்தோடு வெளியே தலையை நீட்டினாள்.
“நீ குளிச்சு ரெடி ஆயிட்டு வா” என்று மெல்லிய குரலில் மனைவிக்கு உத்தரவிட்டு விட்டு விக்ரம் தன்னுடைய அப்பா அம்மா முன்பு வந்து நின்றான். ‘வாடா ராசா வா, நீ பண்ண கலவரத்துக்கு உன்னோட அப்பாவும் அம்மாவும் என்ன குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. நீ என்ன டா புது பொண்டாட்டியோட ஜாலியா ரூமுக்குள்ள போயிட்ட அது சரி நீ என்ன பண்ணுவ?
உன்ன வந்தனா கழட்டி விட்டுட்டா அந்த துக்கத்தை மறைக்கறதுக்காக கிடைச்ச அஞ்சலிக்கு சட்டுனு தாலி கட்டி பொண்டாட்டியாகிட்ட உனக்கு தேவை இந்த பிரேக்கப் ல இருந்தும் பிரேக் அப் வலியில் இருந்தும் வெளில வரத்துக்கு ஒரு டைவர்ஷன். ஆனா அதுக்காக என்ன பலி கொடுக்க பாக்குறியே ராசா அதைத்தான் என்னால தாங்கிக்கவே முடியல.’ என்று மைண்ட் வாய்ஸ் பேசிய மதி’ அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக வாசலை நோக்கி போனான்.
To be continued….
By மகிழம் பூ