“ஓஹ் உங்க ஆள பாக்கணுமா.”
உமா ரூம்ல இருந்து வெளிய வந்தத பாத்த ராஜ் அவ வருகைக்காவே காத்திருந்த மாதிரி ஓடி வந்து அவங்க ரெண்டு பேர் பேசுறதையும் கேட்டு,
“என்ன மச்சா என் தங்கச்சிய எதுக்கு பாக்கணும் என்ன மச்சா எதும் பேச்சுலர் டிரீட்டா… ஹம் …ஹம்
என்னாது யோவ் அந்த புள்ளைக்கு அண்ணன் மாதிரி பேசுயா… போயா யோவ் போயா.” அப்படீன்னு சொல்லிட்டு தலைல அடிச்சுகிட்டே உமாவ பாக்க அவ ராஜ பாத்து முறைக்கிராளா இல்ல சிரிக்கிறாளா அப்படீன்னே தெரியாத மாதிரி முகத்த வச்சு அவன பாக்க அவ இவ சிரிச்சிட்டே சைட் அடிக்க…இத எல்லாம் பாத்த எழில்….அட லூசுங்கலா இது வேறயா…..ஹம் இது வேலைக்கு ஆகாது அப்படீண்ட்டு அங்க இருந்து போக…அங்க விஜயாவ பாத்திட்டு அவங்க கிட்ட போய்….
“ஆன்டி… ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா பிளீஸ்…”
“என்ன தம்பி… பிளீஸ்னு சொல்லிகிட்டு என்னனு சொல்லுங்க பட் ஆண்டினு சொல்லாம அத்தைன்னு கூப்டுங்க மாப்பிள்ளை.”
இது வேறயா .. அ …அத்…அத்தை அது ஒன்னும் இல்லை அத்தை ..தென்றலை பாக்கணும்…சோ.
அட போங்க மாப்பிள்ளை🥴😆🥰🥰எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்கு அதுக்குள்ள பொன்ன பாக்க என்ன அவசரம்…நாளைக்கு கல்யாணம் முடிஞ்சது அவ உங்க கூடாதா இருப்பா அதுக்கப்பரமா அவ கிட்ட என்ன பேசனுமோ பேசிக்கலாம்…
நா அப்படி என்ன கேட்டுட்டேன்னு இவங்க இப்படி வெக்க பட்டுகிடே பேசுறாங்க… அத்த அது ஒண்ணும் இல்ல அத்தை…ஒரே ஒரு நிமிசம் தென்றல்.
அட ஸ்ரீ தம்பி இங்க வாங்க மாப்பிள்ளை தம்பி என்ன இம்புட்டு விளையாட்டா இருக்காரு இந்த நேரத்துல போய் பொன்ன பாக்கணும் பேசணும் சொல்ராரு .அப்படீன்னு சிரிச்சிட்டே சொல்லே
டேய் எழில். என்னடா இதெல்லாம் அத்தை முன்னாடி மானத்த வாங்கிகிட்டு … வாடா வா போலாம். … ஸ்ரீ அவன பிடிச்சு இழுத்துட்டு போய் பேச்சுலர் பார்ட்டி ஆரம்பிக்க அங்கு ஸ்ரீ ,ராம்,ராஜ் இன்னும் சிலர் இறுக்க எழில் ஸ்ரீ யை திட்டி கொண்டே இரண்டு மூன்று பெக்குகலை உள்ளே தள்ள பின் எழில் ஸ்ரீயை எதுக்குடா இப்படி பண்ண என்று சொல்லி கொண்டே அவனை போட்டு அடிக்கவும் பின் அவனே நீ பன்னீறுக்கது எவ்ளோ சூப்பர் தெரியுமா என்று அவனுக்கு முத்தமிட இந்த இரண்டையும் மாற்றி மாற்றி செய்ய இவன் அழும்பு தாங்காமல் ஸ்ரீ ராம் இருவரும் எழிலை ரூமிற்கு
அழைத்து செல்ல எழில் தென்றல் பற்றி ஏதேதோ புலம்பி கொண்டே தூங்கி போக எழிலுக்கு தென்றல் மேல் உள்ள காதல் ஸ்ரீ அண்ட் ராம்க்கு புரிந்தது ராம் எழில் ஸ்ரீ யின் நெருங்கிய நண்பன் சென்னையில் வசித்து வருகிறான்.
ஸ்ரீ அதிகாலை 5 மணிக்கு எழிலை எழுப்பி
எழில் மச்சா ..டேய் எழுந்திருடா. .
டேய் விடிஞ்சா
ஆமா…வாடா லேட் ஆச்சு…முகூர்த்ததுக்கு டைம் ஆச்சு கிளம்பு . அப்படீன்னு சொல்லி அவன் மூளைக்கு வேலை கொடுக்க விடாம வேறு எதையும் யோசிக்க விடாம கிளம்ப வைக்க.. இதற்க்கிடையிலே ராஜும் வந்து சேந்து ரெண்டு பேரும் அவனை படாத பாடு படுத்தி எடுத்து அவன கிளப்பி கொண்டுபோய் மேடைல அய்யர் பக்கத்துல உக்கார வச்சிட்டு. ..ராஜ் ஸ்ரீ எதையோ சாதிச்சு கின்னஸ் ரெக்கார்டு வாங்கின மாதிரி ஹை ஃபை போட்டுகிட்டாங்க ….எழில் என்ன செய்றதுன்னு தெரியாம அய்யர் சொல்ர மந்திரத்தை கடமைக்கேன்னு சொல்லிட்டு இருக்க உமா வேதா ரெண்டு பேரும் தென்றல கூப்ட்டு வந்து எழில் பக்கத்துல உக்கார வைக்க.. எதுவும் பேசாமல் குனிஞ்ச தலை நிமிராமல் உக்காந்திருக்க.. எழில் அவ பக்க திரும்பி கூட பாக்கல .. மச்சா பொன்ன பாருங்க என்று சொல்லி எழில் கழுத்தை தென்றல் பக்க்ம் திருப்பி விட அவளை
பார்த்த மறுகணம் தன்னிலை மறந்தவன் அவளையே பார்த்து கொண்டிருக்க ஸ்ரீ ராஜ் அவனை உலுக்கி சுய நினைவுக்கு கொண்டு வந்து அவனை வெட்கம் பிடிங்கி தின்னும் அளவுக்கு வம்பிழுக்க
அய்யர் கெட்டி மேளம்….. கெட்டி மேளம் என்று சொல்ல…
ஒரு நிமிசம் யோசிச்ச எழில் ஸ்ரீ முகத்தை பார்த்து விட்டு தென்றல் கழுத்துல தாலி கட்ட ..எல்லாரும் அட்டசனை தூவ…கல்யாணம் நல்ல படிய முடிஞ்ச சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தி எழில் தென்றல ஆசிர்வாதம் பண்ண . … அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க தொடங்குறாங்க…..யாருக்குமே கை கால் ஒரு இடத்தில நிக்கில… அவ்ளோ சந்தோசம் எல்லார் மனசுலையும்…எழில் தென்றல் தவிர. . .
அதன் பிறகு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் படி சில பல விளையாட்டுகள் நடக்க எழில் தென்றல் தத்தம் குடம்பத்திற்காக விளையாட்டில் ஈடுபாடு காட்ட ஒவ்வொரு முறை விளையாட்டிலும் தென்றலே ஒவ்வொரு விளையாட்டிலும் ஜெயிக்க… கூடவே அவனை பார்த்து அழகு காட்ட எழில் அவளை பார்த்து முறைக்க…தென்றல் அவனை சீண்டும் விதமாக…
என்ன டம்மி போலீஸ் இப்படி சிம்பிளான விளையாட்டுல கூட தோத்து போய்ட்டீங்க….. பின்ன எப்படி போலீஸ் செலக்சன்ல ஹை ஜம்ப் லாங் ஜம்ப் இதெல்லாம் பாஸ் பண்ணீங்க…அய்யோ அய்யோ என்று சொல்லி கிண்டல் அடித்து அவன் கோவத்தை ரசித்து தன் மனக் காயத்துக்கு மருந்து போட்டு கொண்டவள் மேலும் மேலும் எதேதோ சொல்லி வேதா உமாவுடன் சேர்ந்து கிண்டல் அடிக்க… ராஜ் ஸ்ரீ இருவரும் கூட இவன் பக்கம் இல்லாமல் அவர்களுடன் சேர்ந்து இன்னும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவனை சீண்ட… வீட்டு பெரியவர்கள் அனைவரும் இவர்களின் சேட்டைய பார்த்து சிரிக்க…. எழில் தான் ஒன்றும் சலித்தவன் இல்லையடி என்று அவள் அருகில் சென்று
அட சூறாவளி பாப்பா நா இந்த மாதிரி சின்னப்பிள்ளை தனமான விளையாட்டெல்லாம் விளையாடுறது இல்ல… மாமாக்கு இப்படி விளையாட்டு எல்லாம் பிடிக்காது..வேர மாதிரிதான் விளையாட பிடிக்கும் அத அப்பறமா விளையாடலாம் பாக்கலாம் அப்போ யார் வின் பன்றான்னு என்று அவள் காதில் மட்டும் கேட்கும் அளவுக்கு அவள் காதருகில் சென்று சொல்லி விட்டு அவளை பார்த்து நக்கலாக சிரிக்க… அவன் சிரிப்பு மற்றும் அவன் கிண்டல் பேச்சின் காரணம் புரிந்தவள்… கோவமா வெட்க்கமா என்று அவளே அறிய முடியாத அளவிற்கு கன்னங்கள் இரண்டும் சிவந்து போக… உடலெங்கும் நடுக்கம் கொடுத்து பயமும் கூடி போக இப்பொழுது அவளை கிண்டல் செய்வது எழில் முறையாகிப் போனது….. இப்படியே சின்ன சின்ன சேட்டைகளுடன்.. அந்த கல்யாண வீடு கலை கட்டி போக…… இன்றைய நாள் எப்படி இவளோ சீக்கிரம் நேரம் போனது என்று தெரியாத அளவிற்கு இரவு மணி 8:30 என கடிகாரம் காட்ட…
ஹே உமா அவள ரெடி பண்ணிட்டீங்களா…மணி 8:30 ஆச்சுடி.. என சொல்லி கொண்டே..தென்றல் அருகில வந்தவர்…அவளை பார்த்து திருஷ்டி கழித்து ராசாத்தி சந்தோசமா இருக்கணும் எப்பவும்.. என்று சொல்லி வேதா உமா இருவரிடமும் அவளை அழச்சிட்டு போங்க என்று கண்களால் சொல்லி விட்டு ஸ்ரீ நோக்கி ஓடினார் விஜயா… தன் சந்தேகம் ஒன்றை தீர்க்க…
ஸ்ரீ தம்பி நில்லு நில்லு இப்போ சொல்லு அன்னிக்கு கேட்டதுக்கு அப்பறமா சொல்ரேன்னு சொன்ன… எப்படி எழில் தம்பி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுச்சு..அன்னிக்கு தேவா அண்ணா அவன் டிரான்ஸ்ஃபர் அப்பிளை பண்ணி அது கிடச்சிடுச்சு இன்னும் ரெண்டு நாளைகுள்ள அங்க போகணும் அவன் இந்த கல்யாணத்தை நிப்பாட்டதான் இப்படி எல்லா பண்ணிருக்கான் என்ன மன்னிச்சிடுங்க இந்த கல்யாணம் நடக்காது சொன்னதும் என் மூச்சே நிண்ணு போனது மாதிரிதா இருந்துச்சு அப்பறம் மனசு கேக்கல…எங்க ஒரு நல்ல பையன ஒரு நல்ல குடும்பத்த என் மக இழந்திடுவாளோ அப்படீண்ணுதான் தோணுச்சு ஆனா நீ மறுநாள் ஃபோன் பண்ணி கல்யாணத்துக்கு எழில் ஓகே சொல்லிட்டா இனி இப்படி அவன் எது பன்ன மாட்டா இந்த கல்யாணம் நடக்கும் சொன்னதுமே தான் எனக்கு உசிறே வந்தது…அது எப்படி..அன்னிக்கு அப்படி என்னதான் நடந்துச்சு…
அதுவா அம்மா அத நா சொல்றே என்று இவர்கள் பேச்சிற்கு இடை நுழைந்தான் ராஜ்…
அன்னிக்கு சார் நண்பன் கல்யாணத்த நிப்பாட்டா இப்படி எல்லாம் திட்டம் போட்டிருக்கான் அப்படீன்ற சோகத்துல வண்டிய கண்ணா பின்னானு ஓட்ட..வண்டி மரத்துல மோதிடுச்சு
என்னாது ஆக்சிடன்ட்டா…வ்என்னடா சொல்டர… தம்பி உடம்புக்கு ஒன்னும் இல்லையே..
அய்யோ அம்மா ரொம்ப பயப்படாதீங்க… அண்ணன் ரொம்ப விவரம் அப்படீன்னு சொல்லிட்டே உமா வர அவ பின்னாடியே வேதா வர…விஜயா ஒன்றும் புரியாமல் முழிக்க… உமாவே அவள் சந்தேகத்தை தீர்த்து வைத்தால்…
ஸ்ரீ அண்ணன் அன்னிக்கு இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய ஸ்கிரிப்ட் இருக்கு சொன்னாருல அததான் எக்சிகியூட் பண்ணி இருக்காரு…வண்டி மரத்துல மோதுனது என்னமோ உண்மைதான் பட் அண்ணன் வண்டி மறத்துல மோதுறதுக்கு முன்னாடியே அங்க பக்கத்துல ரோடு மேல கிடந்த மண் குவியல பாத்ததும் வண்டிலயிருந்து அதுல குதிச்சதுல அவருக்கு ஒன்னு ஆகல பட் அப்போதான் அவரு மண்டைல ஒரு பல்ப் எரிய… உடனே ராஜுக்கு கால் பண்ணி பிளான சொல்ல..உடனே அவரு இப்போ நம்ம வேதா டிரெய்னிங் போய்ட்டு இருக்க ஹாஸ்பிடலியே இந்த பிளான செயல்படுத்துவோம் அங்க தெரிஞ்ச ஒரு டாக்டர் ஹெல்ப்போட பர்மிஷன் வாங்கி அண்ணனுக்கு ஆக்சிடன்ட் ஆன மாதிரி சில பல கட்டுகள போட்டு எழில் அண்ணன அங்க வர வச்சாங்க நண்பன் பேசாம இருக்கவும் மனசு உடன்ஜீ போணவரு அறை குறை மனசோடா தன்னோட டிரான்ஸ்ஃபர போஸ்ட் பாண்ட் பண்ணிட்டு வந்தவரு . அண்ணாவை கட்டோட பாத்து இவர் இந்த நிலமைக்கு தானே காரணம் நினச்சு நண்பனுக்காக இந்த கல்யாணத்துக்கு பெர்மணன்ட்டா ஓகே சொல்ல வச்சுட்டாங்க…
இடை நுழைந்த வேதா..பட் நீங்க மேரேஜ் அப்போ உடம்புல எந்த கட்டும் போடல..இருந்தும் அவருக்கு எந்த டவுட்டு வரல அதெப்படி…
ஹே விடுடி.. அதா மாப்பிள்ளைக்கு எந்த சந்தேகமும் வரலீல விட்டா நீயே சொல்லிருவ போல போடி போ… எல்லாரும் போங்க தூங்க அவங்க சந்தோசமா இருந்தா அதுவே போதும் என்று தன் இரு கைகளையும் கூப்பி வேண்டிய படி அங்கிருந்து சென்றார் விஜயா அவர் சென்ற பிறகு ராஜ் ஸ்ரீ யிடம் அவன் தோளில் கை வைத்து
அம்மா சொன்ன மாதிரி ரெண்டு பேரும் சந்தோசமா இருப்பாங்க மச்சா..அது எனக்கு இன்னிக்கு மதியமே தெரிஞ்சது…மச்சா சிரிச்சுகிட்டே தென்றல் காதுக்குல்ல எதோ சொல்லவும் அதுக்கு அவ வெக்க பட்டுகிட்டே சிறிச்சத பாத்தீங்களா…
அட போயா..நீ இன்னும் என். நண்பன பத்தியும் உன் தொங்கச்சிய பத்தியும் முழுசா புரிஞ்சிக்காம இருக்க…யோவ் நீ லாயர்தான..
ஆமா அதுல என்ன உனக்கு சந்தேகம்???
இப்போ பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல உன் தொங்கச்சி உனக்கு கால் பன்றாளா இல்லையான்னு
ஹுஹு அவ எதுக்கு எனக்கு கால் பண்ணனும் அதுவும் இந்த நேரத்துல என்று ஸ்ரீ யிடம் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே…தென்றல் ஃபோன் கால் ராஜை அழைக்க… திகைப்புடன் ஸ்ரீயை பார்த்து கொண்டே அட்டெண்ட் செய்து ஹலோ
அண்ணா நீ வக்கீ….ஹே எழில் விடுங்க..ஹே எழி…. ல்…இப்..போ விட போறீங்களா இல்லையா..எழில் கைய விடுங்க..
அவள் பேசுவதை கேட்டு வேதா உமா இருவரும் சிரித்து கொண்டே அங்கிருந்து விலக ஸ்ரீ முகைத்தை ராஜ் பார்க்க அவனோ.. நம்ம நண்பனா..அவனா.. இப்படி இல்லையே அவன் இப்படி ….இல்ல இல்ல. ….
*************எழில் தென்றல் வருவார்கள்
ஹாய் பிரெண்ட்ஸ் ஸ்டோரி எப்படி போது…நல்லா இருக்கா… உங்களுக்கு பிடிச்சிருக்கா…நிறை குறைகளை கமென்ட்ல சொல்லுங்க…நட்புகளே…🧚