ஸ்ரீ சொன்னதும் எல்லாரையும் அரட்டி மிரட்டி கிளம்ப வைத்து அரை மணி நேரத்திகுள் மஹாலில் ஆஜர் ஆக்கினாள் வேதா…
மஹால் வந்து இறங்கியதும் தென்றலை மண பெண் அறைக்கு அழைத்து செல்ல… அவர்கள் பின்னாலயே உமாவை வம்பிலுத்து கொண்டே சென்ற ராஜை, ஸ்ரீ இழுத்து கொண்டு எழில் அறைக்கு சென்றான்….
ராஜ் அங்கு அமர்ந்திருந்த எழிலை பார்த்து “மச்சா என்ன இது…. ஸ்ரீ என்னமோ நீங்க விடிஞ்சதுமே மஹாலுக்கு வந்தாச்சு ..பொண்ணு வீட்ல இருந்து எதுக்கு இவ்ளோ லேட்டா வந்தீங்கன்னு எதோ ஸ்கூலுக்கு லேட்டா வந்த பிள்ளைகள திட்டுண மாதிரி திட்டுனா…. அவரு திட்டுன திட்டுல மாப்பிள்ளை ஒருவேளை சீக்கிரமா கிளம்பி பொண்ணுக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி லேட் ஆனதுனால கோவமா இருப்பாரோ அப்படீன்னு நினச்சு பயந்துகிட்டு உள்ள வந்தா நீங்க என்னடான்னா இப்படி உக்காந்திருக்கீங்க…… என்ன மாப்பிள்ளை இது.. என்கேஜ்மென்டுக்கு வாங்குங்குண ட்ரெஸ் எங்க … என்ன நீங்க … நீங்க வாங்க என்கூட வந்து”
“எங்க
ஹ்ம்ம் பொண்ணு ரூம்க்கு. …வந்து என் தங்கச்சிய பாரு எவ்ளோ அழகா தேவத மாதிரி கிளம்பி உனக்காக வெயிட் பண்ணிட்டுஇருக்கானு வந்து பாரு மாப்பிள்ளை..”
என்னாது சூறாவளி கிளம்பி எனக்காக வெயிட் பன்றாலா நம்ப முடியளியே ……டேய் ஸ்ரீ எனக்கு ஒரு டவுட்டு…. சூறாவளிக்கு நான் தான் மாப்பிள்ளைனு தெரியுமா?
ஸ்ரீ ராஜை பார்க்க. ராஜ் அவனை பார்க்க இருவர் கண்ணும் கோலி குண்டு உருள்றது மாதிரி திரு திருண்ணு உருள .. எழிழுக்கு புரிஞ்சுது. அவளுக்கும தான்தான் மாப்பிள்ளை” என்று தெரியாதது என்பது..
“புரிஞ்சி போச்சுடா புரிஞ்சி போச்சு… அப்படீன்னா அவளுக்கு என்ன தெரியாது..
ஆமா மச்சா… தங்கச்சிக்கு நீங்கா தான் மப்பிள்ளைன்னு தெரியாது.. உங்க ஃபோட்டோ கூட அவ இது வர பாத்தது இல்ல …. அப்படீன்னு சொல்லி அவள கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க அப்பா ஹார்ட் அட்டாக் ஹாஸ்பிடல் டிராமா பத்தி சொல்ல
இல்ல தப்பு…. எனக்கென்னமோ தப்பா படுது இது சரி பட்டு வருமான்னு தெறில. டேய் ஸ்ரீ உனக்கு இது சரியா படுதா. .அவளுக்கு எனக்கு எப்பவுமே ஆகாதுடா… அதும் இல்லாம எங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமே இல்ல அப்படி இருக்… என்று எழில் பேசி கொண்டிருக்கும் போதே…. எழில் சித்தப்பா முறையில் ஒருவர் உள்ளே வந்து ..
“தம்பி ஸ்ரீ மாப்பிள்ளைய கூப்பிடிராங்க… கூப்பிட்டு வாங்க…”என்று அவர் சொல்லிவிட்டு அங்க இருந்து போனதுதான் தாமதம்…
“ஸ்ரீ, ராஜ் இருவரும் எப்பா கடவுளே நல்ல நேரத்துல வந்து காப்பத்துனீங்க…இல்ல இவ பேசியே இந்த கல்யாணத்தை நிருத்திருப்பான்…டேய் டேய் வா வா சீக்கிரம் வா மாப்பிள்ளைய கூப்பிடுறாங்களா வா போலாம்….”
“டேய் ஒரு நிமிஷம் நா சொல்றத கேளு ஸ்ரீ.”
ஸ்ரீ அவன் பேச்சு எதையும் காதில் வாங்காதவன் போல் ராஜ் பக்கம் திரும்பி… ராஜ் இவன ஹ்ம் என்றவாறு கண்ணடிக்க இருவரும் அலேக்காக அவனை மேடைக்கு அழைத்து சென்றனர்…
இவர்கள் செய்யும் குறும்பு தனத்தை பார்த்து அங்கு இருந்த அனைவரும் சிரித்து சிரித்து மஹாலை சிரிப்பால் அலங்கரித்தனர்..
வீட்டிலேயே அலங்காரம் எல்லாம் பண்ணி ரெடியா வந்திருந்த தென்றல இன்னும் பட்டிங் டின்கரிங் வேலை பாத்து இன்னும் அழகா மாத்திட்டு இருந்தாங்க அவள சுத்தி நின்னுட்டு இருந்த வேதா உமா ரெண்டு பேரும் ஸ்ரீ சொன்னது நியாபகம் வந்த வேதா…
“அக்கா எனக்கு ஒரு டவுட்டு?”
“சொல்லு வேதா?”
“இல்ல உனக்கு இன்னிக்கு எங்கேஜ்மென்ட் நாளைக்கு கல்யாணம் …பட் இப்போ வர மாப்பிள்ளை பத்தி ஒன்னுகூட தெரிஞ்சிக்கல அட்லீஸ்ட் ஃபோட்டோவாச்சும் பாத்திருக்கலாம்… பட் நீ அது கூட பாக்கல… எங்க எல்லாருக்கும் மாப்பிள்ளை யாருனே தெரியும்…வ்நாங்க பாத்திருக்கோம் எங்ககிட்ட கூட அவர பத்தி எதுவுமே கேக்கல…. .உனக்கு எதுவுமே தோனலியா அக்கா…”
“வேதா நா இப்போ கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டதே உங்க எல்லாரோட விருப்பத்துக்காக மட்டும்தான்…அப்படி இருக்கப்போ மாப்பிள்ளை யாரா இருந்தா என்ன….என கண் கலங்க கூறியவள் அதும் இல்லாம அப்பா எனக்காக ஒரு பையன்ன பாத்து இவளோ பிடிவாதமா இருக்காரு…
அப்படீன்னா அப்பா பாத்த அந்த பையன் நிச்சயம் நல்லவனாத இருப்பான்… எனக்கு அந்த நம்பிக்கை நிறயவே இருக்கு என கண்ணில் தேங்கி நிற்கும் கண்ணீரை கீழே விழ விடாமல் இழுத்து பிடித்து வைத்து கூறினாள்.
வேதா அவளின் கவலை நிறைந்த மனதை உணர்ந்து ஒருவேளை “நம்ம அப்பாவுக்காக அக்கா வாழ்க்கையில விளையாடுரோமோ…. தப்பு பண்றோமோ… பேசாம அப்பாகிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தி அக்கா ஆசபடி அவள ஜார்நலிசம்படிக்க வைக்க சொல்லுவோமா…. எங்க அந்த ஆளு நம்ம சொன்னா கேட்டுடுவாரா… நீ சின்ன பொண்ணு உள்ள போ அப்படீன்னு மண்டைலியே நாலு தட்டுதான் தட்டுவாரு…. எழில் கண்டிப்பா நல்லவர்தா பாவம் மீரா தன்னாலதான் செத்தா அப்படீன்னு நினச்சே தன் வாழ்க்கைய அழிச்சுக்க பாத்தவரு அப்படி இருக்க ஒருத்தர் நம்ம அக்கா மனச புரிஞ்சுக்கிட்டா அக்கா அவர் மனச மாத்திட்டா அவர் இவள நல்லா பாத்துபாரு அப்படீன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு…. கடவுளே நீங்காதான் எல்லா பாத்துக்கனும் எல்லாம் நல்லதாவே நடக்கனும்’ என மனதில் நினைத்தவள்…
அக்கா எல்லாம் சரி ஒரு வேல மாப்பிள்ளை அந்த….அந்த…
என்னடி வேதா இழுக்குற அந்த என்ன அந்த
இல்ல அக்கா ஒருவேள மாப்பிள்ளை அந்த டம்மி போலீசா இருந்தா என்ன பண்ணுவ..
அவள் சொன்ன அடுத்த கணம் தென்றல் மனதிற்குள் எதோ தோன்ற பின் வேதாவிடம் அடியே வேதா… உனக்கு எதுக்கு இம்புட்டு ஆச.. அப்படி நீ சொல்றது மாதிரி மட்டும் எதாச்சும் இருந்துச்சு பக்கத்துல நிக்கிற யாராயச்சு இழுத்துட்டு ஒடிருவேன்
அப்பரம் அங்க பக்கத்துல நிக்கிற எதாச்சும் ஒரு பையன வேகமா இழுத்துட்டு ஒடிறுவ பாத்துக்கோ நா மேடைல இருந்து இப்படி ஒடுறத பாத்து எல்லாரும் ஷாக் ஆகிதா நிப்பாங்க சோ அத யூஸ் பன்னி ஒடிறுவே அப்பரம் பாதி தூரம் போனது அந்த பையன்ட்ட குட்டியா ஒரு சாரி சொல்லிட்டு நா யாருக்கும் தெரியாம காணா போய்டுவே என்று வேதா உமா இருவரும் விளையாட்டாய் வம்பிலுப்பதாய் நினைத்து இவளும் விளையாட்டாய் சிரித்து கொண்டே கூற
அவள் சொன்ன மறுகணம் வேதா தன் இரு கண்கள் அகல விரிந்தவளாய்….
என்னாது பக்கத்துல இருக்காங்கல இழுத்துட்டு ஒடிருவியா.. அப்போ ஸ்ரீ. ….
அடியே வேதா உமா என்னடி இங்க வாய் பேசிட்டு இருக்கீங்க பொன்ன கூப்புட்ராங்க தென்றலை கூப்பிட்டு வாங்க என விஜயா அங்கு வந்து சொல்லிட்டு போக… இருவரும் அவளை அழைத்து கொண்டு போக…
எழில் அருகில் குனிந்த தலையை நிமிர்த்தாமல் தமிழ் பெண்ணுக்கு இலக்கணமாக நின்றிருந்தாள் தென்றல்…… அவன் முகத்தை கூட இன்னும் யாரென்று பார்க்காமல்
பாவம் எழிலுக்குதான் தன் கண்ணை தன்னால் நம்ப முடியவில்லை…யாரு இது சூறாவளியா…இவளோ பவ்யமா இருக்கா… இவ கேரக்டடருக்கும் இவளுக்கு இந்த அமைதி செட் ஆகலியே….என. நினைத்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் தன் கவிதை போட்டி பிரக்டிசை ஸ்டார்ட் செய்தான்…
“ஒரு வலி இன்பம் தரும்அது உன்னாலே வரும்இனி நெஞ்சில் காதல்தினம்ஒரு வித மாற்றம் கொள்ளும் மாயங்கள் செய்யும் இருந்தும் சுகம்இருவிழி பேசுமிடம் இன்பம் துன்பம்இரண்டிலும் கலந்திடும். ..“
என்று கவிதை பாட…அவனை உலுக்கி மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தான் ஸ்ரீ….
“அது..அது..மச்சா..அன்னிக்கு சொன்னேன்ல கவிதை போட்டி..”
“ஹ்ம்ம் ஆமா மச்சா ஆமா!” என்று ஸ்ரீ கூற
“டேய் மச்சா ஸ்ரீ நம்புடா?!” என்று ஸ்ரீயை பார்த்து எழில் கூற
“ஹ்ம்ம் அப்படியா…சரிடா நல்லவனே நம்பிட்டேன். நா நிஜமாவே இப்போ நீ என்ன பன்றீனா இந்தா இத மாட்டு…என எழில் கையில் ஸ்ரீ ஒரு மோதிரத்தை அவனிடம் கொடுக்க.”
“மச்சா.” என்று இழுத்து கொண்டே ஸ்ரீயை பார்த்த எழிலிடம் ஸ்ரீ
மாட்டுனு சொன்னே.?” என்று கூற
எழில் தென்றல் விரல் பிடித்து ஸ்ரீ முகத்தை பார்த்தவாறு கண்களில் குற்ற உணர்ச்சியோடு கவலை குழப்பம் ஒரு வித இன்பமும் கூட என அனைத்தும் ஒரு சேர கலந்தவனாய் தென்றல் கைகளை பிடித்து அவன் உள்ளகையில் வைத்து அவளது விரலில் மோதிரத்தை போட்டு விட்டான்….
ஸ்ரீ அவனிடம் பேசி கொண்டிருக்கும் போதே எங்கயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே என தலையை நிமர்த்தி எழிலை மாப்பிள்ளையாக பார்த்த தென்றல் அதிர்ந்து போனாள்..
அதே அதிர்ச்சியோடு வேதாவை பார்க்க.. அவள் மனதிலோ
அய்யோ இவ வேர பக்கத்துல இருக்க யாராச்சும் இழுத்துட்டு ஒடிருவேன் சொன்னாலே 🤔இப்போ இவ பக்கத்துல ஸ்ரீ நிக்கிராரே… அடி ஆத்தி 😱😱அவளுக்கு மனதில் பாராங்கல்லை வைத்த்து போல் கணக்க… ஸ்ரீ முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு…வேதா இத இப்படியே விட கூடாது..அப்பரம் நமக்கு எல்லாமே திண்டாட்டமா போய்டும்..🥴🥴. ரெடி ஜூட் வேதா என்று உளறி கொண்டே தென்றல் அருகில் சென்றவள் அவளை போட்டு படாத பாடு படுத்தி எடுத்து..அவள் மண்டையை குழப்பி விட்டு எழிலுக்கு ஒரு வழியாக மோதிரத்தை போட வைத்து விட்டாள்……
பின் நிச்சயதார்த்த விழா சில பல கலாடட்டாவோட முடிந்து சிலர் தூங்க போக சிலர் கல்யாண வேலைகளை கவனித்து கொள்ள.. .அந்த ரூமில் எழில் அவனை அவனே திட்டி தீர்த்து கொண்டிருந்தான்..
இருந்த்தாலும் இத்தனை நாளா தென்றலை பார்க்கும் பொழுது வந்த அந்த இனம் புறியாத உணர்வு இன்று சந்தோசமாக மாற அதை சந்தோசமாக அனுபவித்து கொண்டிருந்தவன் பின் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி அவனுக்குள் அவனே பேச தொடங்கினான்.
“ டேய் டேய் நீ என்ன லூசா உனக்கு அறிவு இருக்கா இல்லையா..அவளுக்கும் உனக்கு ஆகாதே… அந்த நாய் ஸ்ரீ சொன்னா நீ உடனே இவளுக்கு ரிங் போட்டு விட்றுவியா… இதுல அவள பாத்து கவிதைன்ற பேர்ல என்னென்னமோ அந்த ஸ்ரீ முன்னாடி உளறி இப்படி மொக்க வாங்கிட்டு இருக்க..எப்படிடா அவள அந்த பார்வ பாக்குற…. இதெல்லாம் சரி இல்லடா.. அவ எப்படிடா.. அவ மனசுல நீ கண்டிப்பா இல்ல அது கண்டிப்பா உனக்கே தெரியும்… பேசாம அவள பாத்து பேசி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுதான் நல்லது… அப்போ ஸ்ரீ… டேய் ஃபர்ஸ்ட் கல்யாணத்தை நிறுத்துவோம்.. அப்பறமா அவன சமாளிச்சுப்போம்” என்று தனக்குள் பேசியவன்… தென்றலை பார்க்க மணப்பெண் அறைக்கு செல்ல… அங்க ஒரு கூட்டமே.. நின்னுட்டு இருக்க
“அட கடவுளே இது என்ன இவளோ பேர் இருக்காங்க…இதுல எப்படி இவள பாத்து பேசி..இந்த கல்யாணத்தை நிறுத்துரது…பேசாம யார்ட்டயாச்சும். ஹெல்ப் கேக்க வேண்டியதுதான்…🤔🤔யார்ட்ட கேக்கலாம்.”
ராஜ்.🤔..அய்யோ அவன் வேணாம் அவ எப்படியும் ஸ்ரீ கிட்ட பத்த வச்சிடுவான்….இந்த தென்றல் சிஸ்டர் வேதா…🤔. . அவளா அவ வேண்டாம்…அவ போக்கே சரி இல்ல.. எனக்கு இந்த கல்யாணம் நடக்குறதுல அவளுக்கு எதோ யூஸ்ஸ் இருக்கு அதுனால அவளும் இந்த ஸ்ரீ மாதிரி இந்த கல்யாணம் நடக்குறதலையே குறியா இருக்கா சோ டேன்ஜர் அவ வேணாம். இந்த உமா பொண்ணு🤔
எழில் நினச்ச மாதிரி கல்யாணத்த நிறுத்திடுவானா ? இல்ல தென்றல் எதாச்சு பிளான் பன்னி கல்யாணத்த நிறுத்துவாளா?
இல்ல ஸ்ரீ திட்டபடி இந்த கல்யாணம் நடக்குமா?
பொறுத்திருந்து பார்க்கலாம்….
எழில் தென்றல் வருவார்கள்