எழில் பத்தி தென்றல் பேசுனத உமா வீட்டில் அனைவரிடமும் சொல்ல ஸ்ரீ யும் தான் ரெக்கார்டு செய்து வைத்திருந்த எழில் கவிதை உலறல் வீடியோவை அனைவரிடமும் காட்ட எல்லாருக்குமே கொண்டாட்டம்தான்.
இதே சந்தோசத்துடன் வீட்டில் எல்லாரும் கல்யாண வேலைகளை சிறப்பா பார்க்க ஆரம்பிச்சாங்க.
ஸ்ரீ பாதி நேரம் தென்றல் வீட்டிலேயே இருப்பான். மஹால் பூக் பண்றது சாப்பாட்டுக்கு சமயல்காரர் தேர்வு செய்வது,மேல தாளம் ஆட்கள் முடிவு செய்வது என அனைத்தையும் ராஜ் ஸ்ரீ இருவரும் சேர்ந்தே கவனித்து கொண்டனர். வேதாவும் காலேஜுக்கு போகாம கட் அடிச்சுட்டு அடம் பிடித்து இவர்கள் இருவருடனும் நல்லா ஊர் சுத்திட்டு இருந்தால்… விஜயன் விஜயா,வேதா,ராஜ் உமா என எல்லாருக்கும் பிடித்த ஒரு ஆளாக மாறி போனான் ஸ்ரீ.
விஜயன் விஜயா ஸ்ரீயிடம் எதச்சியாக எழில் அம்மா இறந்தது பற்றி கேட்க,
ஸ்ரீ அவர்களிடம் எழில் அம்ம தேவியும் மீறாவுக்கு நடந்த அபறீதமான நிகழ்வை பற்றி சொல்ல அதை கேட்ட விஜயா கண் கலங்கி போனாள்.
விஜயனோ, அபிமன்யூ இறப்பிறகு யார் காரணமோ அவர்கள்தான் இவர்கள் இருவர் சாவுக்கும் காரணமா என நினைத்து தனக்கு வந்த அடக்க முடியாத கோபத்தையும் ஒருவித பயத்தையும் மனதிற்கு வைத்துக் கொண்டு அவன் முன் ஏதும் பேசாது அமைதியாக இருந்தார்.
பின் எழில், தென்றல் நிச்சயதார்த்தம் ஐந்து நாள் இருக்கும் நிலையில் வீட்டு டேபில் மேல் இருந்த லெட்டரை பார்த்து மிகுந்த அதிர்ச்சியும் கோவாமும் கொண்ட தேவா எழில் நம்பர்க்கு கால் பண்ணி
டேய் எழில் என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல… இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொன்னதே என்னால நம்ப முடியாதா ஒரு விசயமாதான் இருந்ததே…ஸ்ரீ நா எல்லாம் பாத்துகுறேன் சொன்னதுனாள தான் நிம்மதியா சந்தோசமா இருந்தேன். ஆனா கடைசில நீ இந்த கல்யாணத்தை நிறுத்த இப்படி முடிவு பண்ணுவ அப்படீன்னு நினைக்கல. இனி உன் முகத்துலயே நா முழிக்க மாட்டேன். இந்த வீட்டுலயும் இருக்க மாட்டேன் என்ன தேடி யாரும் வர வேண்டாம் நா போறேன்னு சொல்லி கால் கட்…
எழில் மறுபடியும் அவருக்கு கால் பன்ன ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்.. அடுத்து அடுத்து கால் பன்ன நம்பர் ரீச் ஆகவே இல்ல. பிறகு என்ன செய்வது என்று புரியாமல் ஸ்ரீ நம்பெற்கு கால் பண்ணி நடந்ததை சொல்ல பின் இருவரும் சேர்ந்து அவங்களுக்கு தெரிஞ்ச எல்லா இடத்துலயும் தேட தேவா பிரெண்ட்ஸ் வீடு ரிலேசன் வீடு இப்படி எல்லா இடத்துலயும் தேட, அவர் எங்க தேடியும் கிடைக்கலை.
கொஞ்ச நேரத்துலயே அவர் ஒரு முதியோர் இல்லத்துல சேந்து இருக்கிறத அங்க வார்டன்னா இருக்க இவங்களுக்கு தெரிஞ்சு ஒரு ஆள் மூலமா தேடி கண்டு பிடிச்சு அங்க போனாங்க
அங்க அவர பாத்ததும் ஸ்ரீ அவரை வீட்டுக்கு கூப்பிட தேவா வர மறுத்து எழிலை முறைத்து கொண்டிருக்க. பாவம் ஸ்ரீ நிலமை அய்யோ என ஆனது பின் அவன் எழிலிடம் சென்று
டேய் எழில் என்னடா அப்படி என்னடா பண்ணி தொலச்ச எதுக்கு இப்படி இவர் கோவமா இருக்காரு… உனக்கு எல்லாம் தெரியும் … அவனிடம் இருந்த மௌனம் மட்டுமே பதிலாக வந்தது…
அவன் எப்படி பேசுவான் ஸ்ரீ… சார் தான் இந்த கல்யாணம் நிருத்தனும் நினச்சு சில பல திட்டத்த போட்டு இப்போ டிரான்ஸ்ஃபர் அப்பிளை பண்ணி இருக்காரு.. இதோ நாள மரு நாள் சென்னை போய் டியூட்டில போய் ஜாயின் பண்ணனுமா….. சோ சார் நாள மரு நாள் அங்க போய் ஜாயின் பண்ணிசுவாரு.. இந்த கல்யாணமும் நின்றும்… அவர் ஜெய்ச்சுடுவாரு .. நம்மல அசிங்க பட்டு நிக்கணும் அதான் இவரோட ஆச
டேய் எழில் ஏண்டா இப்படி எல்லாரையும் சாகடிக்குற… உண்ண நம்பி நாங்க மட்டும் இல்ல இன்னொரு குடும்பமும் சேத்து அசிங்க பட போது… உனக்கு அறிவு இல்ல… இப்போ முடிவா உண்ட ஒன்னு கேக்குற.. இந்த டிரான்ஸ்ஃபர கேன்சல் பன்ன முடியுமா முடியாதா ????
எழில் முடியாது என்பது போல் ஒரு பார்வை பார்க்க…
ஸ்ரீ எதும் அவனிடம் பேசாமல்… அப்பா நீங்கனாச்சு என்கூட நா சொல்றத கேட்டு என்கூட வாங்க என சொல்லி அவரை அங்கிருந்து அழைத்து சென்றான்…
அவனை நேரில் சந்தித்து எழில் எவ்வளவோ பேசியும் ஸ்ரீ அவனிடம் எதும் பேசவே இல்லை
எழில் கால் செய்தும் எடுக்காமல் இருக்க… அவன் மீண்டும் மீண்டும் கால் செய்ய அவன் நம்பரை ப்ளாக்கில் போட்டுடான் ஸ்ரீ…
எழில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருக்க… சிறிது யோசித்தவன் ஐ ஜி வீட்டிற்கு சென்று எதோ பேசிவிட்டு முகத்தில் கவலை குழப்பம் புன்னகை இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து தேவாவிற்கு கால் பன்ன அவர் எடுக்காமல் இருக்க நேரா வீட்டுக்கு போய் பேசலாம் என முடிவு பண்ணி தனது பைக்கை ஸ்டார்ட் பண்ணியவணுக்கு… பிரேம் நம்பரில் இருந்து வந்தது அந்த சோக அழைப்பு ..
ஹா சொல்லுங்க பிரேம்…
தம்பி… த… த …தம்பி…ஸ்ரீ தம்பிக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு….
வாட்…அண்ணா… என்ன சொல்றீங்க… என் என் என்னோட ஸ்ரீரிக்கு என்னாச்சு…
தம்பி பதட்ட படாதீங்க அவருக்கு பயபுடுற மாதிரி ஒன்னும் இல்ல நீங்க உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வாங்க அப்படீன்னு ஹாஸ்பிடல் நேம் சொல்லிட்டு கால் கட் பண்ண
அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு இருந்தான் எழில்..
தலையில் வந்த இரத்தத்தை நிறுத்த போடா பட்டிருந்த கட்டுடனும்… காலில் கட்டுடணும் மூச்சு விட சிரம படுவதால் மூச்சு குழல் பொறுத்த பட்டு படுத்த நிலையில் இருந்தான் ஸ்ரீ…அவனை பார்த்து எழில் கண் கலங்க அவனிடம் ஒடி…
டேய் ஸ்ரீ.. மச்சா என்னடா ஆச்சு . என்ன பாருடா.. டேய்..
அங்கு வந்த ராஜ்
எழில் அவர டிஸ்டர்ப் பன்ன வேண்டாம் சொல்லி இருக்காங்க .. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடிதான் டிரீட்மெண்ட் முடிஞ்சு.. அவர கொஞ்ச ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க சோ பிளீஸ் வாங்க வெளிய போலாம் .
ஹே யாரு நீ என் பிரென்ட விட்டு வர சொல்ல நீ யாரு நா வர மாட்டேன் ..போடா .. டேய் ஸ்ரீ இங்க பாருடா என்ன.. இவ யாருடா என்ன வெளிய போக சொல்ல … நீ எந்திரி இவன்ட சொல்லு அவ என் பிரெண்ட் அவன் இங்கதா இருப்பான் எங்கேயும்ம் போக மாட்டான் சொல்லுடா… சொல்லு… அவன் அவனை போட்டு உளுக்க… உள்ள வந்த நர்ஸ்…
சார் சார் என்ன பண்ணிட்டு இருக்கீங்க… எழுந்திரீங்க ஃபர்ஸ்ட் வெளிய போங்க… பேசண்ட்ட டிஸ்டப் பண்ணாதீங்க அப்படீன்னு சொல்லிட்டே அந்த நர்ஸ் அவன வெளிய இழுத்துட்டு போக
அங்க டிரெய்னிங் கோர்ட் போட்டு அங்க ஒடி வந்தா வேதா…வேதா மெடிகல் ஸ்டூடண்ட் தேர்டு இயர்.படிசிட்டிருக்கா.. அவதா அங்க வந்து…
சிஸ்டர் சிஸ்டர் விடுங்க அவர்கிட்ட நா பேசிக்குறே…
எழில் அவருக்கு இப்போதான் டிரீர்மெண்ட் முடிஞ்சி இருக்கு அவர டிஸ்டப் பன்ன வேணாம் ஹாஃப் அண் ஹவர்ல கண்ணு முளிசுடுவாரு.. பிளீஸ் அது வர கொஞ்சம் வெளிய வெய்ட் பண்ணுங்க அப்படீன்னு சொல்ல வெளியே சென்றான் எழில்…
வெளியில் வந்து நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தவன் அப்பொழுதுதான் தனது அருகில் ராஜ் நிற்பதை உணர்ந்தான்…
நீங்க…
நா ராஜ்.. நீங்க கல்யாணம் பண்ணிக்க போர பொண்ணு…. சாரி சாரி நீங்க கல்யாணம் பண்ணிகிறதா இருந்த தென்றல் அண்ணன் நா…
அவன் பேச்சின் அர்த்தம் உணர்ந்த எழில்… ஒரு வேளை இவருக்கு நா கல்யானத்த நிறுத்த டிரான்ஸ்பர் வாங்கின விஷயம் தெரிஞ்சிருக்குமோ கண்டிப்பா அதான் அவரு இப்படி பேசுறாரு….. சாரி சாரி மிஸ்டர் ராஜ்… நீங்க கவல பட வேண்டாம் இந்த கல்யாணம் கண்டிப்… அவன் பேசும் முன் அங்க வந்த வேதா…
எழில் அவரு கண்ணு முளிசுட்டாரு… நீங்க போய் அவங்கள பாக்கலாம்…
உள்ள போன..எழில்
ஸ்ரீ ரொம்ப வலிகுதா… ஏண்டா ஒழுங்கா வண்டி ஓட்ட தெரியாதா…. இங்க பாரு எவ்ளோ காயம்
ஸ்ரீ பதில் எதும் பேசாமல் இருந்தான்.. அவன் முகம் கூட பார்க்கவில்லை
டேய் என்ன மச்சா என் முகத்த கூட பாக்க உனக்கு பிடிக்கலியா… நீ பேசாம இருக்க உனக்காக நா என்ன பண்ணிருக்கேன் தெரியுமா
நீ என்ன பண்ணிருக்க.. நீ ஒன்னு பண்ண வேணாம் முத இங்க இருந்து கிளம்பு
டேய் எண்ட பேசு ஸ்ரீ… என்ன பாரு..வ்நா இந்த கல்யாணத்துக்கு மனப்பூர்வமா ஒத்துக்குறேண்டா…
சாமி நீங்க ஆல்ரெடி ஒத்துகிட்டதே போது.. இனிமேலும் நா எதயும் நம்பி ஏமாந்து போக தயாரா இல்ல..
நம்புடா நிஜமா .. நீ நாம்பலீனா இந்த மெயில் பாரு…
மச்சா..😍😍😊
ஆமா மச்சா.. இப்போதா ஐ ஜி வீட்டுக்கு போய் டிரான்ஸ்ஃபர் கேன்சல் பன்ன சொல்லி பேசினேன்.. பட் அங்க எனக்கு அசைன் பண்ணி இருக்கது ரொம்ப இம்பார்தன்ட் கேஸ் சோ கேன்சல் பன்ன முடியாது பட் டூ வீக் கழிச்சு ஜாயின் பண்ணி ஜார்ஜ் எடுத்துக்க சொல்லி இருக்காங்க… ஓகேவா ..இப்போ நம்புறியா..எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்….
அவனை அடி பட்ட தன் இரு கரங்களால் ஆர தழுவி கொண்டான் ஸ்ரீ…
என்ன ஸ்ரீ மச்சா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா… அப்படீன்னு கேட்டுகிட்டே ராஜ் உள்ள வர
ஸ்ரீ சிரிப்பால் ஆம் என்பது போல் பதில் சொல்ல…
வேதா தான் இருக்கும் இடம் உணராமல் துள்ளி குதித்து..ஸ்ரீ அருகில் வந்து அவன் கன்னத்தை கிள்ளி சூப்பர் ஸ்ரீ எப்படியோ மாமாவை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வச்சிட்டீங்க…
அவள் ஸ்ரீ கன்னத்தை கில்லியாதிலே குழம்பி போன எழில்…வேதா தன்னை மாமா என்று சொன்னதும்… அதிர்ந்து போன எழில் …மச்சா பொண்ணு யாருடா???😲😲😢😢
மூவரும் சிரித்து கொண்டே….😅😅😅😅😀😆😀🤪 மாட்டிகிட்ட பங்கு, நீ யாற பொன்னுனு நினச்சு கேக்குறியோ அவதான்டா பொண்ணு
வேதா தென்றல் ரெடியா…மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் மஹால் வந்துட்டாங்க…அவ என்னடி பண்றா…அங்க பாரு அப்பா டென்சன்ல 10 B.P மாத்திரை சாப்புட்டாரு…
அய்யோ அம்மா எதுக்குமா இப்படி கத்துற…
ஹே உமா இந்த பின் மாட்டு நா வந்துடுரே எம்மா எதுக்கு இப்போ இவளோ அவசரம் உடனே போய்ட்டா பொண்ணு வீட்டு கெத்து போய்டும் கொஞ்ச லேட்டா போலா… அப்பதான் கெத்த மெயின்டெய்ன் பண்ண முடியும்.
ஹே வேதா…உனக்கு ஃபோன் என உமா கத்த…
ஹா சொல்லுங்க ஸ்ரீ
வேதா நாங்க மஹால் வந்துட்டோம். நீங்க வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.
இன்னும் ஒரு டூ ஹார்ஸ்ல வந்திடுவோம் ஸ்ரீ…
இன்னும் ரெண்டு மணி நேரமா அம்மா தாயே.. இவன் எந்த நேரம் என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியாது… இவன கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வைக்கவே எவ்ளோ டிராமா பன்ன வேண்டியதா போச்சு..இவ மனசு மாறினாலும் மாறிடுவான் அப்படீண்ணுதான 5 டேஸ் கலயானத்த 2 டேஸ்னு மாத்தி வச்சிருக்கது…(அட ஆமாங்க வேதா தன்னை மாமா என்று சொன்னதும்… அதிர்ந்து போன எழில் …மச்சா பொண்ணு யாருடா?
😲😲😢😢 அப்படீன்னு கேட்டு சூறாவளி தான் தென்றல்..அந்த தென்றலே கல்யாணப் பொண்ணு அப்படீன்னு சொன்னதும்…அவன் ஸ்ரீய பார்த்த பார்வை… அத வச்சே கெஸ் பண்ணிட்டான்….இவ எப்படியு அடுத்து கல்யாணத்த நிறுத்தினாலும் நிருத்திடுவான் அப்படீணுதான் எங்கேஞ்மென்ட் ஃபர்ஸ்ட் டே மேரேஜ் செகண்ட் டே அப்படீன்னு எல்லாத்தையும் மாத்தி வச்சுட்டாங்க😅)என்ன வேதா நா சொல்ரது நியாபகம் இருக்கா…
ஹா இருக்கு ஸ்ரீ
இருக்குல அப்போ இப்போ என்ன பன்றீனா எல்லாரையும் இங்க மஹால்ல இன்னும் முக்கால் மணி நேரத்துக்குள் எல்லாரையும் ஆஜர் ஆக வைக்குற… ஆமா வேதா தென்றல் கிட்ட எழில் யாருன்னு சொல்ல சொன்னேனே சொல்லிட்டியா….
நா….நா…இல்ல ஸ்ரீ சொல்லல…
என்னாது சொல்லியா…. உடனே கிளம்பி வாங்க மஹாலுக்கு எல்லாரும்
எல்லாரையும் அரட்டி மிரட்டி கிளம்ப வைத்து எல்லாரையும் அறை மணி நேரத்திகுள் மஹாலில் ஆஜர் ஆக்கினாள் வேதா.
நிச்சயதார்த்தில் எழிலை மாப்பிள்ளையாக பார்த்த தென்றல் அதிர்ந்து போனாள்.
எழில் தென்றல் வருவார்கள்