அத்தியாயம் 13
அந்த இரவு நேரத்தில் பக்கத்து டவுனில் இருந்து வரவழைக்கப்பட்ட அந்த கால் டாக்ஸியில் விக்ரமும் அஞ்சலியும் ஏறி உட்கார்ந்தனர். முன் சீட்டில் மதியும் ஏறிக்கொண்டான். அவர்களுடைய பெட்டி படுக்குகள் எல்லாம் பின்னால் எடுக்கப்பட்டு இருக்க, அந்த ஊரை விட்டு அந்தக் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.
அஞ்சலி தான், இவ்வளவு நாட்கள் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடி வாழ்ந்த அந்த ஊரை விட்டு பிரியும் பொழுது மனம் மிகவும் கனமாக இருப்பதாக உணர்ந்தாள். ‘அம்மா நான் இந்த ஊரை விட்டு போறேன் மா. நீ என்னை தனியா விட்டுட்டு சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்ட. ஆனா என்னால போக முடியலம்மா.’ என்று வானில் பொன்னிற தட்டு போல மின்னிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்து மனதிற்குள் பேசினாள். மதி நண்பனையும் அவளுடைய புதிய மனைவியையும் திரும்பி பார்த்தான். அவர்கள் இருவரும் வானத்தை வெரித்தபடி ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி உட்கார்ந்திருக்க அவனுடைய கண்களை தூக்கம் அழுத்தியது. “டேய் விக்ரம் நான் தூங்க போறேன் நீங்களும் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுங்க.” என்று சொல்லிவிட்டு பின் இருக்கையில் சரிந்து மெதுவாக தூங்கவும் ஆரம்பித்தான்.
டிரைவர் ரோட்டை பார்த்து கவனமாக வாகனம் செலுத்திக் கொண்டிருக்க, அஞ்சலிக்கு மிக நீண்ட நேரம் கழித்து பசி உணர்வு தோன்றியது. அவள் மெதுவாக திரும்பி விக்ரமை பார்த்தாள். அவன் வானத்தில் ஒளி வீசிக்கொண்டிருந்த நிலவை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்தபடி இருந்தான். “டாக்டர்!” என்று மிக மென்மையான குரலில் அஞ்சலி அழைக்கவும், அவன் சற்று என்று அஞ்சலியின் பக்கம் திரும்பினான்.
அவள் முகத்தில் பசி அதிகம் இருப்பதை விக்ரமால் பார்வையினாலே புரிந்து கொள்ள முடிந்தது.”டிரைவர் பக்கத்துல எதாவது ஹோட்டல் வந்த நிறுத்துங்க.” என்றான். அஞ்சலியின் கண்களில் இப்பொழுது கண்ணீர் அருவி போல கொட்ட ஆரம்பித்தது.
விக்ரம் மெதுவாக அவளுடைய விரலின் நுனியை தீண்டி நான் இருக்கிறேன் என்பது போல கண்ணசைக்கவும், அவளுடைய கண்ணீர் இன்னும் அதிகமானது. அவள் மௌனமாக உதட்டை கடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். ஏதோ சொல்லி அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று விக்ரமின் மனம் தவித்தாலும் அவனுடைய டாக்டர் மூளை, ‘பாவம் அந்த பொண்ணு காலையிலிருந்து அம்மா செத்ததுக்கு கூட உட்கார்ந்து மன ஆறுதலுக்கு நாலு வார்த்தை புலம்பி அழ கூட அவகாசம் இல்லாமல் போயிடுச்சு. அடுத்தடுத்து வந்த பிரச்சனை திடீர்னு நான் வேற அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி யாருக்கும் தெரியாம தாலி வேற கட்டிட்டேன். அவளுடைய மனசு எப்படி இருக்கோ அவ அழறது தான் நல்லது. மனசுக்குள்ளேயே அழுத்தி வச்சிருந்தா அவளால் அந்த பிரசார தாங்க முடியாது. பாவம் அதிகப்பட்சம் போனா அவளுக்கு 18, 19 வயசு தானே இருக்கும். இந்த சின்ன வயசுல இவளுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை!’ என்று அவன் மனதிற்குள் மனைவி மீது கரிசனத்தோடு யோசித்தான்.
ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் என்று நிற்கவும், மதி உறக்கம் களைந்து எழுந்தான்.”என்ன ஆச்சு?” என்று நண்பனை திரும்பிப் பார்த்து மெதுவாக கேட்டான். “காலையில இருந்து நான் சரியா சாப்பிடல பசிக்க ஆரம்பிச்சது அதான் டிரைவரை ஹோட்டலில் நிறுத்த சொன்னேன். உனக்கு பசிக்குதுன்னா வா நம்ம மூணு பேரும் சாப்பிட்டு கண்டினியூ பண்ணலாம்.” என்று சொன்ன விக்ரம் காரில் இருந்து கீழே இறங்கவும், அஞ்சலியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கீழே இறங்கினாள். “அஞ்சலி!” என்று மெதுவான குரலில் அழைத்த விக்ரம் அவளை பெண்கள் கழிவறைக்கு அழைத்து சென்று உள்ளே அனுப்பி விட்டு கொஞ்சம் தூரம் விலகி நின்று அவள் வரும் வரை காத்திருந்தான். கழிவறைக்குள் சென்ற அஞ்சலியின் மேலும் சில நிமிடங்கள் எடுத்து அழுதாள். பிறகு முகம் கழுவி தன்னுடைய மனதையும் உடலையும் புத்துணர்வோடு வைத்துக் கொள்ள நினைத்தாள். ஆனால், அம்மாவின் முகம் நினைவுக்கு வர மீண்டும் உடைந்து அழுதாள். ‘என்னுடைய கல்யாணம் இப்படி நடக்கணும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. டாக்டர் வீட்டுல்ல என்ன எப்படி ஏத்துக்க போறாங்கன்னு தெரியல.டாக்டருக்கு என்ன புடிச்சு தான் கல்யாணம் பண்ணாரா அவருடைய படிப்புக்கும் அந்தஸ்துக்கும் நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவன்னு எனக்கே தெரியும். மதி அண்ணா சொன்ன மாதிரி அவர் என்ன ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்தில சேர்த்து விட்டுட்டா நல்லா இருக்கும். நான் படிச்ச படிப்புக்கு எங்கேயாவது சின்னதா எதாவது வேலை தேடிக்கிட்டு நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போயிடுவேன். ஆனா இத போய் அவர்கிட்ட எப்படி சொல்றது.சொன்னா அவர் என்ன எப்படி புரிஞ்சு பாரு?!’ என்ற கேள்வியும் குழப்பமாக அவள் வெளியே வந்தாள்.
விக்ரம் அவளை அழைத்து போய் ஒரு உணவு மேசையில் உட்கார வைத்துவிட்டு, “நீ வெயிட் பண்ணு நான் வந்துடுறேன்.” என்று ஆண்களின் கழிவறையை நோக்கி நடக்க மதியும் அவன் பின்னால் தொற்றிக் கொண்டு நடந்தான்.
“டேய் விக்ரம் உன் மைண்ட்ல என்ன தான் டா வச்சிருக்க.!” என்று மதி மெல்லிய குரலில் அவனுடைய தோளை சுரண்டி கேட்கவும் விக்ரமனை திரும்பி பார்த்து விட்டு அமைதியாக நடந்தான்.
“என்ன டா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியா போயிட்டு இருக்க?”
“மைண்ட்ல ஒரு ஐடியாவும் இல்ல இருந்தா தானே உன்கிட்ட ஏதாவது சொல்றதுக்கு?”
“டேய் அந்த பொண்ண நெஜமாவே நீ கல்யாணம் பண்ணிக்கிட்டயா?”
“ஆமாண்டா அதுல உனக்கு என்ன சந்தேகம்?”
“இல்லடா அந்த குடிகாரன் கிட்ட இருந்து அவளை காப்பாத்துறத்துகாக நீ ஊருக்கு முன்னாடி ஏதோ டிராமா பண்றதா நான் நினைச்சேன்.” என்று மதி தயக்கத்தோடு நிறுத்தவும், விக்ரம் நிதானத்தோடு அவனைப் பார்த்து, “அதான் உன் கிட்ட நான் வீடியோவே காமிச்சேன் உனக்கு அதை பார்த்ததுக்கு அப்புறமா நம்பிக்கை வரல.” என்று அழுத்தமாக கேட்டான்.
“சரிடா அந்த பொண்ணுக்கும் உனக்கும் செட் ஆகும்னு எனக்கு தோணல இப்ப என்ன அவளுக்கு உனக்கு கல்யாணம் ஆனது நமக்கு மட்டும் தானே தெரியும்.
நீ பேசாம அந்த பொண்ண?” என்று மதி முடிப்பதற்கு முன்னால், “மதி நீ என்னுடைய குளோஸ் ஃப்ரெண்டா இருக்கலாம் ஆனா உனக்கும் ஒரு லிமிட் இருக்கு.
நீ அந்த லிமிட்ட கிராஸ் பண்ணாம இருந்தா நம்ம பிரண்ட்ஷிப்புக்கு எந்த பிரச்சினையும் வராது.” என்று முகத்தில் அறைந்தார் போல் சொன்ன விக்ரம் வேகமாக கழிவறைக்குள் சென்று விட்டான்.
‘இவன் என்ன ரூட்ல போயிட்டு இருக்கான்னு எனக்கு ஒண்ணுமே புரியல நான் கேட்ட இதே கேள்விய நாளைக்கு இவனுடைய அப்பா அம்மா கேட்க மாட்டாங்களா? அந்த பொண்ணுக்கே தெரியுமே அவளே நான் உன்னை எங்கேயாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விடுறேன் வேற ஏதாவது வேலை வாங்கித் தரேன்னு சொன்னப்போ அதை சரின்னு தானே சொன்னா. இவன் என்ன இப்படி அந்த பொண்ணு புடிச்சி தொங்கிகிட்டு இருக்கான். இவனுக்கு என்ன ஆச்சு ஒருவேளை வந்தனா பிரேக் அப் பண்ணதுனால அவ முன்னாடி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு நான் கெத்தா வாழறேன்னு ஏதாவது சபதம் போட்டு இருக்கானா?’ என்று அவன் வெளியே நின்று பலவாறு யோசித்து கொண்டு இருக்க, விக்ரம் அவனை கண்டுகொள்ளாமல் நேராக அஞ்சலி உட்கார்ந்து இருந்த மேஜைக்கு போனான்.
“அஞ்சலி சாப்பாட ஏதாவது ஆர்டர் பண்ணியா?” என்று கேட்டபடி அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். அஞ்சலிக்கு அவன் அருகே உட்கார கூற பயமாக இருந்தது. படபடக்கும் மனதோடு ஈரமான விழிகளோடு அஞ்சலி மெதுவாக அவனை பார்த்தாள். அந்த நேரத்துக்கு சரியாக உணவு ஆர்டர் எடுக்க ஒரு நபர் வந்து அந்த நிற்க விக்ரம் தனக்கும் அஞ்சலிக்கும் தேவைப்படும் சாப்பாட்டை ஆர்டர் செய்தான் பிறகு மதியும் வந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள அவர்கள் மூவர் அமைதியா சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி உட்கார்ந்தனர்.
கார் இப்பொழுது சென்னை நோக்கி வேகம் எடுத்து ஓட தொடங்கியது. அழுது அழுது களைத்து போயிருந்த அஞ்சலியின் கண்கள் அவளை அறியாமல் மெல்ல உறங்க ஆரம்பித்தன. விக்ரமுக்கு தான் உறக்கம் வரவில்லை. மதி டிரைவரோடு ஏதேதோ பேசி மொக்கை போட்டு விட்டு பின்னிரவில் உறங்க ஆரம்பித்தான். விக்ரம் வெளியே காய்ந்து கொண்டிருந்த அந்த அழகான நிலாவை பார்த்தபடியே அமைதியாக பயணம் செய்தான்.
To be continued..
by மகிழம் பூ