அத்தியாயம் 5
விக்ரமின் கோவமான முகத்தை பார்த்த முரளிதரன், “விக்ரம் அந்த பேமெண்ட் அப்படியே எடுத்துட்டு போயி அந்த ஆள் கிட்ட குடுத்து அந்த பொண்ணோட கடனை தீர்க்க போறியா?” என்றார்.
விக்ரம் மெதுவாக ஆமாம் என்று தலையசைத்தான். ஆனால், அவனுக்குள் தான் செய்வது சரியா தவறா என்ற போராட்டம் போய்க் கொண்டிருந்தது.
“டேய் விக்ரம் என்னடா திடீர்னு ஆக்ஷன் ஹீரோ மாதிரி மாறிட்ட?” என்று மதி கிண்டலோடு கேட்டுவிட்டு அவன் தோளில் தட்டவும், விக்ரம் கோபத்தோடு நண்பனை திரும்பிப் பார்த்தான்.
“ஏன்டா நான் என்ன பண்ண என்ன எதுக்கு முறைக்கிற?” என்று மதி பின்னால் நகர்ந்து கொள்ளவும், “டாக்டர் என்னோட பேமெண்ட் எனக்கு கொஞ்சம் முன்கூட்டியே குடுத்துருங்க.” என்று அழுத்தமான குரலில் விக்ரம் பேசினான். டாக்டர் முரளிதரனுக்கு அதற்கு மேல் அதைப் பற்றி அவனிடம் பேச விருப்பமில்லை. எனவே வேகமாக சென்று அவனுக்கான பேமெண்டை கேஷ் ஆகவே எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.
“தேங்க்யூ டாக்டர் இந்த ஹெல்ப் நான் மறக்கவே மாட்டேன்.” என்று நன்றி நிறைந்த குரலில் சொல்லி விட்டு விக்ரம் வேகமாக அஞ்சலி பக்கம் வந்தான்.
அஞ்சலிக்கு அங்கு நடப்பது எல்லாமே புதிராகவும் அவமானமாகவும் இருந்தது. அவளால் சுற்றி நிற்கும் மக்களை நிமிர்ந்து கூட இப்பொழுது பார்க்க முடியவில்லை.
‘என்னோட குடும்பம் ஒன்னும் பெரிய பணக்கார குடும்பம் இல்ல நாங்க ஒரு சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையை கூட வாழல என்னால பத்தாவதுக்கு மேல படிக்கவும் முடியல. நான் நல்லா படிச்சு கூட ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து கூட, என்னால படிக்க முடியாம போயிடுச்சு. காரணம் எங்க அப்பாவுடைய குடி, எங்க அப்பா குடிச்சு குடிச்சு அவர் உடம்ப கெடுத்துகிட்டது மட்டும் இல்லாம எங்க அம்மாவுடைய வாழ்க்கையும் கெடுத்தாரு. என் படிப்பையும் கெடுத்தாரு. கடசில இப்படி என்ன அனாதையா நிக்க வச்சுட்டு போயிட்டாரு. இப்போ எனக்கு ஆறுதல் சொல்ல கூட இந்த ஊர்ல யாரும் முன் வரல. எல்லாம் என் தலையெழுத்து இனிமே இந்த ஊர்ல இருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்ல. எப்படியாவது இந்த ஊரை விட்டு போயிடனும். ஆனா, எங்க போறது எனக்கு யார தெரியும்?
யார் எனக்கு பாதுகாப்பா தங்க ஒரு இடம் கொடுப்பாங்க?
நான் மாடா உழைச்சாலும் என்னுடைய மானத்துக்கு பாதுகாப்பு கிடைக்குமா?
யார் எனக்கு காலம் ஃபுல்லா துணையா நிப்பாங்க.’ என்று தன்னைப் பற்றிய கவலை ஒரு புறமும், ‘ஐயோ அம்மா நீ வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் அனுபவிக்கலையே?
நான் எப்படியாவது வேலை பார்த்து உனக்கு ஒரு செயின் வாங்கி போடலாம்னு நினைச்சேன். நல்ல புடவையா ஒன்னு எடுத்து கொடுக்கலாம்னு நினைச்ச அதுக்கு கூட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காம இப்படி அவசரப்பட்டுட்டியே?’ என்று அம்மாவின் இறப்பை நினைத்து கதறல் ஒருபுறம் என்று அஞ்சலி தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
“உன் பேர் என்ன சொன்ன?” என்று அவளை பார்த்து மெதுவான குரலில் கேட்ட விக்ரம் தட்டு தடுமாறி எழுந்து நின்று இருந்த அந்த புல்லட் காரனிடம் பார்வையை கோபமாக வீசினான். கையில் பணத்தைப் பார்த்ததும் அந்த புல்லட் காரனின் ஆவேசமும் கோபமும் மறைந்து போனது. அவன் லேசாக பல்லை காட்டி தலையை சொரிந்தான்.
“இவ வாங்குன காசு எவ்வளவுனு எனக்கு தெரியாது ஆனா இதுல 350,000 இருக்கு வட்டி அது இதுன்னு கேட்டுட்டு மறுபடியும் இந்த பொண்ணு வீட்டு பக்கம் போய் பிரச்சனை பண்ண நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” என்று விக்ரம் கடினமான குரலில் எச்சரிக்கவும் அந்த புல்லட் காரன் காசை வாங்கிக்கொண்டு தன்னுடைய புல்லட்டை பார்த்து போனான்.
அஞ்சலிக்கு அங்கு நடப்பதை நிஜமாகவே இப்பொழுது நம்பவே முடியவில்லை. அவள் அதிர்ச்சியோடு டாக்டரையும் அந்த புல்லட் காரனையும் மாறி மாறி பார்த்தாள். சில நிமிடங்கள் அவளால் பேசவே முடியவில்லை. கண்களில் இப்பொழுது ஆனந்த கண்ணீர் வழிவதாக அவள் நினைத்தாள். மெதுவாக தன் நிலையை சமப்படுத்தி கொண்டு விக்ரம் அருகில் சென்றாள். “ரொம்ப நன்றி சார், நீங்க இந்த ஊருக்கு வந்து ரெண்டு நாள் கூட முழுசா ஆகல எனக்காக இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க.” என்று அவள் இரண்டு கரங்களையும் குவித்துவிட்டு அப்படியே அவன் காலில் விழப்போனாள்.
விக்ரம் பதறி அடித்து பின்னால் நகர்ந்தான். அங்கு சுற்றி நின்றிருந்த ஊர் மக்கள் கைதட்டி அவனை பாராட்டினர். விக்ரமுக்கு கூச்சமாக இருந்தது. அவன் எதுவும் சொல்லாமல் கேம்பை பார்த்து நடக்க, அஞ்சலியின் குடிகார மாமன், “ஏண்டி இவளே அந்த புல்லட் காரன் கேட்ட மாதிரி இவனை நீ செட்டப் பண்ணிட்டியா?” என்று நாராசமான குரலில் கேட்பது விக்ரமுக்கு கேட்டது. விக்ரமின் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அவன் மெதுவாக நின்று திரும்பி பார்த்தான். அஞ்சலி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, “தாய்மாமன் வயசுல பெரியவன்னு எதையும் பார்க்க மாட்டேன். நிர்கதியா நிக்கிற அக்கா பொண்ணுக்கு நீ உதவி செய்யாட்டியும் பரவாயில்ல. இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு திரியாத.” என்று கடுமையான குரலில் அஞ்சலி எச்சரிக்கை செய்தாள். அஞ்சலி உடைய தைரியமும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை இழக்க அவள் விரும்பாமல் நின்று போராடும் குணமும் விக்ரமை சற்று என்று ஈர்த்தது.
“என்னடி பூச்சி காட்டுறியா? இந்த பூச்சி காட்டுற வேலை எல்லாம் நம்ம கிட்ட வேண்டாம். உண்மைய ஒத்துக்கோ அவனும் நீயும் செட்டப் ஆகிட்டீங்க தானே?” என்று மீண்டும் அவளுடைய தாய் மாமன் கையில் வைத்திருந்த கோட்டரை முழுவதும் காலி செய்த மிதப்போடு பேசினான்.
அஞ்சலி அவனை அரைவதற்குள் விக்ரம் நேராக போய் அவனுடைய சட்டையை பிடித்து இழுத்து அவனுடைய கன்னத்தில் பளார் என்று அரைவிட்டு பின்னே தள்ளி விட்டான். ஏற்கனவே குடிபோதையில் தள்ளாடும் நிலையில் இருந்த அவளுடைய தாய் மாமன் இப்பொழுது மண்ணில் விழுந்தான். அவனுடைய கை கால்களில் அங்கிருந்த கல்லில் மோதி ரத்தம் வந்தது.
“டேய் என்னையே அடிச்சிட்டியா? நான் யாருன்னு தெரியுமா? ஊருக்குள்ள நான் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியுமா?” என்று எழுந்து நின்று டான்ஸ் ஆடிய குடிகாரன், விக்ரமை நோக்கி பாய, அஞ்சலி அவனுடைய காலை இடரில் கீழே விழ வைத்தாள்.
ஊர் ஜனம் இப்பொழுது கை கொட்டி சிரித்து அவனைப் கேலி செய்தது. அவ்வளவு நேரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிழவி ஒருத்திய முன்னாள் வந்து,”தம்பி நீங்க யாரோ எவரோ எனக்கு தெரியாது வயசு புள்ள அது ஒத்தைல இருந்தா இவன மாதிரி குடிகாரனுங்க வீடு புகுந்து கைய புடிச்சு இழுபானுங்க. அவளுக்கு பாதுகாப்பே இல்ல நீங்க தான் அவளுக்கு ஏதாவது ஒரு நல்ல வழி பண்ணனும்!” என்று சொல்லவும் விக்ரம்க்கு இது என்னடா புது தலைவலி என்பது போல் இருந்தது.
அஞ்சலி உடைய தாய் மாமன் எழுந்து நின்று, “ஏண்டா ரெண்டு பேரும் செட் அப் ஆகிட்டீங்களா?
ஊர்ல நாலு பேரு உங்கள கேள்வி கேப்பாங்கன்னு பயந்துகிட்டு என்ன போட்டு அடிக்கிறியா?
என்னை எல்லாம் ஊர்ல ஒரு பையன் ஒன்னும் சொல்ல மாட்டான் ஏன்னா எனக்கு அவளை கட்டிக்கிட உரிமை இருக்கு.” என்று குளறி குளறி பேசினான்.
விக்ரம்க்கு ‘ஏன்டா இந்த பிரச்சனைகளை தலையிட்டோம்.’ என்று தோன்றியது.
“என்னடா உரிமை இருக்கு என்ன உரிமை இருக்கு அவ இவ்வளவு நேரம் ஊர் முன்னாடி அவமானப்பட்டு நிற்கும் போது நீ எங்கடா போன இங்கதான இருந்த அந்த புல்லட்டுகாரன் காசு கேட்டு அவளை எப்படியெல்லாம் பேசி கேவலப் படுத்தினான்.
அந்த தம்பி தானே காசு கொடுத்து உதவி செஞ்சாரு.” என்று கிழவி பலவீனமான குரலில் அஞ்சலிக்கு வக்காலத்து வாங்கி பேசியது.
“அவன் கடன்காரன் ஓடிப் போயிட்டான் நான் கடன்காரன் இல்ல சொந்தக்காரன்.ஏய் கிழவி இந்த வெட்டிப் பேச்செல்லாம் பேசாத அவளை எனக்கு கட்டி வைக்க முடியுமா முடியாதா?” என்று குடிகாரன் மீண்டும் போதையில் வேஷ்டி நழுவி விழுவது கூட தெரியாமல் பேசினான். உள்ளே இருக்கும் அன்டர்வேர் தெரிய அவன் ஆடிய ஆட்டம் ஊரை சிரிக்க வைத்தது.
“உயிரே போனாலும் சரி என்னால இந்த குடிகாரனை கட்டிக்க முடியாது. அதுக்கு பதில் எல்லாரும சேர்ந்து என்னை வீட்டோட வச்சி கொளுத்திடுங்க. நானும் எங்க அம்மா கூடயே செத்துப் போறேன்.” என்று தன் தாயின் பிணத்தை பார்த்து அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
‘என்ன ஊர் இது என்ன ஜனங்க இவங்க ஒரு அம்மா செத்து போயிருக்காங்க அவங்க பெத்த பொண்ணு இப்படின்னு நிர்கதியா நிக்குற ஊர்காரங்க எல்லாம் சேர்ந்து இந்த குடிகாரன அடிச்சு துரத்தி விட்டுட்டு அந்த அம்மாவுடைய உடம்புக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்கா செய்றங்களா பாரு.’ என்று விக்ரமின் மனதிற்குள் எரிச்சல் தோன்ற அவன் அஞ்சலியின் கையை பற்றி தன் பக்கம் அவளை திருப்பினான்.
“இங்க பாரு நீ சும்மா இந்த ஊரையோ இல்ல இந்த குடிகாரனையோ நினைச்சு அழாதே உங்க அம்மாவ வீட்டுக்கு எடுத்துட்டு போ உங்களுடைய குடும்ப வழக்கப்படி என்னென்ன செய்யணும்னு நினைக்கிறியோ எல்லாத்தையும் செஞ்சு முடி அதுக்கு அப்புறம் நடக்க வேண்டியதை பார்த்துக்கலாம்.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பர்ஸ்சில் இருந்த கொஞ்சம் பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தான்.
அவளுக்கு இப்பொழுது மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது. “என்ன பாக்குற கிளம்பு!” என்று அவன் அவளை துரிதப்படுத்தவும் அவள் தன்னுடைய அம்மாவின் பிணத்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டை பார்த்து கிளம்பினாள்.
விக்ரமிற்கு ஏனோ அன்று அதன் பிறகு மெடிக்கல் கேப்பில் நோயாளிகளை பார்க்க மனமே வரவில்லை. அவன் நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தான். அவனுடைய தவிப்பு முரளிதரனை முகம் சுளிக்க வைத்தது.
To be continued….
By மகிழம் பூ