💞 பியார் பிரேமா காதல் கிஃப்ட் 💞
“ஆஃப்டர் மேரேஜ் கல்யாணம் ஆகி பர்ஸ்ட் டைம் எனக்கு வரப்போற பர்த்டே… மாமா எனக்காக என்னெல்லாம் சர்ப்ரைஸ் பண்ண போரான்னு சுத்தமா தெரியல.. அது எல்லாத்தையும் நினைச்சு பார்க்கிறப்பவே ரொம்ப ரொம்ப எக்சைட்மெண்ட்டீங்கா இருக்குது” அப்படின்னு மனசுக்குள்ள பல கனவோட தன்னோட நெக்ஸ்ட் டே பர்த்டேக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா அம்மு..
எங்களுடைய எங்கேஜ்மென்ட் அப்போ மாமாவுடைய பிறந்தநாள் வந்துச்சு ஆனா அப்போ நாங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருந்ததுனால அதை அவ்வளவு கிராண்டா செலப்ரேட் பண்ணவே முடியல.. just phone call wish மட்டும்தான்…
ஆனா இப்போ என்னோட பர்த்டேக்கு நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல ஒண்ணா இருக்க போறோம்.. அத நினைச்சாலே ஜாலியா இருக்குது..
அதுல இன்னும் அவன் எனக்காக என்னெல்லாம் சர்ப்ரைஸ் பண்ண போறான் என்னென்ன பிளான்ஸ் வச்சிருக்கான் அப்படின்றதெல்லாம் நினைக்கிறப்போ ஐயோ ஒரே குசியா இருக்கே” அப்படின்னு ரொம்ப ரொம்ப குசியாவே வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுட்டு இருந்தா அம்மு..
நைட்டு 12 மணிக்கு வரப்போற அவளோட பர்த்டேக்காக சாயங்காலம் நாலு மணியிலருந்து ரெடியாக ஆரம்பிச்சிட்டா…..
நைட்டு அவன் 12 மணிக்கு அவளுக்கு விஷ் பண்ணி சர்ப்ரைஸ் பண்ணதுக்கு அப்புறம் அவளும் அவனுக்காக ஒரு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு ரெடியா இருந்தா
அதுக்கு எப்படி எல்லாம் சூப்பரா ப்ரிபர் ஆக முடியுமா அது எல்லாத்துக்கும் ஏத்த மாதிரியே அழகா ப்ரிப்பேரா இருந்தா அம்மு..
வழக்கம்போல ஆபீஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த மணியோட முகம் ரொம்பவே டல்லா இருந்துச்சு..
என்னதான் அவனுக்காக அவ ரொம்ப ஸ்பெஷலா கிளம்பி இருந்தாலும் அவன பார்த்ததுமே அவ்வளவு நேரம் ஃபிரெஷ்ஷா இருந்த அம்முவோட முகம் இப்போ லைட்டா வாட ஆரம்பிச்சுச்சு..
“மாமா ரொம்ப பாவம்ல படிச்சு முடிச்சுட்டு ஒரு ஸ்கூல்ல வேலை பார்த்துட்டு இருந்தான் ஆனா கொரோனா டைம்ல வேலை இல்லா திண்டாட்டம்ன்ற லிஸ்ட்ல அவனோட பேரும் ஒன்னு.. அவனுக்கு வேலை போயிடுச்சு.. ஆனா என்னோட கம்பல்சன்னால இப்போ எதோ ஒரு இடத்துல வெறும் 7000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போயிட்டு இருக்கா.. நினைச்சு பார்க்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. எப்படி இருந்தவன் இப்ப இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கான் .. எல்லா என்னாலதான் பாரு எவ்வளவு டல்லா இருக்கான்னு..” அப்படின்னு அவளோட மனசு யோசிச்சு அவன நினைச்சு வருத்தப்பட்டாலும் இன்னொரு மனசோ
” இவன் இவ்வளவு dull ஆ இருக்கான்னா அப்ப நான் எதிர்பார்த்த மாதிரி எனக்கு இன்னைக்கு விஷ் பண்ண மாட்டேனா சர்ப்ரைஸ் பண்ண மாட்டானா மறந்திருப்பானா”ன்னு அவளோட இன்னொரு மனசு ஏங்கி வாட ஆரம்பிச்சது
“நாம இப்படி எதையாவது யோசிச்சுட்டே இருந்தோம்னா கண்டிப்பா 12 மணிக்குல்ல நம்ம பர்த்டே வருதோ இல்லையோ நாம பைத்தியம் ஆயிடுவோம் … இங்க பாருடி அம்மு. எத பத்தியும் யோசிக்காத.. என்னதான் நடக்குதுன்னு பாத்துக்கலாம்.. wish பண்ணா அவ எஸ்கேப்பு இல்ல ஒரு வேளை என் birthday வ மறந்து போய் இருந்தான் அவன என்ன பண்றேன்னு மட்டும் பாரு.. straight ஆ நாளைக்கு நாம நம்ம வீட்டுக்கு கிளம்பி போயிடலாம்”ன்னு ஒரு முடிவா இருந்தா அம்மு…
அவனுக்கான சாப்பாட எடுத்து வச்சவ அதுக்கப்புறம் அப்படியே நேரம் போக அம்மு தூங்குறதுக்கு ரூமுக்குள்ள போனா..
வழக்கம் போல மணி ஒரு நோட்டை எடுத்து வந்து உள்ள உட்கார்ந்து கணக்கு பார்க்க ஆரம்பிச்சான்..
“என்ன இவன் வந்து உட்கார்ந்து கணக்கு பார்த்துட்டு இருக்கான்.. நாளைக்கு எனக்கு பிறந்தநாள்தான எனக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்கு வெளியில் உட்கார்ந்து எதுவும் பண்ணல.. ? எப்பவும் போல கணக்கு பாக்குறான்.. அப்போ நெஜமாவே மறந்துட்டானா.. இல்ல இல்ல அப்படி எல்லாம் எதுவும் இருக்காது தேவையில்லாம நாமதான் மனச போட்டு குழப்பிக்கிரோம்…
இந்த மாதிரி எல்லாம் கணக்கு பாக்குற மாதிரி பாவ்லா பண்ணாதானே நம்ம பிறந்தநாள அவன் மறந்துட்டான்னு நினைச்சு நம்ம டென்ஷன் ஆ இருப்போம்… சார் அதைத்தான் expect பண்ணுவாரு போல.. அதா அதுனாலதான்.. sir இப்டி பண்ணுறாரு..”
இந்த மாதிரி அம்முவோட ஒரு பக்க மனசு நினைச்சாலும்
இன்னொரு மனசு
“ஒருவேளை நிஜமாகவே மறந்திருந்தா நான் என்ன பண்றது போச்சு நம்ம பர்த்டே விஷ்ஷும் போச்சு… ஆச ஆசையா எதிர்பார்த்துகிட்டு இருந்த சர்ப்ரைஸும் போச்சு” அப்படின்னு அவ மறுபடியும் ரெண்டு மனசா குழம்பிக்கிட்டு இருக்கிறப்பவே அவள அறியாமலேயே தூங்க ஆரம்பிச்சுட்டா
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த ரூமோட லைட் ஆஃப் ஆனதும் அந்த உணர்ச்சியில லைட்டா கண் முழிச்சு பார்த்தவ
“என்ன time 11.30 ஆயிடுச்சு இப்ப வந்து படுக்குறான்.. அப்ப நிஜமாவே மறந்துட்டானா… ” அப்படின்னு அம்மு யோசிக்கும் போதே அவளுக்கு லைட்டா அழுக வர்றது மாதிரி இருந்துச்சு.. இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில தன்னோட கண்ணீரை துடைச்சுக்கிட்டு தூங்க ஆரம்பிச்சா..
எப்படி தூங்குணான்னு தெரியல அந்த அரை மணி நேரம் தூக்கம் அவளுக்கு ரொம்ப நீளமான தூக்கம் மாதிரி இருந்துச்சு
திடீர்னு ஏதோ ஒரு உணர்ச்சி லைட்டா முழிச்சு பாக்குறப்போ அவன் பக்கத்துல இல்ல வெளியில வேற ஹால்ல லைட் எரியிறது தெரிஞ்சதும்
” ஐ சூப்பர் வெளிய மாமா நம்ம பர்த்டேக்காக தான் அரேஞ்ச் பண்ணிட்டு இருக்கான் போல ஹால்ல லைட் எரிஞ்சிட்டு இருக்கு…என்ன பண்ணலாம் என்ன பண்ண போறான் ஆமா எனக்கு என்ன கிப்ட் வாங்கி இருப்பா கொலுசு , ம்ம்… sharee , செயின் இல்ல போன் வாங்கி இருப்பானா தெரியலையே இருக்கட்டும் இருக்கட்டும் அவன் என்ன பண்ணனுமோ பண்ணட்டும்.. நாமளும் ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துட்டு அப்பறமா ரொம்பவே சர்ப்ரைஸ் ஆனது மாதிரி நடிச்சிடலாம் பாவம் மாமா எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு சர்ப்ரைஸ் பண்ண இருப்பான்…. அதுனால நாம சர்ப்ரைஸ் ஆனது மாதிரி ஃபேஸ வச்சுக்கலாம்” அப்படின்னு ஆசையா நினைச்சுட்டே அவன் வரப்போ தூங்குற மாதிரி ஆக்ட் பண்ணுனா அம்மு
அதே சமயம் ரொம்ப வாடி போன முகத்தோட ஏதோ ஒரு டென்ஷனோட படபடப்பா ரூமுக்குள்ள வந்தான் மணி
” இன்னைக்கு அம்மு ரொம்ப ஆசையா இருந்திருப்பா அவளுக்கு ரொம்ப பெரிய சர்ப்ரைஸா கொடுக்கப் போறேன்ன்னு எதிர்பார்த்துட்டு இருந்திருப்பா ஆனால் நான் இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல அவ முன்னாடி போய் எப்படி நிக்கிறது எனக்கும் எல்லா ஹஸ்பண்ட் மாதிரியும் ஆசைதான் .. அவளுக்கு ரொம்ப பெரிய கேக் வாங்கி அவ எதிர்பாக்காத ஒரு கிஃப்ட்டா வாங்கி சர்ப்ரைஸ்ஸா கொடுத்து அவள சந்தோஷப்படுத்தணும்னு எதிர்பார்த்தேன்.. ஆனா அந்த மாதிரி பண்றதுக்கு மத்த ஹஸ்பண்ட்ஸ்லாம் வாங்குற மாதிரி ஐம்பதாயிரம் நாற்பதாயிரம் சம்பளமா நான் வாங்கிட்டு இருக்கேன் .. கல்யாணத்துக்கு முன்னாடி வந்த சம்பளத்துல இப்ப பாதி கூட என் கைக்கு வரல.. கொரோனா டைம்ல வேலையை விட்டு தூக்கிட்டாங்க இப்ப வெறும் 7000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போயிட்டு இருக்கேன்.. இத வச்சு வீட்டு செலவுக்கே பார்க்க முடியல .. இதுல எப்படி இவளுக்கு சர்ப்ரைஸ் அது இதுன்னு என்னால பண்ண முடியும்.. இதை நான் போய் எப்படி அவகிட்ட ஓப்பனா சொல்றது .. அவ இந்த வீட்டுக்கு வந்து முழுசா ஒரு ரெண்டு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள என்னால உன் பிறந்தநாளுக்கு ஒரு கிப்ட் கூட வாங்கி தர முடியலன்னு சொன்னா அடுத்து அவ இங்க வாழ்றதுக்கு தயங்க மாட்டாளா?” அப்படின்னு ரொம்ப மன குழப்பத்தோடயும்
கவலையோடையும் அவள போய் எழுப்பினான்
ஆனா இங்க அம்மு தன்னுடைய மாமா தனக்கு தரப்போற சர்ப்ரைஷ நெனச்சு ரொம்ப படப்போடயும் சந்தோஷத்தோடயும் காத்துட்டிருந்தா…
அதே சமயம் மணியோ ரொம்ப டென்ஷனா நடுங்கின கையோட அவகிட்ட போயி காதுக்குள்ள “அம்மு குட்டி” அப்படின்னு கூப்பிட்டா
அடுத்த செகண்ட் அம்மாவோட கண்ணு ரெண்டும் மூடினவாக்குலையே பட்டாம்பூச்சி போல படபடக்க ஆரம்பிச்சது..
அதே சமயம் மணி உடைய இதயமோ அம்மு குட்டின்னு சொல்லிக்கிட்டே tension ல படபடன்னு துடிக்க ஆரம்பிச்சது..
அம்மு மனசுக்குள்ள ஒரு எதிர்பார்ப்போட பட படப்பு இருந்தாலும் இங்க நம்ம மணியோட மனசுக்குள்ள டென்ஷனோட படபடப்பு இருந்துச்சு…
எதோ ஒரு குருட்டு தைரியத்தை வர வச்சவன்
” அம்மு குட்டி wish you happy returns of the day டி செல்லம்.. ஐ லவ் யூ டி பொண்டாட்டி.. love you so much” அப்படின்னு சொன்னதுமே இவ்வளவு நேரம் கண்ணை மூடிட்டு இருந்த அம்மு சிரிச்ச முகத்தோட அவனை கட்டி புடிச்சுக்கிட்டா
” தேங்க்ஸ்டா மாமா நீ என் birthday வ மறக்காம நியாபாகம் வச்சு எனக்கு விஷ் பண்ணுவன்னு எதிர்பார்க்கவே இல்ல ” அப்படின்னு எல்லாரும் சொல்ற யூஸ்வலான பொய்ய பிறந்தநாள் அதுவமா சொன்னா.. ஆனாலும் அவளுக்கு நிஜமாவே ரொம்ப happy யா இருந்துச்சு
அடுத்ததா அவ மனசுக்குள்ள ‘ சூப்பர் மாமா நம்ம பர்த்டேவே மறக்கவே இல்லை சூப்பர் சூப்பர்… எனக்கு விஷ் பண்ணிட்டான். அடுத்து நமக்கு என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்கான்ன்னு தெரியலையே சீக்கிரம் அதை எடுத்து காட்டுடா செல்லக்குட்டி ” அப்படின்னு அவ மனசுக்குல்ல நினைச்சுகிட்டு ஆசையா இருக்குறப்போ
தான் வாங்கிட்டு வந்த ஒன்ன எடுத்து அம்முவுக்கு ஊட்டி விட்டா மணி
” இந்தாடி பொண்டாட்டி உனக்கு பிடிச்ச பால்கோவா அப்படின்னு கொடுத்துட்டு கூடவே உனக்கு இந்த குலோப்ஜாமுன்னும் ரொம்ப பிடிக்கும்தானே அப்படின்னு சொன்னா பக்கத்திலேயே அவளுக்காக மல்லி பூவும் ஆசையா காத்திட்டு இருந்துச்சு இதையெல்லாம் பார்த்து அம்முக்கு ஒரு பக்கம் ஒரு விதமான சந்தோஷம் ரொம்ப அதிகமாவே இருந்தாலும் லைட்டா ஏதோ ஒரு ஃபீலிங் அவளை disturb பண்ணிச்சு
அப்போ இதுதான் இவன் எனக்கு கொடுக்கிற சர்ப்ரைஸ் கிப்ட்டா அப்படின்னு நினைச்சு பார்க்க அவளுக்குள்ள ஏதோ ஒரு வலி அந்த வலிய அவ முழுசா ரியலைஸ் பண்றதுக்குள்ள
” சாரிடி பொண்டாட்டி மாமாவோட வேலைய பத்தி உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் இந்த மாதிரி டைம்ல என்னால இதுக்கு மேல” அப்படின்னு அவன் நடுக்கமான கலங்கி போன குரலோட சொல்லிட்டு இருக்குறப்பவே அவன் கண்ணுல இருந்து கண்ணீர் தேங்க ஆரம்பிச்சது..
ஆனால் அத அம்முவால ஒரு செகண்ட் கூட பார்க்க முடியல
அவளுக்கும் உண்மை என்னன்றது புரிய ஆரம்பிச்சது “என் மாமா வேணும்னா பண்ண போறான்.. அவன் situation ன்னாலதான்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியுமே.. நா இங்க வந்ததுலருந்து இப்ப வரைக்கும் வீட்ல இருக்கவங்க என்ன ஆயிரம் பேசி குற சொல்லி இருக்கலாம் but அவன் எப்படி அது எல்லாத்தையும் சமாளிச்சு என்ன எவ்வளவு நல்லா பாத்துக்குறான்.. நான் அவன்கிட்ட இந்த மாதிரி சர்ப்ரைஸ் எல்லாம் சும்மா எல்லார மாதிரியும்.. எதிர்பார்த்தேன்… இது எல்லாருக்கும் காமன்னா இருக்க கூடிய ஒரு ஆசதானே.. மத்தபடி மாமா என் birthdayவ கரெக்ட்டா நியாபகம் வச்சு எனக்கு விஷ் பண்ணதே ரொம்ப சந்தோசம் அதுவே போதும்” அப்படின்னு மனசுக்குள்ள தனக்கு தானே நினைச்சுக்கிட்டவளுக்கு உண்மையாவே அவன் வாங்கி கொடுத்த அந்த பால்கோவாவும் குளோப் ஜாமுன்னும் ரொம்பவே புடிச்சி இருந்துச்சி… இவ்வளவு நாளா மல்லிப்பூ மேல அவளுக்கு இருந்த ஆச இன்னும் அதிகம் ஆச்சு
இன்னும் ஒரு வாய் வேணும்னு எதுவுமே பேசாம கண்ணாலேயே சொல்லி பால் கோவாவ ஆசையா வாங்கி சாப்பிட ஆரம்பிச்சா…
But அவ வாய் திறந்து எதும் பேசாம இருக்கவும் “நான் உனக்கு கிப்ட் வாங்கி தரலேன்னு எதுவும் கோவமாடா பாப்பா” அப்படின்னு கேட்க
” அப்படி எல்லாம் எதுவும் இல்லடா மாமா” ன்னு சிரிச்சிட்டே சொன்னா
” இல்ல உனக்கு கோவம்தான?” அப்படின்னு மணி சோகமான குரல்ல ஒரு வித எதிர்பார்ப்போட கேக்கவும்
“இங்க பாரு மாமா ஆரம்பத்துல எல்லார மாதிரியும் ஆச எனக்கும் இருந்துச்சுதான் ஆனா உன் situation and உன் கஷ்டத்த யோசிக்கிறப்போ எனக்கு அந்த கிப்ட்ல எல்லாம் பெருசா இன்டெரெஸ்ட்டே இல்லடா பாப்பா..பட் எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் மட்டும் பண்ணு அந்த கிப்ட் மட்டும் நீ எனக்கு கொடுத்தேனா அதுவே எனக்கு ஹாப்பிதாண்டா”ன்னு சொல்லவும்
“சொல்லுடா அம்மு நெக்ஸ்ட் டைம் உனக்கு பர்த்டேக்கு ஏதாவது பெருசா வேணுமா” அப்படின்னு கேட்டா
” டேய் கிருக்கா அதெல்லாம் இல்ல இப்போ உன்கிட்ட இருந்து எனக்கு வருதே ஒரு love அத என் லைஃப் முழுக்க எனக்காக மட்டும் முழுசா கொடுப்பியாடா புருஷா”ன்னு அவ ஆசயா கேக்கவும்
அவ இப்படி கேப்பான்னு எதிர் பார்க்காத மணி தன்னோட இதழ்களாள அவளோட
இதழ சிறை பிடிச்சான்..
இதழ் மொழி வார்த்தையாலேயே “லைப் முழுக்க உன்ன நான் லவ் பண்ணுவேண்டி செல்லம் அதுல எந்த ஒரு மாற்றமும் இருக்காது” அப்படின்னு சொல்லி முடிக்க அங்க அவங்களுக்குள்ள அழகான காதல் அரங்கேற ஆரம்பிச்சது
” இங்க பாருடி அம்மு குட்டி என்கிட்ட நீ கேட்டாலும் கேட்காட்டியும் நீயே வேணாம்னு சொன்னாலும் உன்ன துரத்தி வந்து என்னோட ஒட்டு மொத்த love யும் நா உனக்கு கொடுத்துகிட்டேதாண்டி செல்லம் இருப்பேன்.. உனக்காண லவ் என்னைக்குமே என்கிட்ட இருந்து குறையவே குறையாது இந்த லைப் மட்டும் இல்ல ஏலேலு ஜென்ம life முழுக்க முழுக்க உனக்கு மட்டுமே என்னோட love சொந்தம் …
ஐ லவ் யூ டி செல்ல குட்டி” அப்படின்னு சொல்லி அவள கட்டி பிடிச்சு.. அவ நெத்திலயும் கன்னத்துலயும் கிஸ் பண்ணினான்…
உடனே அம்மு அவள கோவமா பாத்தா
” என்னடா பாப்பா எதுக்காக இப்படி பாக்குற ” ன்னு மணி கேட்க
பின்ன கன்னத்துலையும் நெத்திலயும் மட்டும் கிஸ் பண்ணா போதுமா” ன்னு அவ செல்ல கோவத்தோட கேக்க
என்னமோ ஏதோன்னு பயந்து போய் இருந்த மணி அவ செல்ல கோவமா இப்படி சொல்லவும் சிரிச்சுக்கிட்டே அவள மறுபடியும் கட்டி பிடிச்சான்..
அவனுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம் ஆரம்பத்துல ரூமுக்குள்ள என்ட்ரி ஆகுறப்போ ஒரு வித பயத்தோட வந்தாலும் தன்னோட வைஃப் மனசுக்குள்ள என்னை இருக்குது அவ தன்ன எந்த அளவுக்கு உண்மையா லவ் பண்றா தன்கிட்ட லவ்வை தவிர அவ வேற எந்த ஒரு விஷயத்தையுமே எதிர்பார்க்கலைன்னு புரிஞ்சுச்சு, அது அவனுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது
அவ ஆசயா கேட்ட முத்த கிஃப்ட்டயும் அவ எதிர்பார்க்காத அளவுக்கு அவ உடம்பெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சான்..
அம்முவும் அவனுக்கு சலச்சவ இல்லைன்ரத அவனுக்கு புரிய வைக்க அவன் கூட போட்டி போட ஆரம்பிச்சா
இப்போ ரெண்டு பேரோட முத்த சண்டையும் அங்க விடாம ரொம்ப நீளமா நடக்க ஆரம்பிச்சது…
தன்னோட மாமா தனக்கு விஷ் பண்ணதுக்கு அப்புறமா அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு ஆரம்பத்துலயே அம்மு முடிவு பண்ணி வச்சிருந்தா அதுக்கு கரைக்டான டைம் இதுதான்னு யோசிச்சவ
அவன் காதுக்குள்ள கொஞ்சம் கூச்சத்தோடையே ஹஸ்கி வாய்ஸ்ல
“ஐ லவ் யூ டா புருஷா” ன்னு சொல்லிட்டு அவன்கிட்ட தன்னையே முழுசா கொடுத்தா அதுக்கப்புறம் அவங்களுக்குள்ள அழகான பிறந்தநாள் காதல் அரங்கேற்றம் அங்க நடக்க ஆரம்பிச்சது… ரெண்டு பேரும் முத்த சண்டையில ஆரம்பிச்சு காதல் யுத்தத்துல ஒன்னோட ஒன்னு கலக்க ஆரம்பிச்சாங்க…
காதலுக்கு முடிவில்லை…..
By மின்மினி
Semma ஸ்டோரி…. ரொமான்டிக் scence and ammu expectations and adjustment awsome… Indha storyave repeat modela 5 timesku Mela படிச்சிட்டு இருக்கேன்… ரொம்ப நல்லா இருக்கு… இந்த மாதிரி இன்னும் நிறய Stories கொடுங்க மின்மினி…💖💖💖💖😘😘😘… செம்ம லவ்…💖💖💖💖