Ep.8. அவன் தான் அது
கணவனான ஸ்ரீபாத்தின் மரணத்திற்கு கூட அழாத ரத்னசேனா தலைவிரி கோலமாய் வரவேற்பறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
” அம்மா ….
அழாத …..
ப்ளீஸ் மா ….” என்று சுபிக்ஷா தாயை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
தன்னுடைய காரை பார்க் செய்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த சுபோத் இந்த காட்சியை கண்டு அதிர்ந்து போய் தாயின் அருகே சென்று,
” அம்மா என்ன ஆச்சு?
ஏன் அழுதுட்டு இருக்க?” என்று என் தங்கையை பார்த்தபடியே கேட்டான்.
சுபிக்ஷா தன்னுடைய அண்ணனுக்கு எந்த பதிலும் கூறாமல் தொலைக்காட்சியை ஓடவிட்டாள்.
தொலைக்காட்சியில் சினிமா பைனான்சியரும் மற்றும் எம்.எல்.ஏவுமான
அருமைநாயகம் அவர்கள் காலமானார். என்ற செய்தி அந்த தொலைக்காட்சியின் திரையில் ஒளிர,
எப்படி ….?
நேற்று மாலை கூட நன்றாகத் தானே இருந்தார் என்று சுபோத் அதிர்ந்தான்.
” என்ன நடந்திருக்கும்.?”என்று தன்னுடைய அதிர்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்தப் படியே தாயைப் பார்த்தான்.
அவள்
” ஐயோ அண்ணா எனக்கிருந்த ஒரே ஆதரவு நீ தானே, இப்ப நீயும்
என்ன விட்டு போயிட்டியே?” என்று உரக்க குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள் .
சமையல்காரி செண்பகத்தை அழைத்து வீட்டை கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தாயையும் தங்கையையும் அழைத்துகொண்டு சுபோத் மரண வீட்டுக்கு கிளம்பினான்.
அருமை நாயகத்தின் மகனும் இயக்குனருமான பிரதாப்பை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான் சுபோத் .இணைப்பு கிடைக்காததால் நேரில் சென்று விசாரித்துக் கொள்ளலாம் என்று
வேகமாய் வாகனத்தை செலுத்த தொடங்கினான்.
ஸ்ரீபாத்தும் அருமைநாயகமும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள் . அருமை நாயகத்தின் ஒரே தங்கைதான் ரத்னசேனா ,
அருமை நாயகம் தான் ஸ்ரீபாத்தின் முன்னேற்றத்தையும் திறமையையும் கண்டு தங்கை ரத்னாவை ஸ்ரீபாத்திற்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார் .
அருமை நாயகத்தின் வீட்டு வாசலில் கட்சிக்காரர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு , சுபோத்தின் கார் உள்ளே நுழைந்தது .
வீட்டு வாயிலின் முகப்பிலேயே அருமை நாயகத்தின் மனைவி பூங்கோதை அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள்.
அருமைநாயகம்- பூங்கோதையின் ஒரே மகனும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான பிரதாப்பை காணவில்லை. கண்களால் பிரதாப்பை தேடிய படியே சுபோத் காரில் இருந்து இறங்கினான். காரை நின்றதுமே ரத்னசேனா அவசரமாய் கீழே இறங்கி,
” அண்ணி….” என்று உரத்த குரலில் கத்தியபடியே பூங்கோதையை நோக்கி ஓடினாள்.
பூங்கோதை , ரத்னாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, முந்தானையால் முகத்தை மூடி கொண்டு அழுதாள்.
” நேத்துக் கூட அண்ணா நல்லாத்தன இருந்தாரு ….திடீர்னு எப்படி …” அவசரமாய் பூங்கோதையின் அருகில் அமர்ந்து தலையில் அடித்த கொண்டு அழுதபடியே கேட்டாள்.
” எனக்கு என்ன தெரியும். நெஞ்சு வலின்னாரு போன் பண்ண போனே திரும்பி வந்து பார்த்தா ….” என்று மேலும் நடந்ததை கூற முடியாமல் பூங்கோதை பக்கத்தில் இருந்த சுவரில் தலையை முட்டிக் கொண்டு அழுதாள்.
அவள் செயலை கண்டு திகைப்படைந்த சுபிக்ஷா, ஓடி சென்று அவளை இழுத்துப் பிடித்து
“ஏ.. அத்தை இப்படி எல்லாம் பண்றீங்க?”என்று உடைந்த குரலில் கேட்டாள்.
” சுபி…
உங்க மாமா போயிட்டாரே, நீ எப்ப வந்தாலும் உனக்கு பிரியாணி பிடிக்குனு செய்ய சொல்லுவாரே….டீ போயிட்டாரே உங்க மாமா என்ன விட்டுட்டு போயிட்டாரே..” என்று கணவன் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவளாய் சுபிக்ஷாவின் மேல் சாய்ந்து அழுதாள் பூங்கோதை.
சுபோத் ,பூங்கோதையின் அருகில் அமர்ந்து அவள் கரங்களை ஆதரவாய் பற்றிக் கொண்டு ,
” பிரதாப் எங்க ?” என்று சோகமான குரலில் கேட்டான்.
” மாமா நெஞ்சுவலினு சொன்னாரா ….
நான் பிரதாப்புக்கு போன் பண்ணிட்டு வந்தனா
மாமா கண்ணெல்லாம் நிலைகுத்தி கழுத்து ஒரு பக்க சாஞ்ஜி அப்படியே தாறுமாறாக இருந்தாரா
நான் பதறிப்போய் …
டிரைவருக்கு கூப்டு
ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போலாம்னு சொன்னேனா …
அதுக்குள்ள பிரதாப் வீட்டுக்கு வந்தா என்ன வீட்டிலேயே இருக்க சொல்லிட்டு ,மாமாவுக்கு கூட்டிகிட்டு ஆஸ்பத்திரிக்கு போனா …
அரை மணி நேரத்துல டிவியிலயே மாமா போயிட்டுடாருணும் நியூஸ் வந்துச்சு …” என்று சுபோத்திடம் கூறி பூங்கோதை பெரிதாக குரலெடுத்து அழுதாள் .
” அத்தை….
பிரதாப்க்கு போன் பண்ணி கேட்கலையா? ” சுபோத் , பூங்கோதையிடம் கேட்டான்.
” கேட்டேன் டா ….அப்பா போய்ட்டாருனு தா அவனு சொன்னா.” என்று பூங்கோதை கூறிவிட்டு மேலும் அழுதாள்.
அவர்களுடைய பேச்சை திசை திருப்பும் வகையில் ஆம்புலன்ஸில் ஒலி கேட்டது.
அதிலிருந்து எம்.எல்.ஏவான அருமை நாயகத்தின் உடல் மெல்ல இறக்கப்பட்டு அவர் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டது. பிரதாப் கலங்கிய கண்களும் திகிலடைந்த முகமாய் அழுதபடியே அருமை நாயகத்தின் உடலுக்கு பின்னால் மெல்ல நடந்து வந்தான்.
சுபோத்தை கண்டதும் பிரதாப்,
” அப்பா.. போய் பாருடா ” என்று உடைந்த குரலில் கூறினான்.
அவனைப் பார்க்க சுபோத்திற்கு பரிதாபமாக இருந்தது.
பிரதாப் துக்கம் தாளாமல்
” நல்லா இருந்த மனுஷன் டா ….” என்று கண்ணீரோடு சுபோத்தின் தோளில் சாய்ந்து கொண்டான்.
அருமை நாயகத்தின் உடல் கூடத்தில் கிடைத்த பட்டதுமே கட்சிக்காரர்கள், திரையுலக பிரபலங்கள்,ஊடகம் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் என்று பெரிய கூட்டம் கூட தொடங்கியது. கூட்டத்தோடு கூட்டமாக அந்த கருத்து பருத்த நெடியவனும் உள்ளே நுழைந்தான்.
அவன், சுபோத்தையும் பிரதாப்பையும் ஆக்ரோஷத்தோடு வெறித்த படியே
அருமை நாயகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் அவர் உடல் அருகே சென்று நின்றான்.
அருமை நாயகத்தின் மனைவி பூங்கோதை அழுது அழுது கண்ணீர் வற்றியவளாய் அருமை நாயகத்தின் உடல் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். ரத்னா அவள் அருகே மற்றொரு நாற்காலியில் அமர்ந்து கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அருமை நாயகத்தின் உடலை பார்த்தபடியே கொண்டிருந்தாள்.
சுபிக்ஷா தாயின் அருகில் நின்று கொண்டு போவோர் வருவோரை கண்ணீரோடு கவனித்து கொண்டிருந்தாள். அருமை நாயகத்தின் உடல் அருகே மிக அருகில் நின்றிருந்த அந்த கருத்து பருத்த நெடிய நபரை அவள் கவனித்தாள்.
இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே! என்று அவள் மனதிற்குள் ஒரு மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. அவள் சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய் தன் சகோதரனை கண்களால் தேடினாள்.
சுபோத்தும் பிரதாப்பும் இறுதிச்சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க, சுபிக்ஷா அவர்கள் அருகில் சென்று,
” உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கொஞ்சம் அப்படி வா ” என்று சகோதரனை அழைத்தாள்.
” என்னமா இந்த நேரத்துல? அப்புறம் பேசிக்கலாம் போ .” என்று சுபோத் தங்கையிடம் மறுத்துக் கூற,
அந்தக் கருத்து பருத்த நெடியவன் அருமை நாயகத்தின் உடல் அருகில் நின்றிருப்பதை சுபிக்ஷா சகோதரருக்கு ஜாடையில் உணர்த்தினாள். தங்க என்ன குறிப்பிடுகிறாள் என்று சற்றுயென்று புரிந்துகொள்ள இயலாதவனாய் சுபோத் திணறினான்.
தொடரும் ….
by மகிழம் பூ