அத்தியாயம் -8
வீட்டுக்குள் அஞ்சலி குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்க, தான் என்ன செய்தோம் என்று உணராமல் விக்ரம் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் பொறுமையாக வந்து கொண்டிருந்த மதி,”டேய் விக்ரம் நில்லுடா!” என்று கத்தினான்.
விக்ரம் நிதானமாக நின்று அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு குழப்பமும் டென்ஷனும் இருப்பது மதிக்கு புரிந்தது. மதி, மணியை கண்ணசைவில் தூர நிற்க சொல்லி விட்டு, விக்ரமின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கொஞ்சம் தூரம் நடந்தான்.
ஒரு மரத்தடியில் அவனை நிறுத்திய மதி, “விக்ரம் நீ என்ன பண்ணி இருக்கன்னு உனக்கு புரியுதா?” என்றான். விக்ரம் பதில் சொல்லாமல் இருக்கவும் மதி, விக்ரமின் தோளை பிடித்து உலுக்கி, “டேய் நான் பேசறது உனக்கு கேக்குதா இல்லையா? நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க, அந்த பொண்ணு யாருன்னே உனக்கு தெரியாது.
காலைல ஏதோ பரிதாபப்பட்டு உதவி பண்றதா நாங்க எல்லாருமே நினைச்சோம் ஆனா, நீ இப்போ அவளையே கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்க?
அவ யாருடா படிக்காத ஒரு கிராமத்து பொண்ணு அவ யாருன்னு கூட உனக்கு சரியா தெரியாது அப்படி இருக்கும் பொழுது நீ பண்ண காரியம் இவ்ளோ பெரிய பிரச்சனைய கொண்டு வந்து சேர்க்கும் தெரியுமா? டேய் ஊர்ல உனக்காகவே காத்துட்டு இருக்குற வந்தனாவுக்கு என்னடா பதில் சொல்லப் போற?” என்று மதி கத்தவும், விக்ரமின் மனதிற்குள் வந்தனாவின் முகம் வந்து போனது. ‘வந்தனா மேல எனக்கு உண்மையாவே லவ் இருக்கா?’ என்று அவன் குழம்பினான். காரணம் எப்போதுமே வந்தனா அவனிடம் பணத்தை தாண்டி, மருத்துவ தொழிலை கடந்து பேசியது கிடையாது. ஆனாலும் அவனாகவே அவளை வலிய பேசி அழைத்துக் கொண்டு சினிமாவிற்க்கும் நண்பர்களின் பிறந்த நாளுக்கு சென்று வந்திருக்கிறான். அவளை பற்றி நினைத்த அவன் ஏனோ கொஞ்சம் வருத்தமாக உணர்ந்தான்.
“ஆமாண்டா வந்தனாவுக்கு நான் என்ன பதில் சொல்ல போறேன்?” என்று அவன் முனுமுனுத்தான்.
“இப்ப பீல் பண்ணி என்ன டா பிரயோஜனம்.”
“இல்ல டா இன்னைக்கு காலையில அஞ்சலியை பார்த்ததுல இருந்து எனக்கு வந்தனா உடைய ஞாபகமே வரல டா.”
“என்னடா சொல்ற வந்தனுடைய ஞாபகம் வரலையா!அப்படின்னா என்னடா அர்த்தம்?”
“டேய் எனக்கு இந்த அர்த்தம் அர்த்தமெல்லாம் புரியலடா எனக்கு என்னமோ அந்த வந்தனா ஞாபகம் வரல அவ பேர் கூட எனக்கு ஞாபகத்துக்கு வரல இப்ப நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு அவ ஞாபகம் வந்துச்சு. எனக்கு என்னமோ இந்த அஞ்சலிய?” என்று விக்ரம் முடிப்பதற்க்கு முன்பே ,”நீ பேசறது முட்டாள் தனமா இருக்கு வந்தனா உனக்கு ஈக்வலாக படிச்ச ஒரு டாக்டர். நீ அவள கல்யாணம் பண்ணிட்ட உன் வாழ்க்கை எங்கேயோ போகும். அஞ்சலி படிப்பு வாசனயே இல்லாத ஒரு கிராமத்து பொண்ணு அதுவும் அனாதை அவளுடைய கடனையே நீ தான் இப்போது கட்டிருக்க. அவளுக்கு இவ்வளவு பிரச்சனை நடந்தும் ஊர்ல ஒருத்தர் கூட வந்து ஏன்னு கேட்கல அவ ஒரு அனாதடா அவளுக்கு நீ ஏன்.. டா இவ்வளவு பாவம் பாக்குற?” என்று கோவப்பட்டான்.
“டேய் மதி நீ அப்படிலாம் பேசாதடா பாவம் அவ ஆதரவே இல்லாம நிக்கிறா இந்த மாதிரி சூழ்நிலையில் அவளை?”
“என்ன டா அவளை என்ன அவளை நீ என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?
உனக்கு அந்த பொண்ணு மேல என்ன ?”
“டேய் மதி என்ன மாதிரி பீலிங்ஸ்ன்னு எனக்கு தெரியாது டா ஆனா அவளை பார்க்க எனக்கு ரொம்ப பாவமா இருக்கு அவளை இந்த நிலைமையில அப்படியே விட்டுட்டு வரத்துக்கும் எனக்கு மனசு வரல நாளைக்கு ஈவினிங் மெடிக்கல் கேம்ப் முடிஞ்சதும் நான் இங்கிருந்து கிளம்புவன்னானு கூட எனக்கு தெரியல.”
“என்ன டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க. ஊருக்கு வராமல் வேற என்ன பண்ண போற வந்தனா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா நீங்க ரெண்டு பேரும் நெக்ஸ்ட் வீக் வந்தனா வீட்ல போய் பேசணும்னு முடிவு பண்ணி இருந்தீங்க தெரியுமா?
காலைல இருந்து வந்தனா உனக்கு 20 வாட்டி போன் பண்ணாலாம். நீ ஒருவாட்டி கூட கால் அட்டென்ட் பண்ணலையாம். அவளுக்கு ஒரு மெசேஜ் கூட பண்ணலையாம். அவ ரொம்ப பீல் பண்ணாட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவ எனக்கு போன் பண்ணா. அவ போன் பண்ணவும் தான் நான் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.”என்று மதி படபடத்தான்.
விக்ரம் அவன் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் தூரத்தில் தெரிந்த அஞ்சலியின் அந்த ஓலை குடிசையை நிமிர்ந்து பார்த்தான். அவன் மனதிற்குள் அஞ்சலியின் அழுது களைத்து போன முகம் தோன்றி மறைந்தது.
‘வந்தனா நல்ல படிச்ச பொண்ணு டாக்டர் வேற அவளுக்கு அப்பா அம்மா பிரண்ட்ஸ் வசதி வாய்ப்புன்னு எல்லாமே இருக்கு ஆனா இந்த அஞ்சலிக்கு?’ என்ற கேள்வி விக்ரமின் மனதிற்குள் ஏறி அழுத்தமாக உட்கார்ந்து கொள்ள அவனால் வந்தனாவை பற்றி அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை.
“டேய் என்னடா நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று மதி முகத்தில் அறைந்தார் போல் விக்ரமை பார்த்து கேட்கவும், விக்ரமால் பதில் சொல்ல முடியவில்லை.
அவன் திக்கி திணறி மெதுவாக திரும்பி மதியின் முகத்தை பார்த்தான்.”என்னடா திடீர்னு இப்படி ஒரு பொண்ண போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற அவ மேல உனக்கு வந்த ஃபீலிங்ஸ்க்கு பேரு காதல் கிடையாது கிரஷ்ம் கிடையாது. அது ஒரு அனுதாபம். ஐயோ பரிதாபம் ங்ன்கிற உணர்வு அதுக்காக நீ அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்ல. அவளை அந்த குடிகாரன் கிட்ட இருந்து காப்பதற்காக தான் அப்படி சொன்னேன்னு சொல்லிட்டு. நீ கிளம்பு அவளுக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு நினைச்சா கொஞ்ச நாள் கழிச்சி அவள கூட்டிட்டு போய் ஏதாவது ஒரு நல்ல லேடிஸ் ஹாஸ்டல்ல தங்க வை. அவளுக்கு நம்மளுடைய ஹாஸ்பிடல்ல ஏதாவது வேலை வாங்கி கொடு இல்ல. அவள படிக்க வைக்க ட்ரை பண்ணு இல்ல ஒரு நல்ல வரன கல்யாணம் பண்ணி குடு. அதெல்லாம் நான் வேண்டாம்னு சொல்லல அந்த விஷயங்கள் எல்லாம் நீ பண்ணினா உனக்கு நான் சப்போர்ட் பண்ற நான் மட்டும் இல்ல நம்மளுடைய எல்லா பிரண்ட்ஸ்சையும் கூப்பிட்டு உனக்கு சப்போர்ட் பண்ண சொல்ற. உங்க வீட்லயும் நான் வந்து பேசுறேன் வந்தனாவும் உனக்கு கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவா நீ இப்படி பண்றத விட்டுட்டு அவளை போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது பைத்தியக்காரத்தனம்.” என்று மதி, விக்ரமின் மண்டையை முழுவதும் கழுவி விட முயன்றான். ஆனால், விக்ரமின் மனமோ அஞ்சலியின் அழுத முகத்தையே நினைத்துக் கொண்டு நின்றிருந்தது.
To be continued….
By மகிழம் பூ
சூப்பரான கதை…