அத்தியாயம் 12
விக்ரம், மதி கொடுத்த அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்று இருந்தான். ஆனால், அஞ்சலிக்கு தான் மனம் பொறுக்கவில்லை.”அண்ணா ஒரு நிமிஷம் இருங்க அவர் மேல எந்த தப்பும் இல்ல. என்னுடைய நிலைமை தான் அவர் அந்த மாதிரி பண்ண வச்சது.” என்று அழுகையோடு பேசினாள்.
ஊர் மக்கள் சிலர் அவளுக்கு பரிந்து கொண்டு மதியோடு வாதிட தயாராகினர். இன்னும் சிலர் அவளை, “அமுக்குன கிழங்கு என்ன மாதிரி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கா பாரு.”
“அப்போ இவளோட தாய் மாமன் அந்த குடிகாரன் சொன்னது உண்மைதான் போல இருக்கு. இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி செட் அப் ஆயிட்டாங்க போல ஊர்ல இருக்கிறவங்க நாலு பேரு தப்பா பேசக்கூடாதுன்னு இந்த ஆளு யாருக்கும் தெரியாம ராத்திரி நேரத்துல திருடன் மாதிரி வந்தா கழுத்துல தாலி கட்டிட்டு இருக்கான்.” என்றும் விதவிதமாக அவர்களைப் பற்றி கட்டுக்கதைகளை அவிழ்க்க ஆரம்பித்தனர்.
அதையெல்லாம் பார்த்து விக்ரம் தன்னுடைய சட்டையில் இருந்து செல்போனை விடுவித்தான்.
“பாத்தியா அந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணாம விட்டுட்டு போயிருந்தாலும் இந்த ஊர் இவ்வளவு கொடுமையா அந்த பொண்ண பேசி கஷ்டப்படுத்தி இருக்கும் கல்யாணம் பண்ணி இருந்தாலும் இப்படித்தான் அந்த பொண்ண பேசி சித்திரவதை பண்ணு. அவளை நம்ப கல்யாணம் பண்ணிக்காமயே சென்னைக்கு கூட்டிட்டு போனாலும் இதே ஊர் மக்கள் இதே அளவுக்கு மோசமா தான் அவள பேசி கொடுமைப்படுத்தும் நான் எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டேன்.
ஒரு ஏழை பெண்ணை கண்ணு முன்னாடி கஷ்டப்படுற பாத்தும் அனாதைய அவளை தனியா விட்டுட்டு போற அளவுக்கு என் மனசு கல்லாகல.வந்தனா கிட்ட நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசினேன். நடந்த எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லிட்டேன் நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி நானும் வந்தனாவும் ஒன்றும் டீபாலாம் லவ் பண்ணல வந்தனாவுக்கு என் மேல ஒரு கிரஷ் இருந்தது. அதுக்கு காரணம் டாக்டர்ங்கிற என்னுடைய படிப்பு. எங்க அப்பா அம்மா வாங்கி வச்சிருக்க வீடு காரு இன்னும் சில வசதிகள். இங்க நடந்த விஷயத்தை எல்லாம் சொல்றதுக்கு முன்னாடி வந்தனா எனக்கு ஒரு ஷாக் கொடுத்தா.
அது என்னன்னு உங்க யாருக்காவது தெரியுமா?” என்று அவன், டாக்டர் முரளிதரனையும் மதியையும் அஞ்சலியையும் பார்த்தான்.
“வந்தனாவுக்கு usல இருந்து ஒரு வரன் வந்திருக்காம். அவ அங்க போயி மேற்கொண்டு படிக்கிறதுக்கும் அந்த மாப்பிள்ளை ஆஃபர் பண்ணி இருக்காராம்.
இங்க படிச்சு லோக்கல்ல ஒரு சின்ன கிளிக் வச்சி கொஞ்சமா சம்பாதிக்கிறத விட அங்க போனா நல்லா சம்பாதிக்கலாம் பத்து வருஷத்திலேயே அவ லைஃப் ரொம்ப பெரிய அளவுல செட்டில் ஆயிடும்னு அவ பீல் பண்ற. அதனால நாங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் பழகன எல்லாத்தையும் மறந்துடலாம்னு சொல்ல தான் அவ காலையில் இருந்து எனக்கு போன் பண்ணிட்டே இருந்தாளாம்.” என்று அழுத்தமான குரலில் விக்ரம் வெடித்து சிதறவும் முரளிதரனுக்கும் மதிக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை.
“என்ன ரெண்டு பேரும் அமைதியா நிக்கிறீங்க? இது எல்லாம் உத்தேசிச்சு தான் இந்த பெண்ணுடைய நிலைமையும் இங்க மோசமா இருக்கு அதனால தான் நான் அந்த பொண்ணு கழுத்துல காலி கட்டுனேன் இவ கழுத்துல கட்டுன்ன தாலிக்கு யாருப்பா சாட்சி கேட்டது.” என்று குரலை உயர்த்தி மக்களை பார்த்து விட்டு முரளிதரன் மீது அவன் பார்வை நிலை கொண்டது.
பிறகு அவன் தன்னுடைய செல்போனை எடுத்து, அதில் ஒரு காணொளியை ஓட விட்டான்.ஊருக்கு முன்பு தன்னுடைய செல்போனை உயர்த்தி பிடித்தான். அதில் விக்ரம்- அஞ்சலியின் கழுத்தில் தாலி கட்டும் காட்சி காணொளியாக ஓடியது. அதை பார்த்த ஊர் மக்கள் வாய் அடைத்துப் போயினர். அந்த காட்சியின் இறுதி நிமிடங்களை அவன் டாக்டர் முரளிதரன் முன்பும் தன்னுடைய நண்பன் மதியின் முன்பும் மாறி மாறி நீட்டினான்.
இதைவிட ஒரு “பெரிய சாட்சி வேணுமா?” என்றான். அங்கு ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது. அங்கு இருக்கும் யாருக்குமே வாய் திறந்து என்ன பேசுவது என்று புரியவில்லை.
சிலர் அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அங்கிருந்து நழுவினர். அஞ்சலியை கட்டிப்பிடித்து கிழவி ஒருத்தி, “ராசாத்தி நீ சின்ன வயசுல இருந்து எவ்வளவோ கஷ்டப்பட்டுட்ட உனக்குனு இருந்த ஒரே துணை உங்க அம்மா தான் அவளும் போய் சேர்ந்துட்டா இனிமே இந்த ஊர்ல உனக்கு யாரும் இல்லடா கண்ணு. உனக்கு இங்க பாதுகாப்பும் இல்ல. நீ பேசாம அந்த தம்பியோட எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போய் சந்தோஷமா வாழு உனக்கு அதுதான் நல்லது.” என்று வாழ்த்தியது.
“டாக்டர் தம்பி நீங்க பண்ணது ரொம்ப பெரிய விஷயம் யாருமே இல்லாத இந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தீங்களே நீங்க ரொம்ப நல்லவரு.
உங்க மனசு ரொம்ப பெருசு உங்க தாய் தகப்பன் உங்கள ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க.” என்று விக்ரம் அருகில் வந்து அவனுடைய கன்னத்தை வருடி நெட்டி முறித்து வாழ்த்தினாள்.
அஞ்சலி மீது சிலர் பொறாமைப்பட்டனர். சிலர் அவளுடைய நடத்தை வாய்க்கு வந்தபடி விமர்சித்து விட்டு அங்கிருந்து கிளம்பி போயினர். இப்பொழுது மதிக்கு நண்பனை வாழ்த்துவதா அல்லது திட்டுவதா என்று புரியவில்லை.
“டேய் விக்ரம் நீ சொன்ன கதை எல்லாம் ஓகே தான் உங்க அம்மாவும் அப்பாவும் இந்த கல்யாணத்தை எப்படி டா எடுத்துப்பாங்க.” என்று கவலை நிறைந்த குரலில் மதி கேட்கவும் முரளிதரனுக்கும் அதே கவலை இப்பொழுது தோன்றி விட்டது. விக்ரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய புது மனைவியான அஞ்சலியின் முகத்தை திரும்பிப் பார்த்தான். அவளுடைய கண்கள் கலங்கி இருப்பதை அறிந்து அவள் பக்கத்தில் போனான்.
“இங்க பாரு நீ அழுததெல்லாம் போதும் இனிமே யாருக்காகவும் எதுக்காகவும் நீ அழ வேண்டாம்.”என்று அவன் அழுத்தமான குரலில் சொல்லவும் முரளிதரனுக்கும் மதிக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
அஞ்சலி மெதுவாக அங்கிருந்து பக்கத்தில் இருந்த அந்த சின்ன அறைக்குள் போனாள்.
“ஆனாலும் விக்ரம் உனக்கு ரொம்ப தைரியம் தான்!” என்று மதி கொஞ்சம் கோபமான குரலில் சொல்லவும், விக்ரம் அதைப் பற்றி பொருள் படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றான்.
“சரி நீ எல்லாத்தையும் டிசைட் பண்ணிட்ட இல்லையா?” என்று கேட்ட டாக்டர் முரளிதரன், “நான் டவுன்ல இருக்குற நம்மளுடைய ஆர்கனைசர் மிஸ்டர் லோகநாதன் கிட்ட போன்ல பேசிட்டு வரேன் அவர் மூலமாக உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கார் அரேஞ்ச் பண்றேன்.
நீ அந்த பொண்ண கூட்டிக்கிட்டு கிளம்பு.” என்று அங்கிருந்து விலகி சென்றார்.
டாக்டர் முரளிதரன் செயலை மனதிற்குள் பாராட்டிய விக்ரம் வானத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவைப் பார்த்தான்.”டேய் விக்ரம் அப்பா அம்மாவ எப்படிடா சமாளிக்க போற?” என்று மதி அவனை தோளில் தட்டி கேட்டான்.
“பாத்துக்கலாம்.” என்று சொன்னவன் அமைதியாக நின்று இருந்தான். ‘என்ன இவ பாத்துக்கலாம்னு அமைதியா இருக்கான். திடீர்னு முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போயி இவ தான் உங்க மருமகன்னு சொன்னா பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும். அதுவும் மதியுடைய அம்மா கொஞ்சம் ஸ்டேட்டஸ் பார்க்கிற டைப். அவங்க எப்படி ஊர் பெயர் தெரியாத இந்த பொண்ண, அதுவும் படிக்காத கிராமத்து பொண்ணு எப்படி மருமகளா ஏத்துப்பாங்க?
இவன் வந்த்னாவ ஈஸியா அன்டில் பண்ணி இருக்கலாம் ஆனா இவனுடைய அம்மா பார்வதியை அவ்வளவு ஈஸியா சமாளிக்க முடியாது. அத பத்தி எல்லாம் கவலைப்படாம இவன் கெத்தா நின்னுட்டு இருக்கான். இவன் மனசுல என்ன தான் இருக்கு?’ என்று யோசித்து குழம்பி நின்றான்.
அஞ்சலி உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அவள் முகத்தில் அதிகம் சோகம் இருப்பதாக மதிக்கு தோன்றியது.’பாவம் இந்த பொண்ணு காலைல எந்திரிக்கும்போது அம்மா செத்துப்போவாங்கன்னோ இல்ல சாயங்காலம் அவளுக்கு கல்யாணம் ஆகும்னு யோசிருப்பால அவ வாழ்க்கை இப்படி ஒரே நாள்ல தலைகீழா மாறிடுச்சு.’ என்று ஒரு நல்ல மனிதனாக மதியின் மனம் அஞ்சலி மீது இரக்கம் கொண்டாலும், ‘இவ கண்டிப்பா பார்வதி ஆன்ட்டி கிட்ட தாக்குப்பிடிச்சி நிக்கவே முடியாது. பார்வதி ஆன்ட்டி ஸ்டேட்டஸ் பார்க்கிற ஒரு டெரரான ஆன்ட்டி அவங்க. கண்டிப்பா இவளை ஏத்துக்க மாட்டாங்க.’ என்றும் நினைத்தான்.
To be continued..
by மகிழம் பூ