அத்தியாயம் 11
மதியும் மணியும் டென்ஷனோடு அஞ்சலி வீட்டு வாசல் முன்பு வந்து நிற்க, விக்கிரமுடைய செருப்பு வாசலில் கிடந்தது. அதை பார்த்து விட்டு அவர்களுக்கு ஒரு நிம்மதி பிறந்தாலும் இவன் உள்ளே சென்று அஞ்சலியிடம் என்ன பேசி தொலைத்தானோ என்ற பயம் மதிக்கு கிளம்பியது.
அவர்கள் இருவரும் வேகமாக அஞ்சலின் வீட்டிற்குள் சென்றனர். மணி அங்கு நடக்கும் விஷயத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல தயக்கத்தோடு சுவர் ஓரம் ஒற்று நின்றான். மதி, விக்ரமை கண்களால் தேடி விட்டு மூளையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த அஞ்சலியை பார்த்தான்.
அஞ்சலி அவனைப் பார்த்தும் மெதுவாக எழுந்து நின்று கண்களை துடைத்துக்கொண்டாள்.
“அஞ்சலி விக்ரம் இங்க வந்தானா?!” என்று மதி தயக்கத்தோடு கேட்பதை பார்த்து விட்டு அவள் அமைதியாக நின்றாள். அவளுடைய அமைதி மதியுடைய பொறுமையை சோதிக்க அவன், “ஏய் பதில் சொல்லு கேக்குறல்ல?” என்று கத்தினான்.
அவள்,”விக்ரம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தாரு.” என்றாள்.
“சரி விக்ரம் இப்ப எங்க இருக்கான்.” என்று மதி உணர்ச்சிவசத்தோடு கத்தினான். ஆனால், அவளோ எதுவும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள். அப்பொழுது தான் மதி, அஞ்சலியின் கழுத்தை பார்த்தான்.
அதில் புத்தம் புதிய மஞ்சள் நிற தாலி தொங்கி கொண்டிருந்தது. அதை மேலிருந்து கீழாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மதி “ஐயோ!” என்று உரத்த குரலில் கத்தினான். அவனுடைய கத்தல் அக்கம் பக்கம் வீடுகளில் இருந்த மனிதரைகளை இழுத்துக் கொண்டு வந்தது. எல்லோரும் அஞ்சலியின் வீட்டு வாசல் முன்பு கூடினர். சிலர் தைரியமாக உள்ளே நுழைந்து அஞ்சலியை பார்த்தனர். அவர்களுக்கு அஞ்சலியை பார்த்த மாத்திரத்திலேயே அவள் கழுத்தில் இருந்த தாலி தெரிந்துவிட்டது.
மஞ்சள் கயிறில் ஒரு மஞ்சள் கிழங்கு ஒன்று அஞ்சலியின் கழுத்தில் தாலியாக தொங்கிக் கொண்டிருந்தது.”அடி என்னடி இது கொடுமை?” என்று ஒரு கிழவி ஓங்கி கத்தி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். அவளை தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்த நான்கு ஐந்து பெண்கள் அஞ்சலியை பிடித்து உலுக்க ஆரம்பித்தனர்.
“அடியே அஞ்சலி உன் கழுத்துல தாலி கட்டுனது யாருடி?”
“சொல்லு டி வாயை திறந்து சொல்லு அந்த குடிகாரனா?”
“ஏய் அந்த கந்து வட்டிக்காரனா?”
“இங்கே நிற்கிறானே இந்த லூசு பயல” என்று மதியை காட்டி ஒரு கிழவி கேட்கவும், மதிக்கு கோபம் வந்தது.
“ஏய் இந்த.. ம்மா என்ன பேசுற அது எனக்கு தங்கச்சி மாதிரி!” என்று அவன் கத்த கிழவி முகத்தை தொங்கப் போட்டபடி அஞ்சலி பக்கம் திரும்பினாள். அஞ்சலி அவர்கள் எல்லோரையும் அழுத்தமாக பார்த்து விட்டு கண்ணீரோடு சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
“ஏய் விக்ரம் எங்க?” என்று மதி பொறுமை இழந்து கத்தவும் கிரமத்து மக்கள் அஞ்சலியையும் மதியையும் வினோதமாக பார்த்தனர். சில நிமிடங்கள் அழுத அஞ்சலி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விக்ரம் இங்க வந்தாரு. என்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னது உண்மை தான்னும் நீ மதி சொல்ற எதையும் கேட்காத தயவு செய்து என்கூட வா நம்ம இந்த ஊரை விட்டு இப்பவே கிளம்பிடலாம்னு சொன்னாரு நான் யோசிச்சேன்.
அவர் டக்குனு எதையும் யோசிக்காம பக்கத்துல இருந்த மஞ்சள் கயிறுல இந்த மஞ்சள் கிழங்கு கட்டி டக்குனு என் கழுத்துல தாலி கட்டிட்டாரு என்னால மறுக்கவும் முடியல இந்த கல்யாணத்தை ஏத்திக்கிட்டு அவர் கூட வாழ முடியல.” என்று அவள் சொல்லிவிட்டு அழவும்,
“அந்த டாக்டர் தான் உன் கழுத்துல தாலி கட்டுனாங்கறதுக்கு என்ன சாட்சி!” என்று கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. அங்கு அஞ்சலி உட்பட அங்கு நின்ற எல்லோருமே குரல் யாரிடம் இருந்து வருகிறது என்று ஆவலோடு நின்று இருந்தனர். அந்த கேள்வியைக் கேட்டபடி உள்ளே வந்தது டாக்டர் முரளிதரன் தான் அவரை காலையில் பார்த்த ஞாபகம் அஞ்சலிக்கு வரவும் அவள் இரண்டு கரங்களையும் குவித்து அழ ஆரம்பித்தாள்.
“சாட்சி யாரும் இல்ல.” என்று அவள் மெல்லிய குரலில் சொல்லவும் கூட்டம் மொத்தமும் உறைந்து போய் நின்றது. “சரி இப்ப விக்ரம் எங்கன்னு சொல்லு.” என்று மதி டென்ஷனோடு மீண்டும் கத்தினான்.
“நான் இங்க தான் இருக்கேன்.” என்று பின்புறம் இருந்து விக்ரமின் குரல் கேட்டது. சில நிமிடங்களுக்கு எல்லாம் விக்ரமும் அந்த வீட்டின் பின்பக்கத்தில் இருந்து வெளியே வந்தான்.
“என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று அவன் சட்டையை பாய்ந்து கொத்தாக பிடித்து அவன் கன்னத்தில் மதி அரைந்தான்.
To be continued….
By மகிழம் பூ