அத்தியாயம் -3
அஞ்சலியை கண்களால் தபத்துடன் பருகிய அந்த குடிகாரன், அவளை, “ஏ..ய் கழுத” என்று அதட்டி ஏதோ சொல்ல முனைந்தான்.
“ச்..சீ போ!” என்று அஞ்சலி அவனை அலச்சியப்படுத்தினாள்.
“என்ன சும்மா நிக்குறீங்க” என்று விக்ரம் கத்தவும், அஞ்சலியும் அந்த அஞ்சலியின் மாமன் என்று சொல்லிக் கொண்ட வந்த நடுத்தர வயது மனிதனும் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினர். அஞ்சலி தான் எங்கிருந்தோ ஒரு மோட்டர் வைத்த லோட் ஏற்றி செல்லும் ட்ரை சைக்கிள் எடுத்து வந்தாள்.
“டாக்டர் எங்க அம்மாவ தூக்கி இதுல படுக்க வச்சு கொண்டு போயிடலாம்.” என்று அவள் விக்ரமுடைய பதிலை எதிர்பாராமல் சுத்தி நின்றவர்களை பிடிக்க சொல்லி தன் அம்மாவை அந்த சைக்கிளில் ஏற்றினாள்.
விக்ரம்க்கு இப்பொழுது அவர்களோடு பயணம் செய்வதாக அல்லது தான் தன்னுடைய தங்குமிடத்திற்கு திரும்பி போவதா என்று புரியவில்லை.
“என்ன டாக்டர் அப்படியே நிக்கிறீங்க வாங்க வாங்க.” என்று அஞ்சலி அவருடைய கையையும் பிடித்து அந்த சைக்கிளில் ஏற்றவும், அவன் எரிச்சலோடு அந்த ட்ரை சைக்கிள்லில் ஏரி உட்கார்ந்தான். பக்கத்தில் அஞ்சலி தன் அம்மாவின் தலையை மடிமீது சாய்த்து கொண்டு உட்கார்ந்து இருக்க, அஞ்சலியின் மாமா என்று சொல்லிக் கொண்ட குடிகாரன் ஏனோ தானோ என்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அவர்கள் அந்த இடத்தில் இருந்து விக்ரமுடைய மெடிக்கல் கேப் நடக்கும் இடத்துக்கு சென்று சேர ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. அவர்கள் அனைவரும் கேம் நடக்கும் இடத்தை அடைந்ததும் விக்ரம், அஞ்சலியின் அம்மாவை பிடிக்க சொல்லி இரண்டு உதவியாளர்களுக்கு உத்தரவிடவும், அஞ்சலியின் அம்மா மெதுவாக ஒரு ஸ்ட்ரக்சருக்கு மாற்றப்பட்டாள். மருத்துவ உபகரணங்களை கொண்டு விக்ரம், அஞ்சலியின் அம்மாவின் உடம்பை பரிசோதித்து அவள் இறந்து விட்டாள் என்பதை உறுதியாக தெரிந்து கொண்டான்.
அம்மாவை எப்படியும் பிழைக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நின்றிருந்த அஞ்சலிடம் விசயத்தை எப்படி சொல்வது என்று அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதே சமயம் அஞ்சலிக்கு பின்னால் இருந்து அவளுடைய பின்புற வனப்பை ஆசையும் காமமுமாக பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய மாமாவை பார்க்க, விக்ரமுக்கு ஏனோ அவனை அடித்து கொன்று விடலாமா என்கிற அளவிற்கு ஆத்திரம் பற்றி கொண்டு வந்தது.
“ஏய்!” என்று பெரிய குரல் எடுத்து கத்திய விக்ரம் தன்னை சுற்றி ஆட்கள் இருப்பதையும் ஒரு பெண் இறந்து போய்விட்ட நிலையை அவளுடைய மகளிடம் அதை எப்படி சொல்வது என்ற மன வருத்தத்தையும் மனதில் கொண்டு தன்னை அடக்கி கொண்டான்.
“என்ன டாக்டர் திடீர்னு ஏன் இப்படி கத்துறீங்க என்ன ஆச்சு?” என்று அஞ்சலி பதறினாள்.
“இங்க பாருமா உங்க அம்மாவ செத்துப்போய் ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு எனக்கு உங்க வீட்டுக்கு வந்தப்பவே இந்த விஷயம் தெரியும். இத மெடிக்கல்லி நான் கன்பார்ம் பண்ணாம சொல்லக்கூடாதுன்னு தான் அம்மாவ இங்க கொண்டு வந்தேன் இப்போ கன்ஃபார்ம் ஆயிடுச்சு. நீ கொஞ்சம் தைரியமா இரு!” என்று விக்ரம் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்பாகவே அஞ்சலி பெரும் குரல் எடுத்து கதறி அழுதாள்.
அவளுடைய கதறலை பார்க்க விக்ரமின் மனதிற்குள் ஏதோ ஒரு பரிதாபமும் அதை தாண்டிய ஏதோ ஒரு உணர்வும் தோன்றியது. அஞ்சலியின் அழுகை அந்த பிரதேசத்தையே கொஞ்சம் பதட்டப்படுத்தியது. அங்கு இருந்த எல்லோருமே அஞ்சலியையும் அவளுடைய இறந்து போன அம்மாவின் உடம்பையும் கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்துவிட்டு அவரவர்களின் வேலையை பார்க்க போய்விட்டனர்.
அஞ்சலிக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. இதையே சாக்காக வைத்துக் கொண்டு அவளுடைய குடிகார மாமன், “ஏய் அஞ்சலி உனக்குன்னு இருந்தது. உங்க அம்மா மட்டும்தான் அவளும் போய்ட்டா பேசாம என்ன கட்டிக்கிறேன்னு வாக்கு குடு உங்க அம்மாவுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சு நல்லபடியா அனுப்பி வைக்கிறேன்.
அடுத்த முகூர்த்தத்திலேயே நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன சொல்ற?” என்று அவளுடைய கூந்தலை லேசாக தடவி எப்படி ஆறுதல் சொல்வது போல் அவளை உரச ஆரம்பித்தான்.
சில வினாடிகளிலேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அஞ்சலி கோபமாக திரும்பி மாமாவின் பார்த்துவிட்டு, அவனுடைய கையை தட்டி விட்டாள்.
“என்ன தைரியம் டா உனக்கு?” என்று கோபமாக அவள் கத்தவும் பதிலுக்கு, “என்னடி பத்தினி வேஷம் போடுற?” என்று அவளுடைய மாமாவும் கத்தினான். அவர்களுடைய அந்த சண்டையை இப்பொழுது அரைவட்ட வடிவில் ஒரு சின்ன கூட்டம் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
“ஏய் சும்மா கத்தி கூப்பாடு போடாத அனுசரிச்சு போ. நான் என்ன உன்னை வச்சிக்கிறேன்னா சொன்னேன் கட்டிக்கிறேன்னு தான் சொன்னேன் அதை நினைச்சு சந்தோஷப்படு அப்பன் ஆத்தா இல்லாத உன்னை சொத்து பத்து இல்லாத உன்ன படிப்பு இல்லாத உன்ன எவண்டி கல்யாணம் பண்ணிப்பான். அதுவும் உங்க ஆத்தாகாரி ஊரை சுத்தி கடன் வாங்கி வச்சிருக்கா
உன்னுடைய கடனை அடைக்கிறதும் என் தலையில தான் வந்து விழும் பாத்துக்கோ. இவ்வளவு தெரிஞ்சும் நான் உன்ன கட்டிக்கிறேன்னு சொல்றேனே அதுக்கு ஏன் நீ சந்தோஷப்படணும். நீ என்னடான்னா பெரிய இது மாதிரி சீன் போட்டுட்டு நிக்கிற?” என்று அவளுடைய மாமன் இப்போது உஸ்னமான குரலில் சொல்லிவிட்டு தன் இடையில் செருகி வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டான்.
“டேய் எடுபட்ட நாயே எங்க அத்தாலே செத்துப் போயிட்ட அப்புறம் என்ன டா மாமா
நீ ஒரு குடிகாரன் பொறுக்கி ஊர் ஃபுல்லா உனக்கே ஆயிர கணக்குல கடன் இருக்கு. இதுல்ல நீ ஏன் கடன கட்ட போறியா? போடா எனக்கு எல்லாம் தெரியும். எம் கடன் பிரச்சனைய நானே பார்த்துப்பேன்.” என்று அஞ்சலியும் சுற்றி இருக்கும் மக்களை பொருட்படுத்தாமல் குரல் எடுத்து கத்தினாள். அவர்களுடைய அந்த சண்டை அந்த இடத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பொருளாக மாறியது.
ஆனால், விக்ரமால் தான் இதையெல்லாம் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.’ச்..சீ என்ன ஆம்பள இவன் ஒரு பொண்ணு நிற்கதியா நிக்கிற அவளுக்குன்னு இருந்த ஒரே ஆதரவு அவங்க அம்மாதான் போல. அவங்களும் இப்போ செத்துப்போயிட்டாங்க. செத்துப் போன பொணத்த அப்படியே போட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் இப்படி நடுரோட்டில் இன்னும் அடிச்சுக்குறாங்களே?
அந்த குடிகாரன இந்த ஊர் ஜனங்க எதுவும் கேட்க மாட்டாங்களா? இல்ல இந்த பொண்ணுக்கு உதவி செய்ய யாருமே வர மாட்டாங்களா?’ என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த சமயம் விஷயம் கேள்விப்பட்டு எங்கிருந்தோ ஒரு பெரிய மனிதன் வெள்ளை வேட்டி சட்டையில் புல்லட்டில் வந்து இறங்கினான்.
“என்னமா பாப்பா உங்க அம்மா புட்டுக்கிட்டாளா?” என்று நக்கலாக கேட்டபடி தன்னுடைய புல்லட்டை நிறுத்திவிட்டு அஞ்சலி அருகே வந்தான். அவனைப் பார்த்ததும் அஞ்சலியின் கண்கள் இன்னும் சூடாக மாறியது.
“என்னமா கேக்கற சும்மா நிக்கிற உங்க அம்மா புட்டுக்கிட்டாளா? சரி போனது போகட்டும் நீ நமக்கு பதில் சொல்லு?” என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அஞ்சலியின் அம்மாவின் உடலை ஒரு பார்வையையும் அஞ்சலியை ஒரு பார்வையும் பார்த்தபடி அந்த புல்லட் காரன் கேட்டான்.
“நீ எல்லாம் ஒரு மனுஷனா? நான் எந்த மாதிரி சூழ்நிலையில் நின்னுட்டு இருக்கேன். இப்ப வந்து இப்படி பேசுறியே?” என்று அஞ்சலி சூடான குரலில் அவனை கேட்க, அவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், “பாப்பா நீ மட்டும் சரின்னு சொல்லு நம்ப அம்மாவுடைய காரியத்தை எல்லாம் முடிச்சுட்டு எங்கேயாவது வெளியூர் போயி சந்தோஷமா இருக்கலாம்!” என்று அவன் ரகசியமான குரலில் அதேசமயம் தாபத்தோடு பேசினான். இதைக் கேட்ட விக்ரமுக்கு அந்த புல்லட்காரன் மீது கோபம் அதிகமானது.
To be continued….
By மகிழம் பூ