அத்தியாயம் 15
அவசரமாக அங்கிருந்து நழுவி போக நினைத்த மதியை ,”டேய் நில்லுடா!” என்று பரந்தாமனின் குரல் அவசரமாக மிரட்டியது.
‘ஐயோ இவங்க குடும்ப பிரச்சினைல என்ன வச்சி செய்றாங்களே? நான் இதுக்கு தான் படிச்சி படிச்சி சொன்ன கேட்டுயா?’ என்ற மனக்குமுறலோடு அவன் மெதுவாக திரும்பி தன்னுடைய நண்பனை பார்த்தான்.
விக்ரம், அம்மா, அப்பா இருவரையும் நேருக்கு நேர் பார்த்து விட்டு, “அப்பா மதிய போக விடுங்க.” என்றான் .
“டேய் மரியாதையா சொல்லு அந்த பொண்ணு யாரு? அவளை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என்று விக்ரமுடைய அம்மா பார்வதி கோபத்தோடு கேட்கவும், விக்ரம் கொஞ்சம் தயங்கினான். பிறகு, “அம்மா நான் இந்த மாதிரி சொல்றதுனால தயவு செஞ்சு நீ கோபப்படாத அவ வேற யாரும் இல்ல என்னுடைய மனைவி தான்.” என்றான்.
அதைக் கேட்ட பார்வதியின் மனம் வெடித்து விடும் என்பது போல வலி கண்டது. பரந்தாமனின் முகத்திலும் ஏகப்பட்ட அதிர்ச்சி. “என்னடா சொல்ற!” என்று பார்வதி கண்ணீரோடு வாயை சேலை தலைப்பால் மூடி அழ ஆரம்பித்தாள்.
“டேய் என்னடா இது திடீர்னு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து உன் பொண்டாட்டின்னு சொல்ற என்னடா நடக்குது இங்க? ஏன்டா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க. உங்க அம்மா பாவம் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கிறா” என்று பரந்தாமன் ஒரு அப்பாவாக துடித்தார்.
“அப்பா அம்மா இரண்டு பேரும் நான் சொல்றத தயவு செஞ்சு கேளுங்க அஞ்சலிய நான் லவ் பண்ணி ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல. எங்களுடைய கல்யாணம் ரொம்ப டிராச்சரியான ஒரு விஷயம். பாவம் அந்த பொண்ணு 19 வயசுல பார்க்க கூடாத எல்லா கஷ்டத்தையும் பாத்துட்டா. நான் மட்டும் அவளை கல்யாணம் பண்ணிக்கலன்ன, அவ அந்த ஊர்ல மானம் மரியாதையோடு வாழவே முடியாது.” என்று நிறுத்திவிட்டு மதியை பார்த்தான்.
“நல்லா இருக்குடா நல்லா இருக்கு அந்த பெண்ணுடைய கதை முழுசா உனக்கு தான் தெரியும் நீயே சொல்லு?” என்று மதி பின்வாங்க விக்ரம் தொடர்ந்து அஞ்சலி உடைய கதையை தனக்கு தெரிந்த அளவிற்கு சொல்லி முடித்தான்.
“டேய் நீ கல்யாணம் பண்ணுது நிஜமாவே தப்பு டா அந்த மாதிரி அந்த பொண்ணு அனாதையா நிக்கறத பார்த்து உன்னால விட்டுட்டு வர முடியலன்னா எனக்கும் அப்பாவுக்கு நீ போன் பண்ணி கேட்டு இருக்கணும். இல்லனா மதி சொன்ன மாதிரி அவளை ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்துவிட்டு இருக்கணும் ஆனா நீ அவளை பொண்டாட்டின்னு சொல்லி வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்திருக்க. இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல.” என்று பார்வதி கோபத்தோடு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் தவித்த பரந்தாமன் அமைதியானர்.
“விக்ரம் அம்மா சொல்றபடி கேளுடா அந்த பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டது நம்ம நாலு பேருக்கு மட்டும் தானே தெரியும் நீ அந்த பொண்ணு கிட்ட பேசு. பக்கத்துல எதாவது ஒரு ஆசிரமத்துலையோ இல்ல ஹாஸ்டல்லையோ சேர்த்து விட்டரலாம். அவ அங்க இருக்கட்டும் அவளுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் நம்ம போய் பார்த்து செஞ்சிட்டு வருவோம். “என்று மதி பேசவும் விக்ரமின் மனதிற்குள் மதி மீது ஒரு கசப்பு தோன்றியது.
“அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டாலும் எடுத்துக்காட்டியும் அவதான் என் மனைவி.
அவ தான் இந்த வீட்டுக்கு மருமக.ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு அவளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லன்னு சொல்லி அவளை எங்கேயோ கொண்டு போய் விட்டுட்டு வர எனக்கு மனசு இடம் கொடுக்கல.அதனால நீங்க ரெண்டு பேரும் இதை பத்தி பேசி பெருசு பண்ண வேண்டாம். உங்களுக்காக ஊர் அறிய நான் அந்த பொண்ண கோவில வச்சு திருப்பி கல்யாணம் பண்ணிக்கிறேன். கிராண்டா ரிசப்ஷன் வச்சி ஏதாவது கதை சொல்லி சொந்தக்காரங்கள சமாளிச்சிடலாம்.”
“என்னடா பேசுற என்ன பேசுற?” என்று ஆவேசமாக எழுந்த விக்ரமுடைய அம்மா பார்வதி, விக்ரமின் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அரைந்தாள். குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்து நின்று அங்கு நடக்கும் ரகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியின் மனம் நெருப்பில் போட்ட புழு போல துடித்தது.
‘டாக்டர் அப்போ நீங்க என்ன விரும்பி என்ன கல்யாணம் பண்ணிக்கலன ஏன் என்ன இங்க கூட்டிடு வந்தீங்க.’ என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். விக்ரமுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ‘இவங்களை எப்பிடி சமாதனப்படுத்தறது.’ என்று தத்தளித்தான்.
“டாக்டர் சார்!” என்று அழைத்த படிய அஞ்சலி முன்னால் வரவும் அவளைப் பார்த்து விக்ரமுடைய அம்மாவிற்கு கோபம் அம்மா ஆத்திரமும் அதிகமானது. பார்வதி அந்தப் பெண்ணின் கூந்தலை கொத்தாக பிடித்து. அவளை இழுத்துப் போய் வெளியே தள்ளினாள்.
“போடி போ அனாத நாயே உனக்கு டாக்டர் கேக்குதா டாக்டர் மாப்பிள்ளை வேணுமா உனக்கு?
எத்தனை நாளா உட்கார்ந்து பிளான் பண்ண?
ஊருக்கு ஒரு இளிச்சவாய் டாக்டர் வருமான், அவனை எப்படியாவது வளர்ச்சி பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு யாரு திட்டம் போட்டு குடுத்தாங்க?” என்று ஆக்ரோஷமாக அவள் கத்தத தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லோரும் அவள் கத்துவதை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளில் மனித தலைவர்கள் அதிகம் வெளிப்பட ஆரம்பித்தன. எல்லோருமே ஏதோ ஒரு சினிமா காட்சியை நின்று பார்ப்பது போல சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பார்வதி மேலும் மேலும் அஞ்சலியை, “அநாத நாய் நீ உனக்கு செகுசு கேக்குத?
பணத்தை பார்த்ததும் பல்ல காட்டிடு வந்துட்டல்ல. என்ன மீறி நீ இந்த வீட்டுல்ல எப்பிடி வாழறன்னு நான் பாக்குறடி.” என்று அவமானப்படுத்தினாள். அதையெல்லாம் சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்த விக்ரமின் மனதிற்குள் அம்மா மீது அவன் வைத்திருந்த அன்பும் அவள் மீது வைத்திருந்த மரியாதையும் கண்ணாடி பாத்திரம் போல் நொறுங்கிப் போனது.விக்ரம் எதுவும் சொல்லாமல் தன்னுடைய அறைக்குள் போனான்.
தொடரும்..
By மகிழம் பூ