Ep 04 அந்த ஒரு வார்த்தை
எழில் அக்யூஸ்ட துரத்திகிட்டு ஓட அந்த அக்கியூஸ்ட் அம்மாக்கு வேதாக்கு தெரியாம மறஞ்சி ஒளிஞ்சி நின்று ஐஸ் கிரீம் சாப்ட்டுகிட்டிருந்த தென்றல பிடிச்சு இழுத்து இதுக்கு மேல 1 அடி எடுத்து வச்ச இவ கழுத்த அருத்துடுவே சொல்ல
டேய் விடுடா ஒன்னும் பண்ணிடாத ஒழுங்கா சரண்டர் ஆகிடு உன்ன ஒன்னு பண்ண மாட்டோம். சப்போஸ் உன்னால அந்த பொண்ணுக்கு எதாச்சும் ஆச்சு மகனே நீ செத்த ஃபர்ஸ்ட் கழுத்துல இருந்து கத்தி எடு ..
எழில் இவண்ட பேசிட்டிருகப்போவே.. தென்றல் அம்மாவும் வேதாவும் இவள ஹாஸ்பிடல் உள்ள எல்லா இடத்துலயும் தேடி அவ அங்கயில்லமா இருக்கவும் அவள தேடி வெளிய வரவும் அங்க தென்றல் பயத்துல கண்ண இருக்க மூடி பயத்துல நடுங்கி போய் நிக்கிறா… அவ கழுத்துல ஒருத்தன் கத்தி வச்சு நிக்கிறத பாத்து ரெண்டு பேரும் பதரி போய்
அம்மா தென்றல்…. தென்றல்.. தம்பி என் பொன்ன விட்டுடு அவள ஒன்னு பண்ணிடாத
உன் பொன்ன விடனுமா அப்டின்னா இந்த போலீஸ இங்கிருந்து கிளம்ப சொல்லு நா விட்டுறே…அவன் பேசிட்டிருக்கப்போ வேதா அவண்ட போய்
டேய் அக்காவ விடுடா விடு. விடுடா..சொல்லி அவன கைய பிடிச்சு உழுக்கிக்கிட்டே அடிக்க அவன் வேதாவ தன்னோட பின்னங்கை கொண்டு வயித்துல ஓங்கி குத்துரா அவன் குத்துன வேகதுலையும் வலி தாங்க முடியாம கீழ விழுந்துடுரா வேதா….அம்மா விஜயாவோ இதெல்லாம் பாத்து மயங்கி கீழ விழுந்துடுறாங்க….வேதாவ கீழ தள்ளி விட்ட அடுத்த நிமிஷம் தென்றல் கழுத்துல ஓங்கி கழுத்துல கத்திய அழுத்த பயத்துல அவ அம்மானு கத்துரா
அவ கத்துன அடுத்த நிமிடமே எழில்கு தலை வெடிக்கும் அளவுக்கு வலிக்க..கண்கள் கலங்க. தன் அம்மாவ ஒருத்தண் கத்தியால கழுத்த அறுத்த நிகழ்வு நியபகத்துக்கு வந்து வந்து போக….
அன்று அம்மாவும் மீராவும் என்னாலதான இறந்தாங்க இன்னிக்கும் இந்த பொண்ணு என்னாலதா இப்படி நிக்கிரா நா மட்டும் அவன துரத்திட்டு வராம இருந்திருந்தா அவன் இப்படி அவ கழுத்துல கத்தி வச்சி நின்னிருக்க மாட்டான்ல என்ற எண்ணங்கள் அவன் மனதில் தோன்ற பல நாள் அவன் இறுக்கி பிடித்து வைத்திருந்த கண்ணீர் தன்னால் ஒரு உயிர் போகி விட கூடாது என நினைத்து அவன் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் வேலையில் மீண்டும் அவனை அறியாமல் தன் அம்மாவ ஒருத்த கத்தியால கழுத்த அறுத்த நிகழ்வு நியாபகத்துக்கு வந்து வந்து போக…. தான் ஒரு போலீஸ் அவன் ஒரு கைதி என்பதையும் மறந்து சிறிது நொடி அந்த இடத்தில் தன் தாய்க்கு மகனாக இருந்த எழில் யாரென்றே தெரியாத யாரோ ஒருத்திக்காக அவன் கண்கள் கலங்கி மனக் கவலைகளும் கோவமும் கலந்த கண்ணீர் வெளியே வர போகும் வேலையில் தான் போலீஸ் என்பதை உணர்ந்து தன்னை சுதாரித்தவன் வெளியே வர இருந்த அந்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டு தன் கம்பீர குரலில் அவள விடுடா என அவன் போட்ட சத்தத்தில் அந்த இடமே அப்படியொரு நிசப்தம்….
இங்க ஸ்ரீ வேற ஒரு பக்கமாக அவன தேடிட்டு இருக்க எழில் கத்துண சத்ததுல அந்த இடத்துக்கு ஓடி வரா ஸ்ரீ…வந்தவ அங்க இருக்க நிலையை பார்த்து அதிர்ந்தாலும் பின் ஒரு நிமிடம் தன்னை சுதாரித்து…அவன் அந்த அக்கியுஸ்ட்க்கு பின் பக்கமாக இருக்கவும் அதவே சாதகமா வச்சி அவன் பின்னாடி மெதுவாக போய் தான் வச்சிருந்த பிஸ்டலலுல தன்னோட மொத்த பலத்தையும் இறக்கி தென்றல் கழுத்துல கத்தி வச்சிருந்த கைய அசைய விடாமல் இருக்க பிடிச்சு அவன் தலைல பிஸ்டலால ஓங்கி ஒரு குத்து அடுத்த வேகத்தில் அவன் அலற தொடர்ந்து இரண்டு முறை மீண்டும் மீண்டும் குத்த அவன் மயங்கி கீழ விிழு
ஸ்ரீ அவனை முதல் முறை துப்பாக்கியால அடிச்சப்போவே தென்றலை தன் பக்கமாக இழுக்க இங்க பயத்துல கண்ண மூடியே இருந்த தென்றல் தன் மீது ஒருவன் கத்தி வைத்திருந்த பய்த்திலும் எழில் அவளை பிடித்து இழுத்த வேகத்திலும் மீண்டும் இரண்டாவது முறையாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்கிறாள்.
அன்று போல் இன்றும் பயத்தில் அவள் உடல் எங்கும் நடுங்க அவளின் பயம் உணர்ந்தவனாய் அவள் தோளில் தட்டி கொடுத்து தலையை வருடிக் கொண்டு…
“பயப்படாத … யூ ஆர் சேஃப நவ் சூறாவளி….”
அவன் சொன்னதில் இவள் பயம் சற்று குறைந்து உடல் நடுக்கமும் குறைந்துது…
கீழே விழுந்து கிடந்த வேதா மற்றும் விஜயாவை பார்த்த ஸ்ரீ விஜயாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவர் கண் திறக்கவே இல்லை.. பின் டாக்டரை அழைத்து அவருக்கு என்னாச்சு என பார்க்கும் படி சொல்ல அவர்களும் விஜயாவிற்கு டிரீட்மென்ட் தருவதற்காக உள்ளே தூக்கி சென்றனர்
சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்துல பிரேம் அண்ட் 2 போலீஸ் வரவும் அவங்ககிட்ட அந்த கைதிய கூப்ட்டு போக சொல்லவும் அவங்களும் அவன கூப்ட்டு போய்ட்ராங்க
இங்க வேதாவோ வயிற்றை பிடித்து கொண்டு வலியால் துடித்து கொண்டிருந்தாள் அவளை கண்ட ஸ்ரீ அவளிடம் சென்று அவளை தூக்கி விட்டு எழுப்பி நிற்க வைக்க அவளால் நிற்க கூட முடியாமல் மீண்டும் வயிற்றை பிடித்து கொண்டே அமர்ந்தாள் .. எழில் கத்திய சத்தத்திலே அங்கு வந்தவன் வேதாவை அவன் வயிற்றில் குத்தி தள்ளி விட்டதை அறிந்திருக்கவில்லை…. அதனால் இவளுக்கு என்னாச்சு என்பது போல் முளிப்பதை பார்த்து பின் வேதாவே நடந்ததை சொல்ல
அவளின் வலியை உணர்ந்தவன்… என்ன செய்வதென்று புரியாமல் உள்ளே சென்று ஒரு நர்சை அழைத்து வந்து அவளை உள்ளே அழைத்து செல்ல உதவுமாறு சொல்லவும் அவளும் வேதாவை அழைத்து செல்ல இவனும் அவர்களுடன் செல்ல வேதா இவன் கையை வலியால் விடாது பிடித்திருந்தாள்…
அவளின் பிடியில் அவள் வலியை உணர்தவன் அவள் தன் கை பற்றியிருப்பதை பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்
இங்கு எழில் மீது சாய்ந்திருந்த தென்றலோ தன்னிலை உணர்ந்து சுதாரித்தவல் அச்சச்சோ இவனா …இவர் மேலயா சாஞ்சிட்டு நிக்கிரோம் ….இப்போ திட்டுவான்னே… ரைட்டு நம்ம ரூட்ட ஃபாலோ பண்ண வேண்டியதுதான் என்றெண்ணி தன் வேலையை ஆரம்பித்தாள்
“ஹலோ மிஸ்டர் டம்மி போலீஸ் ஐ ஆம் நாட் சூறாவளி…. எனக்கு எங்க வீட்ல பேர் வச்சிருக்காங்க… ஓகே????”
“பார்டா இப்போ எங்க போச்சு அந்த நடுக்கம்… இவளோ நேரம் என்னமா பயந்த இப்போ வாய பாரு… உன்னோட இந்த வாய் ஜாலத்த அவன் கழுத்துல கத்திய வச்சு நின்னப்போ காட்டிருக்களாம்ல… உன்ன அப்படியே அவன்ட்ட விட்டுட்டு போய் இருக்கணும்…. ஒரு வேளை விட்டுட்டு போய் இருந்தாலும் அவன்தான் உன்னோட பேச்ச கேக்க முடியாம தெரிஞ்சு ஒடி இருப்பான்….” அவன் அவள் வாயில் இருந்து வரும் டம்மி போலீஸ் என்ற அந்த ஒரு வார்த்தைக்காகவே அவளிடம் வம்பிலுத்து கொண்டிருந்தான்….அவன் நினைத்தது போலவே
அவளும் அந்த வார்த்தையை சொல்லி விட்டாள் .
“ஹலோ டம்மி போலிசு என்ன சொன்னீங்க இப்போ.. அவ என் பேச்ச கேட்டு தெரிச்சு ஒடியிருப்பானா… என்ன பாத்தா உங்களுக்கு எப்டி தெரியுது
நா என்ன வாயாடியா.?”
“ஓ.. இதுல உனக்கு சந்தேகம் வேற இருக்கா.. நீ வாயடினு நா சொல்லிதா உனக்கு தெரியணுமா.. உனக்கா அது தெரியாதா…. என்னப்பா இது சின்னப் புள்ள தனமா”
“என்ன சொன்னீங்க மீ வா யாடி????”
“அட என்ன சூறாவளி இப்படி கேட்டுபுட்ட.. .ஓ என் வாயால அத சொல்லி கேக்கணும் போல இருக்கா ஓகே.
உன் ஆசய எதுக்கு கெடுத்துகிட்டு …. வாயாடி வாயாடி நீ வாயாடிதான்.”
“நானா வாயாடி நீதா வாயாடி , சேடிஸ்ட்,டம்மி போலீஸ். .”
இவர்கள் சண்டையை பார்த்து கொண்டே இதுங்களுக்கு வேர வேலை இல்ல போல என்ற பார்வையில் நடந்து வந்தான் ஸ்ரீ….
“இந்தாமா சூறாவளி .. என்ன எப்போ பாரு என் நன்பனவே டார்கெட் பண்ணி வம்பிலுகுற…”
“நல்லா கேளு மச்சா என்ன எப்போ பாரு டம்மி போலிசு டம்மி போலிசு அப்படீனே சொல்லிட்டேயிருக்கா மச்சா …” என்றான் எழில் முகத்தை பாவமாக வைத்து கொண்டு….
“நீ பெரிய ஒழுங்கா … நீயும்தாண்டா இவகிட்ட வம்பிலுத்துகிட்டிருக்க மூடிட்டு இரு . “என்ற பார்வையில் அவனை பார்த்து விட்டு
“இந்தாம சூறாவளி இவளோ பேசுறியே உண்ண காப்பத்துணகு ஒரு சின்ன தைக்ஸ் சொண்ணியா”
“ஹலோ ஹலோ நா எதுக்கு தாங்க்ஸ் சொல்லணும்… நா பேசாம நா உண்டு என் வேல உண்டுன்னு அம்மாக்கு வேதாக்கும் தெரியாம ஐஸ்…. ஹா அம்மா. ……. வேதா……… அம்மா… வேதா…. அம்மா எங்க காணா….”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…”
“எங்க மச்சா என்ன டம்மி போலிசுனு சொல்லி திட்டுறதுக்கே இவளுக்கு நேரம் பத்தல இவ எபடிடா…”
“பிளீஸ்……… ஸ்டாப்….. அம்மா வேதா எங்க… சொல்லுங்க போலீஸ் போலீஸ்”
எழில் சிறித்தே விட்டான் “அது என்ன ரெண்டு போலீஸ்”
“ஹ்ம்ம் ரெண்டு பேர் இருக்கீங்களா அதா….”
“ஒ.” (ஸ்ரீ எழில் கோரஸ் பாட)
அவள் கண் கலங்க தொடங்கியது…. “அம்மா வேதா ….”
பின் அவள் கலங்கிய கண்ணை பார்த்த எழில்
“எம்மா சூறாவளி என்ன கண்ணு கலங்குது… அழுது புடாத பாக்ரவங்க எங்கள எது சொல்லுவாங்க நாங்கதா உண்ண மிரட்டி அழ வச்சோமுனு பேசுவாங்க…அப்பறம் இது மீடியாக்கு தெரிஞ்சு அவனுங்க இளம்பெண்ணை மிரட்டி அழ வைத்த இரண்டு போலீஸ் அப்படீன்னு போட்டு இல்லாத ஒன்ன வச்சு நியூஸ் கிளப்பி விட்டுருவாங்க … பட் அவங்களுக்கு தெரியாது உனக்கு அந்த அளவுகெல்லா சீன் இல்லனு…” என சிரித்தவாறு சொல்லி கொண்டே ஸ்ரீயிடம் கண்ணகளாலே இருவரும் எங்கே என கேட்டான் எழில்….
“உள்ளதா மச்சா டிரீட் மென்ட் போய்ட்டு இருக்கு….”
“என்ன சொல்றீங்க…என்னாச்சு அவங்க ரெண்டு பேருக்கு”
“யே பயத்துல கண்ண மூடி இருந்த சரி காது கூடவா கேக்கல…இங்க நடந்தத எதயுமே நீ காது கொடுத்து கேக்களியா… பயப்படாத அவங்களுக்கு பயப்படுர மாதிரி ஒனும் இல்ல. அம்மா ஷாக்லதா பிரசர் கூடி மயங்கிட்டாங்க.. தென் உங்க சிஸ்டர் வேதா அவன் வயித்துல கைல குத்தி கீழ தள்ளுனதுல ரொம்ப பெயினா இருக்கு சொன்னாங்க.. அதா ரெண்டு பேருக்கு உள்ள டிரீட் மென்ட் போய்ட்டு இருக்கு…. வாங்க போய் பாக்கலாம்…”
அவங்க கிளம்பு போதே வேதா வெளிய வந்தா
“வேதா இப்போ எப்படி இருக்கு”
“ஹ்ம்ம் இப்போ பரவா இல்ல அக்கா….”
“அம்மா எங்கடி?”
“உள்ளதா .. வா போய் பாப்போ”
நாலு பேரு உள்ள போறாங்க…… மயக்கத்தில இருந்து விஜயாவும் கண் முழிக்க நாலு பேரும் உள்ள போய் பாக்ராங்க… உள்ள போய் அவங்க நலன் விசாரிச்சு அவங்க அம்மா எந்த பதிலும் பேசாம தென்றலவே பாக்ராங்க அவங்க பயத்துல இருந்து வெளிய வரலைன்றத பாத்ததும் தெரிந்து கொண்ட எழில் அந்த இடத்த நார்மலா மாத்த நினச்சு விஜயா கைய பிடிச்சு
“அம்மா பயப்படாதீங்க உங்க பொண்ணுங்க ரெண்டு பேருக்கு எது ஆகல ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்தவன்தா அவ எங்க நாங்க அவன பிடிச்சிடுவோம்ன்ற பயத்தில இப்படி பண்ணிட்டா … நீங்க எதுக்கு கவல பட வேனா அவன பிடிச்சுட்டோம்… அப்பறம் இனிமே உங்க பொன்ன ஐஸ் கிரீம் சாப்புடுறத கம்மி பண்ண சொல்லுங்க… பாக்ரப்போ எல்லா கைல ஐஸ் கிரீம் வச்சிட்டேதா இருக்காங்க…”
“எங்க தம்பி சின்ன பிள்ளைலயிருந்து நாங்களு எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம்… கேக்க மாட்டரா இது எதோ ஒரு நோய் மாதிரியே போச்சு எப்பவாச்சுனா பரவாயில்லை எப்பவுமே இதவே சாப்பிட்டு திரிரா”
“நீங்க மண்டைல்ல நாலு தட்டு தட்டி புத்தி சொல்லிட்டு போங்க தம்பி…”
இப்போ எழிலுக்குக்கு ரொம்பவே சாதகமாகவே போச்சு😀
எழில் தென்றல் வருவார்கள்