Ep-2 காலர் டியூன்
*** இதுவரை***
ஐஸ் கிரீம் வாங்க போன தென்றல் ஓரு லாரி மோத அப்போ எழில்தா அவள காப்பாதிட்டு கூடவே அவளுக்கு சில பல தீட்டுகள கொடுக்கவும் அதுல கடுப்பான தென்றல் அவன டம்மி போலீஸ் அப்படீன்னு கிண்டல் பண்ணிட்டு அங்கிருந்து கிளம்பி உமாகிட்ட போய் சில பல திட்டுகள வாங்கிட்டு 2 பேரு. பஸ் மிஸ் பண்ணதுலநடந்து போலா முடிவு பண்ணி நடக்குராங்க பட் மழ வந்திடுச்சு.. ஸ்ரீ அவங்க 2 பேரு மழைல நனஞ்சுகிட்டே போரத பாத்து அவங்கள வீட்ல ட்ராப் பண்றேன்னு சொல்லி ஜீப்ள ஏற சொல்ரா…. பட் எழில் தன்னை டம்மி போலீசுனு சொல்லி வம்பு பன்ன தென்றல் கைல ஹேன்ட் கப் மாட்டிட்டுதா வரனு சொல்ல தென்றலும் உமா வீட்டில போட்டு கொடுத்திட கூடாதுனு அவ சொல்ரத கேட்டு கைல ஹேன்ட் கஃப் மாட்டி ஜீப்ல ஏறுறா…. எழில் அவ படுர அவஸ்தைகளை ரசிசுகிட்டே வரா
இனி
********************************************எழில் தென்றல் முகத்தை தூக்கி வச்சு உக்காந்து புலம்பிக்கிட்டே வரத பாத்து
” என்னவா டம்மீண்ணு சொன்ன உனக்கு இது தேவதான்னு” மனசுல சிரிச்சிட்டே வரா…..
இதை கவனித்த தென்றல் ….. “எப்படி சிரிச்சுகிட்டே வரா பாரு கோல் கேட் விளம்பரத்தில் வர பசு மாடு பல்ல காட்டுற மாதிரி….. ” என்று மனதில் அவனை தீட்டிகொண்டே வந்தாள்.
ஸ்ரீ, உமாவிடம் வீட்டிற்கு செல்வதற்குரிய பாதையை கேட்டு வண்டியை இலகுவாக ஓட்டி சென்றான்.
“என்ன மஞ்ச சுடிதார் இப்டி அரெஸ்ட் ஆன அக்கியூஸ்ட் மாதிரி உக்காந்திருக்க…. இப்ப புரின்ஞ்சிருக்குமே நா நிஜ போலீசா இல்ல டம்மி போலீசானு ஒத்துக்கிரியா நா நிஜ போலீஸ்னு…..”
“யோவ் டம்மி போலிசு நீ என்ன பன்னாலும் நா ஒத்துக்கவே மாட்டேன்… நீ என் கைல ஹேன்ட் கஃப் மாட்டுன லட்சனுதுளியே அது எனக்கு தெரிஞ்சது … எதோ உன் மடில வச்சு பொண்டாட்டிக்கு வளையல் மாட்ற மாதிரி மாட்டி விடுற…?”
அவ பேசிட்டு இருக்கபோவே அவன் ஃபோன் அவனை அழைத்தது…
“””எழுதுங்கள் என் கல்லறையில்அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்இவன் பைத்தியக்காரன் என்று
மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது”””
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்திய ஸ்ரீ வேகமாக திரும்பி தென்றலை பார்த்தான் அவள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தாள்….
உடனே அவன் எழில் பக்கம் திரும்ப அவன் அவளை தீயாய் முறைத்தான்
இங்கு ஸ்ரீரியின் நிலைதான் பாவமாக இருந்தது அடக்க முடியாத சிரிப்பை நண்பனுக்கு பயந்து அடக்கி கொண்டிருக்க
உமாவோ இங்க என்னடா நடக்குது நா ஒருத்தி இருக்கேன் டா என்ற பாணியில் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்…எழில் தென்றலை முறைத்துகொண்டே கால் அட்டென் பண்ணி
“சொல்லு பிரேம் ….. வுவாவ்.. சூப்பர் இதோ நாங்க ஒரு 15 மினிட்ல அங்க இருபோ…”
ஸ்ரீ அவனிடம்
“எழில் யார் போன்ல?”
“நம்ம பிரேம் தான் ஸ்ரீ இப்போ நம்ம சீஸ் பண்ண கன்டெய்னர் செக் பண்ண சொல்லியிருந்தேன் அத செக் பன்னதுல அவனுக்கு அகைன்ஸ்டா சில ஆதாரம் இருக்கா” என்று சொல்லி கொண்டு நண்பர்கள் இருவரும் ஹை ஃபை கொடுத்து கொண்டனர்…
இப்போ தென்றலும் உமாவுடன் சேர்ந்து கொண்டால் இங்க என்னடா நடக்குது நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்டா என்ற பானியில் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள்…
பின் இருவர் அலப்பரையை தாங்க முடியாத தென்றல்
“யோவ் டம்மி போலிசு என்ன ஒவர் சீனா இருக்கு.. இப்டில பன்னா, இந்த மாதிரிலா பேசுனா நா நம்பிடுவேனா ….நீயே சொல்லு நீ வச்சிருக்க ரிங் டோன் பாத்து யாராச்சும் உண்ண நிஜ போலிசு சொல்லுவாங்கலா சொல்லு… உன் ஹையர் ஆபீஸர் யாராச்சும் எது சொல்ல. மாட்டாங்களா….?”
“என்னடி சொல்டர நா இந்த ரிங் டோன் வசதுக்கு காரணமே நீதா ….”
அவன் அப்படி சொன்ன வேகத்தில் ஸ்ரீ வண்டியை நிறுத்தினான்
பின் உமா தென்றல் ஸ்ரீ மூவரும் அவனை பார்க்க எழில் ஸ்ரீ யிடம்
“இப்போ ஏண்டா வண்டியை நிப்பாட்டுன?”
“இல்ல இவங்க இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு ….அதா…”
“அம்மா தாயே சூறாவளி கிளம்புமா?” என்று சொல்லி ஹேன்ட் கஃபை கழட்டி விட்டான்.
“என்னால எதுக்கு இந்த ரிங் டோன் வச்சீங்க நா நா….. என்ன ….. பண்..”
“ஸ்ரீ வண்டிய எடு அதா இறக்கி விட்டாச்சுல கிளம்பு வொர்க் இருக்கு” என்று சொல்ல அவன் கோவத்தின் காரணம் புரியாமல் வண்டியை போலீஸ் ஸ்டேஷன் நோக்கி கிளப்பினான் ஸ்ரீ…
ஜீப்பில் இருந்து கீழே இறங்கிய தென்றல் உமாகிட்ட
“ஏண்டி நா என்னடி பண்ணேன் அந்த ஆளு என்னாலதான் அந்த ரிங் டோன் வச்சே சொல்ராரு….”
“அம்மாடி நீ அவர்கிட்ட அடிக்கிற வாய பாத்தா எனக்கென்னமோ அவர் சொன்னது உண்மைன்ற மாதிரிதா இருக்கு அப்படி என்னடி பண்ண தென்றல்”
“ஹே உமா என்னடி இப்படி பேசுற நீயுமா…. அந்த ஆளு… சொன்னத…”
“பின்ன என்னடி மூச்சுக்கு முன்னூறு தடவ டம்மி போலிசு டம்மி போலிசுனு சொல்லிட்டு வரா… உனக்கு அவர பாத்து பயமா இல்லையா?”
“உமா பில்டிங் ஸ்ட்ராங் பட் பேஸ்மெண்டு வீக்கு 😃😃😂🤭நீ அவருக்கிட்ட பேசுனப்ப என் மூஞ்சியதான பாத்த என்னோட கால பாக்களியே என்னாமா நடுங்குச்சு தெரியுமா… அந்த ஆளு கண்டிப்பா பாத்திருக்க வாய்ப்பு இருக்கு உமா”
“என்னடி சொல்ற 🤔?”
“ஆமடி அந்த லாரி என் மேல மோத போனபோ அவரு என்ன காபத்தினாரு அப்போ நா பயத்துல அவரு நெஞ்சுல சாஞ்சிட்டு எழும்பவே இல்லையா அதா அவர் எங்க திட்டிருவரோ இல்ல அடிச்சிருவாரோனு பயம்… அதா…அந்த. பயத்த வெளிய காட்டாம இருக்ரதுக்குதா அவர்கூட சண்ட போடுற மாதிரி ஆக்ட் பண்ணேன்.. பட் மறுபடியும் அவங்க வந்து ஜீப்ல ஏற சொன்னது அப்டியே கோவமா இருக்க மாதிரியே மெயின்டெய்ன் பண்ண வேண்டியதா போச்சு என வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு சொன்னால்… இருந்தாலும் அந்த ஆளு என் ட்ரெஸ் கிண்டல் பண்ணது செம்ம கோவம்….”
உமா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்…
இருவரும் பேசிட்டே வீட்டுக்கு வந்தப்போ தென்றல் அப்பா(விஜயன்) வெளியே நிற்க உமாவிற்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது
“அடியே தென்றல் நா பேசிட்டே உங்க வீட்டுக்கு வந்துட்டேன் … நீயாச்சு சொல்லிருக்கலாம்ல அங்க பாரு மிலிட்டரி அருவாளே இல்லாத அய்யனார் மாதிரி நிக்கிராரு🥶🥶”
“இல்லடி உமா நா கவனிச்சேன் பட் அப்பா இருக்கவும் திட்டு வாங்க போறதுன்னு கன்பார்ம் ஆகிட்சு சேந்தே திட்டுவாங்குவோம் அப்டின்னுதாண்டி சொல்லல…”
“அடி பாவி 😠😠😠😠😠😠உன் நட்ப இங்கதா காட்டனுமா”
“ஹி ஹி ஹி🤪🤪🥰 நட்புக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா”
“என்னம்மா உமா இதெல்லாம் எக்ஸாம் மணிக்கே முடிஞ்சு இருக்கும்ல யேன் இவ்ளோ லேட்…?”
உமா பதில் சொல்லு முன் தென்றல் முந்திக்கொண்டு
“பஸ் வரலப்பா அதா”
“அப்பா இவ பொய் சொல்ராப்ப நம்பாதீங்க நீங்க உமாகிட்டயே விசாரிங்க அவதா உண்மைய சொல்லுவா” என்று உமா தென்றல் இருவரையும் நக்கலாக முறைத்துகொண்டே அங்கு வந்து ஆஜர் ஆகினான் தென்றல் அண்ணன் ராஜ்…
“ஹலோ வக்கீல் அண்ணா நீங்க எதுக்கு இப்போ வந்து ஆஜர் ஆகுறீங்க இது ஒன்னும் உங்க கோர்ட் கிடையாது பாய்ண்ட் கண்டுபிடிச்சி பேச”
“தென்றல் சும்மா இரு. உமா நீ சொல்லு” என தென்றல் பேச்சிற்கு அணை இட்டார் விஜயன்
“அப்பா .. அது வந்து பா ஐஸ் .. லாரி… பஸ் கிரீம்..”
“என்ன உலருற சொல்லு”
“அது பா ஐஸ் பஸ் பஸ் ஐஸ்”
“என்ன உமா பஸ்ல ஐஸ் வித்தியா சொல்லு உமா சொல்லு” என நக்கலடித்தான் ராஜ்
கோவமா அவனை முறைத்த உமா
“ப்பா அது ஒனுமில்லப்பா தென்றல் தான் ஐஸ் வேனு சொல்லி நா எவ்ளோ சொல்லியும் கேட்காமல் அடம் பிடிச்சு ஐஸ் வாங்க போய்ட்டா ப்பா அதனால பஸ்ஸ மிஸ் பண்ணிட்டோம்ப்பா அதான்…… ” என்று அவள் பேச்சை இழுத்துகொண்டிருக்கயில் விஜயன் பார்வை தென்றலை நோக்கி சென்றது…
“பத்த வச்சிட்டியே பரட்ட… ஏண்டி உமா….நா பாவம் இல்லையா…..”
“பின்ன என்னடி தென்றல் உங்க அண்ணன் என்ன ரொம்ப கிண்டல் பன்னா அதா… அது மட்டுமில்லாம என்ன பண்ண நீ அபடியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாரு….”
இல்லடி உமா நா கவனிச்சேன் பட் அப்பா இருக்கவும் திட்டு வாங்க போறதுன்னு கன்பார்ம் ஆகிட்சு சேந்தே திட்டுவாங்குவோம் அப்டின்னுதாண்டி சொல்லல…
அடி பாவி 😠😠😠😠😠😠உன் நட்ப இங்கதா காட்டனுமா
ஹி ஹி ஹி🤪🤪🥰 நட்புக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா”***
“அடி பாவி இப்டி பலி வாங்கிட்டியேடி உமா😤🥶🤔🥶😤😠”
“ஹீ ஹூ ஹீ 🤪🤪🥰 நட்புக்குள்ள இதுவும் சாதாரணமப்பா…….. ப்பா நா கிளம்புரேன்ப்பா… தென்றல் செல்லம் நா கிளம்புறேன்” என்று சொல்லிட்டு ராஜை பார்த்து😏மூக்கை சுளித்து கொண்டு கிளம்பினாள்…
ராஜ் அவள் சென்ற திசையை சிரித்தவாறே பார்த்து கொண்டிருந்தான்
இங்கு தென்றலுக்கோ அவள் எது நடக்கக்கூடாது என்று நினைத்து உமாவிற்கு எக்ஸ்ட்றா ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாலோ அது மொத்தமும் வீண் போனது  பஜனை தொடங்கியது…
(தென்றல் மைன்ட் வாய்ஸ் 😤😤 அய்யோ ராமா இவர் அழும்பு தாங்களியே மிலிட்டரில மெடிகல் சைட் வொர்க் பண்ணி 4 பேருக்கு ஊசிய குத்திட்டு வந்து இங்க வந்து எதோ மில்ட்டிரில பார்டர்ல நின்னு சண்ட போட்ட மாதிரியே இவளோ சேட்ட பண்றாரே😭😭 என்று மனதில் புலம்பி கொண்டிருந்தாள்)
இங்கு தென்றல் உமா இருவரையும் ட்ராப் செய்துவிட்டு ஸ்டேஷன் சென்ற எழில் ஸ்ரீ அவர்கள் வேலையை செய்ய துவங்கினர்
ஸ்ரீ கன்டெய்னர் லாரி டிரைவரை அடித்து துவைத்து விசாரித்து கொண்டிருந்தான்
எழில் கிடைத்த ஆதாரங்களை நன்கு ஆராய்ந்து. விட்டு
“பிரேம் இப்போ இருக்க இந்தத் எவிடன்ஸ் இப்போதிக்கு நமக்கு யூஸ் ஆகாது பட் இந்த கேஸ்கு இது எதாச்சும் ஒரு வழியில ரொம்ப இம்பார்ட்டன்ட்டா இருக்கும் நினைக்குறே சோ இதபத்தி ஒரு பைல் ரெடி பண்ணி எனக்கு மெயில் பண்ணிருங்க ” சொல்லிட்டு கிளம்பி போரா
வீட்டுக்கு போனவன் யார் கண்ணுலயும் படாம டைனிங் டேபிளில அவனுக்காக காத்துகிட்டு இருந்து சாப்பாட்ட சாப்பிட்டு அங்க சுவத்துல மாலையோட தொங்கிட்டிருந்த அவன் அம்மா ஃபோட்டோவுக்கு குட் நைட் சொல்லிட்டு யாரும் தன்னை பாக்களைன்ற நினப்புல பெருமூச்சு விட்டு மேல போய் தூங்க போரா…
பட் அவன இரண்டு கண்கள் வாட்ச் பண்ணிட்டிருந்தத அவன் கவனிக்கல.
இங்கு தென்றலோ தந்தையின் பஜனையை தாங்க முடியாமல் அண்ணன் ராஜை பார்த்து காப்பாற்று என சைகை செய்ய அவனோ அவளை பார்த்து சிரித்து கிண்டல் செய்தான்.
கோவமான தென்றல் போடா எருமை என அவனை திட்டி விட்டு தன் தாய் விஜயா மற்றும் தன் தங்கை வேதாவை பாவமாக பார்க்க விஜயா தன் மகளை காப்பாற்றும் விதமாக
” இங்க பாருங்க உங்களுக்கு வேற வேலையே இல்லியாஎப்போ பாருஅவ கூடவே வம்பு பன்னிட்டு இறுக்கீங்க பாவம் பிள்ளை இப்போத காய்ச்சல் வந்து சரி ஆகிறுக்கு மழை வேற தூறிகிட்டே இருக்கு.. நீங்க என்னடான்னா அவள உள்ள அனுப்பாம வெளிய நிக்க வச்சே பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு இது நல்லாவா இருக்கு தென்றல் நீ உள்ள போடா ” என்று ஒங்கிய குரலில் கூற தென்றலோ தன் அண்ணன் ராஜை பார்த்து சிரித்துக் கொண்டே வக்கனை செய்துவிட்டு விஜயாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு உள்ளே சென்றாள்.
விஜயாவோ தன் கணவன் முகத்தை ஆசையாக பார்த்து அவரிடம் “ஏங்க உங்களுக்கு பிடிக்குமேன்னு உங்கலுக்குப் பிடிச்ச பருப்பு உருண்ட குழம்பு செஞ்சுறுக்கே வந்தீங்கன்னா சாப்டலாம் இல்லனா நானும் சாப்டாம போய் தூங்கிடுவே “என்று சொல்லி கொண்டே விஜயன் அருகில் செல்ல
விஜயனோ தன் மகளை காப்பாற்ற விஜயா நடத்திய நாடகத்தை நினைத்து அவளை பார்த்து சிரித்தவாறே முறைத்து கொன்டு
” ஏ எனக்கு மட்டும்தா புடிக்குமா உனக்கு பிடிக்காதா வா போய் சாப்பிடலாம் ” என்று கூறி உள்ளே அழைத்து சென்றார்.
தென்றல் தனக்கு பசி இல்லை பசித்தால் பிறகு சாப்பிட்டு கொள்கிற்றேன் என்று சொல்லி உள்ளே சென்று என்னடி சொல்டர நா இந்த ரிங் டோன் வசதுக்கு காரணமே நீதா …என்று எழில் சொன்ன அந்த வார்த்தையை ரீவைன்ட் செய்து ரீவைன்ட் செய்து குழம்பி கொண்டிருந்தாள்.
மணி 1 ஆகியும் தூங்காம எழில நினச்சு புலம்பிகிட்டே படுத்திருந்த ஸ்ரீ “ஏன் அவ அப்படி சொன்னா நிஜமாவே அவன் சொன்னது உண்மயா சே சே அப்டிலா இருக்காது இவன் மூஞ்சிலா அதுக்கு சரிபட்டு வருமா…வராது வராது… பின்ன எதுக்கு அப்படி சொல்லனு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔” என்ற யோசனையிலே புலம்பி தவித்து தூங்க மறந்து மணிய பாக்க மணி 1:55காட்ட…
“டேய் ஸ்ரீ இதுக்கு மேல யோசிச்சோம் மண்டைக்கு பின்னாடி இருக்க மெடுலா ஆபலகேட்டா வீங்கி வெடிச்சு செத்தாலு செத்துடுவோம் … நம்ம இப்படி புலம்பபுறத விட்டுட்டு அந்த நாய்கிட்டயே கால் பண்ணி கேட்றலாம்னு” முடிவு பண்ணி எழில்க்கு கால் பண்றா ஸ்ரீ
ஸ்ரீ கால் செய்ததை பார்த்த எழில் அவனிடம் வேண்டுமென்றே வம்பிலுக்க
“ஹலோ யாரு”
“டேய் பரதேசி என் தூக்கத்தை கெடுத்துட்டு நீ இப்படி நல்லா தூங்கிட்டு என்னவே யாருனு வேர கேக்குற நீ நல்லா தூங்குவியா உனக்குளா நல்ல தூக்கமே வரதுடா” என சாபத்தை அள்ளி தெளித்தான்
“டேய் நா என்ன உன் லவ்வரா உன் தூக்கத நா கெடுத்துட்டேன் சொல்ர இப்போ எதுக்குடா நடு ராத்திரி போன் போட்டு இப்படி சாபம் கொடுதுகிட்டு இருக்க நா தூங்குற தூக்கம் உனக்கு தெரியாதா?” என்று கலங்கும் குரலில் கேட்க
அவனை மனதை உணர்ந்த ஸ்ரீ… “சரி விடு நீ என்னோட டவுட் கிளியர் பண்ணிட்டு நீ அப்ரமா எப்பவு போல ஃபீல் பண்ணு… யார் சொல்லியும் கேட்காத நீ நா சொல்லி கேட்டுவியா நான்லா யாரு உனக்கு ஜஸ்ட் பிரெண்ட்தான”
“டேய் டேய் நாயே பேயே லூசு பரதேசி*#*******####***,😠😠😠😠 நைட்டு கால் பன்னி கடுப்பேத்திட்டு…….😠😠😠😠####******”
“மச்சா மச்சா போதுண்டா காதுல கலர் கலரா இரத்தம் வருது மச்சா😭😭😭”
“ஒழுங்கா கேக்க வந்தத கேட்டுட்டு ஒடிரு இல்ல மகனே உன்ன சாகடிச்சிடுவே….”
“இல்ல மச்சா இன்னிக்கு ஏண்டா அந்த பொண்ணுகிட்ட அப்படி சொன்ன”
“யார்கிட்டடா …. என்ன சொன்னே… குலப்பாதடா”
“இல்ல மச்சா ஈவ்னிங் உன்ன கூட ஒரு பொண்ணு டம்மீனு சொன்னாலே(மனதில் பயத்துடனும் வெளியில் சிரிப்புடனும் ஸ்ரீ சொல்ல)
“டேய் ஸ்ரீ இப்போ உனக்கு டைம் சரி இல்லைன்னு நினைக்குறே”
“இல்ல மச்சா உனக்கு டக்குனு நியாபகம் வரனும்னு சொன்னே இது தப்பா அட போப்பாசரி சொல்லு அந்த பொண்ணுகிட்ட ஏன் அப்படி சொன்ன நீ வச்சிருக்க ரிங் டோன்க்கு அந்த பொண்ணுதா காரணம்னு.. சொல்லு மச்சா சொல்லு அப்படீன்னா அந்த பொன்ன நீ…….?”
எழில்தென்றல் வருவார்கள்
நல்ல போகுது .. தென்றல், உமா நட்பு டாம் அன்ட் செரிமாதிரி போகுமோ?!