அத்தியாயம் -10
மதி அதன் பிறகு தன்னுடைய மெடிக்கல் கேம்பிற்கு விக்ரமையும் மணியையும் அழைத்துப் போனான். இப்போது
டாக்டர் முரளி தரன் முன்பு விக்ரம் நிறுத்தப்பட்டிருந்தான். மதி இப்பொழுது விக்ரமிற்கு சப்போர்ட் செய்வது போல முரளிதரனிடம் ஆர்க்யூப் செய்து கொண்டிருந்தான்.
“சார் ப்ளீஸ் சார், புரிஞ்சுக்கோங்க அவன் ஏதோ எமோஷனல்ல. அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவங்க கிட்ட சொல்லிட்டான். ஆனா இவரோட ஸ்டேட்டஸ்க்கு அந்த பொண்ணு சுத்தமா ஒத்து வர மாட்டான்னு எல்லாருக்குமே தெரியும். சோ பொறுப்ப நான் எடுத்துக்கிட்டேன். அவளை ஒரு தங்கச்சி மாதிரி ட்ரீட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
பாவம் அவளும் யாரும் இல்லாமல் அனாதையா நிக்கிறா எனக்கும் பார்க்க கொஞ்சம் பரிதாபமா தான் இருக்கு. அதனால நாங்க இன்னைக்கு அந்த பொண்ண கூட்டிகிட்டு சென்னைக்கு போறோம். நீங்க உங்களுக்கு தெரிஞ்ச அனாதை ஆசிரமம் இல்லன்ன பாதுகாப்ப தங்குவதற்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் ப்ளீஸ்!”என்று மதி சொல்லி முடிக்கவும் முரளிதரன் முகத்தில் சலனம் தோன்றியது. ‘வந்த இடத்துல்ல இந்த பசங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.’ என்று அவர் நினைத்தார்.
“அதெல்லாம் சரிப்பா நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நைட்டே அந்த பொண்ண கூட்டிட்டு கிளம்புனா இங்க மெடிக்கல் கேம்ப் யார் பாக்குறது?” என்று சில நிமிடங்கள் எடுத்து யோசித்த முரளிதரன் அழுத்தமாக கேட்டார்.
சார் நாங்க ரெண்டு பேரும் போனா என்ன சார் உங்களையும் சேர்த்து நாலு டாக்டர் இருக்கீங்க எல்ல
நீங்க எப்படியாவது மேனேஜ் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.” என்று சொன்ன மதி அவரை தனியாக வரும் படி கண் ஜாடை காட்டினான்.
விக்ரம் அதை கவனிக்காமல் தலை குனிந்து ஓரமாக நின்று இருந்ததான். அவர்கள் இருவரும் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.விக்ரமின் மனதிற்குள் அஞ்சலியின் முகம் மிக அழுத்தமாக பதிந்து விட்டது. அதற்கான காரணத்தை அவன் தனியாக நின்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.’எனக்கு ஏன் அந்த பொண்ணு மேல இப்படி ஒரு பீலிங்ஸ். காலைல அந்த பொண்ணு பார்க்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கல. ஆனா அந்த பொண்ணு கிட்ட உணர்ச்சிவசப் பட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுக்கிற அளவுக்கு எனக்கு அவ மேல என்ன வந்துச்சு?
எந்த பாயிண்ட்ல இந்த மாதிரியான ஒரு ஃபீலிங் எனக்கு வந்துச்சு?
எனக்குள்ள என்ன நடந்துச்சு. அவ என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டா.
என்ன இம்ப்ரஸ் பண்ற அளவுக்கு அவ ஒன்னும் பேரழகி கிடையாது.
சாதாரண டார்க் ஸ்கின்னோட இருக்குற ஒரு கிராமத்து பொண்ணு தான். ரொம்ப படிச்சவளும் இல்ல
மிஞ்சி போனா பத்தாவது பெயில் ஆகி இருப்பா.சென்னையில நான் பாக்காத பொண்ணா சின்ன வயசுல இருந்து எவ்வளவு பொண்ணுங்க கூட பழகி இருப்பேன்.
எனக்கே அத்தை, மாமா பொண்ணுங்கன்னு அஞ்சு பேர் இருக்காங்க.
எல்லாருமே அழகா இருப்பாங்க எனக்கு ஈக்குவல்லா படிச்சிருக்காங்க எல்லாத்துலயும் அவங்க எனக்கு ஈக்குவல்லா இருக்காங்க.
கல்யாணம் பண்ணிக்கிற உரிமையும் எனக்கு இருக்கு ஆனா அவங்க மேல எல்லாம் வராத ஏதோ ஒரு ஃபீலிங் இந்த கிராமத்து பொண்ணு மேல ஒரே நாள்ல எனக்கு எப்படி வந்துச்சு?!
இவ கிட்ட ஏதோ இருக்கு. அந்த ஏதோ என்னனு தான் எனக்கு புரியல’ என்று விக்ரம் தனக்குள் யோசித்த படி இருந்தான். விக்ரமின் விட்டு கொஞ்சம் தூரம் நடந்து வந்திருந்த டாக்டர் முரளிதரனும் மதியும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்து பேச ஆரம்பித்தனர்.
“டேய் மதி, விக்ரம் ஏன் இப்படி திடீர்னு உணர்ச்சி வசப்பட்டு வாக்கு கொடுத்தான்.” என்று கவலையோடு முரளிதரன் ஆரம்பித்தார்.
“அதான் சார் எனக்கும் புரியல ஆனா அவன் மனசுல அந்த பொண்ணு மேல ஏதோ ஒரு பீலிங்ஸ் இருக்கு போல . எப்படி அந்த பொண்ணு பார்த்து இவன் இம்ப்ரஸ் ஆனானு எனக்கு புரியல. இதை இப்படியே வளரவிட்டா ரொம்ப டேஞ்சர். அவன் இன்னைக்கே கூட அந்த பொண்ணு கழுத்துல போய் தாலி கட்ட கூட வாய்ப்பு இருக்கு அதனால” என்று பேசிக் கொண்டிருந்த மதி யதார்த்தமாக திரும்பி விக்ரம் நின்றிருந்த இடத்தை பார்க்கவும், விக்ரமை அங்கு விக்ரம் இல்லை.
“ஐயோ விக்ரம்!” என்று மதி அலறுவதை பார்த்த முரளிதரன் விக்ரம் நின்ற இடத்தை அவசரமாக திரும்பி பார்த்தான். விக்ரம் இல்லாதது அவருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. “டேய் மதி உன் பிரண்டு எங்க போனா?!” என்று முரளிதரன் பயத்தோடு கேள்வி கேட்டார்.
“சார் அவன் எங்க போனான்னு எனக்கும் தெரியல ஒருவேளை அந்த பொண்ணு வீட்டுக்கு போய் இருக்கலாம்.” என்று கோபத்தோடு மதி பதில் சொன்னான்.
“எதுக்கு டா?!” என்று முரளி கத்தினார்.
“தெரியல சார் அந்த பொண்ண இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சு போய் இருந்தாலும் போய் இருக்கலாம்?” என்று மதி கலவரத்துடன் சொன்னான்.
“என்ன டா விக்ரமுக்கு மூளை கெட்டு போயிடுச்சா?” என்று கத்திய முரளிதரன்,
“போயும் போயும் முன்ன பின்ன தெரியாத ஒரு படிக்காத கிராமத்து பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்னு பைத்தியம் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான் இவனை என்ன பண்றது.” என்று டென்ஷனோடு பேசினார்.
“சார் பேசாம நான் அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடவா? அவனுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேற இருக்கா பேரு வந்தனா. அவளும் நம்ம ஹாஸ்பிடல்ல தான் இன்டர்ன்ஷிப் பண்ணிட்டு இருக்கா.” என்று மதி படபடப்புடன் கேட்க,”ஓகே மதி ப்ளீஸ் நீ இன்பார்ம் பண்ணிடு. அதுக்கு முன்னாடி இந்த இடியட் எங்க இருக்கான்னு முதல்ல தேடி கண்டுபிடி!” என்று முரளிதரன் ஆணையிட்டார். அதன் பிறகு மதியும் மணியை அழைத்துக்கொண்டு, அஞ்சலி வீட்டை பார்த்து ஓடினான்.
‘விக்ரமோட இந்த மூட்டாள் தனத்தை நான் அனுமதிக்கவே மாட்ட.’ என்று மதியின் மனம் கொதித்தது.
To be continued….