அத்தியாயம்- 7
அஞ்சலியைப் பார்த்த விக்ரமிற்கு பரிதாபமாக இருந்தது.
“நீங்க எல்லாம் ஏன் இப்படி சுத்தி நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க?
அந்த குடிகாரன ரெண்டு தட்டு தட்டி வெளில துரத்தி விட கூடாதா?
பாவம் இந்த பொண்ணு இன்னைக்கு தானே அம்மாவ இழந்திருக்கா அந்த சோகத்துக்கு உட்கார்ந்து அவளால் அழக்கூட முடியல. காலையிலிருந்து மாத்தி மாத்தி ஏதோ ஒரு பிரச்சனை?” என்று விக்ரம் சுற்றி நின்றிருந்த மக்களை பார்த்து கத்தினான்.
மக்கள் எல்லோரும் தங்களுக்கு இதற்க்கும் சம்பந்தமே இல்லை என்பது போல களைந்து போக ஆரம்பித்தனர்.
இப்பொழுது அஞ்சலியும் விக்ரமும் மட்டுமே நின்றிருந்தனர். வீட்டு வாசலில் மணி அங்கு என்ன நடக்கிறது என்று கவனிக்கும் சுவாரசியத்தோடு நின்றான்.
“சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல சார் காலையில தான் நம்ப சந்திச்சோம். அதுக்குள்ள நீங்க என்க்கு இவ்வளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்க.”
“பரவாயில்ல.” என்று அவன் சிலவினாடிகள் தடுமாறியவன்,
“உனக்கு இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கும்னு நான் நெனச்சே பார்க்கல.” என்று பரிதாப்பட்டான்.
சில நிமிடங்கள் இடைவெளி விட்டு, “உங்க அம்மாவுக்கு செய்ய வேண்டியது எல்லாம் நல்லபடியா செஞ்சுட்டியா?!” என்று விசாரித்தான்.
அஞ்சலி மௌனமாக அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தலையாட்டினாள்.விக்ரம்க்கு அஞ்சலியின் முகம் கவர்ச்சியாக தோன்றியது. அதேசமயம் அவளுக்கு அவன் மீது ஒர் இனம் புரியாத உணர்வு தேன்றியது.
‘என்ன இது எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது.’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்ட விக்ரம், ஏதோ சொல்ல வாய் எடுக்கவும், கீழே தன்னிலை மறந்து உருண்டு கொண்டிருந்த அவளுடைய தாய் மாமன்,”பிராடு பயலே, அவ என் அக்கா மக டா அவள நா தான் கட்டிகிடனம்.” என்று முனைகினான். அந்த முனகலை தொடந்து அவன் அஞ்சலியையும் அவருடைய அம்மாவையும் கெட்ட வார்த்தைகளில் அவன் திட்டினான். இப்பொழுது மீண்டும் வாசலில் ஒரு பெரிய கூச்சல் சத்தம் கேட்டது. அஞ்சலி பதட்டத்தோடு மணியை கடந்து வாயிலுக்கு சென்றான்.
“ஏண்டி கூறு கெட்டவளே? நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா தாய் மாமனை விட்டுட்டு, கண்டவன் கூட கூத்தடிக்கிரியே உனக்கு வெட்கமா இல்ல.?” என்று ஒரு பெண்ணின் குரல் உக்கிரமாக ஒலிக்க, விக்ரமும் இப்பொழுது வெளியே வந்தான்.
“பதில் சொல்லுடி சிலை மாதிரி நின்னா என்ன அர்த்தம் அவனுக்கு இல்லாத உரிமையா? அவன கட்டிக்கிட்டா உனக்கு என்னடி கெட்டுப் போகுது.” என்று வெளியே நின்று இருந்த அந்த வயதான பெண் கேட்டாள்.
“அம்மா சாவுக்கு கூட வராத நீங்க இதையெல்லாம் ஏன் கேக்குறீங்க? உங்களுக்கு என் மேல அப்படி என்ன அக்கறை?” என்று அஞ்சலி பதிலுக்குக் கோவப்பட்டாள்.
அந்த வயதான பெண் அஞ்சலியை மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரமின் மீது பாய்ந்தாள்.
“இவன் தானா இவன் தானா நீ புதுசா புடிச்ச மைனர் மாப்பிள்ளை! ஆள் நல்லா சோக்கா தாண்டி இருக்கான்.ஆனா பட்டனத்து ஆள்னு கேள்விப்பட்டேன். பார்த்து டி பாதியிலேயே அறுத்துவிட்டு போயிடப் போறான். ” என்று சொல்லி விட்டு கைதட்டி சிரித்தாள்.
“என்னங்க சும்மா வாயில வந்தபடி பேசிட்டு இருக்கீங்க. ஒரு வயசு பொண்ணு தாயை இழந்துட்டு தனியா நிக்கிற அவ மேல நீங்க அனுதாபப்படுனாலும் பரவாயில்ல.
இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க” என்று விக்ரம் கோபமாக பேசினான்.
‘என்ன இந்த ஊர் ஜனங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணா அதுக்கு தப்பான அர்த்தம் தான் இருக்குமா?
மனிதாபிமானம் ங்கிற ஒரு உண்மையான காரணம் இருக்காதா?
அப்படின்ன என்னனு ஜனங்களுக்கு தெரியாதா?
என்ன ஊர் இது? ‘ என்று விக்ரமின் மனதிற்குள் ஏதோ ஒரு கோபம் அடைத்துக் கொண்டு அவனை போங்க செய்தது.
“என்னையா சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு நீ அவரை கட்டிக்க போறியா என்ன?” என்று அந்த பெண் மீண்டும் கோவமாக கத்தவும் விக்ரமின் பொறுமை எல்லை கடந்து, “ஏன்மா அந்த பொண்ண நான் கட்டிக்கிட்டா உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று சொன்னாள். பிறகு அக்கம் பக்கம் தேடி வீட்டிற்குள் போய் வெளியே வந்தான்.
அவன் கையில் இப்பொழுது தட்டும் அதில் தட்டில் கொஞ்சம் குங்குமம் இருந்தது. எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காமல் விக்ரம் அந்த தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அஞ்சலி நெற்றியில் வைத்தான். பிறகு தட்டைக்கு போட்டுவிட்டு தன் கையில் அணிந்திருந்த மோதிரம் ஒன்றை கழற்றி அஞ்சலியின் வலது கையை பிடித்து மோதுர விரலில் அதை மென்மையாக அணிவித்தான். பிறகு அவருடைய கையை இறுக்கமாக பற்றி கொண்டு, “இந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் போங்க ஊர்ல எல்லார் கிட்டயும் சொல்லுங்க அப்படியே இந்த குடிகார நாயையும் தூக்கிட்டு போங்க!” என்று உருண்டு கொண்டிருந்த அவளுடைய தாய் மாமனை எட்டி உதைத்தான். அவன் மெதுவாக எழுந்து தன் வேட்டியை சரி செய்து கொண்டு அஞ்சலியின் நெற்றியை பார்த்தான். அதில் உச்சி குங்குமம் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்துவிட்டு “ஆ..” என்று கத்தினான். பிறகு வேட்டியை நழுவ விட்டு தள்ளாடி புதிதாக வந்த அந்த வயதான பெண்ணை பார்த்து, “அக்கா அந்த திருட்டு முண்டை நம்ப வச்சு ஏமாத்திட்டாக்கா!” என்று அழுதான்.
.
“நீ வாடா நான் உனக்கு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கிறேன்.!” என்று அந்த வயதான பெண் அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
பிறகு மெதுவாக அவன் கையைப் பிடித்து கை தாங்கலாக அழைத்துச் செல்ல முயன்றாள். அங்கு நடக்கும் எதுவும் அஞ்சலிக்கு நம்பும் படியாக இல்ல. அவள் தயக்கத்தோடு இப்பொழுது விக்ரமின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் என்ன காரியம் செய்தோம் என்பதையே உணர்ந்தான். அவனுக்குள் இப்பொழுது ஒரு பதற்றம் தோன்றியது. பக்கத்தில் நின்றிருந்த மணிக்கு ஒன்றுமே புரியவில்லை. இது எல்லாவற்றையும் விட விக்ரமை தேடி வந்திருந்த மதிக்கு அவன் செய்த காரியம் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அவன் தன்னுடைய செல்போனை அனைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விக்ரம் பக்கத்தில் போனான்.
மதியை பார்த்ததும் விக்ரம்க்கு ரொம்பவே அவமானமாகவும் தர்ம சங்கடமாகவும் இருந்தது.
மதி புருவங்களை உயர்த்தி, ”என்ன காரியம் செய்த?” என்று கேட்கவும், விக்ரமால் பதில் சொல்ல முடியவில்லை. விக்ரம அஞ்சலியைத் திரும்பி கூடப் பார்க்காமல் வேகமாக நடக்க அவனைப் பின்தொடர்ந்து மதியும் மணியும் சென்றனர். அஞ்சலியின் நிலை இப்பொழுது ரொம்ப பரிதாபமாக இருந்தது.’என்ன இவரு காலையில தான் சந்திச்சோம் கடன் பிரச்சினைக்கு ஹெல்ப் பண்ணாரு குடிகார மாமா கிட்ட இருந்து என்ன காப்பாத்தறதுக்காக. இப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரு இவருக்கும் நமக்கும் செட்டாகுமா?!’ என்று குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் மனதிற்க்குள் ஒருபுறம் சிலிர்ப்பும் மறுபுறம் பயமும் தேன்றியது.
To be continued….
By மகிழம் பூ