EP 03 – தென்றல் கழுத்தில் கத்தி
இரவு முழுதும் யோசித்து விட்டு இதுக்கு மேல வெயிட் பன்னா மண்ட வெடிச்சு செத்திடுவோம் சோ நம்ம அவண்டயே கால் பண்ணி கேட்டுடலாம்னு முடிவு பண்ணி எழில்க்கு கால் பண்ணி தன்னோட சந்தேகத்த கேக்ரா ஸ்ரீ
“அந்த பொண்ணுகிட்ட ஏன் அப்படி சொன்ன நீ வச்சிருக்க ரிங்& டோன்க்கு அந்த பொண்ணுதா காரணம்னு.. சொல்லு மச்சா சொல்லு அப்படீன்னா அந்த பொன்ன நீ லவ் பண்ணி அந்த பொண்ணு உன்ன ஏமாத்துடுச்சாடா…….”
“டேய் ஸ்ரீ ஒழுங்கா ஃபோன் வச்சிட்டு போய் தூங்கு ……அதெல்லாம் முடயாது&
இப்போ நீ சொல்லியே ஆகனும்”
“அடிங்க நா சொல்லிட்டே இருக்கே 🤬🤬#*****##******”*”
“மச்சா இப்போ உனக்கு கால் செய்த ஸ்ரீ என்ற வாடிக்கையாளர் வெக்கம் மானம் ரோசம் சூடு சொரணை இந்த அனைத்து உணர்ச்சிகளுக்கு அப்பால் உள்ளார் அதுனால நீ கண்டிப்பா சொல்லியே ஆகனும்….. பிளீஸ் மச்சா சொல்லுடா..”
எழில் சிரித்தே விட்டான்…
“😆😆😆 டேய் நீ நினைச்ச மாதிறிலா இல்லடா அப்படி ஒன்னு என் லைஃப்ல நடக்கவும் நடக்காது” என்றான் கலங்கிய குரலோடு
இங்கு ஸ்ரீயும் அவன் கவலை கண்டு கண் கலங்கியிருந்தான்… அவன் எண்ணங்கள் அனைத்தும் அரிந்தவனாய்… சொல்லப்போனா இழப்பு இருவருக்குமே பட் ஸ்ரீ தன்னை மாற்ற முயற்சி செய்து அந்த இழப்பில் இருந்து மீண்டு வருகிறான் ஆனால் எழில் சிறு நொடி கூட தவறாது அந்த இழப்பின் கவலையிலேயே இரவு கூட தூங்காது சிறுக சிறுக செத்து கொண்டிருக்கிறான்…..இருவர் மனதும் நெருப்பை கொதித்து கொண்டிருக்கிறது இருவரின் இழப்பிற்கு கவலைக்கும் காரணமான அந்த ருத்ரணை அனு அனுவாய் சித்திரவதை செய்து சினம் தீர அவனை கொன்று நெருப்பில் வீழ்த்த வேண்டுமென சரியான நேரம் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் இருவரும்….
இருவரும் ஒரே நினைவில் இருக்க பின் எழில்தான் சுதாரித்தவனாய்
“டேய் மச்சான் ஸ்ரீ நீ நெனச்ச மாதிரி ஒரு வெங்காயமும் இல்ல… நேத்து நா ஃபோன் ரிங் டோண் செட் பண்ணேன் அதுல நா வச்சிருந்தா ரிங் டோன் எறேஸ் ஆகிடுச்சு அதா வேற டோன் செட்பண்ணலாம்னு செட் ஆஃப் கட் சாங்ஸ் டவண்லோட் பண்ணி ரிங் டோன் செட் பண்ணிட்டிருந்தே எல்லா சாங்சும் அதோட நேம்ல இல்லாம 1. 2. 3 நே இருந்துச்சா அதா தெரியாதனமா இந்த சாங்க தெரியாம வச்சிடே சரி வேற சாங் மாத்தலாம்னு மாத்த போனப்போத நீ என்ன கூப்ட நா உண்ட என்னனு கேக்கரதுக்கு திரும்பும் போதுதா அந்த பொண்ணு மேல லாரி மோத வந்துச்சு அடுத்து நடந்ததுதான் உனக்கே தெரியுமே அவ கூட சண்ட போட்ட டென்ஷன்ல வேற சாங் மாத்த மறந்துட்டேன் அதா அவ கேட்டப்போ அப்படி சொன்னே போதுமா டவுட் கிளியரா… இப்போ போ போய் தூங்கு…. குட் நைட்”
“அப்படியா மச்சா அப்போ நாந்தா தப்பா புரிஞ்சுகிட்டேனா …பின்ன எதுக்கு அவ உன்ன அத்தன தடவ டம்மி போலிசு சொல்லியும் உனக்கு கோவமே வரல இதுவே அந்த இடத்தில் வேற யாராச்சும் இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்படீன்னு எனக்கு தெரியும்.. இதுக்கு பதில் சொல்லு மச்சா….மச்சா டேய் டேய்….”
யார் பெத்த பிள்ளையோ தனியா புலம்பிக்கிட்டு இருந்துச்சு போன்ல பிகாஸ் எலில்தா குட் நைட் சொன்னதுமே போன வச்சிட்டானே🤭🤭
இங்கு தென்றல் அவங்க அப்பா மிலிடரிகிட்ட திட்டு வாங்கிட்டு அவ அண்ணன் ராஜ் அவளுக்கு ஹெல்ப் பண்ணாம இருக்கவும் அவனையும் நாலு திட்டு மனசுல திட்டிட்டு அவங்க அம்மா விஜயாவயும் தங்கை வேதாவயும் பாக்க பின்ன அவங்க ஹெல்போட வீட்டுக்குள்ள போய் எழில் சொன்ன வார்த்தை நினைத்து கொண்டிருக்க்கும் பொழுதே நைட் 10 மணிக்கெல்லாம் ஐஸ் கிரீம் சாப்டதும் மழையில் நனைந்ததும் வேலைய காட்ட போன காய்ச்சல் மறுபடியும் வந்தது…..பின்ன என்ன நடந்திருக்கும் எல்லாரையும் போட்டு படாத பாடு படுத்தி எடுதுட்டா….அவள் அப்பாதான் மகள் படும் பாட்டை பார்த்து கண் கலங்கியே போனார்…..
நிலவும் சூரியனும் தன் வேலைகளை சரியாக செய்ய இரவு மறைந்து பகலானது….
சூரியன் முகத்தில பட கண் விழித்தவன் எழுந்து மணியை பார்க 8:46என காட்டியது
“ஒஹ் ஷிட் … இவளோ நேரம் தூங்கிடேனா மீராம்மா இந்நேரம் நீ மட்டும் என் கூடயே இருந்திருந்தா இந்நேரம்லா என்ன எழுப்பி விட்டிருப்பீல “என கவலை நிறைந்த மனதுடன் புலம்பியவாரே எழுந்து வேக வேகமாக கிளம்பி தான் அதிகமாக நேசிக்கும் காக்கி உடையை அணிந்து கொண்டு தன் அம்மா அப்பா மற்றும் மீரா ஃபோட்டோ முன் சென்று கண்ணை மூடி யாரும் இல்லாமல் தான் மட்டும் தனியாக இந்த வீட்டில் தங்கி இருக்கும் சூழ்நிலையால் மனதில் ஏற்படும் வலிகளை அவர்கள் முன் புலம்பிவிட்டு நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் அதை வெளியில் காட்டாது தான் ஒரு போலீஸ் என்ற கர்வத்துடன் கையில் உள்ள காப்பை திருகிகொண்டு தனக்காக காத்திருக்கும் போலீஸ் ஜீப் அருகே வந்து நின்றான் ஸ்ரீ….
“இந்த நாய் எப்பவும் போல என்ன கால் பண்ணி எழுப்பி விடாம இப்படி பண்ணிட்டானே ஒரு வேல நைட்டு கால் பண்ணி கடுப்பேத்துனதுனால பிள்ளை நம்ம மேல கோவமா இருப்பானோ சரி கால் பண்ணி பாப்போம்… “
எழிலுக்கு கால் செய்தான் ஸ்ரீ .. பட் 5 முறைக்கு மேல் கால் செய்தும் அவ எடுக்கவே இல்லை….
“பயபுள்ள ரொம்ப கோபமோ…..சரி ஸ்டேஷன்ல போய் சரி பண்ணிகலாம்…. என நினைத்தவாறே ஸ்டேஷன் போய் சேர்தான் ஸ்ரீ …உள்ள போனவன் நேரா எழில் ரூம்க்கு போனா பட் அங்கேயும் அவன கானா. …
“பிரேம் எழில் இன்னும் வரலயா”
“இல்ல சார் இன்னும் வரல”
“இந்த நாய்க்க்கு என்னாச்சு ஏன் இன்னும் வராம இருக்கான் கால் பண்ணாலும் எடுக்க மாட்றா .. ” என யோசித்த படியே தலையில கை வைத்து கொண்டே எழில் வருகிறானா இல்லையா என வாசலை பார்க்க எழிலும் தன் நண்பனை ஏமாற்றாமல் வந்து சேர்ந்தான் பரட்டை தலையோடு பார்க்கவே அறைகுறையாய் காக்கா குளியல் குளித்து வந்திருப்பது தெளிவாக தெரிந்தது ஸ்ரீ க்கு..
“🤭🤭டேய் என்னடா இது?”
“எதுடா…?”
“ஹம் உன் கெட்டப்… ஏன்டா தல கூட சீவாம இப்படி வந்திருக்க அதுவும் இவ்ளோ லேட்டா..டைம் பாரு 11 ஆக போகுது.. ஏன்டா என்னாச்சு?”
“என்ன நொண்ணாச்சு… எப்பவுமே சேந்துதான வருவோம் இன்னிக்கு ஏண்டா சீக்கிரமா வந்த என்ன எழுப்பி விடனு அப்படீன்னு தோனுச்சா உனக்கு?”
“டேய் நா என்னைக்குடா உண்ண எழுப்பிருக்கே நீதாண்டா என்ன எழுப்புவ நீ என்ன எழுப்பாம இருக்கவும் நானே லேட்டாதா எழுந்தே இப்போதா வந்தே.. ஜஸ்ட் நௌ..நைட் கால் பன்னதுலா கோவம் போல அதா என்ன எழுப்பாம விட்டு போய்ட்டே நினச்சி வந்துட்டேன்..”
“அட போடா அப்டீலா இல்ல ….”
“அட்லீஸ்ட் ஒரு கால் பண்ணியாச்சு எழுப்பிருக்களாம்ல … 10:30 க்குதா எந்திருச்சே…” (அவன் 5தடவ கால் பன்னது கூட தெரியாம அப்படி ஒரு தூக்கம் பட் இவனுக்கு அது பத்தி எதுவும் தோனல பிகாஷ் தன்னோட நண்பன் இவ்வளோ நாள் கழிச்சு தினமும் எதோ அரை குறையாய் தூங்கி கொண்டிருந்தவன் இன்று இந்த அளவிற்கு அசந்து தூங்கிட்டேன் என்று சொல்றது அவனுக்கே ரொம்ப பெரிய ஆச்சரியமா இருந்துச்சு)
“மச் மச்.. மச்சா என்ன சொல்ற நிஜமாவா அப்போ நேத்து நைட் நீ தூங்கினயா?”
“தூங்கினியாவா கேக்குற..செம்ம தூக்கம்… இங்க பாரு கண்ண …. கிட்டத்தட்ட 6 மந்த்ஸ் கழிச்சு இப்படி தூங்கிருக்கே”
“எஸ் மச்சா … கேக்கவே நல்லா இருக்கு இப்டியே நீ எல்லாத்தையும் மறந்துட்டு நெக்ஸ்ட் உன் லைஃப் என்ஜாய் பண்ண ஸ்டார்ட் பன்னா நல்லா இருக்கு…”
“நோ சான்ஸ் … அந்த ருத்ரன் உயிர பரிக்காம இது நடக்காது… நேத்து தூங்குனது கூட எதோ…ஜஸ்ட்…”
இவங்க பேசிட்டிருக்கப்பவே இவர்கள் இருவர் காதிர்க்கும் ஒரு செய்தி வந்தது செல்லுக்குள்ள இருந்து ஒரு கைதி தப்பி போனதா
அத கேட்டு ஸ்ரீ அண்ட் எழில் ரெண்டு பேரு தேடி கிளம்பி போக அவங்க பாதி தூரம் போனப்போவே கால் வந்தது கைதி ஆர் ஆர் என் ஹாஸ்பிடல் சைடு போனதா இன்ஃபோ வர ரெண்டு பேரும் அந்த ஹாஸ்பிடல் போறாங்க அக்கயுஸ்ட தேடி போன இடத்துல எழில் பாத்ததும் தென்றல ( ஃபீவர் காரணமா அவளும் அந்த ஹாஸ்பிடல் வந்திருந்தா பட் அங்கேயும் கைல ஐஸ் கிரீம் அவங்க அம்மாக்கு தங்கச்சி வேதாகும் தெரியாம மறஞ்சி நிண்ணு சாப்டுகிட்டிருந்தா…) அத பாத்த எழில் தன்னை அறியாமல் நேத்து நடந்த அவள் பண்ண கூத்த நெனச்சு சிரிக்க அத ஸ்ரீ யும் பாக்க
“என்ன மச்சா இங்கேயும் சூறாவளி அதா உன் சிரிப்புக்கு காரணமா…” என எழிலை கிண்டல் செய்தான் ஸ்ரீ
“டேய் மூடிட்டு அவன தேடுடா”
“சரிங்க குருநாதா”
எழில் கண்ணில் அந்த கைதி பட அவனை துரத்தினான்….
கைதி அவன் கையில் படாமல் ஓட….. எழில் விடாமல் அவனை துரத்த அந்த கைதி போன வேகத்தில் கையில் ஐஸ்கிரீமுடன் நின்றிருந்த தென்றலை இடித்து தள்ளி விட்டு ஓடினான்
அவன் தள்ளி விட்ட வேகத்தில் அவள் கையில் இருந்த ஐஸ்க்ரீம் கீழே விழுந்தது அந்த ஐஸ்கிரீம் கீழே விழுந்ததுதான் தாமதம் உடனே அவள் ஐஸ் கிரீமை தள்ளி விட்டு ஓட தொடங்கிய அந்த கைதியின் சட்டை காலரை பிடித்து இழுத்து
“அடே தடியா எரும மாடு உன் கண்ணு என்ன குருடா இல்ல கண்ணு பொடனில இருக்கா? எதுக்குடா இப்படி ஒடி வந்து என்ன இடிச்சு என் ஐஸ்கிரீம தள்ளி விட்ட தடியா” என கோவத்துடன் திட்டினாள்.
கைதியோ தன் சட்டை காலரை பிடித்திருந்த தென்றலின் கையை எடுக்க முயற்சி செய்து கொண்டே மேல் நோக்கி பார்க்க
எழில் அவர்கள் அருகில் வந்து விட சிறுனொடி என்ன செய்வது என்று யோசித்தவன்
தென்றல் கைகளை தன் முழு பலம் கொண்டு அவள் கைகளை தன் சட்டை க்காலரில் இருந்து உதறி விட்டு அவளை தன் முன்பாக பிடித்து இழுத்து அவள் கழுத்தில் கத்தி வைத்து எழிலை நோக்கி
“இன்னும் 1 அடி எடுத்து வச்ச இவ கழுத்த அறுத்திடுவேன்”என்று கூற இதை சற்றும் எதிர்பார்க்காத எழில்
டேய் அவள ஒன்னும் பண்ணிடாத சொல்லிட்டிருக்கப்போவே தான் ஒரு போலீஸ் அவன் ஒரு கைதி என்பதையும் மறந்து யாரென்றே தெரியாத யாரோ ஒருத்திக்காக அவன் கண்கள் கலங்கி அழ ஆரம்பிக்கிறான்… அழுதுகிட்டே அவள விடுடா” என அவன் போட்ட சத்தத்தில் அந்த இடமே அப்படியொரு நிசப்தம்….
எழில் தென்றல் வருவார்கள்
அடுத்த அப்டேட் சீக்ரம் போடுங்க…