Ep 1 எழிலின் தென்றல்
ஏய் உமா பிளீஸ் பிளீஸ் டி இப்பிடிக்கா ரோட் கிராஸ் பண்ணி அப்டிக்கா போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்திருவே செல்லம் …. வேணும்னா உன்னோட சேர்ந்த பாவத்துக்கு உனக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி தரேன் டி …” என உமாவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி தென்றல்…
(மீடியம் ஹைட்,இடை வரை தொங்கும் முடி. அதுக்கு மேல முடிக்கு பாதியளவில் இரு புறமும் தொங்கும் மல்லிப்பூ..மாநிறம் ஓவரா இல்லாம சிம்பிளான மேக் அப் ஜஸ்ட் பவுடர் வித் குட்டியா ஒரு பொட்டு அதுக்கு மேல அடிஸ்ணலா சந்தனம் எப்பவுமே இதாங்க நம்ம தென்றல் அவளுடைய கேரக்ட்டர் பத்தி போக போக தெரிஞ்சிக்கலாம்…)
“யாருக்குடி வேணும் உன்னோட ஐஸ் கிரீம் நானே ஆல் ரெடி பஸ் வர்லீனு கடுப்புல இருக்கே நீ வேற ஏண்டி தென்றல்… இந்த யுனிவர்சட்டி காரண யாருடி மதியமா எக்சாம் வைக்க சொன்னது மார்னிங் வச்சிருந்தா இந்நேரம் வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போற்றுப்பே ஆனா இப்போ பாரு மணி 6 ஆக போது….”
“அடியே உமா நா ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேனுதான சொன்னே இதுக்கு ஏண்டி இப்படி தேவை இல்லாம புலம்பிட்டுஇருக்க….எம்மா தாயே 2 மினிட்ஸ் ஐஸ் கிரீம் மட்டும் வாங்கிட்டு வந்துட்ரே….”
மேடம் இப்டிலா உமாக்கிட்ட கெஞ்சுறதுகு காரணம் 2 நாளுக்கு முன்னாடிதா ஃபீவர் வந்து வீட்ல இருக்க எல்லாரையும் படாத பாடு படுத்தி இப்போதா நார்மல் ஆகிருக்கா … இந்த டைம்ல ஐஸ் கிரீம் சாப்ட்டா வீட்ல இருக்க எல்லார்ட்டயும் உமா அவள போட்டு விட்ருவா அப்பறம் வீட்ல கிடைக்ற பஜனையை யார் சமாளிக்கிறது…..என்பதவற்க்காகவே இந்த கெஞ்சல்ஸ் கொஞ்சல்ஸ் …. உமா தென்றல் ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடுதான்… எல் கே, ஜீ யூ கே ஜீ – ல யிருந்தே ஒண்ணா படிச்சவங்க. உமாக்கு தென்றல் மேலயும் தென்றல்க்கு உமா மேலயும் கேரிங் அதிகம்.
அந்த கேரிங்தா இப்போ தென்றல், உமாகிட்ட கெஞ்சிட்டு இருக்கதுக்கு காரணம்.
“தென்றல் பஸ் வந்துடும் …இந்த பஸ்ஸ மட்டும் விட்டோ அடுத்து நம்ம வீட்டுக்கு பாதயாத்திரையாகத் தான் போகணும்.”
“உமா இன்னிக்குதா நம்ம காலேஜ் லாஸ்ட் டே அதா ஐஸ் கிரீம் சாப்டலாம் நெனச்சேன் தப்பா .” 😥😥😥
“எம்மா தாயே போ போய்ட்டு பஸ் வரதுகுள்ள வா…”
“சூப்பர் டீ உமா 🤩🤩 இதோ 2 மினிட்ஸல வந்துடறேன்”
“சேகர் அண்ணா 2 வெண்ணிலா கொஞ்சம் சீக்கிரமாத் தாங்காண்ணா பஸ் வரபோது”
“பிடிமா தென்றல் காலேஜ் முடுஞ்சு என்ன மறந்துடாதமா லைஃப் நல்லா என்ஜாய் பண்ணு இப்போ மாதிரியே எப்பவுமே ஹேப்பியா இருங்க 2 பேரும்.”
“உங்கள எப்டின்னா மறப்பே.”
“ஏய் தென்றல் பஸ் டி”
“இதோ வரே” என சொல்லி கொண்டு ரோடு கிராஸ் பன்ரப்போ ஒரு லாரி தென்றல் மேல மோத வந்துச்சு… இத கவனிச்சட்டு இருந்த கண்கள் அவ கைய பிடிச்சு இழுந்தது.
எழில் நம்ம கதையோட ஹீரோ (அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ், ஆறு அடி உயரம், முருக்கிவிட்ட மீச, மாநிறம் சிரிச்சா அழகா இருப்பா ஆனா இவனுக்கு சிரிக்க காசு தரணும் போல அப்டின்னு பாக்ர பொண்ணுங்க எல்லாரும் சொல்ற மாதரி முகத்த இருக்கமாவே வச்சுருப்பா. ஆனா, பசங்க கிட்ட செம்ம ஜாலி. இதா நம்ம எழில்… அவ ஏன் இப்டின்னு போக போக தெரிஞ்சுக்க லாம்….)
தென்றல் ரோட் கிராஸ் பண்றப்போ அவ மேல லாரி மோத வரத பாத்த நம்ம எழில்தாண் அவ கைய பிடிச்சு இழுத்தா.
அவன் இவள இழுத்த வேகத்தில் அவன் மேல் மோதி அவன் நெஞ்சில் சாய்ந்து கண்கள் இரண்டையும் மூடிருந்தா பயத்தில் அவள் உடலெங்கும் நடுங்க அவன் மேல் சாய்ந்திருந்தாள் தென்றல். ….
ஆனால் இவ்ளோ ரணகளதுலயும் கைல இருந்த ஐஸ் கிரீம மட்டும் கீழ விடல இத கவனித்த எழில்
“எப்டி நடுங்குறா ஆனா இந்த ஐஸ் க்ரீம மட்டும் எப்டி பிடிச்சிருக்கா பாரு சரியான தின்னி பண்டாரம் போல ..ம் ம் ம் இவள கட்டிக்க போறவன் இவளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுதே தா சொத்த ஃபுல்லா அழிச்சுக்க போரா போல.” அப்டின்னு மனசுக்குள்ள அவனுக்கு அவனே சாபம் விட்டுக்கிட்டா பாவம் 😂😂😂….
அது வரை அவன் நெஞ்சுல சாய்ந்து நடுங்கிகிட்டிருந்த தென்றல அவன் குரல்தான் எழுபுச்சு..
“ஏய் லூசு எழுத்துரு விட்டா என் நெஞ்சுலயே படுத்து தூங்கிடுவ போல…. அறிவு இல்லையா உனக்கு ரோட் கிராஸ் பன்றப்போ பாத்து கிராஸ் பண்ண தெரியாத .. சின்ன பப்பாவ நீ…. “
அவன் இவளை திட்டி கொண்டிருந்த நேரத்தில் அவன் போன் ரிங் ஆனது…
எழுதுங்கள் என் கல்லறையில்அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்இவன் பைத்தியக்காரன் என்று
மரணம் என்னும் தூது வந்ததுஅது மங்கை என்னும் வடிவில் வந்தது.
என்ற பாடல் ரிங் டோனாக ஒலிக்க தென்றல் தன்னிலை மறந்து சிரித்தே விட்டாள்.
அவளை முறைத்த எழில் ” ஏய் என்ன சிரிப்பு? ஆலயு டிரசையு பாரு நல்லா மாரியம்மா கோவிலுக்கு கூல் ஊத்துற மாதிரி மஞ்ச மஞ்ஜேருனு வந்துட்டா ரோட் கூட கிராஸ் பண்ண தெரியாம வந்துட்டா”
“எக்ஸ் கியூஸ் மீ. நீங்க என்ன பைத்தியமா நா எந்த கலர் ட்ரெஸ் போட்டு வந்தா உங்களுக்கு என்ன …. எனக்கு கூடதா உங்கள பாத்தா நிஜ போலீஸ் மாதிரி தெரில எதோ பிராங்க் வீடியோ பண்ண வந்த டம்மி போலீஸ் மதிரிதா தெரியுது …. நா எதாச்சும் கேட்டேனா இதுல ரிங்டோன பாரு”
அப்டின்னு மறுபடியும் சிரிக்க கூடவே ஸ்ரீ யும் சிரிச்சா
(ஸ்ரீ எழிலோட பாசமான ஆருயிர் தோழன் ,,,இன்ஸ்பெக்டர் … இவங்களும் உமா தென்றல் போலதா எல் கே ஜீ யூ கே ஜீ லயிருந்தே ஒண்ணா படச்சு ஒண்ணா டிரெய்னிங் முடிச்சு ஒண்ணா போலீஸ் பரீட்சை பாஸ் பண்ணி ஒண்ணா டியூட்டில ஜாயின் பண்ணி இப்போ ஒரே டீம்ல ஒர்க் பண்றாங்க…)
ஸ்ரீ சிரிக்ரத பாத்து ஒரு முறை முறைக்க
“மச்சா பாவம்டா விட்ரு போட்டும்” அப்டின்னு கண்ணுலயே சிரிச்சு கிட்டே சொல்ல எழில் தென்றல கோவமா பாத்துக்கிட்டே ஒழுங்கா கிளம்பு அப்டின்னு சொல்ரா
“முடியாது என்னால போ முடியாது”
“ஏய் என்ன கொழுப்பா … போகாம இங்கேயே இருந்து என்னோட உயிற வாங்க பிளான் பன்றியா…ஏண்டி போக முடியாது…”
“எனக்கு ஆச பாரு இப்டியே உன் பக்கத்துலயே நிக்கணும்ன்னு…இப்படி என் கைய பிடிச்சுஇருந்தா நா எப்டி போறதா…”
எழில் அப்பொழுதுதான் அவ கைய பிடிச்சு இருகத கவனிச்சா ….
“ஏய் உன் கைய ஏண்டி என் கைக்குள்ள வச்சிருக்க கைய விடு”
“யோவ் போலிசு நீ லுசாயா நீதாயா என் கைய பிடிச்சு வச்சிருக்க … கைய விடுயா லூசு போலிசு” அப்படீன்னு சொல்லிட்டு எழில் கைக்குள்ள இருந்த தன் கைய எடுத்துகிட்டு ரோட் கிராஸ் பன்றா தென்றல்…
எழில்தா பாவம் அவ இவன லூசுன்னு திட்டவும் கோவத்துல பக்கத்துல இருந்த ஜீப் மேல கைய குத்தி அவன் கைய அவனே டேமேஜ் பண்ணிக்ரா🤪
“டேய் மச்சா ஸ்ரீ இவ என்ன லுசாடா …. அவ உயிர காப்பாத்திருகே ஒரு தங்ஸ் கூட சொல்லாம இப்படி திட்டிடு போரா எனக்கு வந்த கோவதுக்கு ஓங்கி அரயலாமா தோணுச்சு”
“ஹா ஹா மச்சா நீ அவள அரய பாத்தியா…. அட போடா, விட்டா அவ உன் மேலயே கேச போட்டு இவ என் கைய பிடிச்சு இழுத்தான்னு சொல்லி உன்னையே உள்ள தள்ளிருவா போல… ஆனா ஒன்னு மச்சா கவனிச்சியா அவ உன்ன போலீசாவே கன்சீடர் பண்ணவே இல்ல..” என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து அவன் பங்கிற்கு வம்பிலுத்து எழிலின் கோவத்தை இன்னும் அதிகமாக்கி அதில் ஆனந்தம் கண்டான்….
அவனை மீண்டும் ஒரு முறை முறைத்தான் எழில்
எழுதுங்கள் என் கல்லறையில்அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்இவன் பைத்தியக்காரன் என்று
மரணம் என்னும் தூது வந்ததுஅது மங்கை என்னும் வடிவில் வந்தது.
போன் ரிங் ஆக வந்த காலை பேசி விட்டு “டேய் பல்ல காட்னது போது கிளம்பு போலாம் நம்ம பிளான் படி அந்த கன்டெய்னர் ஒத்தயடி பாத இருக்க காட்டுக்குள்ளதாபோயிருக்கு அங்க இருந்த நம்ம ஆளுங்க அவங்கள பிடிச்சு ஸ்டேஷன் கூப்டு போய்ட்டாங்க….”
“சூப்பர் மச்சா எப்படிடா கரெக்டா கெஸ் பண்ண நானும் இந்த கன்டெய்னர த்ரீ டைம் ட்ரை பன்னி மிஸ் பணிட்டே பட் நீ ஒரே டைம்லியே தூக்கிட்டடா அவனுங்கள சூப்பர் மச்சா எப்டிடா?”
“மச்சா அதுக்கெல்லா கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணு நீ த்ரீ டைம்ஸ் ரெய்டு பண்ண எல்லா பிளான்ஸ்மே பக்கா பட் ஒவ்வொரு தடவையும் ஃபெயிலியர் ஆச்சுல்ல் ரீசன் யோசிச்சியா???….”
“எஸ் மச்சா நா அது பத்தி திங்க் பண்ணேன் மச்சா எனக்கென்னமோ நம்ம டிபார்ட்மெண்ட்குள்ள இருந்துதான் மேட்டர் வெளிய போதுனு தோணுச்சு ஸ்டேஷன்குள்ள ஆள் வச்சு இன்பர்மேசன் கலெக்ட் பன்ற அளவுக்கு செல்வாக்கு அந்த சங்கர்க்குதா இருக்கு அதா இந்த கேஸ்ல உன்ன இறங்க வச்சிருக்கேன் மச்சா ….”
“மச்சா யுவர் கெஸ் இஸ் கரெக்ட்… நீ நினைச்ச மாதிரி இது அந்த சங்கர் வேலையேதா….அதா அவனுக்கு கொஞ்சம் விளையாட்டு காட்னே எப்பவும் போல சேம் லொகேஷன்ல ரெய்டு பண்ண சொன்னே நம்ம ஸ்பாட் வந்த 15 மின்ஸ்ல அவனுக்கு இன்ஃபோ போகிருக்கும் தென் அவன் தப்பிச்சு போர அந்த காட்டுக்குள்ளயும் ஆள் நிறுத்தி இருக்ர இன்பர்மசனும் சேந்தே போய்ருகும்… அடுத்து என்ன நடந்திருக்கும் நீயே சொல்லு…”
“அடுத்து என்ன அவனுக்கு இன்ஃபோ போனது இந்த காலேஜ் அடுத்து இருக்க காட்டுக்குள்ள போலாம்னு பிளான் பண்ணி வந்திருபா பட் நீ 10 மினிட்ஸ் முன்னாடி இந்த காலேஜ் முன்னாடி வந்துட்ட நம்ம இங்க வரவும் 5 மினிட்ல அவனுக்கு இன்ஃபோ போய்டுச்சு… சோ அவனுக்கு இப்போ வேற வழியே இல்ல எப்டினாலு இந்த காலேஜ் முன்னாடி இருக்க அந்த ஒத்தயடி பாத மட்டும்தா இருக்கு அந்த காட்டுக்குள்ளதா போனு இப்போ நம்ம அங்க காட்டுக்குள்ள நிப்பாட்டி இருக்க ஆளுங்கள இந்த காட்டுக்கு மாத்துனா அகைன் இன்ஃபோ போய்டும் அவ அலர்ட் ஆகிடுவா சோ நீ நமக்கு நம்பிக்கையான நம்ம டீம் அந்த 4 பேர் அனுப்பி அவ கன்டெய்னர தூக்கிட்ட…. ஆம் ஐ கரைக்ட்????😃😀கரெக்ட் மச்சா…”
“இனி இருக்கு அவனுக்கு நம்ம யாருனு அவனுக்கு காட்டலாம்.. இப்போ கிளம்பலாம் வா…”
இங்க அவன திட்டிக்கிட்டே உமாகிட்ட போரா தென்றல் பட் அவளை தீயாய் முறைச்சுகிட்டு நிக்கிரா உமா
“ஏண்டி ஐஸ் கிரீம் வாங்கிட்டு வறேன்ற பேர்ல என்ன கூத்து பண்ணிட்டு வந்திருக்க இதுல பாவம் உன்ன காப்பாதின அவர்கிட்ட தாங்க்ஸ் கூட சொல்லாம போலீஸ் அப்டீன்னு கூட பாக்காம அவற லுசுன்னு திட்டிட்டு வர 😠😠ஏண்டி உனக்கு பயமாவே இல்லையா”
“ஏய் போடி நா ஆரம்பத்துல தாங்க்ஸ் சொல்லலாம்னு நினச்சே பட் அந்த ஆளுதா ஆளையு டிரசையு பாரு நல்லா மாரியம்மா கோவிலுக்கு கூல் ஊத்துற மாதிரி மஞ்ச மஞ்ஜேருனு வந்துட்டா ரோட் கிராஸ் பண்ண தெரியாம. அப்டின்னு சொல்லவு சண்ட போட்டே ….”
“போடிங் இவளே…. நீ பண்ண கூத்துல இருந்த ஒரு பஸ் அதுவும் போய்டுச்சு இனி அடுத்து நைட் ஏலு மணிகுதா பஸ்😞😞”
“ஹே பிளீஸ் உமா ஃபீல் பண்ணி புலம்பாத வா நம்ம ஜாலியா நடந்து போய்டல என்ன ஒரு அர மணி நேரம்தான் ஆகும் ஜாலியா போலாண்டி வாடி “
உமாவும் வேற வழி இல்லாம 2 பேரு நடந்து போரங்க பட் அவங்க நடக்க ஆரம்பிச்சா
10 மிநிட்ல மழை வரவும் உமாவுகுதா கோவம் தாங்கல… பட் அவளுக்கு தென்றல திட்டவு மனசு வரல காரணம் தென்றல் எதாச்சும் முக்கியமான நாள்நாளே அதுல எதாச்சும் மெமரிஸ் இருக்கணும் நினப்பா அப்படி இருகப்போ இன்னிக்கு காலேஜ் லாஸ்ட் டே அதா இந்த ஐஸ் கிரீம் மேட்டர்…இந்த பாதயாத்திரை
“ஹே தென்றல் உன்னோட இந்த காலேஜ் லாஸ்ட் டே மெமரிஸ்கு என்ன பலி ஆக்கிடீல”
“ஹ ஹ ப்ரெண்ட்சிப்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா. .”
இவங்க இப்படி பேசிட்டே மழைல நனஞ்சிகிட்டே போகவும்
அத பாத்த ஸ்ரீ தான் ஓட்டி வந்த ஜீப்ப நிப்பாட்டி எழில் காதுகுள்ள எதோ சொல்லிட்டு
“கொஞ்சம் நில்லுங்க …ஏ ரெண்டு பேரும் நடந்து போறீங்க அதுவும் நனஞ்சுகிட்டே…”
“வேண்டுதல் சார் எங்களுக்கு அதா நடந்து போரோம் ஏன் சார் எதாச்சும் பிரபலமா உங்களுக்கு …”
“இல்லாமா எனக்கென்னமோ நீங்க பஸ் வராம இருக்கவும் நடந்து போற மாதிரி தோணுச்சு அதா ட்ராப் பண்ணலாம்னு கேட்டே …..”
“என்னாது ட்ராப் பண்ண போரியா நீ போலீஸ் நியபாகம் இருக்கட்டு நீ ஒன்னு ஒலா கேப் டிரைவர் இல்ல ரோடுல போர எல்லாரையும் கூப்ட்டு போய் வீட்ல விட ஸ்ரீ உனக்கு அறிவே இல்லடா 5 நிமிஷம் பேசுனதுக்கே மண்ட காஞ்ஜிடுச்சு”
“டேய் எழில் விளையாடாத மச்சா… ஒரு போலீசா ப்பொன்ன்னுஙல பாதுகாக்க வேண்டியது நம்ம பொறுப்பு”
“ஹே நிஜமாதாண்டா சொல்ரே எதாச்சும் எமர்ஜென்சி நைட் டைம் அப்டின்னா ஓகே பட் இப்போ வெளிச்சமாதன இருக்கு”
“எங்கடா வெளிச்சமா இருக்கு ரெயின் வேற வருது டைம் 6:30 ஆக போது…”
“ஹே விடுடா இவளுக்கு இருக்க திமிருக்கு நடந்து போட்டு கொழுப்பாச்சு குறையும் கூட சேந்த பாவத்துக்கு அந்த பொண்ணும் நடக்கட்டும்…”
“டேய் நீ ரொம்ப ஓவரா போற .. சும்மா இருக்க மாட்டியா ….எதாச்சும் பேசின மீசைட்ட மாட்டி விட்டுறுவே பாதுகோ.”
(அதுவர தென்றல திட்டிற்க்கிட்டே இருந்த எழில் ஸ்ரீ சொன்ன அந்த வார்த்தை கேட்டு அமைதி ஆனான் …யார் இந்த மீீீச🤔)
“நீங்க ரெண்டு பேரும் ஜீப்ல ஏறுங்கமா…”
“ஒரு நிமிஷம் இருங்க 2 பேரும்.. டேய் ஸ்ரீ நீ சொல்றத கேகணும்னா நா சொல்றத நீ பண்ணு அப்டின்னா அவ உள்ள வரலாம் இல்லாட்டி நா என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்..”
“என்னடா பண்ணணும் சொல்லு”
“என்ன டம்மி போலீஸ் அப்படிண்ணுதான சொன்னா அவ சோ அவ மட்டும் கைல ஹேன்ட் கஃப் (கை விலங்கு) போட்டுதா வரணு இதுக்கு ஓகேவா ….. கேளு இல்ல ஜீப் எடு நிறைய ஒர்க் இருக்கு அந்த சங்கர தீத்துகட்ட பிளான் பண்ணனும்’
“அதெல்லாம் முடியாது. நா நடந்தே போய்டுவே ஏய் உமா வாடி போலா”
பின் ஸ்ரீ எழிலை சமாதனம் செய்ய முடியாமல் போகவே உமாவை நோக்கி தங்கச்சி பிளீஸ் என்று தென்றலை சமாதானம் செய்யுமாறு கண்களால் சொல்ல
உமா அவன் தங்கச்சி என்ற சொல்லில் கண்கள் கலங்கி அதற்கு ஒத்து கொண்டால்(6மாதத்திற்கு முன்பு தன் அண்ணனை இழந்த உமாவிற்கு இந்த தங்கச்சி என்ற சொல் கண்களில் நீரை வரவழைத்தது. … யாரும் பார்கும் முன் தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு தென்றலை சமாதான படுத்த தயாரானாள்.
அவளுக்கு காய்ச்சல் இருப்பதை மனதில் கொண்டும் மேலும் தன்னை இப்படி நனைந்தவாரு நடக்க வைத்த தென்றல்க்கு இந்த தண்டனை சரியே என்று சிரித்துகொண்டு அவளை சமாதன்படுத்தினால்)
“இங்க பருடி தென்றல் நீ பண்ண வேலைக்கு இந்த பணீஸ்மெண்ட் கரெக்ட். ….வா”
“போடி ……… நா வரல நீ வேணும்னா போ….”
“நீ மட்டு இப்போ வரல வீட்ல நீ ஐஸ் கிரீம் சப்பட்டது நாலதான் பஸ் விட்டு இப்படி ரெயின்ல நனஞ்சு நடந்து வந்தோம் சொல்லி போட்டு விட்டுறுவே பாத்துக்கோ….”
“அடியே உமா நீயல்லாம் ஒரு பிரெண்டா?”
“ஈ ஈ ஈ நட்புக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா….”சொல்லிகிட்டே அவள் கையை இழுத்து எழிலிடம் கொடுத்தாள்..
எழில் அவள் கையை இழுத்து தன் மடியில் வைத்து அங்கும் இங்குமாக அழுகும் தோனியில் சிலுப்பி கொண்டிருகும் முகத்தை பார்த்து ரசித்து கொண்டே அவள் கையில் ஹேன்ட் கஃபை மமாட்டினான்
அவன் மாட்டிய பின் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி உமாவை ஸ்ரீ அருகில் அமர வைத்து விட்டு தென்றலை அழைத்து பின் சீட்டில் அமரவைத்து அவனும் அவள் எதிரே அமர்ந்து அவள் படும் அவஸ்தைகளை ரசித்துக்கொண்டு வந்தான்…..
……………எழில் தென்றல் வருவார்கள்
I like this story. Its interesting 👍🏻
நல்ல தொடக்கம் கதை நல்ல இருக்கு.